ஜக்கம்மா வந்துருக்கா, ஜக்கம்மா வந்துருக்கா,
தமிழ் சினிமாவையே கொஞ்ச காலம் ஆட்டிபடச்ச நம்ம அண்ணன் கௌண்டமணியை பத்தி சொல்ல வந்துருக்கா...
அண்ணனோட சொந்த ஊரு, கோயம்புத்தூர் பக்கத்துல இருக்குற கேங்கம்பாளையம். மணிங்கற பேர மத்தவங்க எல்லாம் கௌண்டர்ங்கற அடை மொழியோட கூப்புடவே அதுவே அவர் பேரோட ஒட்டிகிச்சு. கௌண்டர் மணிங்கறது காலபோக்குல மருவி கௌண்டமணின்னு ஆயிடுச்சு...
ஆரம்பத்துல சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ள நடிசிட்டிருந்தவரு, பின்னாள்ள கதா நாயகனா நடிக்கிற அளவுக்கு முன்னேரனாறு. ஆனா அது அவருக்கு வொர்க் அவுட் ஆகாமப் போகவே, ஒடனே சுதாரிசிக்குட்டு, தன்னோட லைன கெட்டியா புடிசுகிட்டாரு(இப்பகூட அவர் இடதைப்புடிக்க ஆல் இல்ல சாமியோவ்).
உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, நம்ம அண்ணன் பத்து படங்கள்ள ஹீரோவா நடிச்சிருக்காரு.
காமெடியில யாரையும் பாத்து காப்பி அடிக்காம தனக்குன்னு ஒரு பாணிய வெச்சுகிட்டாறு. தனக்கே உரிய கோயம்புத்தூர் குசும்பும், பாஷையும் அவருக்கு ரொம்ப கை குடுத்துடுச்சு.
தன்னோட நக்கல், நையாண்டி, கிண்டல் எல்லாத்தையும் ஆரம்ப காலங்கள்ள நெறைய பேரு விமர்சனம் செஞ்சப்ப அதபத்தி எல்லாம் கவலைபடாம தன்னோட இயல்பான நடிப்பால நகைச்சுவை ரசிகர்கள் எல்லாரையும் கட்டிபோட்டிருக்காரு.
மற்ற நேரங்களில் எல்லாம் மிக அமைதியாக, சாந்தமாக இருக்கும் மணி அண்ணன், அக்ஷன் சொன்னதும் படபிடிப்பு தளத்தையே வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவாராம். அவருடைய வசனங்களில் பெரும்பாலானவை, அக்ஷன் சொன்ன பிறகு, தானாக தோன்றியவை தானாம்.
நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், சிறந்த குணச்சித்திர நடிகராகவும், ஏன், வில்லன் நடிகராகவும் கூட, தன்னோட முத்திரையைப் பதிய வெச்சிருக்காரு.
ஒரு பார்டியில நாலஞ்சு நண்பருங்க சேர்ந்து பேசும் போதோ, காலேஜ்ல அரட்டை அடிக்கும்போதோ, அட இவ்வளவு ஏம்ப்பா, இஸ்கூல் பசங்க கூடி சேர்ந்து பேசும்போது கூட எப்படியோ இடையில நொழஞ்சு, கௌண்டமணி காமெடி வந்துருதுன்ன பாத்துக்குங்களேன்...
அவர் நடித்த படங்கள் பத்தி பட்டியல் போடதேவையில்ல. வலைத்தளத்துல எங்க தேடனாலும் கெடைக்கும்.
நம்ம தலைமுறையோட ஈடு இணை இல்லாத நகைச்சுவை பேரரசர் கௌண்டமணின்னு சொன்னா மிகையாகாதுங்கோ...
ஜக்கம்மா வாக்குக்கு ஒரு நல்ல பின்னூட்டம் போடுங்கோ..
Saturday, August 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டம்:
இன்னம் கொஞ்சம் சொல்லியிருக்கலம் கோடங்கி,,,
settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
வாங்க கலையரசன்,
டிப்ஸ் குடுத்ததுக்கு தேங்க்ஸ் ..
அடுத்த சாமத்தில ஜக்கம்மா இன்னும் நல்ல சேதி சொல்லுவா..
அடிக்கடி குறி கேளுங்கோ....
Kounder pathi neria ezuthunga. Avar First Padam 16 vaithinaliae thane ? Rajini Kita Poi
"Patha Vachtiae Parate " Vasanam Solluvarur
//நம்ம தலைமுறையோட ஈடு இணை இல்லாத நகைச்சுவை பேரரசர் கௌண்டமணின்னு சொன்னா மிகையாகாதுங்கோ...
//
நெசதானுங்க.. கோவைல எங்க இருக்கறீங்கணா?
ஆனா என்னதான் சொல்லுங்க நம்ம செந்தில் அவருக்கு வலது கைங்கோ
Post a Comment