மூன்று தலைமுறையாய் பலன் தந்த தெய்வங்கள்,
அடுத்த தலைமுறைக்காய் வழி விட்டு சாய்ந்தார்கள்..
குடை போல சாலை மூடி நிழல் தந்த என் தாய்கள்,
இன்று குடை சாய்ந்து தலைகீழாய் வீழ்ந்தே போனார்கள்..
சின்னப் பருவத்திலேயிருந்து நான் பார்த்த பசுமைகள்,
இனி எந்த ஜென்மத்திலும் அழியாச் சுவடுகள்...
அழகாக தலையாட்டிய என் ஊரின் செல்வங்கள்,
கொடுங்கோல் மனிதர்களால் காணாமல் போனார்கள்..
ஒருகை இயந்திரத்தால் பெயர்த்தெடுத்த மனிதர்கள்,
தன் இருகை சேர்த்தெடுத்து ஒரு கன்று நடுவானேயானால்,
அதுவே நம் மரங்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..
பேருந்தில் ஜன்னலில் ஓரத்தில் அமரும்போதேல்லாம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு என்னைக் கடந்த அந்த பச்சைப் பசுமைகள், இன்று அடியோடு சாய்த்து எறியப் பட்டதைக் காணச் சகிக்கவில்லை. அனைவருக்கும் குளிர் நிழல் தந்த பெரிய பெரிய மரங்கள், இன்று வேரோடு பெயர்த்தேடுக்கப்பட்டு சாலையோரம் எங்கும் சிறு சிறு கட்டைகளாய் கிடக்கின்றன.. வழிநெடுக பிணத்தைப் பரப்பி ஒப்பாரி வைப்பதைப் போல உணர்ந்தேன்..
இப்பவும் அவை மனிதர்களுக்கு பலன் தந்தே இருக்கின்றன. மனிதனாய் பிறந்து நீ பிறருக்கு செய்தது என்ன...? நீ சாதித்தது என்ன...? என்று கேட்பதைப் போல உணர்கிறேன்..இந்த இயந்திர உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. புதிதாக சாலை அமைக்கப் போவதாய்ச் சொல்கிறார்கள்..அது எப்போது வேண்டோமானாலும் போடட்டும்.. உடனே அகலப் படுத்தப் பட்ட பகுதியில், புதிய மரக்கன்றுகளை நட்டால் பரவாயில்லை..
அதுவரை, வீழ்ந்த அந்த செல்வங்களுக்கு எனது இறுதி அஞ்சலி..
Tuesday, July 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 பின்னூட்டம்:
////மூன்று தலைமுறையாய் பலன் தந்த தெய்வங்கள்,
அடுத்த தலைமுறைக்காய் வழி விட்டு சாய்ந்தார்கள்..
குடை போல சாலை மூடி நிழல் தந்த என் தாய்கள்,
இன்று குடை சாய்ந்து தலைகீழாய் வீழ்ந்தே போனார்கள்..
சின்னப் பருவத்திலேயிருந்து நான் பார்த்த பசுமைகள்,
இனி எந்த ஜென்மத்திலும் அழியாச் சுவடுகள்...
அழகாக தலையாட்டிய என் ஊரின் செல்வங்கள்,
கொடுங்கோல் மனிதர்களால் காணாமல் போனார்கள்..
ஒருகை இயந்திரத்தால் பெயர்த்தெடுத்த மனிதர்கள்,
தன் இருகை சேர்த்தெடுத்து ஒரு கன்று நடுவானேயானால்,
அதுவே நம் மரங்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி..
/////////
சிந்தக்கத் தூண்டும் வார்த்தைகள் . மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி
என்ன பாஸ்..மேட்டுப்பாளைய்ம் சாலையா?..
மரத்தை வேரோடு பெயர்த்து, வேறு இடத்தில வைக்க என்ன செலவாகிவிடும்?..
இலங்கைக்கு 500 கோடி...
செம்மொழிக்கு 400 கோடி...
இதற்கு ?
(சே..சே.. இதை செய்தால் புகழ், பெருமைகள் கிடைக்காதே...கொடுமை பாஸ்..)
சரி. நாமாவது ஒரு மரக்கன்று நடுவோம். ஏற்கனவே வைத்திருந்தால் இன்னொன்று வைப்போம்.
ரங்கள் வெட்டறது பார்க்கும்போது என் பய்யன் கேட்பா "அம்மா மரம் வேட்டறாங்களை அதுக்கு வலிக்காதா ?"
நான் என்ன பதில் சொல்லுவேன் ...
நீங்க எழுதினது எல்லாமே உண்மை தான் நிறையை இடங்களில் மரம் வெட்டி பெரிய பெரிய கட்டடங்கள் வந்து கொண்டு தான் இருக்கு ...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் போனால் சென்னையில் மரங்கள் இருக்கற அடையாளம் இருக்குமோன்னு எனக்கு நம்பிக்கை இல்லை
யோசிக்க வேண்டிய கேள்விகள்
முடிந்தால் கொஞ்சம் மரங்களை நாம் வளர்க்கலாம்... அவர்கள் வளர்க்க மாட்டார்கள்...
அதுவே நமது அஞ்சலியாக இருக்கட்டும்....
இதுகூட அந்த மரங்களுக்காக அல்ல.. நாமும், நமது சந்ததிகளும் மூச்சு விட்டு வாழத்தான்...
மனிதனைப் பற்றிக்கூட கவலைபடாத இந்த ஜெமங்களுக்கு மரம் எவ்வளவோ மேல்...
my post; http://ippadikkuelango.blogspot.com/2010/07/blog-post_14.html
//சிந்தக்கத் தூண்டும் வார்த்தைகள் . மிகவும் சிறப்பாக எழுதி இருகிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி//
நேரில் பார்த்துக் கண்ணீர் வடித்தேன்.. வேரோடு பெயர்ந்து கிடக்கும் அவ்வளவு பெரிய மரங்களைப் பார்க்க மிகுந்த வேதனையாக இருந்தது..
//இலங்கைக்கு 500 கோடி...
செம்மொழிக்கு 400 கோடி...
இதற்கு ?
(சே..சே.. இதை செய்தால் புகழ், பெருமைகள் கிடைக்காதே...கொடுமை பாஸ்..)//
ஆமா பட்டா... இந்த மரங்களை வெட்டியதில் அவர்களுக்கு ஏகப்பட்ட லாபம்.. இனிமேல் நடும் மரங்களையாவது போதுமான அளவு இடைவெளி விட்டு நட்டால், பின்னால் சாலையை அகலப் படுத்தும்போது அவற்றை மீண்டும் வெட்ட வேண்டி இருக்காது..
//தமிழ் உதயம் said...
சரி. நாமாவது ஒரு மரக்கன்று நடுவோம். ஏற்கனவே வைத்திருந்தால் இன்னொன்று வைப்போம்.
//
சரியா சொன்னீங்க...
//sandhya said...
ரங்கள் வெட்டறது பார்க்கும்போது என் பய்யன் கேட்பா "அம்மா மரம் வேட்டறாங்களை அதுக்கு வலிக்காதா ?"//
வாங்க சந்தியா... உங்கள் குழந்தையாவது மரங்களுக்கு வலிக்காதா என்று கேட்கிறது.. இனி வருங்காலக் குழந்தைகள் மரம் என்றால் என்ன..? அது எப்படி இருக்கும் என்று கூட கேட்கலாம்..
Wall-E என்ற அனிமேஷன் படத்தை பாருங்கள்.. கண்ணில் தண்ணீர் வந்து விடும்..
விழுந்து கிடக்கும் மரங்களை படம் எடுக்க மனம் வரவில்லை.. இல்லையென்றால் ஒன்றிரண்டு படங்களாவது போடுவேன்..
நன்றி..
//யோசிக்க வேண்டிய கேள்விகள்/ கண்டிப்பாக யோசிக்க வேண்டும்..
//இளங்கோ said...
முடிந்தால் கொஞ்சம் மரங்களை நாம் வளர்க்கலாம்... அவர்கள் வளர்க்க மாட்டார்கள்...
அதுவே நமது அஞ்சலியாக இருக்கட்டும்....
இதுகூட அந்த மரங்களுக்காக அல்ல.. நாமும், நமது சந்ததிகளும் மூச்சு விட்டு வாழத்தான்...
//
அமாம்.. நீங்கள் ஒருபக்கம் இளம் தலைமுறையினரைத் திரட்டி மரக்கன்றுகள் நடுகிரீர்கள்.. ஒருபுறம் சராமாரியாக வெட்டி தள்ளுகிறார்கள்.. அப்ப சேவை செய்பவர்கள் எல்லாரும் இளிச்சவாயன் என்று தான் அர்த்தம் இல்லையா..?
நெரிசல் அதிகமானதால் வேறு வழியில்லாமல் சாலையை அகலப்படுத்த வேண்டி தான் இந்த மரத்தை வெட்டுகிறார்கள்..அதற்கு ஒன்றும் செய்வதற்கில்லை.. ஆனால் அதனை ஈடு செய்யும் வகையில் உடனடியாக மரங்களை நட வேண்டும்.. இல்லையெனில் இன்னும் ஒரு வருஷத்துக்குள் மாற்றங்கள் தெரியவரும்..
//மனிதனைப் பற்றிக்கூட கவலைபடாத இந்த ஜெமங்களுக்கு மரம் எவ்வளவோ மேல்...//
மரங்களை மனிதர்களோடு ஒப்பிடுவதே அவைகளை அவமதிப்பதை போலாகும். அவைகள் ஓரிடத்தில் நின்று சாதிப்பதை நம்மால் வாழ்நாள் முழுவதும் சாதிக்க முடியாது...
இல்லுமி.. வாழ்க்கையின் சாராம்சம் தெரியாமல் சாக்கடைப் புழு போல் வாழ்ந்து உயிர் மாய்க்கும் இந்த மனித இனத்தைக் கண்டு மரங்கள் தான் வெட்கப்படும்...என்ன சொல்கிறீர்...?
very usefull writes
சிறப்பான பதிவு...
உணர்வுபூர்வமான பதிவு...
Post a Comment