Friday, February 26, 2010

நாய்ப்பொழப்பு...
ரொம்ப நாளைக்கு அப்புறம் என் நண்பன் ஒருத்தன பார்த்தேன்.. ஏதோ ஒரு கம்பெனி சாதனங்களுக்கு சர்வீஸ் மேனாக வேலை பார்க்கிறான். தெனமும் கொறஞ்சது ஆறு ஏழு இடங்களுக்கு வண்டியில பறக்கணும்.வேலை எல்லாம் எப்டிடா போகுதுன்னு கேட்டேன்..அவன் சொன்ன பதிலில் இருந்து இந்த இடுகையின் தலைப்பு ஆரம்பமாகுது...

"அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."

எங்க வீட்டுல ஒரு ரெண்டுமாச நாய்க்குட்டி இருக்குது..(பேரு ரெமோ) காலங்காத்தால நேரத்துல எந்திரிச்சிடுவான்.. வீட்டு கேட்ட தொறக்கும்போதேல்லாம், ஏதோ பெரிய வேலை இருக்குற மாறி அவசர அவசரமா வெளியில ஓடுவான். வேடிக்க பார்ப்பான்.. அடுத்த தடவ கேட்ட தொறக்கும் போது அவசர அவசரமா உள்ள ஓடி வருவான். என்னமோ உள்ள பெரிய பிசினஸ் இருக்குறா மாறி.. டைமுக்கு நல்லா வாங்கி கொட்டிக்குவான்.. அப்புறம் எதையோ வெட்டி முறிச்சா மாறி தூங்குவான்.. அப்புறம் அடுத்த நாள் காலையில இதே ஜோலி ஆரம்பம்..

இதுதான் உண்மையான நாய்ப்பொழப்பு...

ஆனா நம்ப வாழ்க்கைய கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன்..

காலைல நேரத்துல எந்திரிக்க வேண்டியது.. கொஞ்ச நேரம் மச மசன்னு யோசிக்க வேண்டியது..அப்புறமா கீ குடுத்த பொம்ம மாறி(இப்பெல்லாம் கீ குடுக்குற பொம்ம எங்க இருக்கு.. எல்லாம் பாட்டரி மாட்டுன பொம்மைகள் தான்..)அங்குட்டும் இங்குட்டும் ஓட வேண்டியது.. அப்புறமா தண்ணி சூடு பண்ணி-பல்லு வெளக்கி-குளிச்சு-துணி அயன் பண்ணி-பர்சு,சீப்பு,ஐடி கார்டு சகிதங்களை எடுத்து-அவசர அவசரமா ஷூ மாட்டி- ஓட்டமும் நடையுமா பஸ் ஸ்டாண்டுக்கு போய்-பஸ்ல தொத்தி-நசிஞ்சு போய் எறங்கி-கம்பெனிக்குப் போய்-ஏசி காத்துல உக்காந்து கம்ப்யுட்டர தட்டி-டீ ப்ரேக்-லஞ்ச் ப்ரேக்-பிரெண்ட்ஸ் கூட அரட்டை-சாயங்காலம் கெளம்ப வேண்டியது- அதே பஸ் சகிதங்கள் ரிவர்ஸில்-மப்டிக்கு மாறி சாப்புட்டு தூங்க வேண்டியது...

அடுத்த நாள் இதே வேலை...

சனி ஞாயிறு சொல்லவே தேவை இல்லை.. ரெமொவாச்சும் அப்ப அப்ப எந்திரிச்சு வெளிய போயிட்டு வருவான்.. முழிச்சிருக்கும்போது சுருசுருப்பாத்தான் இருப்பான்.. ஆனா நாமளோ கட்டில்லையே படுத்துட்டு, டிவி ரிமோட்ட கையில வெச்சிட்டு அந்த நாள் முழுசா அப்படியே போகும்..

உண்மையா நெனச்சுப் பாத்தா நம்ம பொழப்ப விட நாய்ப் பொழப்பு தேவலைன்னுதான் தோணுது.. ரெமோ சந்தோஷாமாத்தான் அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தீட்டுத் திரியறான்.. ஆனா நாம சந்தோஷமா இருக்கோமா..?

இப்படியே இதே மாறி நாம சுத்திகிட்டு இருந்தோம்னா நம்ம மண்ட நெசமா மழுங்கித்தான் போகும்.. அப்புறமா நம்ம புள்ளைங்க இதையேதான் செய்யப் போகுது..

ஆனா இத கொஞ்சம் நாம மாத்திகலாமொன்னு யோசிக்கும் போது பிறந்த ஐடியாக்கள்..

சிலவற்றை நான் செய்தும் பார்த்து விட்டேன்..

நம்மள சுத்தி இருக்குற எல்லா இடங்களிலும் நம்மள புத்துணர்வா வெச்சிருக்கிற பல விஷயங்கள் இருக்கு.. அத சரியா பயன்படுத்திக்கிட்டாலே, நம்மளோட அந்த நாள் வெறும் சரா சரி நாளாக இல்லாமல் கொஞ்சம் விருவிருப்பானதா வித்தியாசமானதா இருக்கும். நம்ம கொழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம்..அவங்களோட திறமைகள கண்டுபிடிக்கவும் வசதியா இருக்கும்.(ஒரு லட்சியம் அமையும் போது அங்கே தவறான வழிகளில் மனம் செல்வது தவிர்க்கப் படும் என்று நம் முன்னைய இடுகையில் பார்த்தோம் அல்லவா..)

ஐடியா 1:

எப்பப் பார்த்தாலும் ஒரே பஸ் ஸ்டாண்டுல தானே இறங்குறோம்.. ஒரு நாள் ஒரு ஸ்டாப்பிங் தள்ளி எறங்கி நடந்து பாப்போமே..இல்லாட்டி ஒரு ஸ்டாப்பிங் முன்னாடி இறங்கலாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கத் தானே போறோம்..? ஒரு அரை மணி நேரம் தள்ளி வந்தா என்ன ஆயிடப்போகுது...? ஆனா காலைல இத முயற்சி பண்ணினா அன்னைத்த வேலைக்கு ஆப்பு தான்..
நான் ட்ரை பண்ணிப் பார்த்தேன்... (அட காலைல இல்லப்பா, சாயங்காலம் தான்..) நல்லா தான் இருந்துச்சு..கொஞ்சம் சாயங்கால காத்துல மொள்ளமா சுத்தி முத்தி வேடிக்க பாத்துக்கிட்டே.. வீடு வரைக்கும்... டெய்லி முயற்சி பண்ண முடியல.. ஆனா வாரத்துல ஒரு தடவையாவது முன்னாடி ஸ்டாப்ல எறங்கி நடப்பேன்.. என்ன பண்றது நம்ம லைப்ல இப்டித்தான் கொஞ்சம் வித்தியாசம் கொண்டு வர முடியும்.

ஐடியா 2:

டைம் கிடைக்கும்போது...நம்மள சுத்தி இருக்குற பொருட்கள உத்துப் பார்ப்பது.. அது தாம்ப்பா.. கூர்ந்து கவனிப்பது... அப்டி என்ன இருக்குன்னு கேக்குறீங்களா..?நான் எடுத்த இந்த படங்களைப் பாருங்க.. இது தெனமும் நம்மள சுத்தி இருக்குற விஷயங்கள் தான்...
நான் கொஞ்சம் உத்துப் பார்த்தப்போ கெடச்சுது..


ஐடியா 3:

இது குழந்தைகளுக்காக.. நான் ஏற்கனவே என்னுடைய இருகையில் சொன்னது தான்.. "பினாலஜி ஸ்டடி" அதாவது மரங்களை உற்று கவனிப்பது அப்டீன்னு வெச்சுக்கலாம்..
இதுவும் ஒரு வகையில நம்ம தினசரி வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்கள் மாற்றங்கள் தரும் விஷயங்கள் தான்..

ஐடியா 4:

பக்கத்துல இருக்குற ஏதாவது பகுதிகளுக்கு சும்மா போயிட்டு வருவது.. ஆனா எந்த நோக்கமும் இல்லாமல்.. அப்பதான் நெறைய விஷயங்கள கவனிக்க முடியும்..(சட்னிக்கு தேங்கா வாங்கப் போனதெல்லாம் இந்த கணக்குல வராதுங்கோ..)
நான் கூட மலையேற்றம் போவேன்..

என்னடா போரடிக்கிறேன்னு பாக்குறீங்களா? விஷயம் இல்லாமல் நான் சொல்ல மாட்டேன். என் கம்பெனி கஸ்டமர்கள் ஜெர்மானியர்கள். அவர்களைக் கொஞ்சம் கவனிக்கும் போதும் மற்றும் உடன் வேலை செய்யும் மற்றும் ஜெர்மனி சென்று வந்த நண்பர்கள் சொன்ன சில விஷயங்கள் சில கீழே..

அவர்கள் நுண்மையாக யோசிக்கக் கூடியவர்கள். எதையும் பொறுமையாக அணுகும் தன்மை கொண்டவர்கள். அந்த நாட்டின் படைப்புகள் மிகுந்த தரத்துடன் (உதாரணத்திற்கு போல்க்ஸ்வாகன் காரை எடுத்துக் கொள்ளுங்கள்) இருப்பதற்கு காரணமா இதைச் சொல்லலாம்..

இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை நினைத்தே இந்த இடுகை. நல்லா படிப்பது, பாடுவது போன்ற விஷயங்கள் இதிலிருந்து வித்தியாசப் பட்டது.. இது மிகவும் தேவையானது. (பத்து நிமிஷம் அட்வைஸ் பண்றா மாறி சீன் வந்தாலே தியேட்டர விட்டு தம் அடிக்க வெளிய வந்துடராணுக நம்ம பசங்க.. இது கூட அவங்க பொறுமைக்கும் கூர்ந்து கவனிக்கும் திறனுக்கும் ஒரு எடுத்துக் காட்டு தான். வெளிப்படையாகத் தெரியாது அவ்வளவுதான்).

நம் குழந்தைகளுக்கு இந்த திறனை வளர்க்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்...?

என்ன நண்பர்களே.. கூர்ந்து கவனிப்போமா..?

உங்க கிட்ட ஏதாவது ஐடியாக்கள் இருந்தால் இங்கே பகிருங்கள்.. அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்..

நன்றி..

54 பின்னூட்டம்:

ஜெய்லானி said...

///சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துத் தூங்கத் தானே போறோம்..? ஒரு அரை மணி நேரம் தள்ளி வந்தா என்ன ஆயிடப்போகுது...?///

இன்னும் கல்யாணம் ஆகலையே ???. (ஒரு வேளை ஆகி இருந்தா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

Pebble said...

//அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."//
இந்த நாய் வீட்ல வளக்கிற நாய் இல்லங்க, தெரு நாய்....

Madurai Saravanan said...

நாய் பொழைப்பு ...மாற்ற நல்ல மனித தத்துவமான யோசனைகள்.வாழ்த்துக்கள். காதலித்து பாருங்க ...எல்லாமே மாறி விடும். தப்பாவே புரிஞ்சுக்குவீங்க போல தெரியுதே...!ஆமா செய்யும் ஒவ்வொரு தொழிலையும் அனுபவித்து காதல் செய்யுங்கள் அப்புறம் பாருங்க எல்லாமே நல்ல அனுபவமாக தெரியும். நன்றி . வாழ்த்துக்கள்.

Chitra said...

இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை நினைத்தே இந்த இடுகை.

......... நல்ல ஐடியா. நல்ல பதிவு. :-)

ஸ்ரீராம். said...

நாய்க்கு வேலை இல்லை, நிற்க நேரமில்லை என்பார்கள்.. அதை நினைவு படுத்தும் ஆரம்ப வரிகள்.

சும்மா இருப்பது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஞானிகளாலும் முடியாத விஷயமாம் அது..

செடி, மரங்களுடன் பேசினால் அவைகளும் நன்றாக வளர்ந்து காய், கனி தருமாம்.

மயில்ராவணன் said...

நண்பரே.நிதர்சனமான பதிவு.திலீப்குமாரின் கதை படிப்பது போல இருந்தது. phenologyயோட ornithologyயையும் சேர்த்துக்கலாம். நான் கூட ‘MNS'ல இருக்கேன். வெவ்வேறு விதமான பறவைகள், அதன் பழக்கவழக்கங்கள் இப்படி ஏகப்பட்டது உள்ளது. எவன் ஒருவன் இதைப்போன்று மரங்கள்,விலங்குகள், பறவைகள் போன்றவற்றை ரொம்ப நேசிக்கிறானோ அவனுக்கு மனிதத்தன்மை அதிகமாக இருக்கும் இயல்பாகவே.நன்றி ப்ரகாஷ்.

பட்டாபட்டி.. said...

நல்ல கருத்துக்கள்..
சொல்ல மறந்துட்டேன்..ஒரு சேஞ்சுக்காக ,
முன்னாடி பஸ் ஸ்டாப்பில இறங்கியது போல ,
பக்கத்து வீட்டுக்குள்ள போயிடாதீங்க..( சும்மா டமாசுக்கு...)

ஜெர்மங்காரங்களை பற்றி சொன்னீங்களே.. அது அனுபவப்பூர்வமாக
நான் கண்ட உண்மை..

வந்த புதிதில், ஒரு ஜெர்மன் கம்பெனியில் Product designer(Leica) ஆக இருந்தேன்..
அவர்களிடம் இருந்து பல விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது..
எந்த ஒரு விசயத்தையும் , அக்குவேறு , ஆணிவேறாக அலசுவது..
Customer care.. etc....

ஒரு நாள், டெஸ்பாச்செய்யும் போது ஒரு கேமராவில் , சின்ன கீறல் இருந்தது..
நன்றாக உற்றுப்பார்த்தால் தெரியும்..

அப்படியே , டெஸ்பாட்ச்சை நிறுத்த சொல்லிவிட்டார்கள்..
அதற்கு பின் நடந்த மீட்டிங்கில் வறுத்தெடுத்தானுக..( அது வேற விசயம்)..

தரத்தை , எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுத் தரமாட்டார்கள்..
Invention-க்கு சிறந்த உதாரணம் ஜெர்மன்.. என்ன... மார்கெட்டிங்க் அவ்வளவு பண்ணமாட்டார்கள்..(இப்போது அதிலும் focus செய்கிறார்கள் என கேள்விப்பட்டேன்)
creativity- ஜப்பான் காரனுக சிறந்தவங்க...காப்பி பண்ணி , மாஸ் புரொடெக்ஷ்ன் பண்ணுவதில் வல்லவர்கள்..
தரம் என்று பார்த்தால் , ஜெர்மனைவிட சிறிது குறைவாக இருக்கும்.. ஆனாலும் நல்ல வியாபாரிகள்..

விரைவில் நம் நாடு இவர்களைவிட ,உயரத்தில், கொடி கட்டிக் பறக்கும் காலம் வரும்.. வரனும்....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ஜெய்லானி ..

ஆமாம்.. இன்னும் கல்யாணம் ஆகலை.. அய்யய்யோ.. நீங்க சொல்றதப் பாத்தா நான் ஏதோ தப்பா சொல்லீட்டேனோ..? அப்ப வீட்டு வேலை எல்லாம் நான் தான் பாக்கணுமா..?ம்ம்ம்ம்ம்....

நன்றி வருகைக்கு...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@Pebble..
////அதை ஏண்டா கேக்குற... நாய்ப்பொழப்பு..."//
இந்த நாய் வீட்ல வளக்கிற நாய் இல்லங்க, தெரு நாய்....//

நீங்கள் சொல்வது சரி.. ஆனா தெருநாய்களின் நிலைமை இன்னும் மோசமானதே..

என்னை சுற்றி நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை வைத்தே என்னுடைய இடுகைகள் அமைகின்றன.. அதில் இதுவும் ஒன்று... தெருநாய்களை கூர்ந்து கவனித்தால் இன்னும் நிறைய எழுதலாம்..

கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து வாங்க..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@Madurai Saravanan...
//ஒவ்வொரு தொழிலையும் அனுபவித்து காதல் செய்யுங்கள் //

அற்புதமான வரிகள்..கண்டிப்பாக இதை எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

அனால் காதல் தொழில் மீது மட்டும் இருக்க வேண்டும். செய்யும் கம்பெனி மீதல்ல.. அதிலும் கொஞ்சம் கவனமாக இருத்தல் நன்று..

நன்றி மதுரை சரவணன்....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@Chitra

நீங்கள் ஏதாவது யோசனைகள் ஐடியாகள் வைத்திருந்தால் எங்களுக்கும் சொல்லுங்கள்...

நமது தலைமுறையினரிடம் கூர்ந்து கவனிக்கும் திறந குறைவதற்கு நமது அன்றாட வாழ்க்கை முறை தான் காரணம் என்பதை உணர்கிறீர்கள் தானே..? ஏதாவது அனுபவங்கள் இருந்தாலும் கூறுங்கள்..

எப்போதும் இணைந்து இருக்கும் உங்களுக்கு நன்றி சித்ரா...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ஸ்ரீராம்.

//செடி, மரங்களுடன் பேசினால் அவைகளும் நன்றாக வளர்ந்து காய், கனி தருமாம்.//

உயர்தினைகளிடம் பண்புடன் நடந்து கொள்வதே நம்மவர்களுக்கு முடிவதில்ல பல சமயங்களில். நீங்கள் ஆக்ரினைகளுடன் பேசுமாறு சொல்கிறீர்கள்.. மிக உயர்வான கருத்துகள்.. நல்ல சிந்தனை.. நிச்சயம் செய்ய வேண்டிய விஷயங்கள்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@மயில்ராவணன்..
//எவன் ஒருவன் இதைப்போன்று மரங்கள்,விலங்குகள், பறவைகள் போன்றவற்றை ரொம்ப நேசிக்கிறானோ அவனுக்கு மனிதத்தன்மை அதிகமாக இருக்கும் இயல்பாகவே//

இது போன்ற எண்ணங்களை வெளியே கொண்டுவருவதற்கே இந்த இடுகை...

எண்ணம் நிறைவேறியது...
அனைவரையும் சென்றடைய வேண்டிய வரிகள்..
நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@பட்டாபட்டி..

அஆஹா... அமர்க்களமா வந்திருக்கீங்களே...

நீங்க வந்தால் தான் அரங்கமே களைகட்டுது..

ஜேர்மன் காரங்களை பத்தி இன்னும் சொல்லுங்களேன்.. நேரம் இருந்தா...

ரொம்ப நன்றி..

டுபாக்கூர்கந்தசாமி said...

தல உண்மையா சொல்லனும்னா சூப்பரான கருத்து அதுலயும் ஐடியா 3 சூப்பரோ சூப்பர்.

கூர்ந்து கவனிக்கரது பழக்கம் நம்ப பசங்களுக்கு இல்லனு மட்டும் சொல்லாதீங்க ஒரு பொண்ணு போச்சினா அது 1 கி மீ தள்ளி இருந்தாலும் விடாம கூர்ந்து பாப்போம்ல(சும்மா லுல்லாய்க்கு சொன்னேன்)

உங்க ஜெரிமானிய நண்பர் சொன்ன மாதிரி கூர்ந்து கவனிச்சா தான் பொருள் என்ன எல்லா உயிரகளோட இயல்பு தெரிய வரும்.

வாழ்த்துகள்ங்க தல தொடருங்கள் : )

சைவகொத்துப்பரோட்டா said...

அட்டகாசமான இடுகை நண்பரே, வாழ்த்துக்கள், இதுல அந்த மரம் பார்க்கிறது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

பட்டாபட்டி.. said...

//ஜேர்மன் காரங்களை பத்தி இன்னும் சொல்லுங்களேன்.. நேரம் இருந்தா...
ரொம்ப நன்றி..//

ஏம்பா பிரகாஷு..
நான் இது போல தன்னம்பிக்கை பதிவு எழுதலாம்தான்.
என்ன பிரச்சனைனா , நம்ம வெளியூரு, ரெட்டை , மங்குனி , ஜெய்லானி
போட்டு கிழிச்சுடுவானுக..
அதுக்குத்தான் பார்க்கிறேன்..

( விஜயகாந்த் , முதலமைச்சர நடிக்கிறத எப்படி மக்களால
ஏத்துக்க முடியாதோ.. அது போல.. )

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ டுபாக்கூர்கந்தசாமி

வாங்க டுபாக்கூர்..

ரொம்ப கூர்ந்து கவனிப்பீங்க போல..? பொண்ணுங்கள கூர்ந்து பாக்கிற பசங்கள நீங்க ரொம்ப கூர்ந்து பாப்பீங்க போல..?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ சைவகொத்துப்பரோட்டா...

நீங்க வந்ததில ரொம்ப சந்தோஷம்.. நம் குழந்தைகளுக்கும் இது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்கும்போது நல்ல பொறுமையும், அமைதியும் உருவாகும் என்பதில் ஐயமில்லை..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@பட்டாபட்டி..

நீங்க சொல்றது சரிதான்..
மத்தவங்க அண்டர்வேர அவுத்து விடற நேரத்துல, நம்ம பட்டா பட்டிய பறக்க விடாம பாத்துக்கணும்.. ஆனா நீங்க எழுதுவேன்னு சொன்னவுடனே எனக்கு உள்ளூர கொஞ்சம் பயம் வந்துருச்சு..

அப்புறம் அந்த விஜயகாந்த் மேட்டர கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியல.. ஆனா நம்ம காலம் முடியரக்குள்ள நடிக்கறத இல்ல நேர்லயே பாப்போம்..

என்ன பண்றது..

பத்மநாபன் said...

தம்பி , ஆரம்பத்துல செய்யற தொழிலையும் , நன்றியுள்ள நாயையும் கொஞ்சம் இறக்கி கொண்டு போகிற மாதிரி இருந்தது. பின்னர் , நிதர்சனமான, தொடர் வேலையில் உள்ள சலிப்பையும் எடுத்து காட்டி ,நாயின் உற்சாகத்தை உதாரணமாக்கி,புதிது புதிதாக படைப்புத்திறனையும் , பார்வையும் மாற்றினால் எல்லாம் சிறப்பாகும் என்று எடுத்துகாட்டுக்களோடு ....
நல்ல பதிவு ....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அண்ணா...

நாயாக இருந்தாலும் எந்த பிராணியாக இருந்தாலும் நான் மரியாதைக் குறைவாக எண்ணுவதில்லை..

செய்யும் தொழில் எனக்கு தெய்வம்.. அப்படி நினைத்தே நான் தினமும் வேலை செய்கிறேன்..

எங்கள் ரெமோ எப்போதும் வீட்டுக்குள்ளே தான் சுத்திகிட்டு திரியுவான்.. அனேக வீடுகள்ல கட்டி போட்டே தான் வெச்சிருப்பாங்க..ஆனா எங்க வீட்டுல அவனும் ஒரு அங்கம். அது போக ரெண்டு பூனைகள் வீட்டுக்குள்ளே இருக்கு.. இதெல்லாம் எங்கள் இணைபிரியாத உறவுகள்.. அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை..

என்னை கடைசியில் புரிந்து கொண்டமைக்கு நன்றி..

நாடோடி said...

//அப்புறமா நம்ம புள்ளைங்க இதையேதான் செய்யப் போகுது..//

மொட்டை மாடியில் வீடு என்றால் ஒரு மீன்தொட்டி வாங்கி வைத்து அவைகளை பரமரிக்கலாம். இல்லை வீட்டின் வெளியில் இடம் இருக்கிறது என்றால் பூச்செடிகளையாவது நட்டு வளர்க்கலாம். சிறுவயதிலேயே இது போன்ற விசயங்களை குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கலாம்..நல்ல அருமையான காலத்துக்கேற்ற பதிவு..வாழ்த்துக்கள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க நாடோடி...

நல்ல ஐடியா.. ஆனால் ஏன் மொட்டை மாடியில்..? வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வீட்டு வாசலிலோ கூட வைக்கலாம். எங்கள் வீட்டு வாசலில் ஒரு மீன் தொட்டி உள்ளது.. எங்கள் புது வீட்டிலும் நல்ல ஒரு மீன் தொட்டி வைக்க யோசனைகள் உள்ளன.

மீன் தொட்டிய எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குழந்தைகள் உத்துப் பார்ப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.. மிக அருமையான யோசனை. ஆனால் மிக பொறுமையாக நன்றாக பராமரிக்க வேண்டும். அவைகள் இறந்தால் மனதிற்கு கவலையாக இருக்கும். சரியான நேரத்திற்கு சரியான அளவு உணவளிக்க வேண்டும். அதிகமும் ஆகக் கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது..

பூச்செடிகள் நடுவதிலும் நம் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டவே செய்கின்றன..

அருமையான யோசனைகள் வழங்கியதற்கு நன்றிகள்.. தொடர்ந்து இணைந்து இருங்கள். நன்றி..

நாடோடி said...

நான் மொட்டை மாடி என்று குறிபிட்டது அடுக்கு மாடி குடியிருப்புகள்.

Cable Sankar said...

:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

நான் மொட்டை மாடி என்று குறிபிட்டது அடுக்கு மாடி குடியிருப்புகள்.
//

ஆஹா.. சாரி தலைவா.. நான் அந்த மாறி இடங்கள்ல குடியிருந்ததில்லை.. அதனால் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Cable Sankar said...

:)
//

உங்கள் சிரிப்பிற்கு நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழமுதத்திலிருந்து jmms..

//நம் குழந்தைகளுக்கு இந்த திறனை வளர்க்க வேண்டியது அவசியம் என்று நான்
நினைக்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்...?//


mika sari..

நன்றி jmms...

நன்றி சாந்தி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழமுதத்திலிருந்து வேந்தன் அரசு எழுதியது..

---------------------------
// இந்த பொறுமைக்கும், நிதானத்திற்கும் மூலம் விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதாகும்.
நம் தலைமுறையினரிடம் இந்த கூர்ந்து கவனிக்கும் தன்மை குறைந்து வருவதை
நினைத்தே இந்த இடுகை. நல்லா படிப்பது, பாடுவது போன்ற விஷயங்கள்
இதிலிருந்து வித்தியாசப் பட்டது.. இது மிகவும் தேவையானது. (பத்து நிமிஷம்
அட்வைஸ் பண்றா மாறி சீன் வந்தாலே தியேட்டர விட்டு தம் அடிக்க வெளிய
வந்துடராணுக நம்ம பசங்க.. //அதுக்கு காரணம் அட்வைய்சு பண்ணறவன் தகுதி...

---------------------

நீங்கள் சொல்வதும் சரிதான்....

உங்கள் கருத்துக்கு என் நன்றிகள்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழமுதத்திலிருந்து வேந்தன் அரசு எழுதியது..

---------------------------

ஐடியா 5

ஒவ்வொரு தருணத்துக்கும் ஒரு பொண்ணை சைட் அடிக்கலாம்.
பஸ்ஸில் ஒன்னு அலுவலகத்தில் ஒன்னு, நடந்து போகும் தெருவழியில் ஒன்னு.

(இந்த அறிவுரை அரபு நாடுகளில் பணிபுரிவோருக்கு பொருந்தாது)

-----------------------------

ஆஹா.. ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல...

நன்றிகள் பல....

ஜெரி ஈசானந்தா. said...

உங்க பெயர் ரொம்ப [வலைப்பதிவு] புடிச்சிருக்கு,என் வாழ்க்கையில் பல முடிவுகள் எடுத்தது இவர்களுக்கும் உண்டு,எல்லாமே பயன் வாய்த்த முடிவுகள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஓஹோ.. அப்படியா..?

நன்றி ஜெரி ஈசானந்தா... வருகைக்கும் பதிவுக்கும்..

தொடர்ந்து இணைந்து இருங்கள்..

thenammailakshmanan said...

நிஜம்தான் சாமக் கோடங்கி பசங்க சொல்றதையே கேக்குறது இல்லை இதில கூர்ந்து கவனிக்கிறதாவது

அக்பர் said...

நல்ல ஐடியா.

செயல்படுத்தி பார்க்க வேண்டியதுதான் நண்பரே.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்லா இருக்குங்க! சொந்தம்,பந்தம்,
நட்பு,புத்தகம்,பார்க்,பீச், இப்படியும் போகலாமில்ல!

எறும்பு said...

//Cable Sankar said...

:)
//

எவளவ்வு சீரியசா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. என்னமா வந்து சிரிச்சுட்டு போறாரு பாருங்க
:)

எறும்பு said...

என்னுடைய புகைப்படம் அருமையா வந்திருக்கு
:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//thenammailakshmanan said...

நிஜம்தான் சாமக் கோடங்கி பசங்க சொல்றதையே கேக்குறது இல்லை இதில கூர்ந்து கவனிக்கிறதாவது
//

நீங்கள் சொல்வதும் சரி.. ஆனால் இதையும் மாற்ற சில யோசனைகள் உள்ளன.. அடுத்த பதிவு இதன் தொடர்ச்சியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்..

ஆனால் வேறொரு தலைப்பில்...

உங்கள் வருகையில் எனக்கு மிக மகிழ்ச்சி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அக்பர் said...

நல்ல ஐடியா.

செயல்படுத்தி பார்க்க வேண்டியதுதான் நண்பரே.
//

நன்றி அக்பர்.. இந்த ஐடியாக்கள் சும்மா ஒரு தூண்டுகோல் தான்.. ஒவ்வொருவருக்குள்ளும் இதுபோல் ஓராயிரம் ஐடியாக்கள் புதைந்துள்ளன..

செயல்படுத்திப் பாருங்களேன்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்லா இருக்குங்க! சொந்தம்,பந்தம்,
நட்பு,புத்தகம்,பார்க்,பீச், இப்படியும் போகலாமில்ல!//

நல்ல யோசனை.. குழந்தைகளையும் உடன் அழைத்துப் போக வேண்டியது மிக அவசியம்..

உங்கள் வருகைக்கு என் நன்றிகள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//எறும்பு said...

//Cable Sankar said...

:)
//

எவளவ்வு சீரியசா சொல்லிக்கிட்டு இருக்கீங்க.. என்னமா வந்து சிரிச்சுட்டு போறாரு பாருங்க
:)//

அந்த சிரிப்பை தலை கீழாகப் பார்த்தால் சிந்திப்பது போல் ஒரு பிம்பம் தோன்றுகிறது எனக்கு..

எறும்பின் வருகை இதே முதல் முறை என்று நினைக்கிறேன்..

தொடர்ந்து வாருங்கள்.. நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//எறும்பு said...

என்னுடைய புகைப்படம் அருமையா வந்திருக்கு
:)--//

நீங்கள் என்று தெரியாமல் எடுத்து விட்டேன்..

கடித்து விடாதீர்கள்...

ILLUMINATI said...

super Friend.

புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

அன்புடன் மலிக்கா said...

நாய்பொழப்பு------ நல்ல சிந்தனை.நல்ல கருத்துக்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ILLUMINATI said...

super Friend.
நன்றி இல்லுமிநாட்டி..

அப்புறம்... நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், நம் நண்பர்கள் அனைவரின் பகுதிகளையும் நான் சுற்றிக் கொண்டே தான் இருப்பேன். பிடித்திருந்தால் பின்னூட்டம் போடுவேன்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//அன்புடன் மலிக்கா said...

நாய்பொழப்பு------ நல்ல சிந்தனை.நல்ல கருத்துக்கள்..//

உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி..

உங்களிடமிருந்தும் சில கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்....

மின்னல் said...

ஜடியா நம்பர் ஓன்று நல்லா இருக்கு. நடப்பது சுகமானது தான்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி மின்னல்.....

உங்க ஐடியா'வையும் சொல்லலாமே....?

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல மொழிநடை !

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி ரிஷான் ஷெரீப்...

கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டிருக்கிறேன்..

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல கருத்துக்கள்..
நன்றி.

V.Radhakrishnan said...

மிகவும் அருமையான விசயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நல்லா எழுதி இருக்கீங்க.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி ராதாகிருஷ்ணன்..

தொடர்ந்து இணைந்து இருங்கள்..

Post a Comment