Wednesday, February 10, 2010

படிக்காதவன்......


அநேகமாக எனக்குத் தெரிந்து நாம் பள்ளியில் படிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே நமக்கு அறிவுரை தரும் படலம் ஆரம்பிக்குது. தீண்டாமை ஒரு பாவச்செயல், சுத்தம் சோறு போடும்,நேர்மை தவறேல்,அப்படி இப்படீன்னு ஏகப்பட்ட உபதேசங்கள்.. இதத்தான் அடுத்தவனுக்கு உபதேசம்கறது..
துடியலூர் பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தேன்.ஒரு பஸ்சுக்கு நூறு பேர் அலைமொதிக்கரத பாத்து இந்த கவர்மேன்ட்ட நொந்துக்கிட்டேன். வேலைக்குப் போயிட்டு வந்த ரெண்டு படிச்ச பசங்க (சுமார் 22 வயசு இருக்கும்)."மாப்ள.. இந்த கவர்மென்ட் காரனுக காசு வாங்கீட்டு என்னடா பன்றாணுக.. மக்களைப் பத்திக் கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. பொறுப்பே இல்ல"ன்னு சொல்லிகிட்டிருந்தான் ஒருத்தன்." ஆஹா, பரவா இல்லையேன்னு நெனைக்கிற சமயத்துல, புளிச்.....சினு என் கால் பக்கத்துல துப்புனான், செவப்பா.. பா_ பராக் போட்டுருந்தன் போல(சென்சார் கட்). கொஞ்சம் லஜ்ஜையாக இருக்கவும் லைட்டா தள்ளி நின்னேன்.நடந்து போய்க்கிட்டு இருந்தவுங்க சில பேர் கவனிச்சதால அதைத் தாண்டிப் போனாங்க. ஆனா கவனிக்காதவங்க அத மிதிச்சிட்டே போனாங்க. "நம்ம கிட்ட வரி வரின்னு வாங்குறாங்க, அத எல்லாத்தையும் அவனுகளே வாயில போட்டுக்குராணுக, நாடு எப்பத்தான் திருந்துமோ...., புளிச்.!!!....." இது இன்னொருத்தன். அட அந்த எளவு எடுத்தவனும் வாயில அதே கருமத்த தான் போட்டுக்கிட்டு இருந்தான்.
அப்ப தான் நெனச்சேன்.. இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு..
மாற்றங்கள் நமக்குள்ள ஆரம்பிக்கனும்னு நான் பல இடங்கள்ல சொல்லி இருக்கேன். இத்தன பேசுனவனுகளுக்கு, பொது இடத்துல அசிங்கம் பண்ணுறது தப்புன்னு தெரியலியே. தன்னோட ஒரு சிறு செயலத் தப்புன்னு உணர முடியாதவன், எப்படி மத்தவங்கள மட்டும் வாய் கூசாம திருந்தச் சொல்றான்.
பஸ்ஸுல ஏறனப்போ முன் சீட்டுல ஒரு வாத்தியார், அவரோட சின்னப் பையனோட உக்கார்ந்திருந்தாரு.பையனுக்கு பிஸ்கட் எல்லாம் குடுத்துட்டு அவன அழாமப் பாத்துக்கிட்டே வந்தாரு.பக்கத்துல இருக்குற ஆளுகிட்ட மேதாவி மாறி உபதேசங்கள்.ரோடு குண்டுங்குழியுமா இருக்குறதைப் பத்தியும், அரசின் இந்த அலட்சியப் போக்கைப் பத்தியும் ஒரு புடி புடிச்சாரு.உண்மைதான்.வெள்ளைக் காரன் போட்ட கான்க்ரீட் ரோட்டோட கிட்ட நிக்க கூட இந்த அரசுக்கு யோக்கியதை இல்ல..போடராணுக, மழை வருது, காணாமப் போகுது,பஞ்சர் போடராணுக, மழை வருது, காணாமப் போகுது.. இதே பொழப்பு. ஒரு நாளைக்கு கொறஞ்சது, நாலஞ்சு ஆம்புலன்சு போகுது.. அத்தினி விபத்து.அப்பெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ரோடு, இப்ப செம்மொழி மாநாடு, தானைத் தலைவர் வர்றார்னு சொன்னவுடனே, கண்ணுக்குப் பட்டுடுச்சு. ஒரு அமைச்சர் என்னடான்னா, மேட்டுப்பாளையம் ரோட்டுகிட்ட நின்னுகிட்டு, "இங்கிருந்து பாத்த, நேரா, பஸ் ஸ்டாண்ட் தெரியணும், சைடு ஆக்கிரமிப்பு எல்லாம் இன்னைக்கே கிளியர் பண்ணனும்,தலைவர் வரும்போது, வண்டி டர்ன் ஆகமா நேர போகனும்"னு சொல்றான்.. என்ன நடக்குது இங்க..அப்படின்னு நெனைச்சு முடிக்கல.. கையில வெச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட ஜன்னல் வழியா வெளிய வீசி எறிஞ்சார். குழந்தைகளுக்கு நன்னடத்தை சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர்.
மறுபடியும் அதே தான் நெனைச்சேன்.."இந்த மக்களுக்கு இந்த கவர்மென்ட் போதும்னு.."

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பிக்கிற தவறுகள் தான், பெரிய பூதாகரமாகி பின்னாடி அந்த தப்புகள் நமக்கு உறைக்காமையே போயிடுது.

இதுக்கெல்லாம் காரணம் உணர்தலைத் தூண்டாத நம் அடிமைக் கல்வி. உணர்ச்சி இல்லாத ஜடக் கல்வி.முடித்த பிறகு என்ன செய்வோம் என்று தெரியாது, அனால் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற போட்டியை மட்டும் உண்டு பண்ணும் தண்டக் கல்வி..

என்ன பண்றது, படிக்க வெக்கிரவனும் கஷ்டப் பட்டு காசு கட்டி ஸ்கூல்ல சேத்துறான். வேலைக்கு வரறவனும், அன்றாடம் பல பிரச்சனைகளைச் சுமந்துட்டு, வேண்டா வெறுப்பா பாடம் சொல்லித் தர்றான். பசங்களும் பாஸ் ஆனாப் போதும்னு படிக்கிறான். சிலதுக முட்டி மோதி மொதல் மார்க்கு வாங்குதுங்க.. இதுவும் ஒரு வியாபாரம்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.இந்த ஏட்டில் இருக்கும் கருத்துக்களும் மக்களுக்கு உதவாதே விட்டது. ஆம் ஏட்டில் இருக்கும் வரை எதுவுமே உதவாது தான். அது சுரைக்காயாக இருந்தாலும் சரி, திருக்குறளாக இருந்தாலும் சரி.

படிக்க வெக்கறத விட உணர வெக்கணும். நாலு தடவ,நீங்க சாப்ட பிஸ்கட் பாக்கெட்ட கொண்டு போய் குப்பத் தொட்டியில போட்டு குழந்தைகளுக்குக் காமிச்சுக் குடுங்க. அதுங்க தானா செய்யும்.தண்ணி நெறையரக்கு முன்னாடியே, பைப்ப க்ளோஸ் பண்ணிக் காட்டுங்க.. குழந்தைங்க கத்துக்கும். குழந்தைங்க முன்னாடி தம் அடிக்கறது..தண்ணி அடிக்கறது.. இதெல்லாம் அவங்கள எங்க கொண்டு போய் விடும்னு யாராச்சும் நெனைச்சுப் பாக்குறாங்களா?

இன்றைய ஸ்கூல் பசங்க... சாயங்காலம் ஆச்சுனா, பங்க கடையல தம்மு.. விடுமுறைகள்ள தண்ணி.. காசு..? அப்பன் பாக்கேட்டுல இருந்து சுட்டது.. இல்ல பொய் சொல்லி வாங்குனது.செல் போனு எங்கிருந்து...? அதுல கொறஞ்சது நாலைஞ்சு பொண்ணுக நம்பர்..(இல்லேன்னா பசங்க மதிக்க மாட்டானுவ).ரீசார்ஜ் பண்றதுக்கு, செலவு பண்றதுக்கு, இதுக்கெல்லாம் ஏது காசு.. தன் ரத்தத்தைக் கேவலம் காசுக்காக விற்று இந்து சுகத்தை அனுபவிக்கிறார்கள், நண்பர்களே.. சொல்லவும் கூசுகிறது, நான் கனவு கண்ட இந்தியா இப்படியா ஆக வேண்டும்...?

இவர்கள் எல்லாம் என்ன படித்தார்கள், என்ன படிக்கிறார்கள், காலை ஒன்பது மணியிலிருந்து தொடங்கி மாலை ஐந்து மணிவரை.(இப்பெல்லாம், காலையில ஏழு மணிக்கே ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பம், சாயங்காலம் எட்டு மணி வரைக்கும் எக்ஸ்ட்ரா கோச்சிங்) ஒரு நாள் முழுசும் அப்படி என்ன தான் சொல்லித் தராணுக,, அப்படி இதுங்களும் என்ன தான் படிச்சுக் கிழிக்குதுங்க..

வாழ்க்கை தறி கேட்டு சின்னா பின்னமான பிறகு இந்த படிப்பு எதுக்கு உதவும்.? வாழும்போதே மனுஷன நல்வழிப் படுத்தணும், இள ரத்ததுலையே அத பாய்ச்ச்சனும்னு தான் இத சின்ன வயசுல சொல்லித் தராணுக.இள வயசு கள்ளம் கபடம் இல்லாதது. மத்தவங்கள எதிர்த்துப் பேசாது(அதிகம் தெரியாததினால), வெளிவிடரதக் காட்டிலும் மூளை அதிகம் கிரகிக்கும்.. அதனால அந்த வயசில பாடத்தைக் காட்டிலும் நன்னடத்தைகள்ள அதிக முக்கியத்துவம் குடுக்கணும்.

ஒரு குழந்தை,அதைச் சுத்தி விளையாடிட்டு இருக்குற சின்ன பூனைக் குட்டிய கழுத்தப் புடிச்சு நேரிக்குது.. அது வலி தாங்க முடியாம துடிக்கும் போது, இந்தக் குழந்தை சிரிக்குது. இந்தக் குழந்தையோட பெற்றோர், அதப் பாத்து ஆனந்தப் படறாங்க.. அது தெரியாத குழந்தை,அதனால சிரிக்குது. இந்த பெரிய மனிதர்களுக்கு எங்கே போனது அறிவு. அது சிரிக்கனும்கரதுகாக,இன்னொரு பச்சைக் குழந்தை(பூனை)அவஸ்தை அனுபவிக்கலாமா? அன்பையும் பண்பையும் குழந்தைகளுக்கு நாம தானே சொல்லிக் கொடுக்கணும்..? அன்பு பரிவு, மனிதாபிமானம், இது தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது..

எத்தனையோ பெற்றோர், குழந்தைகள லீவு நாள்ல பார்க் பீச்சுன்னு கூட்டீடு போறாங்க.. அவங்க சாப்ட்ரதுக்கு அதிகம் கேக்கும் போது செலவு செஞ்சு மனசு நோகறாங்க.. ஊதாரியா வளர்றத நெனைச்சு வருத்தப் படறாங்க..ஆனா எத்தன பெற்றோர் தங்களோட குழந்தைகள ஒரு அநாதை ஆசிரமத்துகோ, ஒரு உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்துக்கோ, ஒரு முதியோர் இல்லத்துக்கோ கூட்டீட்டு போறாங்க..? அங்கெல்லாம் போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப் படறாங்க.. கெடைக்கிற கொஞ்சம் பொருள எப்படிப் பகிர்ந்து சாப்டறாங்க.. இறைவன் அவங்களுக்கு காட்டுற சிறு வெளிச்சத்திலும் அவங்க எப்படி சந்தோஷமா வாழுறாங்க.. அப்படீன்னு புரியும். கை இல்லாம காலால ஒரு குழைந்தை எழுதுரத பாக்கும் போது, அப்பா கிட்ட பாரின் பென் கேக்குற ஆச விட்டுப் போகும். கெடைக்கிற சிறு உணவ அவங்க பகிர்ந்து சாப்பிடும் அழகைப் பாக்கும்போது, தின் பண்டங்கள் கேக்குற ஆச விட்டுப் போகும். வருங்காலம் ஒண்ணு இருக்கோ இல்லையோ, தனக்காக ஒரு சிறு உண்டியல்ல காசு போடும் அந்த பிஞ்சு உள்ளங்களைப் பார்க்கும்போது, ஊதாரித் தனமா செலவு செய்யுறது எவ்வளவு தப்புன்னு தோணும்.தனக்கு ஒரு கால குடுக்கலைன்னாலும் இன்னொரு காலும் ரெண்டு கையும், நல்லா படச்சதுக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் அந்த மனங்களை உணரும்போது, ரெண்டு கை ரெண்டு கால் இருந்தும் நாம ஊனமா வெளங்காம இருப்பது புரியும்.

இந்த மாறி உணர்ந்து வளரும் குழந்தைகள் தான் தனக்கென்று ஒரு பாதைய அமச்சுகிட்டு வீறு நடை போடும். ஒரு லட்சியம் அமையும் போது, அங்க தேவையில்லாம கெட்ட எண்ணங்களுக்கு மனம் போகாது. உணர்ந்து வளரும் போது தான் குழந்தைகள், எ.ஆர். ரஹ்மான் மாதிரியும்,கல்பனா சாவ்லா போலவும், ஏன் அப்துல் கலாம் போலவும் உருவெடுப்பார்கள்.. சும்மா பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பொறுப்பை உணராமல் பேசும் எச்சில் துப்பும் "படித்த" இளைஞர்கள் அங்கே விட்டில் பூச்சிகளாக மறைந்து போவார்கள்..

எவர் கேட்டாலும், இன்ஜினியரிங் படித்துள்ளேன், பத்தாம் வகுப்பு பர்ஸ்ட் கிளாஸ், ப்ளஸ் டூ நூத்துக்கு நூறு என்று சொல்லுகிறோமே.. இப்போது சொல்லுங்கள்.. நம்மில் படித்தவர்கள் எத்தனை பேர்..? படிக்காதவர்கள் எத்தனை பேர்..?

படிக்கும்போது அறிவு வளர்கிறது.. உணரும்போதே மாற்றங்கள் நிகழ்கின்றன...
(ஆஹா இன்னைக்கும் இடுகை பெரிசாயிடுச்சே,. மன்னிச்சிகுங்கப்பா..)
நன்றி.,.

35 comments:

  1. இடுகை பெரிதானதால், பின்னூட்டத்தில் கேட்டுக்கொள்கிறேன்.. எல்லாரும் வந்து ஏதாவது கருத்து சொல்லுங்கப்பா..அதையும் ஒரு அலசு அலசலாம்.. ஓட்டெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல...

    ReplyDelete
  2. nalla karuththu . unara vendum anaivarum. unarththuvom nanmai ponrorkal. thirunthuvaarkal. vallththukkal, thoivinri arumaiyaai pataiththatharkku.

    ReplyDelete
  3. பதிவு அருமை பிரகாஷ்.. குழந்தையாய் இருக்கும்போதே சொல்லிக்கொடுக்கவேண்டிய நல் ஒழுக்கங்கள் நிறைய ஆனாலும் மார்க் வாங்க மாரடிப்பதுதான் இங்கே நடக்கிறது. பதிவு பெரிசல்லாம் இல்லை..:)) அப்புறம் அந்த துப்புறவன்க வாயில கொள்ளி கட்டைய தான் போடனும்.

    ReplyDelete
  4. பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர்கள் 3 நாட்களுக்கு ஒரு நாள் முழுநாளும் மாணவர்களுக்கு நன்நடத்தை நாள் என்று வைத்து இதுப்போன்ற நல்ல அடக்கம், மரியாதை, ஈவ்டீஸிங், மக்கள் தொண்டு இதை எல்லாம் சொல்லி வந்தால் படிப்போடு கூடிய மணித நேயமும் தானாக வளரும். மாணவர்களுக்கும் பள்ளி படிப்பு என்பது போரடிக்காமல் இணிமையாக போகும். ஒரு வலிமையான இந்தியாவும் உருவாகும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  5. அன்புள்ள பிரகாஷ்,
    வளர்ந்த மக்களை இனி திருத்த முடியாது என்றுதான், நான் மற்றும் என் நண்பர்கள் இணைந்து 'விழுதுகள்' என்ற பெயரில் இயங்கி வருகிறோம். புன்செய் புளியம்பட்டியில் (ஈரோடு மாவட்டம்), சுற்றியுள்ள கிராமங்களில் ஐந்து இடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகளை(தினமும்) எடுத்து வருகிறோம். பள்ளி பாடங்கள் மட்டுமில்லாமல், நன் நடத்தை, சேவை மனப்பான்மை, சுற்றுசூழல், தன்னம்பிக்கை வகுப்புகள் என எடுத்து வருகிறோம். உங்களின் பதிவில் சுட்டியுள்ளது போல, மாணவர்களை உருவாக்க முயல்வோம். எங்கள் வெப்சைட்: http://vizhudugal.org
    நன்றி
    இளங்கோ

    ReplyDelete
  6. '''ஆனா எத்தன பெற்றோர் தங்களோட குழந்தைகள ஒரு அநாதை ஆசிரமத்துகோ, ஒரு உடல் ஊனமுற்ற குழந்தைகள் இல்லத்துக்கோ, ஒரு முதியோர் இல்லத்துக்கோ கூட்டீட்டு போறாங்க..? அங்கெல்லாம் போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப் படறாங்க.. கெடைக்கிற கொஞ்சம் பொருள எப்படிப் பகிர்ந்து சாப்டறாங்க.. இறைவன் அவங்களுக்கு காட்டுற சிறு வெளிச்சத்திலும் அவங்க எப்படி சந்தோஷமா வாழுறாங்க..''


    அருமையான பதிவு...

    நீங்கள் மேலே சொன்ன இடங்கள் சென்னை போன்ற

    நகரங்களில் எங்கு உள்ளது போன்ற தகவலையும்
    ஒரு பதிவாக போடுங்க.

    ReplyDelete
  7. Satthiyamaa Naanum padikkaathavan thaanungo!!!

    ReplyDelete
  8. ஒரு லட்சியம் அமையும் போது, அங்க தேவையில்லாம கெட்ட எண்ணங்களுக்கு மனம் போகாது. //

    Ithu nallarukkunga...

    ReplyDelete
  9. குழந்தையிலெ சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்..

    ReplyDelete
  10. நன்றி மதுரை சரவணன், வருகைக்கும், கருத்துக்கும்.

    வாங்க ஷங்கர்,கொள்ளிகட்டைய போட ஆரம்பிச்சா, எத்தன பேர் வாயில போடறது..?வருங்காலம் மாறனும். தொடர்ந்து இணைஞ்சு இருங்க.

    ஜெய்லானி அவர்களே, வாரத்துக்கு ரெண்டு நாள் உடற்பயிற்சி வகுப்பு விடருக்கே வயித்திலையும், வாயிலயும் அடிசிகிறாக நம்ப ஸ்கூல் காரவுக.நீங்க சொன்னது நடந்தா நல்லாத்தான் இருக்கும்.

    வாங்க இளங்கோ, உங்க வலைத்தளம் அருமை.என் மனதில் நெடு நாளாக இருக்கும் ஆசை இது. உங்களை நிச்சயம் சந்திப்பேன், கொஞ்ச தூரம் தான். புன்செய் புளியம்பட்டியில் என் நண்பன் ஒருவன் இருக்கிறான்.உங்க பனி தொடர வாழ்த்துக்கள்..தொடர்ந்து கூட இருங்க..

    மலர் அவர்களே, நான் இருப்பது கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தில்.அனால் நம் வலை நண்பர்கள் நிச்சயம் உங்கள் கேள்விக்கு பதில் தருவார்கள். எனக்குக் கிடைத்தாலும் சொல்கிறேன். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி..

    இங்க்லீஷ்காரரே நாம எல்லாருமே படிக்காதவங்க தான். அனைவரும் உண்மைய ஒத்துக்கணும். எகைன் அண்ட் எகைன் கம்மு.. தேங்க்ஸு,,

    மலை அண்ணா... வாங்க.. உங்களை எதிர் பார்த்தேன்..ஒரே வரியில் சுருங்கச் சொல்லி விட்டீர்கள். நன்றி..

    ReplyDelete
  11. (தலைப்பு : பசுமரத்தாணி)
    அம்மா இங்கே வா வா..
    ஆசை முத்தம் தா தா..
    இலையில் சோறைப்போட்டு ,
    ஈயை தூர ஓட்டு...

    இந்த பாட்டு எப்ப, எந்த வயசில சொல்லிக்கொடுக்கிறாங்க..?

    சிறுவயதிலேயே , குழந்தைகள் மனதில் , நல்ல விசயங்களை
    பதித்துவிட வேண்டும்..
    இப்போது செய்தால் , அடுத்த தலைமுறை தப்பிக்கும்..
    இல்லையென்றால்.. ?????????

    ReplyDelete
  12. சரியான சமயத்துல வந்து தேவையான கருத்த சொல்லீட்டிங்க பட்டா பட்டி..

    நன்றி..

    ReplyDelete
  13. //இது செம இங்கிலீஷ்.. நமக்கு கொஞ்சம் கஷ்டம்.
    கொஞ்சம் படித்தேன்.. நல்லா இருந்துச்சு... மீதிய, ஐ ரீட் வென் ஐ கெட் டைம். //

    தல...உண்மை என்னன்னா நமக்கு தமிழ்ல நல்லா எழுத வராது.அது தான் இங்கிலிஷ வச்சு எஸ்கேப் ஆகிட்டு இருக்கேன்.இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது?

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி இல்லுமிநாட்டி..

    ReplyDelete
  15. .தனக்கு ஒரு கால குடுக்கலைன்னாலும் இன்னொரு காலும் ரெண்டு கையும், நல்லா படச்சதுக்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் அந்த மனங்களை உணரும்போது, ரெண்டு கை ரெண்டு கால் இருந்தும் நாம ஊனமா வெளங்காம இருப்பது புரியும்.
    .............. நல்ல கருத்துள்ள இடுகை. பொதுவாக, பணத்தை பெருக்க வழி தெரிந்தால் மட்டுமே புத்திசாலித்தனம் என்ற போக்கு இன்னும் இருக்கிறது. தாங்கள் குறிப்பிட்டது போல, கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய.

    ReplyDelete
  16. நன்றி சித்ரா... தொடர்ந்து இணைந்து இருங்கள். .நன்றி..

    ReplyDelete
  17. பல அவலங்களை சேர்த்து வைத்து உடுக்கை அடிச்சிருக்கிங்க சாமக்கோடங்கி..... நச்சு நச்சுன்னு சரியான அடி ...
    தொடர்ந்து அடிச்சிட்டே இருங்க ... சிக்கிரம் முழிக்க வச்செரலாம் ........

    ReplyDelete
  18. அருமையான பதிவு. சுய ஒழுக்கன்ற ஒரு விசயம் இருந்தா நம்ம நாடு முன்னேற்றமடையும்.

    ReplyDelete
  19. நன்றி பத்மநாபன்... தொடர்ந்து இணைந்து இருங்கள்..
    தொடர்ந்து உடுக்கை அடிக்கிறேன்.. எல்லோருக்காகவும்..

    நன்றி ராமசாமி... நீங்கள் தான் என்னுடைய பக்கத்தின் நூறாவது பின்னூட்டத்தை இட்டவர்..சுய ஒழுக்கம் மிக அவசியம்.. அதை சின்ன வயசிலிருந்தே சொல்லிகொடுக்கணும்...

    ReplyDelete
  20. சாரி பிரகாஷ் கொஞ்சம் லேட்டாகிவிட்டது. தங்கள் பதிவை பார்த்ததும் எனது குழந்தைகளையும் அனாதை ஆஸ்ரமத்திற்கு அழைத்துசெல்லும் எண்ணம் வந்துள்ளது. நல்ல பதிவு...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  21. நன்றி வேலன்..

    லேட்டா வந்தால் என்ன... எனக்கு மிகவும் மகிழ்ச்சி..

    தொடர்ந்து வாருங்கள்.. நீங்கள் செய்வதோடு நில்லாமல் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.. நல்ல கருத்துகள் மக்களைச் சென்றடைந்தால் மிக மகிழ்ச்சி..

    ReplyDelete
  22. ரசிக்க வெச்சதோட மட்டும் இல்லாமல் யோசிக்கவும் வெச்சிட்டீங்க பாஸு

    ReplyDelete
  23. உலகம் மாறணும் மாறணும் என்று பேசும் நாம் எல்லோரும் அந்த மாற்றங்கள் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என்று உணர்வதில்லை...

    ReplyDelete
  24. உங்கள் உணர்வை மதிக்கிறேன்.எனக்கும் இதுமாதிரி பல சமயம் வருவது உண்டு.இன்னொரு அந்நியன் உருவாகி விட்டான்.

    ReplyDelete
  25. எதை எதை எப்போ ஏற்றனுமுன்னு தெளிவாகி சொல்லி கொடுத்தால் நல்ல ஒரு தலைமுறை உருவாகும்.

    நல்ல பதிவு நண்பரே! நன்று.

    ReplyDelete
  26. வாங்க கவிதைக் காதலன்..
    உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..

    தொடர்ந்து வாங்க...

    ReplyDelete
  27. வாங்க sangkavi...

    உங்கள் கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து இணைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  28. பட்டா பட்டி அண்ணா...

    என்ன பண்றது..

    இந்த நெட்டு வேற சமயத்துல வேல செய்ய மாட்டேங்குது... ஆபீஸ்லயும் நெறைய வேல... ஆனா அடுத்த பதிவுக்கு கரு ரெடி..
    வந்துட்டே இருக்கேன்...

    ரொம்ப நன்றி பட்டாபட்டி..

    ReplyDelete
  29. ஸ்ரீராம்...

    முதல் தடவையா வந்திருக்கீங்க...

    மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பது தான் என் கருத்தும். அனைவரும் உணரும் காலம் வரும்..

    ReplyDelete
  30. வாங்க மின்னல்...

    அந்நியர்கள் உருவாவதில்லை.. உருவாக்கப் படுகிறார்கள்.. இன்னும் தோண்ட வேண்டியது நிறைய இருக்கிறது நண்பரே..

    உங்களைப் போன்றோரோடு பகிர்ந்து கொள்வதால் தான் யாரிடமும் சொல்ல முடியாத இது போன்ற கருத்துகள் வெளியில் என்னிடமிருந்து வெளிவருகின்றன..

    தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. நன்றி..

    ReplyDelete
  31. ILLUMINATI ..

    வந்துகிட்டே இருக்கேன்....

    நீங்க கூப்பிடா விட்டாலும் வருவேன்..

    நன்றி...

    ReplyDelete
  32. வாங்க ஜமால்,

    //எதை எதை எப்போ ஏற்றனுமுன்னு தெளிவாகி சொல்லி கொடுத்தால் நல்ல ஒரு தலைமுறை உருவாகும்.//

    தெளிவாக சொல்லிக்கொடுப்பதை விட,
    தெளிவாகி சொல்லிக்கொடுப்பதே சிறந்தது..

    அருமையான கருத்து நண்பரே.. நன்றிகள்..

    நட்புடன் பிரகாஷ்..

    ReplyDelete
  33. thanks for coming,thala.and you bet i'll write like that always. :)
    namakku serious matter ellam elutha varaathu thala. ;)

    ReplyDelete