Sunday, January 31, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 5

இந்த பகுதியுடன் கார்பன் சுவடுகள் முடிவடைகிறது.. எனவே சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுங்கள்.உலகின் பல நாடுகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன.. வறுமையின் கோரப் பிடியில் வாழும் லெசோதோ போன்ற நாடுகளே உலகின் நன்மைக்காக தமது பங்கைச் செய்ய ஆயத்தமாகும் போது வேறு என்ன வேண்டும்..? நாமும் சோதியில் இணைய வேண்டியதுதான். செல்வச் செழிப்பில் ஊறித்திளைக்கும் கத்தார் போன்ற நாடுகளும் கல்விக்காக தனது கதவுகளைத் திறந்து விட்டிருக்கின்றன. கலை, ஆராய்ச்சி, கல்வி, தீரா சக்தி (சூரிய சக்தி போன்றவை )மற்றும் புதுக் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் அவர்கள் பல்கலைக் கழகங்களை அனுமதித்துள்ளனர்.

லட்சக் கணக்கான NGO(நான் கவர்மேண்டல் ஆர்கனைசேஷன்)கள் தேசங்களின் சுயநல நோக்கை தகர்த்தெறிந்து உளகளாவிய மக்களை ஒன்று திரட்டி அனைத்து மக்களிடையேயும் போது நல நோக்கு உள்ளது என்பதை நிரூபித்த வண்ணம் உள்ளனர்,

அண்டார்டிகாவில் இயற்கை வளங்களை பேணிப் பராமரிக்க நாற்பத்தொன்பது நாடுகள் இணைந்து செயல்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள தேசிய பூங்காக்களில்,மனித சக்தியைக் கொண்டு நிலத்தை வளப் படுத்துதல் மற்றும் புதுக் காடுகளை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன..இந்த மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு தான் இனி நம்மைக் காப்பாற்றும்.

நியுயார்க் நகர மக்கள், தங்கள் அருகிலுள்ள காடுகள் மற்றும் ஏரிகளில் இருந்து தான் தங்களின் வாழ்வாதாரமே பூர்த்தி செய்யப் படுகிறது என்பதை உணர்ந்து அதை பேணிக் காக்க முடிவு செய்துள்ளனர்.

தென் கொரியாவில், தேசிய காடுகள் மறு சீரமைப்பு அமைப்பை ஏற்படுத்தி, போர் மற்றும் மனித தேவைகளுக்காக அழிக்கப் பட்ட காடுகளை புதுப்பித்துக் காட்டியுள்ளனர். தற்போது அவர்களின் நாட்டில் 65% நிலப்பரப்பு இயற்கை வளம் மிகுந்த காடுகளாக உருவெடுத்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவது மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது. 75% க்கும் மேலான காகிதங்கள் மறுசுழற்சி செய்யப் படுகின்றன.

கோஸ்டாரிகா தங்கள் நாட்டின் ராணுவத்தை விட தங்கள் நாட்டின் இயற்கை வளமே முக்கியம் என முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அவர்கள் நாட்டில் ராணுவமே இல்லை. மாறாக அதில் செலவிடும் பணத்தை, தம் குழந்தைகளின் கல்விக்கும், சுற்றுலாத் துறைக்கும் மற்றும் தங்களின் பிரதான காடுகளை பாதுகாப்பதிலும் பயன் படுத்துகின்றனர்.
அங்கே ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வனப் பாதுகாப்பு சட்டங்கள் கட்டாயமாக்கப் பட்டு கடுமையாகப் பின்பற்றப் படுகின்றன.

"போர்க்களம் வெறுத்து விடு.. அங்கே பூச்செடி வைத்து விடு.. அணுகுண்டு அத்தனையும் கொண்டு பசிபிக் கடலில் கொட்டி விடு"
என்னும் கவிப் பேரரசின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.. கவிஞன் கனவு பலிக்கத்தொடங்கி விட்டது. மனித நேயம் உடைய நாடுகள் அந்த நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்க வேண்டும்.

வர்த்தகம் நேர்மையான முறையில் நடந்து எல்லோரும் வளம் பெற்று வாழும் நிலை ஏற்படும் போது அனைத்து மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது..அங்கே அதிகமாக சம்பாரிக்கத் தூண்டும் முதலாளித்துவம் மற்றும் பேராசை பொடிபடுகிறது.ஆம்.. இயந்திரங்களைக் கொண்டு லட்சக் கணக்கான ஏக்கர்களில் அறுவடை செய்யும் முதலாளி, கைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் சிறு விவசாயிகள், இவர்களுக்கிடையே என்ன சமநிலை இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்..

நாம் பொறுப்புள்ள நுகர்வோராகச் செயல்பட்டால் இந்த நிலை மாறும்.நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமது இந்த கடமையை உணர வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்கள், ஆடம்பர விளம்பரம் செய்து மக்களை முட்டாள்களாக்கி விற்கப்படும் பொருட்களைக் குறைத்து, சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்கள், உள்ளூரில் செய்யப் பட்ட கைவினைப் பொருட்கள், குடிசைத் தொழிலில் உற்பத்தியாகும் பொருட்கள் இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் ..

உங்களுக்குத் தெரியுமா...? இப்போது உள்ள விவசாய நிலங்களைக் கொண்டே, இந்த கிரகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வயிறார சோறு போட முடியும். ஆனால்,மாமிசத்திற்காக கோடிக்கணக்கில் வளர்த்தப் படும் மிருகங்களின் தீவனத்திற்காக மற்றும் பயோ எரிபொருளுக்காக இவை பயன்படுத்தப் படுவதால் தான் கடைக்கோடி குடிமகனின் வாய்க்கு ஒரு கை சோறு கிடைப்பதில்லை.

குழந்தைகள் மற்றும் வருங்கால சந்ததிகளை மாமிச உண்ணிகளாக வளர்க்கக் கூடாது.மாமிசத்தின் சுவைக்குப் பழகி விட்டவர்கள் அதைக் குறைக்க மாற்று உணவுகளைக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் தான்.. ஆனால் குழந்தைகளைப் பழக்குவது எளிது. சைவ உணவுகளிலேயே எல்லா சத்தும் சுவையும் நிரம்பி உள்ளது என்பது நிரூபணமான ஒன்று.
கடலில் மீன் பிடிப்பவர்கள், கடலின் செல்வத்தை அழிக்காமல் தொழில் செய்ய வேண்டும்.

ஜெர்மனி'யில் உள்ள பையர்பாக் என்ற இடத்தில், 5000 மக்கள் உலகின் முதல் eco-freindly மாவட்டத்தை அமைத்துக் காட்டி உள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும் சூரிய ஒளி மூலம் அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர்.

நாம் உபயோகப் படுத்தும் சக்திகளில் 80% பூமியிலிருந்து எடுக்கப் படுபவை தான்.
சீனாவில் மட்டும் வாரத்திற்கு இரண்டு அனல் மின் நிலையங்கள் உருவாக்கப் படுகின்றன. அதே நேரத்தில் டென்மார்க்கில் அனல் மின் நிலையத்தில் உருவாகும் கார்பனை காற்றில் கலக்காமல் மண்ணில் மக்கச் செய்யும் உக்தியை கையாளத்தொடங்கியுள்ளனர்.

ஐஸ்லாந்தில் பூமியின் அடி சூட்டைக்கொண்டு மின்சாரம் எடுக்கின்றனர். கடலின் அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கின்றனர்.
கடலெங்கிலும் காற்றாடி வயல்கள் உருவாக்கப் பட்டு அவர்கள் நாட்டின் மின்சாரத்தில் 20%ஐ காற்றின் மூலம் உற்பத்தி செய்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தான் இந்த மறுசுழற்சி செய்யகூடிய சக்திகளில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

சூரிய வெப்பம், பூமியின் அனைத்துப் பகுதிகளையும் தாளித்துக் கொண்டு இருக்கிறது. உலகமக்கள் அனைவரும் ஒரு வருடம் உபயோகப் படுத்தும்
சக்தியின் அதே அளவை, ஒரு மணி நேரத்தில் சூரியன் நமக்கு அளிக்கிறான் என்றால் நம்புகிறீர்களா?

ஆம் நண்பர்களே.. இனி மேலும் கீழேயே பார்த்து நடப்பதை விட்டு மேலே பார்போம். அங்கேயும் உள்ளது.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் வந்து விட்டது.

இன்னும் நம்மிடம் 50% காடுகள் உள்ளன.எண்ணற்ற இயற்கை வளங்கள், ஆயிரக்கணக்கான ஏரிகள், பனிப்பாறைகள் என இன்னும் நம்மிடம் கொஞ்சம் மிச்சம் உள்ளன..

துபாய் போன்ற பணக்கார நாடுகளிடம் என்ன இருக்கிறது? வெறும் எண்ணெய் தான் இருக்கிறது. அதை விற்றே அனைத்தையும் வாங்குகிறான்.அங்கே சுட்டெரிக்கும், வெயில் இருக்கிறது, ஆனால் ஒரு சூரிய ஒளி பேணல்(solar panel) கூட அங்கே இல்லை.மற்ற நாடுகள் அனைத்தும், உள்ளூரில் குறைந்த விலைக்கு பொருட்களை விற்று நாட்டை வளப் படுத்த நினைக்காமல், அதிக லாபத்திற்காக அவனிடம் நாட்டை அடகு வைக்கின்றனர்.
அதனை நிறுத்தி இது போன்ற நாடுகளின் இந்த சுயநலப் போக்கிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளிருந்து வர வேண்டும், அதை வெளியே எதிர் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிகழ அடிப்படைத் தேவை கல்வியறிவு மற்றும் பொது சிந்தனை அவ்வளவே(எல்லார்க்கும் எல்லாமும்).

இந்த சிந்தனையுடன் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை நோக்குங்கள்.. நாம் செய்ய வேண்டிய மறுமலர்ச்சி நமக்கே விளங்கும்.
இதை தான், நம்முடைய சுற்றம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் சொல்ல வேண்டும்.

எப்படியெல்லாம் இந்த மாற்றத்தைச் செயல்முறைப் படுத்தலாம் என்று நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே....

கார்பன் சுவடுகள் முற்றுப் பெறுகிறது...

18 comments:

  1. ஆகா.. சூப்பரு அப்பு..
    நல்லா எழுதியிருக்கீங்க...

    அடுத்து என்ன சப்ஜெட் எழுதப்போறீங்க..


    அப்புறம் சார்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி,
    ஏதோ தெரியாம , "இன்னும் எழுதாம என்ன பண்றீங்கனு" என்னோட ப்ளாக்ல
    கமென்ஸ் போட்டுட்டேன்...
    "http://pattapatti.blogspot.com/2010/01/2.html?showComment=1264937365120#comment-c5088924166254233263"

    தப்பு நடந்து போச்சு சாமி.. நடந்து போச்சு...
    அடுத்த தடவை, பத்ர காளியம்மன் கோயிலில , பரிகாரமா வெட்டிடுறேன் சாமி..
    வெட்டிடுறேன் சாமி

    ( சே.. "ஆடு" -னு சொல்றதக்கு மறந்திட்டேன்..அய்யோ..........
    தப்பு நடந்து போச்சு சாமி.. நடந்து போச்சு...)

    ReplyDelete
  2. ரொம்ப நண்ணி...

    அடுத்து என்னன்னு இன்னும் முடிவு பண்ல பட்டாபட்டி..

    ஆனா சீக்கிரம் வருவேன்...

    ReplyDelete
  3. இயற்கை பற்றி தனி மனிதன் முயற்சி மட்டுமே போதாது என்று ஒரு குழு மனப்பான்மை வந்து நல்ல மாற்றம் வருமோ அன்றே நல்ல உண்மையான மாற்றமாக இருக்கும்

    ReplyDelete
  4. வாங்க அரும்பவூர்..

    என்னென்ன மாற்றங்களைச் சொல்கிறீர்..?

    ReplyDelete
  5. இக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
    என் தளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி..
    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  6. வாங்க மலிக்கா..

    கடைசி பதவில வந்துருகிறீங்க.. கொஞ்சம் டைம் எடுத்து படிங்க எல்லாத்தையும்..

    அதென்ன மலிக்கா...?

    ReplyDelete
  7. நன்றாக இருந்தது நண்பரே உங்கள் கட்டுரை..நேற்றுதான அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் அவர்கள் விளைநிலங்களில் வீடுகட்ட கூடாது என கூறி உள்ளார்.அதற்கான அரசு சட்டம் விரைவில்வரும் என்றும் கூறிஉள்ளார்...இப்போதுதாவது அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுததால் சரி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. வாங்க வேலன்..

    அரசாங்கம் என்ன செய்கிறதோ இல்லையோ, நம் சமுதாயத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் சரி..
    தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பரே...

    ReplyDelete
  9. நேரமின்மையால் பின் தொடர்வு மட்டும் போட்டுள்ளேன். பின்னர் வந்து கட்டுரைகளைப் படித்துப் பின்னூட்டம் இடுகின்றேன். நன்றி.

    ReplyDelete
  10. நன்றி நண்பரே..

    கட்டாயம் படித்து விட்டு கருத்துகளைச் சொல்லுங்கள். உங்களின் கடவுளைப் பற்றிய பார்வை, என் சிந்தனைகளோடு பொருந்துகிறது.. நன்றி..

    ReplyDelete
  11. இன்றைக்குத்தான் முழுவதும் படித்து முடித்தேன் பிரகாஷ்.. மிகவும் அற்புதமாக எழுதி உள்ளீர்கள்.

    இயற்கை பற்றிய பல தொடர்கள் எழுதவும்..

    inconvenient truth, Food inc படங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பார்க்காவிட்டால் பாருங்கள், பாக்கெட்டில் உணவு பொருள் வாங்கும் மனிதன் அதனை தயாரிப்பவன் யார் என்று அறியாது பணம் தந்தால் எல்லாம் கிடைக்கும் என்ற அறிவீனம் தான் விளை நிலங்களை விலை பேச வைக்கிறது.. :(( ஆறறிவு செவிடானால் இயற்கை மண்டையில் அடித்து புரிய வைக்கும் என்பது நிச்சயம்.

    வாழ்த்துக்கள்.

    தாமதத்திற்கு மன்னிக்க..:)

    ReplyDelete
  12. நன்றி ஷங்கர் அவர்களே..

    அடுத்த தொடருக்கான சேகரிப்பில் இறங்கி இருக்கிறேன்.. அதனால நானும் தாமதம் தான். அலுவலகப் பணிகள் வேறு..

    தாமதமானாலும் நீங்கள் வந்தது மிகுந்த மகிழ்ச்சி..

    ReplyDelete
  13. //துபாய் போன்ற பணக்கார நாடுகளிடம் ..வெயில் இருக்கிறது, ஆனால் ஒரு சூரிய ஒளி பேணல்(solar panel) கூட அங்கே இல்லை.//

    இல்லை, இப்ப இங்கயும் ஸோலார் பவரின் அவசியத்தை உணர்ந்து, ஸோலார் பேனல்கள் அமைக்கிறாங்க. ஆனாலும், மெதுவாகத்தான்...

    //மாற்றம் நம் ஒவ்வொருவரின் உள்ளிருந்து வர வேண்டும், அதை வெளியே எதிர் பார்க்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.//

    மிகவும் உண்மை. உங்களின் மீதி பதிவுகள் இனிதான் படிக்க வேண்டும். :-)

    ReplyDelete
  14. தல சிரம் தாழ்த்தி வாழ்த்து சொல்றேங்க. நிச்சயமா உங்க எல்லா பதிவுலயும் தெரியுது நீங்க சமுதாயத்து மேலயும், உலகத்து மேலயும் அக்கறை வச்சி இருக்கிறது.

    உண்மையிலே சூரியசக்தி மூலமா உலகத்த வெப்ப மயமாக்கல்ல இருந்து தடுக்கலாம் என்ன ஒரே பிரச்சன அதோட மூலதன வில தான் அத தயாரிப்ப அதிகம் பண்ணி விலையை குறைக்கலாம், நீங்களூம் அந்த துரைல இருக்கிறதால அத பத்தி கொஞ்சம் விரிவா புரியர மாதிரி அத உருவாக்க வேண்டிய வசதி வாய்ப்புகள் இத பத்திலா சொன்னா நான் கூட தயாரிக்க முயற்சி செய்வேன்.

    அப்புறம் சீக்கரமா follow me டாப் ஆட் பண்ணுங்க

    திரும்பவும் வாழ்த்துகள் தல : )

    ReplyDelete
  15. சாரிங்க தல ஏற்கனவே follow me டாப் இருக்கு இப்ப தான் பாத்தேன்

    ReplyDelete
  16. வாங்க டுபாக்கூர்..

    சூரிய ஒளி பேனலுக்கான சுழலச் செய்யும் கருவியை டிசைன் செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். விலை குறையும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அது நம்முடைய கவர்மென்டிடம் தான் உள்ளது. மானியம் வழங்கினால், சூரிய ஒளியை உபயோகிக்கும் கருவிகளின் விற்பனை பெருகும்.

    தங்கள் கருத்துக்கு சிரம் தாழ்ந்த என் வணக்கங்கள்..

    ReplyDelete
  17. அன்பின் பிரகாஷ்

    கார்பன் சுவடு - ஐந்து பாகங்களும் அருமை - எளிய மனிதர்களாகிய நம்மால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இடுகைகள் - நம்மால் முடியும் தம்பி என நம்பிக்கை ஊட்டும் ஆக்க பூர்வமான இடுகைகள் - படிப்பவர்களில் ஒரு சிறு விழுக்காடாவது முயல்வார்கள் - செய்வார்கள். நல்லதே நினைப்போம் - நல்லதே நடக்கும் நண்பரே !

    நல்வாழ்த்துகள் பிரகாஷ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. Hai friend i read the all post of Carbon footprint. Really Superp. Every person compulsory read this and all try to decrease the Global Warming. Thank you by R.Bhuvanenthiran

    ReplyDelete