Saturday, March 27, 2010

தண்............

தலைப்பைப் பற்றி கடைசியில் பார்க்கலாம்..

உக்கடத்தில் இருந்து சாய்பாபா காலனி வர்றதுக்கு உள்ளயே கிட்டத்தட்ட ஏழெட்டு சிக்னல்..ஒவ்வொரு சிக்னலிலும் கிட்டத்தட்ட மூணு நிமிஷம்.. நண்பகல் பன்னிரண்டு மணி.. கொளுத்துற வெயில்.. சிக்னல்ல நிக்கிற வண்டிங்க எல்லாம் மானாவாரிக்கு புகையடிக்க, என்ஜின் சூடேல்லாம் ஒண்ணாச் சேந்து ஒடம்புத்தோலை பதம் பார்க்க, கண்ணைக் கூட தொறக்க முடியாம தக தகன்னு இருக்க, தீக்குண்டத்துல நிக்க வெச்ச மாறி ஒரு பீல்..

உங்களால உணர முடியுதா...?

இந்த ரோட்டுல மருந்துக்கு கூட ஒரு மரம் இல்ல...எங்க பாத்தாலும், கட்டடங்கள், வானளாவப் பறக்கும் புழுதி மண்....

இனி மரங்கள நட்ட வெச்சு, வளர்த்து, குளிர்ச்சிய கொண்டு வந்து, அப்புறம் பூமிக்கு நல்லதெல்லாம் செஞ்சு மாத்துரதுக்குள்ள கொஞ்ச காலம் ஆகும்..

ஆனா அதுக்குள்ள நாம பல நல்ல விஷயங்கள இழந்தரலாம்.. அதனாலதான் அவசர அவசரமா இந்த பதிவு..

ஆ.. எங்க விட்டேன்.. ஆங்.. சிக்னல்ல விட்டேன்..

சாய்பாபா காலனிய தாண்டி மேட்டுப்பாளையம் வர்ற வழியெல்லாம் நூறடிக்கு ஒரு தருபூசணிக்கடை, இருநூறு அடிக்கு ஒரு இளநீர்க் கடை, பேக்கரி எல்லாம் குளிர் பானங்கள், அங்கங்கே பதநீர்... மனுஷன் எப்படியும் பொழச்சுக்குவான், தன்ன எப்படியாவது காப்பாத்திக்குவான்... இத்தன பிரச்சினைக்குக் காரணமே நாம தான்.. அதை உணராமல், தற்காலிகத் தீர்வுகளைத் தேடிக்கிறோம்.. ஆமா.. பின்ன இந்த இளநீர், தருபூசணி எல்லாம் நம்மள எத்தன நாளைக்கு காப்பாத்தும்....?

ஆனா இந்த பிரச்சினைக்கு எந்த விதத்திலும் காரணம் ஆகாமல், ஒரு பாவமும் அறியாமல், ஏன் இப்படி நடக்குதுன்னு கூட தெரியாமல் ஒரு சில ஜீவன்கள் செத்து மடிகின்றன..

அவைகளை காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்..கண்டிப்பா முடியும்.. முடியாத காரியங்களைப் பற்றி எப்போதுமே நான் சொன்னதில்லை...

ஒரு குவளை தண்ணீர்...
ஆம் ஒரு குவளை தண்ணீரை உங்கள் வீட்டு வெளிச் சுவற்றிலோ, அல்லது மொட்டை மாடியிலோ வையுங்கள்.. சூட்டில் அலைகின்றன பறவைகள் மற்றும் நம்மைச் சுற்றி வாழும் விலங்கினங்கள்..வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வேக வேகமாக உடல் உஷ்ணத்தை வெளியேற்றப் போராடுவதை நீங்கள் கண்கொண்டு பாருங்கள்.. தருபூசணி வாங்க அவைகளிடம் காசு இல்லை, இளநீரை உடைத்து கொடுக்க ஆளில்லை, எந்தக் குளம் குட்டைகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை.. அவைகளின் நிலை யாருக்கும் புரிவதில்லை..

ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரும் 'மனிதம்' உள்ளவர்கள் என்று நான் கருதுகிறேன்.. அப்படி இருக்கும் பட்சத்தில், நாளை குறைந்தது ஒரு ஐம்பது குவளை தண்ணீராவது இந்த சிறு குருவி காக்கைகளுக்கு கிடைக்கும்(ஐம்பது - சும்மா வழக்கமாக என் பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கை).

குவளைகளை யாராவது அபேஸ் பண்ணி விடுவாங்கன்னு நெனைச்சீங்கன்னா, ஒரு கையளவு மணல சுவர் மேல வெச்சு, அதுல தேங்காய் மூடிய நிக்க வெச்சு அதுல தண்ணி வெக்கலாம்...

எங்க வீட்டுல பாருங்க...மனமூடி அடுத்த பதிவில், மனிதாபிமானம் இந்தப் பதிவில்..

அப்புறம் இந்தத் தலைப்பைப் பத்தி நீங்களே ஏதாவது சொல்லீட்டுப் போங்களேன்...

நன்றி...

64 பின்னூட்டம்:

தமிழ் உதயம் said...

தலைப்பை பத்தி... தண்ணீர்.

தண்ணீர் தாகம் ரெம்ப கொடுமையானது. இதுல ஆறறிவு, ஐந்தறிவு என்கிற பேதமெல்லாம் இல்ல. ஒரு சின்ன மணி அடிச்சு யோசிக்க வைச்சதுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்.

நாடோடி said...

வாய் திற‌ந்து கேட்க‌ முடியாத‌ ஜீவ‌ன்க‌ளுக்கான‌ இடுகை..அழ‌கு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தண்ணீருடன் நான் உணவும் வைக்கறேன். பானைகளில் ஓட்டை போட்டு பாதுகாப்பான கூடுகளாகக்கூட மரங்களில் கட்டி பறவைகளுக்கு உதவலாம் என்று கூட படித்திருக்கிறேன். அதனை செயல் படுத்தவும் ஒரு எண்னமுண்டு.

நல்ல பதிவு பிரகாஷ்.

ஹுஸைனம்மா said...

திறந்த பால்கனி இருக்குபோது இப்படி வைப்பதுண்டு. இப்ப மூடிவிட்டதால் வைக்க முடியவில்லை.

பட்டாபட்டி.. said...

உணர்வுப்பூர்வமான பதிவு.. வாழ்த்துக்கள் பிரகாஷ்..

நம்மால் முடிந்த சிறு உதவிதான் இது..
நல்ல யோசனைதான்.. நன்றி...

பத்மநாபன் said...

தண்ணீர் ... தண்ணீர் .... எல்லா உயிரினத்திற்கும் அடிப்படை ... நல்ல கருத்து .. இதை காடுகளில் அரசாங்கம் வன விலங்கு நலத்திற்காக ஓடையின் நடுவே சிறு தடுப்பு கட்டி நீர் தேங்க வைக்கும் மனிதம் பார்த்திருக்கிறேன். இங்கு பணிபுரியும் பாலைவனத்தில் ஒட்டகங்களுக்காக அங்கங்கு ஒரு மேல் நிலை தொட்டியும் கிழ் நிலை தொட்டியும் நிறுவி நித்தம் நீர் நிரப்பும் எண்ணை நிறுவனங்களின் மனிதத்தை பார்த்து வருகிறேன் ... இங்கு நீங்கள் சொல்வது நாட்டில் வீடுகளில் தாகத்தில் அல்லாடும் பறவைகளுக்காக நிச்சயம் செய்யவேண்டிய / செய்ய கூடிய ஒரு செயல் ...எடுத்து சொன்னவிதமும் அருமை .. பாராட்டுகள் .

Agen2010 said...

nalla sethi naanum panren

Abiramii Fashions said...

Good thought .Keep it up my dear freind

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையாக இருக்கிறது உங்கள் படங்களும் சிந்தனையும்,,,இப்படி ஒரு யோசனையை தந்ததற்கு நன்றி நண்பரே!!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ன்னூட்டம்:

தமிழ் உதயம் said...

தலைப்பை பத்தி... தண்ணீர்.

தண்ணீர் தாகம் ரெம்ப கொடுமையானது. இதுல ஆறறிவு, ஐந்தறிவு என்கிற பேதமெல்லாம் இல்ல. ஒரு சின்ன மணி அடிச்சு யோசிக்க வைச்சதுக்கு நன்றி.
//

வாயால் உச்சரிக்க முடியாத ஜீவராசிகளுக்கான பதிவாதலால் , அவர்களால் வாய் திறந்து கேட்க முடியாத வார்த்தை.. தண்ணீர்..

முதலில் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி...

தண்ணீர் மட்டும் இல்லை உணவும் வைக்கலாம்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஜெரி ஈசானந்தன். said...

ரசித்தேன்.
//

ரசித்தமைக்கு நன்றி.. அப்படியே தண்ணீர் வைக்கவும் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. மனமார இதைச் செய்யும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

வாய் திற‌ந்து கேட்க‌ முடியாத‌ ஜீவ‌ன்க‌ளுக்கான‌ இடுகை..அழ‌கு
//

சரியாகச் சொன்னீர்கள்..

அவைகள் இல்லையேல் நாமும் இல்லை..

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தண்ணீருடன் நான் உணவும் வைக்கறேன். பானைகளில் ஓட்டை போட்டு பாதுகாப்பான கூடுகளாகக்கூட மரங்களில் கட்டி பறவைகளுக்கு உதவலாம் என்று கூட படித்திருக்கிறேன். அதனை செயல் படுத்தவும் ஒரு எண்னமுண்டு.
//

நல்ல விஷயங்களை நினைத்தவுடன் செய்யுங்கள் ஷங்கர்.. சரியாக வரும் பட்சத்தில் எங்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

திறந்த பால்கனி இருக்குபோது இப்படி வைப்பதுண்டு. இப்ப மூடிவிட்டதால் வைக்க முடியவில்லை.
//
வாருங்கள் ஹுஸைனம்மா ..

வேறு ஏதும் வழி உண்டா என்று யோசியுங்கள்.. எனினும் செய்ய வேண்டும் என்று நினைத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் நன்றிகள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

உணர்வுப்பூர்வமான பதிவு.. வாழ்த்துக்கள் பிரகாஷ்..

நம்மால் முடிந்த சிறு உதவிதான் இது..
நல்ல யோசனைதான்.. நன்றி...
//
அண்ணா... கரிக்டா வந்து அட்டன்டன்ஸ் போட்டுட்டீங்க.. வெளியூர்ல ஒண்ணும் பண்ண முடியாது..வீட்ல இருக்குறவங்க கிட்ட சொல்லி செய்ய வெய்யுங்க.. ரொம்ப நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said...

தண்ணீர் ... தண்ணீர் .... எல்லா உயிரினத்திற்கும் அடிப்படை ... நல்ல கருத்து .. இதை காடுகளில் அரசாங்கம் வன விலங்கு நலத்திற்காக ஓடையின் நடுவே சிறு தடுப்பு கட்டி நீர் தேங்க வைக்கும் மனிதம் பார்த்திருக்கிறேன். இங்கு பணிபுரியும் பாலைவனத்தில் ஒட்டகங்களுக்காக அங்கங்கு ஒரு மேல் நிலை தொட்டியும் கிழ் நிலை தொட்டியும் நிறுவி நித்தம் நீர் நிரப்பும் எண்ணை நிறுவனங்களின் மனிதத்தை பார்த்து வருகிறேன் ... இங்கு நீங்கள் சொல்வது நாட்டில் வீடுகளில் தாகத்தில் அல்லாடும் பறவைகளுக்காக நிச்சயம் செய்யவேண்டிய / செய்ய கூடிய ஒரு செயல் ...எடுத்து சொன்னவிதமும் அருமை .. பாராட்டுகள் .
//
நன்றி பத்மநாபன் அவர்களே...

நேரமின்மை காரணமாக உங்கள் பகுதிக்கு வர முடியவில்லை.. கண்டிப்பாக வருவேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Agen2010 said...

nalla sethi naanum panren
//

வாங்க Agen2010

நல்ல கருத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Abiramii Fashions said...

Good thought .Keep it up my dear freind
//

வாருங்கள்.. நமது பகுதிக்கு புதிதாக வந்துள்ளீகள்... தொடர்ந்து வந்து உங்கள் கருத்தையும் ஆதரவையும் தாருங்கள்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையாக இருக்கிறது உங்கள் படங்களும் சிந்தனையும்,,,இப்படி ஒரு யோசனையை தந்ததற்கு நன்றி நண்பரே!!!
//

வாங்க பனித்துளி சங்கர்...

யோசனை புதிதல்ல... தேவையான நேரத்தில் ஒருமுறை ஞாபகப் படுத்தினேன்.. அவ்வளவே..

நன்றி...

Madurai Saravanan said...

குவளைத் தண்ணீர் வைத்தேன். நல்ல கருத்துப் பகிர்வு. வாழ்த்துக்கள்

மன்னார்குடி said...

மிக நல்ல சிந்தனை. நானும் பின்பற்ற முயல்கிறேன். வாழ்த்துக்கள் பிரகாஷ்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Madurai Saravanan said...

குவளைத் தண்ணீர் வைத்தேன். நல்ல கருத்துப் பகிர்வு. வாழ்த்துக்கள்
//

நன்றிகள் பல... இந்த விலங்கினங்களும் கூறும் உங்களுக்கு..

பதிவை இன்னும் காரசாரமாக எழுதியிருப்பேன்.. வெயிலுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கட்டுமே.. அதனால் தான் கொஞ்சமாக நிறுத்திவிட்டேன்...

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மன்னார்குடி said...

மிக நல்ல சிந்தனை. நானும் பின்பற்ற முயல்கிறேன். வாழ்த்துக்கள் பிரகாஷ்.
//
தயவு செய்து செய்யுங்கள்.. கோடி நெஞ்சங்கள் உங்களுக்கு வாழ்த்துகள் கூறும்..

இரசிகை said...

ithai naanga seivathunndu........

gramathil appaththa veetil!!

appuram,
saamak kodangi--ithil kodaangi illaiyaa?

yenakku doubt?valakkathil maruvithaan nedil aakivittathaa?

theriyala.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க இரசிகை...

கோடங்கி என்பதே சரியானது என்று நினைக்கிறேன்.... ஆனால் நீங்கள் கோடாங்கி என்றும் சொல்லலாம்..

எப்படிச் சொன்னால் என்ன...?

குறி மட்டும் எப்போதும் சரியாகச் சொல்வேன்..

அதும் போதும் தானே..?

மொதல் மொதலா வந்திருக்கீங்கோ.. ரொம்ப நன்றி..

அஹமது இர்ஷாத் said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி அஹமது அவர்களே..


தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் வருகையே எனக்கு ஊக்கம்...

மங்குனி அமைச்சர் said...

//ஆம் ஒரு குவளை தண்ணீரை உங்கள் வீட்டு வெளிச் சுவற்றிலோ, அல்லது மொட்டை மாடியிலோ வையுங்கள்.. சூட்டில் அலைகின்றன பறவைகள் மற்றும் நம்மைச் சுற்றி வாழும் விலங்கினங்கள்..வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வேக வேகமாக உடல் உஷ்ணத்தை வெளியேற்றப் போராடுவதை நீங்கள் கண்கொண்டு பாருங்கள்.//

கண்டிப்பா பன்றேன் தல

என்.ஆர்.சிபி said...

வாயில்லாப் புல்லினங்களுக்கும் தாகம் தீர்க்கச் சொல்லும் பதிவு அருமை!

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல பதிவு.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உக்கடம், சாயி பாபா காலனி அப்படீன்னா நீங்க கோவையா பிரகாஷ். அடுத்த மாதம் நான் கூட கோவை வருவேன். அப்புறம் உங்க பதிவு நல்ல பதிவு. நாங்க தண்ணீர், அரிசிக்குறுனொய், மீந்த சோறு எல்லாம் வைப்பதுண்டு.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மங்குனி அமைச்சர் said... //

வாங்க அமைச்சரே...

மற்றவகளிடமும் பரப்புங்கள்.. நன்றி..

கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதினால், உங்கள் பக்கத்திற்கு வரமுடியவில்லை... என் பகுதிக்கும் எப்போதாவது தான் வர முடிகிறது...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

///என்.ஆர்.சிபி said...

வாயில்லாப் புல்லினங்களுக்கும் தாகம் தீர்க்கச் சொல்லும் பதிவு அருமை!
//

ஆம்... பரிவு காட்டும் நெஞ்சங்களில் பாகுபாடில்லை..

தொடர்ந்து வாருங்கள் சிபி அவர்களே..

நன்றி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல பதிவு.
//

நன்றி ஓம்கார் அவர்களே.. தொடர்ந்து இணைந்து இருங்கள்...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உக்கடம், சாயி பாபா காலனி அப்படீன்னா நீங்க கோவையா பிரகாஷ். அடுத்த மாதம் நான் கூட கோவை வருவேன். அப்புறம் உங்க பதிவு நல்ல பதிவு. நாங்க தண்ணீர், அரிசிக்குறுனொய், மீந்த சோறு எல்லாம் வைப்பதுண்டு.
//

வாங்க சாந்தி அக்கா...(ஐ.. இந்த தடவை சரியாச் சொல்லீட்டேன்..)கோவை வந்தால் சொல்லுங்கள்.. நான் கோவை மேட்டுப்பாளையத்தில் இருக்கிறேன்...

உங்களைச் சந்திக்க நேர்ந்தால் சந்தோஷம்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ஜெய்லானி

நான் பெரும் முதல் விருது இது... நீங்கள் வந்தது எனக்கு மிகப் பெரிய விருது... மிகப் பெரும் ஜாம்பவாங்களுக்குக் கிடைக்கும் இந்த விருது எனக்கும் கிடைத்தது மிகப் பெரும் மகிழ்ச்சி.. நன்றி.. அதை எனக்குப் பெற்றுத் தர உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி... எனது பணியை தொடர ஒத்துழைப்பு நல்க அனைவரையும் வேண்டுகிறேன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழமுதத்தில் பதிந்தவை...

=========================
அருமை... கடைபிடிப்போம்.

--
சாந்தி
===========================
செல்வன்

எங்கவீட்ல பறவைகளுக்கு தானியமும் வைத்து தன்ணீரும் வைக்கிறோம்.வீட்டுக்கு வெளியே எப்பவும் அழகழகான பறவைகள் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
===================
K N.SHANTHI LAKSHMANAN

எங்கே இருக்கிறீர்கள் செல்வன் நீங்கள்? அதாவதயு நீங்கள் குடியிருக்கும் இடம்! பறவைகள் பார்வைக்கு அழகு மட்டுமல்ல. மனவளத்தையும் பெருக்கும்.ரசனை, அமைதியையும் தரும். அருமையான பணி!
=======================
செல்வன்
நன்றி சாந்தி.நான் என் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் தான் பறவைகளுக்கு தானியம் வைக்கிறேன்.விஸ்கான்சின் மாநிலம் குளிருக்கு பெயர்போனது.குளிர்காலத்தில் பறவைகளுக்கு உணவு கிடைக்காது,நீரும் உறைந்துவிடும்.இந்த மாநிலத்தில் பாதிக்கு பாதி வனபகுதி என்பதால் நிறைய பறவைகள் உண்டு.அலுவலக பகுதியில் மான்கள் ஏராளம் உண்டு.வனபகுதியில் நடைபெயிற்சி மேற்கொண்டால் நேரம் போவதே தெரியாது.
====================
தஞ்சை-மீரான்
நல்ல ஒரு பதிவுதான்.

நாம் எல்லாம் தண்ணீர் வச்சு உதவலாம் பறவைகளுக்கு.

இந்த பதிவை வேட்டைகாரர்கள் படிக்காமல் இருந்தால் மிகவும் நல்லது.
====================
SHIBI N R
தமிழ்நாட்டில் ஒரே ஒரு வேட்டைக்காரன் தான் உண்டு!
====================
தஞ்சை-மீரான்
தவறு, அவர்கள் இரண்டு நபர்கள்.

பழசு, புதுசு என்று இரண்டு வேட்டைகாரர்கள் உண்டு. ஒருவர் இப்பொழுது உயிரோடு இல்லை.

இப்போ இருப்பவருக்கு, மீன் என்றால், ரொம்ப பிடிக்குமாம்.

இப்போ இந்த வேட்டைக்காரன் "சுறா" பிடிக்க போய் விட்டார்.
====================
SHIBI N R
//ஒருவர் இப்பொழுது உயிரோடு இல்லை.//
அதனால்தான் ஒரே ஒரு வேட்டைக்காரன் என்றேன்!

அந்த வேட்டைக்காரன் இருந்திருந்தால் இந்த வேட்டைக்காரனெல்லாம் தலையெடுத்திருக்கவே முடியாதே!
====================
balan s
வணக்கம்,
என் பெயர் பாலு , நானும் கோயம்புத்தூர் வாசிதான் , நீங்க எங்க இருக்கீங்க , உங்கள மாதிரி நல்லவங்க இருக்கரனாலதன் இன்னும் பறவைகள் இனம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன . வாழ்த்துக்கள் .
====================
SHIBI N R
நண்பர் பாலன் அவர்களுக்கு,
நான் இருபது ஒண்டிப்புதூர்!

நிற்க: அந்தப் பதிவு என்னுடையதில்லை! சாமக் கோடங்கி என்ற நண்பருடைய இடுகை! எனவே உங்கள் பாராட்டுக்கள் அவருக்கு போய்ச் சேரவேண்டியவை!

இப்பொழுது அமர்ந்து கொள்க!

நன்றி.
====================
K N.SHANTHI LAKSHMANAN
செல்வன் நீங்கள் வனப்பகுதியில் வசிக்கிறீர்களா? அருமை. யார் செய்த புண்ணியமோ? நாங்கள் வசிக்கும் அந்தமான் தீவுகளும் அமைதியான வனங்கள் நிறைந்த பகுதி. நானும் புண்ணியம் பண்ணியிருக்கிறேன். நன்றி!
====================
tamil payani
பாலன் நானும் கோவையே. உங்களை பற்றி அறிமுகம் செய்துக்க இயலுமா?
====================
செல்வன்
உண்மைதான் சாந்தி லக்ஷ்மணன்.அந்தமான் அற்புதமான இயற்கை அழகு சூழ்ந்த பகுதி.
வனபகுதியில் வசிப்பது ஆண்டவன் தந்த கொடையே ஆகும்
====================
balan s
அன்புள்ள சாம கோடாங்கிக்கு,
என் பெயர் பாலன் , நான் கோயம்புத்தூர் - இல் உள்ள ஆவரம்பாலயத்தில் வசிக்கிறேன் , உங்களது பதிப்பு மிகவும் பிரமாதம் , மேலும் உங்கள மாதிரி நல்லவங்க இருக்கரனாலதன் இன்னும் பறவைகள் இனம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன . வாழ்த்துக்கள்
====================

உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல...

Ananthi said...

@பிரகாஷ்

எனக்கு தோன்றிய தலைப்பு...
"தண்ணீருக்குத் தவிப்பு..."

அழகிய, அவசியமான சிந்தனை..
ரொம்ப நல்லா இருக்குங்க..
தொடர்ந்து இது போல் எழுத வாழ்த்துக்கள்.. :-)

Ananthi said...

vote pannittaen, comment pannittaen.. oru glass thanneer kidaikkumaa?? (just kidding...)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

@ ஆனந்தி...

உங்கள் வருகைக்கு நன்றி..

உங்கள் கவிதை மிக அழகு..

இதற்குள்ளேயே தண்ணீர் தாகம் எடுத்து விட்டதா...?

கோயம்புத்தூர் வாங்க, கண்டிப்பாக தண்ணீர் தருகிறேன்..(சும்மா...)

LK said...

யோசிக்க வேண்டிய ஒன்னு பிரகாஷ்
நாம் பகுதி ஆள் நீங்க

அம்பிகா said...

நிச்சயம் செய்கிறேன். நல்ல பதிவு. உயிர்களிடத்தில் அன்பு காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க LK...

யோசிக்கணும்.. செயல்படுத்தனும்..

நன்றி.. தொடர்ந்து இணைந்து இருங்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க அம்பிகா...

எல்லாரும் அன்பு காட்ட வேண்டும் என்பதே நம் அவா..

தொடர்ந்து வாருங்கள்.. ஊக்கம் தாருங்கள்.. நன்றி..

அமைதிச்சாரல் said...

எங்க வீட்டுல இதை ரொம்பகாலமா செய்றோம்.தண்ணி மட்டுமல்ல, சாப்பாடு,புறா,குருவிகளுக்காக தானியங்களும் வைக்கிறதுண்டு.காக்கைகள் டைம்டேபிள் போட்டுக்கொண்டு வரும் எங்கவீட்டுக்கு.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

இதோ...சிறிய பாத்திரத்துடன் கிளம்பிவிட்டேன்.எதற்கா..மொட்டைமாடியில் பறவையின‌ங்களுக்கு நீர்வைக்கத்தான்.எங்கள் பகுதியில் புறாக்கள் அதிகம்.ரொம்ப யோசிக்கவைத்த நெகிழவைத்த பதிவு சார்.வாழ்த்துக்கள்.

goma said...

உங்கள் இந்த பதிவில் எனக்குப் பிடித்த விஷயம் சிட்டுக்குருவி .
சென்னையில் இதுவரை என் கண்ணில் படாத, குருவி குருவி, சிட்டுக்குருவியைப் பார்த்ததும் மகிழ்ந்தேன் .
இந்த இனம் காணாமல் போகிறதாமே ...காப்பாற்ற வழி யோசிக்கணும்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும் உங்கள் நல்ல மனதை,வாயில்லா ஜீவன்கள் எல்லாம், வாயிருந்தால் வாழ்த்தும்

தக்குடுபாண்டி said...

அழகான பகிர்வு, வாழ்த்துக்கள். //தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும் உங்கள் நல்ல மனதை,வாயில்லா ஜீவன்கள் எல்லாம், வாயிருந்தால் வாழ்த்தும்//

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//எங்க வீட்டுல இதை ரொம்பகாலமா செய்றோம்.தண்ணி மட்டுமல்ல, சாப்பாடு,புறா,குருவிகளுக்காக தானியங்களும் வைக்கிறதுண்டு.காக்கைகள் டைம்டேபிள் போட்டுக்கொண்டு வரும் எங்கவீட்டுக்கு.//

கேட்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கு... இதில் இருக்குமே சுகமே தனிதான்.. அனைவரும் செய்து பார்க்கலாம்.. காகங்கள் சரியாக மாலை ஐந்து மணிக்கு என் அம்மாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடும்.. ஆனாலும் ஜாலிதான்.. காலையில் கூட ஒரு அணிலை வீடே பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தோம்...

ஆஹா..

நன்றி அமைதிச்சாரல்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//இதோ...சிறிய பாத்திரத்துடன் கிளம்பிவிட்டேன்.எதற்கா..மொட்டைமாடியில் பறவையின‌ங்களுக்கு நீர்வைக்கத்தான்.எங்கள் பகுதியில் புறாக்கள் அதிகம்.ரொம்ப யோசிக்கவைத்த நெகிழவைத்த பதிவு சார்.வாழ்த்துக்கள்.//

ஆஹா.. புறாக்களா..? நீங்கள் கொடுத்து வைத்தவர்...

கேட்கவே ரொம்ப சந்தோஷப் படுகிறேன்.. ஒரு நாள் செய்து பாருங்கள்.. அப்புறம் உங்களால் விடவே முடியாது..

நன்றி ஸாதிகா.... அப்புறம் "சார்" தேவையில்லை.. பிரகாஷ் என்றே சொல்லுங்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//உங்கள் இந்த பதிவில் எனக்குப் பிடித்த விஷயம் சிட்டுக்குருவி .
சென்னையில் இதுவரை என் கண்ணில் படாத, குருவி குருவி, சிட்டுக்குருவியைப் பார்த்ததும் மகிழ்ந்தேன் .
இந்த இனம் காணாமல் போகிறதாமே ...காப்பாற்ற வழி யோசிக்கணும்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும் உங்கள் நல்ல மனதை,வாயில்லா ஜீவன்கள் எல்லாம், வாயிருந்தால் வாழ்த்தும்//

ஆமாம் goma.. அந்த இனம் அழியும் முன்னே காப்பாற்ற வேண்டும்... ஆராய்ச்சி செய்யலாம்.. நிறைய அலசலாம்.. அதுவரை தண்ணீர் வைப்பதைத் தொடருவோம்..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க தக்குடுபாண்டி..

//அழகான பகிர்வு, வாழ்த்துக்கள்.//

நன்றி.. அனைவரும் செயல்படுத்த வேண்டிய ஒரு விஷயம்..

செந்தமிழ் செல்வி said...

நல்ல பதிவு! நான் தோட்டத்தில் சாப்பாடு வைக்கவே ஒரு பலகையை உயரமான கொம்பில் அடித்து நட்டிருக்கேன். சாப்பாடு, தண்ணீரும் இருக்கும். நிறைய பறவைகள் ரெகுலராக வந்து பசி, தாகம் நீங்கிப் போகும். நன்றி!

சுசி said...

அருமையான சிந்தனைய செயலாக்கி இருக்கீங்க.

பாராட்டுக்கள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//செந்தமிழ் செல்வி said...

நல்ல பதிவு! நான் தோட்டத்தில் சாப்பாடு வைக்கவே ஒரு பலகையை உயரமான கொம்பில் அடித்து நட்டிருக்கேன். சாப்பாடு, தண்ணீரும் இருக்கும். நிறைய பறவைகள் ரெகுலராக வந்து பசி, தாகம் நீங்கிப் போகும். நன்றி!
//

வாங்க செந்தமிழ் செல்வி.. தண்ணீர் உணவு எங்கு வைத்தாலும் தவறாமல் பறவைகள் வருவதிலிருந்து எவ்வளவு தாகம், வறட்சி நிலவுகிறது என்று பாருங்களேன்.. கழுகுகள் போன்ற பறவை இனங்கள் மனிதனை நெருங்காது.. அவைகள் எப்படி தாகம் தனியுமோ என்ற புதிய கவலை எனக்குள் எழுகிறது..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//சுசி said...

அருமையான சிந்தனைய செயலாக்கி இருக்கீங்க.

பாராட்டுக்கள்.
//

நன்றியை எங்க அம்மாவுக்கு சொல்லணும்...அனைத்து வீட்டு இல்லத்தரசிகளும், தயவு செய்து செய்யுங்கள்... நன்றி..

கவிதன் said...

நல்ல பதிவு பிரகாஷ்!!! உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க.... கண்டிப்பா இத படிக்கிற எல்லாரும் செய்வாங்க என்னையும் சேர்த்து .... !

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி கவிதன்....

மற்றவர்களைச் செய்யச் சொல்லும் விதம் என்பது நாம் செய்து காட்டுவதே.. நீங்கள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் என்றே நம்புகிறேன்..

நன்றி..

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, எங்கள் வீட்டில் தினமும் சாதம் வடித்தவுடன் அது பெருமாளிடம் வைக்கப்பட்டுப் பின்னர் காக்கைகளுக்கு வைத்து விட்டுத் தான் சாப்பிடும் பழக்கம் உள்ளது. காக்கைகள்,அணில்கள் எல்லாம் எங்க வீட்டின் ரெகுலர் கெஸ்ட். ஆனால் இங்கு சிங்கப்பூரில் காக்கைகளைக் கென்று விடுவதால், புறாக்களுக்கு பிரட் துண்டுகளைப் போடுகின்றேன். நன்றி

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, எங்கள் வீட்டில் தினமும் சாதம் வடித்தவுடன் அது பெருமாளிடம் வைக்கப்பட்டுப் பின்னர் காக்கைகளுக்கு வைத்து விட்டுத் தான் சாப்பிடும் பழக்கம் உள்ளது. காக்கைகள்,அணில்கள் எல்லாம் எங்க வீட்டின் ரெகுலர் கெஸ்ட். ஆனால் இங்கு சிங்கப்பூரில் காக்கைகளைக் கென்று விடுவதால், புறாக்களுக்கு பிரட் துண்டுகளைப் போடுகின்றேன். நன்றி
//

ஆஹா... நீங்கள் உங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்..

நீங்கள் கொடுத்து வைத்தவர்..

நன்றி..

Post a Comment