Saturday, May 29, 2010

எலும்புத்துண்டுக்கு கிராக்கி...

வணக்கம் நண்பர்களே..

எங்க வீட்டைச் சுற்றிலும் எங்கம்மா வளர்க்கும் நாய்கள்.. நல்லது தான்.. வீட்டின் முன் பக்கம், பின் பக்கம் என எல்லாப் பக்கங்களிலும் நாய்கள் தான்.வீட்டுக்கு அருகில் ராத்திரியில ஒரு பய நெருங்க முடியாது. அட இவ்வளவு ஏன்.. ஒரு பதினொரு மணிக்கு மேல வீட்டுப் பக்கம் போகனுமுன்னா நானே தூரத்தில் நின்னுகிட்டே சத்தம் போட்டுகிட்டே தான் வரணும்.. அப்பத்தான் அடையாளம் கண்டு பிடிப்பார்கள் எங்கள் வீட்டு காவல்காரர்கள்.ஆனா அவங்களுக்கு உணவு கொடுப்பது ஒண்ணும் பெரிய செலவில்லை. விலைகுறைவான அரிசியில், சட்டி நிறைய ஆக்கி வைத்து விடுவார் என் அம்மா.. அப்புறம் ஞாயிற்றுக் கிழமையோ அல்லது எப்போது மாமிசம் சமைத்தாலும் அவர்களுக்குக் கொஞ்சம் எலும்புத்துண்டு.. அதுவே அவர்களுக்கு ஏதோ பெரிய விஷயம் கிடைத்த மாதிரி..

எங்க பாத்தாலும் பெரிய பெரிய நிறுவனங்கள், டிப் டாப்பாக ஆடை அணிந்து கார்களில் வந்திறங்கும் பெரிய புள்ளிகள், காஷுவலாக ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு பைக்குகளில் பந்தாவாக வலம் வரும் இளசுகள், நாள் முழுதும் விடாமல் குளிர்விக்கப்படும் கட்டிடம், சிறிய வயதில் நிறைய சம்பளம்,அதனால் அவைகளை ஜாலியாக செலவு செய்யும் ஒரு கூட்டம் என்று எல்லோரையும் ஈர்க்கும் ஒரு வசீகரம்... நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இப்போது புரிந்திருக்கும்... ஆமாம் இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களைத் தான் குறிப்பிடுகிறேன்(MNC).

அழுக்கு பட வாய்ப்பே இல்லை, வியர்வைச் சுரப்பிகளுக்கு வேலை இல்லை, சனிக்கிழமைகளில் வேலையே இல்லை. பார்த்தால் யாருக்குத் தான் பொறாமை தோன்றாது..? கஷ்டப்பட்டு வெயிலில் இறங்கி உடல் உழைப்பைக் கொட்டி வேலை செய்பவர்களுக்கோ சொற்பக் கூலி. சாயங்காலம் வந்தால் உடல் வலி தான் மிச்சம். சாயங்கால வேளைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர், ரெஸ்டாரன்ட் என்று ஜாலியாகக் காலம் கழிப்பவர்களைக் கண்டால், கொஞ்சம் என்ன, ரொம்பவே வயிறு எரியத்தான் செய்யும்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் தொகை மிகவும் குறைவு(உலகப் போர்களில் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்து). வெகு சில மக்கள்,ஆனால் நிறைந்த வளங்கள்.. அதனால் நிறுவனங்களுக்கு ஆட்கள் நிறைய தேவை. அதனால், மனித வளத்திற்கு மதிப்பு கூடுகிறது(demand).அதுவும் அவர்களை மிக முக்கிய பணிகளில் அமர்த்த வேண்டிய நிலைமை. அவர்களுக்கும் சிறிய சிறிய எடுபிடி வேலைகள் செய்ய விருப்பம் இல்லை. நல்ல வேலைகளில் அமர்ந்து கொண்டு அளவான வேலை செய்து, நிறைய சம்பாதித்து, நிறைய செலவு செய்து, நிறைய நாட்கள் விடுப்பு எடுப்பதுடன், வருடத்திற்கு, மூன்று அல்லது நான்கு நீண்ட விடுப்புகள் எடுத்து, வேலை-வாழ்க்கை சமநிலையை சரியாக அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள்..(வெளிநாட்டு கஸ்டமர்களிடம் வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்). மக்கள் செறிவு குறைவாக உள்ள நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்குரிய வேலைகளில் இருந்தால் தான் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.

என்னடா இவன்,. ஒவ்வொரு பத்தியிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளரீட்டு இருக்கான்னு நீங்க கேக்குறது புரியுது. ஆனா சம்பந்தம் இருக்கு. ஒரு நாட்டின் மிக முக்கிய பணிகளில் அனைத்திலும், அந்த நாட்டுக் குடிமக்கள் இருக்கிறார்கள். ஆனால் நிறுவனம் என்று ஒன்று இருந்தால், மிக முக்கிய பணிகளும் இருக்கும்,அப்புறம் அதை விட நிறைய எடுபிடி வேலைகளும் இருக்கும்.
அதாவது டாக்குமண்டேஷன்,அப்புறம், 24 x 7 வாடிக்கையாளர் சேவை,அப்புறம்,விற்பனைக்குப்பின் வரும் பிரச்சினைகளைச் சேகரித்தல், தொகுத்தல்,அப்புறம், முதல்தரப் பணியாளர்களுக்கு உதவுதல் இதுமாதிரி கண்ணுக்குத் தெரியாத நிறைய பணிகள் இருக்கு. இதையெல்லாம் யார் செய்யுறதாம்...? அதற்குத் தான் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் வந்திருக்கின்றன.. முதலில் நமது நாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.. இப்போது அந்நாட்டு நிறுவனங்களே நேரிடையாக இங்கே இறங்கி விட்டனர்.கோர் பிசினஸ் என்று சொல்லப்படும், முதல்தர பணிகள் (அராய்ச்சி,திட்டமிடுதல்,வடிவமைத்தல்(design),மற்றும் வளர்ச்சிப்பணிகள்)யாவும் அவரவர்கள் நாட்டில் தான் இயங்கும்(மக்கா வெவரமாத்தேன் இருக்காக பயபுள்ளைக..). அனால் இந்த மிச்ச மீதி விஷயங்க இத்யாதி இத்யாதி எல்லாத்தையும் இங்க கொண்டுவந்து இறக்கீடுறாங்க.. அட ISRO வே அதிகமா புதுமையா எதுவும் கண்டுபிடிப்பதில்லையாம்.. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைத் தான் இன்னும் தூசு தட்டிக்கிட்டு இருக்காங்களாம்..

படிக்கும்போதோ, அல்லது படிச்சு முடிச்ச உடனேயோ வலையைப் போட்டுடறானுக.. நேர்காணல்ல கேக்குற கேள்வியைப் பாத்தா எண்ணமோ அணு விஞ்ஞானத்துக்கு ஆள் எடுக்குற ரேஞ்சுக்கு இருக்கும்(ஆறேழு ரவுண்டுகள் வேற). குழு உரையாடலில்(குரூப் டிஸ்கஷன்) போட்டி போடும் அனைவரையும் பார்க்கும்போது அடேங்கப்பா.. இந்தியாவைக் காப்பாத்தப் போகும் தூண்கள் இவிங்கதான் போல ன்னு இருக்கும்.எதுக்குப்பா...? இந்த எடுபிடி வேலைகள் செய்யத்தான்..
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முதன்மைப் பணியை இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று..? அப்போ இளிச்சவாயன் யார்..? இந்தியாவா..?அரசியல் வாதிகள் இதில் கெட்டிக் காரர்கள், ஒரு கம்பெனி இந்தியாவில் வந்திறங்குவதற்கு முன்னமே, இன்னார் இன்னாருக்கு இவ்வளவு சேர வேண்டுமென்று லஞ்சப் பட்டியல் அவர்களுக்குச் சென்று சேர்ந்து விடும். எங்கே தள்ளினால் எங்கே காரியம் நடக்கும் என்று பன்னாட்டு நிருவனர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

நம்ம ஆளுகளும், சம்பளம் கெடைச்சா போதுமுன்னு படையெடுக்க ஆரம்பிச்சிடறோம். ஆமாம்ப்பா. அதுக்குதான் இந்தப் போராட்டமே.. விவசாயிகளும்,பொண்ணு விளைவிச்சுத் தந்த மண்ண வித்து,பயபுள்ளைகளைப் படிக்க வெச்சு,இந்த வேலைகளுக்கு அனுப்பி வெக்கிறாங்க.விவசாயம் அழிச்சிட்டு வருது.இது போனா எல்லாம் போச்சு.நமது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான,இந்தியாவின் முதுகெலும்பைத் தாங்கிப் பிடிக்கும் பல தொழில்கள் தினந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.

அப்படித்தான் சம்பளம் வாங்குறானே சும்மா இருக்குறானா...? புலியைப் பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா வெளிநாட்டுக் காரன் மாதிரியே தானும் தாம் தூமுன்னு செலவு செய்யுறான். அடுத்தவனுக்கும் ஆசையைக் கிளப்பி விடுறான். அவனால முடியும் அப்படீங்கறதுக்காக ரெண்டு லட்ச ரூவா நிலத்தை இருபது லட்சத்துக்கு வாங்கி நடுத்தர மக்கள் அடிவயித்துல அடிக்கிறான். பின்ன.. ஒரு எடம் அதிக வேல போச்சுன்னா போதுமே.அந்த ஏரியாவே அவுட். ஆக இந்தியா எங்க தான் போய்க்கிட்டு இருக்கு..?

சிறு சிறு நாடுகள் எல்லாம் அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது, நண்பர்களே, பன்னாட்டு நிறுவனங்களில் புரியும் யாரும், நான் பந்தாவாக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று பீற்றிக் கொள்ளாதீர்கள்.. நாமும் அன்றாடங்காட்சிகளே.. இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. திட்டமிடுதலில் இந்தியா பின்தங்கியே உள்ளது. சுயமாக சிந்தித்து நாட்டை முன்னேற்றும் எண்ணம் இங்கு மக்களுக்கும் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் இல்லை. அவரவர்கள் கிடைத்தற்கேற்ப பதுக்கிக் கொள்கிறார்கள். நல்ல மூளை கல்லூரி வரை மட்டுமே உபயோகப்படுத்தப் படுகிறது.. அதற்கு மேல்..?

ஜெர்மனைச் சேர்ந்த சமூக சேவையாளர் கேட்டார், "இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கிறதே.." என்று. நான் பெருமையாகச் சொன்னேன்.. "ஆம் இந்தியா நிறைய பொறியாளர்களை உருவாக்குகிறது" என்று.. அவர் கேட்டார், "அனால் இந்தியாவில் புது வடிவமைப்புக்கான காப்புரிமை (new design patent)பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதேன்..?" என்று.. அவருக்கு விடை தெரிந்ததால், உடனே சன்னமாக சிரித்தார்.. நம்ம ஆளுகளுக்கு இன்னும் தெரியல.. மூளையை சரியான வழியில் உபயோகித்தால் தானே நம் நாடு வளரும்..? மனித வளத்தை வெளிநாட்டுக்கு அடகுவைக்காமல், மக்களுக்கேற்றவாறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டிய தலையாய கடமை அரசுக்கு உள்ளது.

ஆக இப்போதைக்கு இந்தியாவைப் பாத்து வெளிநாட்டுக் காரர்கள் யாரும் கவலைப் படத்தேவை இல்லை.. அவர்கள் அவர்களது நாட்டைச் செம்மைப் படுத்தும் வேலையைத் தொடரலாம்.. அவர்களது மிச்ச மீதி வேலையைச் செய்யத்தான் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.. அதாவது அவர்கள் போடும் .....(தலைப்பு )..... இந்தியாவில்..


இப்போது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்..

நன்றி....

27 பின்னூட்டம்:

Anonymous said...

"நண்பர்களே, பன்னாட்டு நிறுவனங்களில் புரியும் யாரும், நான் பந்தாவாக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று பீற்றிக் கொள்ளாதீர்கள்.. நாமும் அன்றாடங்காட்சிகளே.. இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை"

சரியா சொன்னிங்க பிரகாஷ் ...கைவசம் இருக்கற பூமியே வித்து பசங்களே வெளிநாட்டுக்கு அனுப்பற ஆளுகளே என்ன சொல்ல ?இதே போல் எல்லோரும் செய்ஞ்சா நாளைக்கு சாப்பிட அரிசி மற்ற பொருள் எல்லாம் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ள பெடுவோம் ...

அரசு விவசாய பூமி வேறே எதுக்கும் பயன்பட கூடாது என்று சட்டம் கொண்டு வந்தா நல்லா இருக்கும் .

சாமக்கோடங்கி said...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே..செய்யும் தொழில் தெய்வம் தான்..அனால் நம் அரசு கொஞ்சம் நல்ல தெய்வங்களை நமக்குத் தேர்வு செய்யத் தந்தால் பரவா இல்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு..

சாமக்கோடங்கி said...

ஆஹா... வாங்க சந்தியா..

இவ்வளவு வேகமா..? நான் பதிவு போட்டு பத்து நிமிஷம் கூட ஆகல.. தமிழிஸ்ல பதிவு பண்ணீட்டு வர்றதுக்குள்ள வந்திருக்கீங்க..

ரொம்ப நன்றி.. உங்க கருத்துகள் முற்றிலும் உண்மை.. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம்...

Kousalya Raj said...

நாட்டை பற்றிய கவலை உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. நல்ல பதிவு. பாராட்டுகள்

தமிழ் உதயம் said...

சிறு சிறு நாடுகள் எல்லாம் அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது

நம் தேசம் எந்த வளர்ச்சி பணி குறித்த அக்கறையும் கொள்ளாமல் இருப்பது, நம் தேசத்துக்குரிய சாபக்கேடு தான். அதே நேரம் ஒவ்வொரு தனி மனிதனும், தன் வாழ்க்கை குறித்து தொலை நோக்கோடு சிந்தித்து வாழ்ந்தால், தலைக்கு வந்தது-தலைப்பாகையோடு போயிற்று என்கிற நிலையிலாவது வாழலாம்.

பத்மநாபன் said...

ஆமாம் நண்பரே, நிறைய மக்கள் நல்ல பொறியியலை முக்கியப்படிப்பாக படித்து முடித்திருந்தாலும்,குறுகிய கால நன்மை கருதி எதோ ஒன்றில் சிக்கி தம்முடய நீண்ட கால வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். இது இளஞர்களுக்கு முன்னெச்சரிக்கை பதிவு...

சாமக்கோடங்கி said...

//நாட்டை பற்றிய கவலை உங்கள் எழுத்துகளில் தெரிகிறது. நல்ல பதிவு. பாராட்டுகள்//

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் இருக்க வேண்டியது... நிறைய பேருக்கு ஆர்க்டிக் பனிக்கட்டி போல அது உறைந்து கிடக்கிறது... வெளிவரும் என நம்புவோம்..

நன்றி கௌசல்யா அவர்களே....

சாமக்கோடங்கி said...

வாங்க தமிழ் உதயம்..

//தன் வாழ்க்கை குறித்து தொலை நோக்கோடு சிந்தித்து வாழ்ந்தால்//

யார் வயிற்றிலும் அடிக்காமல், நேர்மையாக என்ற ஒரு சிறு வரியையும் போட்டுக்கொள்ளுங்கள்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//ஆமாம் நண்பரே, நிறைய மக்கள் நல்ல பொறியியலை முக்கியப்படிப்பாக படித்து முடித்திருந்தாலும்,குறுகிய கால நன்மை கருதி எதோ ஒன்றில் சிக்கி தம்முடய நீண்ட கால வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். இது இளஞர்களுக்கு முன்னெச்சரிக்கை பதிவு...// கொடுமை என்னவென்றால், VIT, REC, PSG போன்ற பெரிய கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணாக்கர்கள் கூட இது போன்ற செர்வீஸ் பேஸ்டு கம்பெனிகளில் வேலை செய்வது வருத்தம் அளிக்கிறது...அது அவர்கள் மூளையை அடகு வைத்ததற்குச் சமம்..

நன்றி..

ஜெய்லானி said...

நெஞ்சில கத்தியால குத்தியது போல இருக்கு பதிவு ஆனா அதுதான் நூறு சதவீத உண்மை.இந்தியா எங்கே போய்ட்டிருக்கு ? !!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிறு சிறு நாடுகள் எல்லாம் அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது, நண்பர்களே, பன்னாட்டு நிறுவனங்களில் புரியும் யாரும், நான் பந்தாவாக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று பீற்றிக் கொள்ளாதீர்கள்.
//

ரைட்டு...அடிச்சு விளாசுங்க பிரகாஷ்...
உண்மையை பட்டவர்த்தனமா சொல்லீட்டீங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புது டெம்ப்ளேட் சூப்பராயிருக்கு பிரகாஷ்....

சுசி said...

ரொம்ப நல்ல பதிவு பிரகாஷ்.

எல் கே said...

ஹ்ம்ம் என்ன சொல்ல ,நண்பரே ? இன்னும் சில வருடங்களில் , நிலம் இருக்கும், உழ ஆள் இருக்க மாட்டார்கள்

ILLUMINATI said...

//நேர்காணல்ல கேக்குற கேள்வியைப் பாத்தா எண்ணமோ அணு விஞ்ஞானத்துக்கு ஆள் எடுக்குற ரேஞ்சுக்கு இருக்கும்//

ஆமாமா,கொஞ்சக் கொடுமையா நடக்கும் அங்க?

//நம்ம ஆளுகளும், சம்பளம் கெடைச்சா போதுமுன்னு படையெடுக்க ஆரம்பிச்சிடறோம். //

ஆமா சாமு,நம்ம ஆளுங்கக்கு ரிஸ்க் எடுக்கவே பிடிக்காது.சொந்தமா ஒரு வீடு.ஒரு கார்,கொஞ்சம் பணம்.... இது போதும்னு உக்காந்துருவானுங்க....ரிஸ்க் எடுக்க நினைக்குறவன் தான் மேலும் மேலும் உயர்வான்னு யோசிக்க மாட்டானுங்க.

//மூளையை சரியான வழியில் உபயோகித்தால் தானே நம் நாடு வளரும்..?//

அட,யாரு சொன்னா?லஞ்சம்,ஊழல் இதிலெல்லாம் போட்டி வச்சா நம்ம ஆளுங்க உலக அளவுல சாம்பியனா வருவானுங்க.இதெல்லாம் மூள இல்லாமலா?அதிலயும் நம்ம தமிழ்நாட்டுக்கார பசங்க ரொம்ப கெட்டிகாரனுங்க அப்பு.....

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

நெஞ்சில கத்தியால குத்தியது போல இருக்கு பதிவு ஆனா அதுதான் நூறு சதவீத உண்மை.இந்தியா எங்கே போய்ட்டிருக்கு ? !!!
//
இந்தியாவின் முதுகெலும்பாகிய விவசாயத்தையும், நம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மற்ற சிறு மற்றும் பெரு தொழில்களை பாத்காத்து அந்தத் தொழில்ககளை வளர்க்கும் மக்களுக்கு நல்லதொரு ஊதியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான மானியத்தையும் அரசு வழங்க வேண்டும்.. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம் தீட்டப் பட்டுள்ளதா...?நெஜமாகவே நெஞ்சில் கத்தியால் குத்தியது போல் தான் உள்ளது எனக்கும்.. நன்றி ஜெய்லானி..

நன்றி பட்டாபட்டி, சும்மா டெம்ப்ளேட் மாத்திப் பாக்கலாமுன்னு பாத்தேன்.. இந்தியாவின் டெம்ப்ளேட்டும் மாறினால் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்கும்...

நன்றி சுசி.. என்ன செய்ய வேண்டும், விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று தான் தெரியவில்லை.. ஆனால் ஒன்று விவசாயம் கண்டிப்பாக காப்பாற்றப் பட வேண்டும்.
LK அவர்களே... அதுவும் நடக்கலாம்.. அல்லது, உணவுக்கு வழியில்லாமல், நேரடியாக விவசாயம் செய்யலாம் என்று அனைத்து மக்களும் திரும்பிப்பார்க்கும்போது, நிலத்திற்குப் பதில் வானுயர்ந்த கட்டிடங்கள் மட்டுமே கிட்டும். ஏற்கனவே இந்திய நிலங்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.. கேட்கவே கொடுமையாக உள்ளது.. மாநாடு நடத்தும் நம் அரசுகள், கொஞ்சம் நம் தாயின் காயத்திற்குக் கொஞ்சம் களிம்பு போட்டால் பரவா இல்லை..
இல்லுமி.. நம்ம ஆளுக பதுக்கரதிலையும் பெரிய கொம்பனுக தான்... மாற்றம் வராதா..?

நாடோடி said...

ம‌னித‌ வ‌ள‌த்தை நாம் ஏன் பிள‌ஸ் பாயிண்டாக‌ எடுக்க‌ கூடாது பிர‌காஷ்... விளை நில‌ங்க‌ளை விட‌ ந‌ம‌து நாட்டில் தரிசு நில‌ங்க‌ள் தான் அதிக‌ம் என்று ஒரு ஆய்வு சொல்லுகிற‌து. த‌ரிசு நில‌ங்க‌ள் எல்லாம் அப்ப‌டியே இருக்க‌ விளை நில‌ங்க‌ள் எல்லாம் க‌ட்டிட‌ங்க‌ள் ஆவ‌தின் கார‌ண‌ம் என்ன‌?.. ம‌க்க‌ள் தொகை அதிக‌ம் என்று சொல்லுகிறோம்..ஆனால் விவ‌சாய‌ம் செய்ய‌ ஆட்க‌ள் இல்லை என்றும் சொல்லுகிறோம்...

Anonymous said...

பெரும்பாலான இந்திய அரசு நிறுவனங்கள் சொந்தமாக யோசிப்பதில்லை, செய்வதில்லை. ஆயத்த ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். ஏன் இந்திய ராணுவம், விமானப்படை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் : பெரும்பாலானவை இறக்குமதிச் சரக்குதான். அட விடுங்கள், நூறு கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டுக்கு ஆணுறை கூட இறக்குமதி ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

// "இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கிறதே.." //
// அனால் இந்தியாவில் புது வடிவமைப்புக்கான காப்புரிமை (new design patent)பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதேன்..?" //
கல்வி முறையின் தவறா ? கற்றுக் கொடுப்பவர்களின் தவறா ? கற்பவர்களின் தவறா ? மூன்றும் தானா ? இல்லை வேறெதாவதா ? தனி பதிவொன்று போடுங்கள் பிரகாஷ் ...
அப்புறம் ...
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ...
காரணம் ...
சொல்ல மாட்டேன் ...

சாமக்கோடங்கி said...

//ம‌னித‌ வ‌ள‌த்தை நாம் ஏன் பிள‌ஸ் பாயிண்டாக‌ எடுக்க‌ கூடாது பிர‌காஷ்... // சரிதான் நாடோடி.. எல்லோரும் செயலில் இறங்க வேண்டுமே...?

சாமக்கோடங்கி said...

//பெரும்பாலான இந்திய அரசு நிறுவனங்கள் சொந்தமாக யோசிப்பதில்லை, செய்வதில்லை. ஆயத்த ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். ஏன் இந்திய ராணுவம், விமானப்படை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் : பெரும்பாலானவை இறக்குமதிச் சரக்குதான். அட விடுங்கள், நூறு கோடி பேர் இருக்கும் ஒரு நாட்டுக்கு ஆணுறை கூட இறக்குமதி ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்//

இந்தியா வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயங்க இன்னும் நிறைய இருக்கின்றன....

தொடர்ந்து எழுதலாம்..

சாமக்கோடங்கி said...

//கல்வி முறையின் தவறா ? கற்றுக் கொடுப்பவர்களின் தவறா ? கற்பவர்களின் தவறா ? மூன்றும் தானா ? இல்லை வேறெதாவதா ? தனி பதிவொன்று போடுங்கள் பிரகாஷ் ...//


கண்டிப்பாக..


//அப்புறம் ...
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ...
காரணம் ...
சொல்ல மாட்டேன் ...//

ஆஹா இது என்னடா சாமுவுக்கு வந்த சோதனை...

ஸ்ரீராம். said...

அருமையான சிந்தனை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு விளை நிலங்கள் என்ன, எந்த நிலங்களும் மிச்சம் இருக்கப் போவதில்லை இன்னும் கொஞ்ச நாளில்...
ஆனாலும் நியோ வைத்த சஸ்பென்ஸ் என்னையும் ஈர்க்கிறது...ஏன்?

இளங்கோ said...

//..அவர்களுக்குக் கொஞ்சம் எலும்புத்துண்டு.. அதுவே அவர்களுக்கு ஏதோ பெரிய விஷயம் கிடைத்த மாதிரி.. //
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ' என்கிற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...

நம்மை ஆளும் ஆண்டவர்கள் (அரசியல்வாதிகள் !!) மனது வைத்தால் நடக்கும், அவங்க கல்லாவ கட்டுறதுக்கே நேரம் பத்தல, அதுக்குள்ளே அடுத்த தேர்தல் வருது... எங்க போய் நாட்ட பத்தி நெனைப்பாங்க போங்க... :)

சாமக்கோடங்கி said...

வாங்க ஸ்ரீராம்..

//அருமையான சிந்தனை. பெருகி வரும் மக்கள் தொகைக்கு விளை நிலங்கள் என்ன, எந்த நிலங்களும் மிச்சம் இருக்கப் போவதில்லை இன்னும் கொஞ்ச நாளில்...
ஆனாலும் நியோ வைத்த சஸ்பென்ஸ் என்னையும் ஈர்க்கிறது...ஏன்?
//
சமீபத்தில் மெயிலில் வந்த ஒரு செய்தி.. சென்னை மாநகரில் வசிப்பது போல ஜன நெருக்கடியோடு வசிக்கும்படி வைத்தால் உலகமக்கள் அனைவரையும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்குள் அடக்கி விடலாமாம். அதுவே மும்பை ஜன நெரிசல் படி அமுக்கினால்(?!) உலகமக்கள் அனைவரையும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்குள் அடக்கி விடலாமாம். மீதி நிலங்கள் அனைத்தையும் நாம் காட்டிற்காகவும், மிருகங்களுக்காகவும் ஒதுக்கி விடலாம்.. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஜன நெருக்கடி இப்போது வரைக்கும் ஒரு பிரச்சினை இல்லை. பிரச்சினையே, அந்த மக்கள் உபயோகப் படுத்தும் வளங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் தான். தேவையானவற்றைப் பயன்படுத்தாமலேயே தரிசாக அவற்றை விட்டு விடுகின்றனர். அதுவும் ஒரு பிரச்சினை தான். விரைவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

நன்றி..

சாமக்கோடங்கி said...

வாங்க இளங்கோ..

மேலே போட்டுள்ள பின்னூட்டத்தைப் படிங்க...

நீங்க சொல்வதும் சரிதான்.. உலகத் தமிழ் மாநாட்டைப் பயன்படுத்தி அவர்கள் செய்யும் அரசியல், வேறெந்த உலக அரசியலையும் மிஞ்சி நிற்கிறது. பள்ளிகள், கல்யானமண்டபங்கள்,மற்றும் பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்கள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு ஆளுங்கட்சி அரக்கர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன (என்ன எதுகை மோனை..) இதில் உச்ச பச்ச காமெடி என்னவென்றால், அவர்கள் காலை, மதிய, மாலை உணவு, இதர செலவுகள், மற்றும் தங்கும் செலவு என அனைத்தையும் சேவை மனப்பான்மையோடு(தமிழுக்காகப் பாடு படுகிறார்கள் அல்லவா...?) இலவசமாகச் செய்ய வேண்டுமாம்... இது வெளியில் தெரிந்த விஷயம்.. கடந்த இரண்டு மாதங்களாக கல்யாணங்கள் அவசர அவசரமாக நடத்தப் படுவதற்கு இதுதான் காரணம் அப்புறம் மீதி கல்யாணங்கள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு அப்புறம்தான்..

ஆளுங்கட்சி வாழ்க.. அவர்கள் வளர்க்கும் தமிழ் வாழ்க.. இதைத் தனியாக ஒரு இடுகையாகவே போடலாம்.. பட்டாபட்டி கிட்ட சொல்லுறேன்...

வருகைக்கு நன்றி இளங்கோ..

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_08.html
:-)

Post a Comment