"உங்கள் நாட்டைப் போல வேகமாக எங்கள் நாட்டு ரோடுகளில் வண்டி ஓட்ட முடியாது.. எங்கள் நாட்டின் ரோடுகள் அப்படி..குண்டும் குழியுமாக இருக்கும்.. எங்கள் ஊரில் மாசுக்கள் அதிகம். அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்குவார்கள்.." இதைப் பெருமையாக வெள்ளைக் காரனிடம் சொல்லி தானே பெக்க பெக்க வென்று சிரித்துக் கொண்டு அவர்களையும் வேண்டா வெறுப்பாகச் சிரிக்க வைத்த என்னுடைய உடன் பணிபுரிபவர் நினைவுக்கு வந்தார்..
உங்கள் நாட்டைப் பற்றி நீங்கள் வேறொரு நாட்டினரிடம் சிரிப்பை வரவழைப்பதற்காகக் கூட தவறாகப் பேசுவீர்களா..? ஆனால் ஜெர்மனி நண்பர்கள் இவரைப் பேச வைத்து வேடிக்கை பார்க்கவில்லை(அது அவர்களை எவ்வளவு கூச வைத்திருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்).. "எங்கள் நாட்டில் பல நல்ல கலாச்சாரமும் காலம் காலமாக இருந்து வருகிறது.." என்று கொஞ்சம் நான் ஒப்பேத்த நினைத்தாலும் இவர் விடுவதாயில்லை.. உள்ளே புகுந்து வார்த்தைக்கு வார்த்தை "In india...." என்று ஆரம்பித்து கேவலப்படுத்தத் தொடங்கி விடுவார்..
அப்போது தான் புரிந்தது.. வெள்ளையர்கள் முதலில் நமது செல்வங்களைக் கொள்ளை அடித்துச் சென்றனர். போகையில் பிரிவினை ஏற்படுத்தி விட்டுப் போயினர் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன்.. ஆனால் நமது தன்மானத்தையும் ரத்தத்திலிருந்து பிரித்து எடுத்து விட்டுப் போயிருக்கின்றனர் என்பது அப்போது தான் புரிந்தது..
உடன் பணிபுரிகிறார் என்கிற காரணத்திற்காக இவரை விட வில்லை.. சுமூக உறவை வளர்க்க வேண்டுமே என்பதற்காக இவரை சும்மா விட வில்லை..பிறகு ஏன் விட்டேன் என்று கேட்கிறீர்களா..?? ஏனெனில் தவறின் மூலம் இவரல்ல.. நமது தாய் நாட்டிலேயே பிறந்து, நமது தாய் நாட்டிலேயே வளர்ந்து ஆளாகி, நம் நாட்டின் செல்வத்தையே அனுபவித்து, இன்று வெளிநாடு செல்லும் அளவுக்கு பெரிய ஆளாகி வளர்ந்து கடைசியில் யாரோ ஒருவனிடம் நமது தாய் நாட்டைப் பற்றித் தவறாகப் பேச அந்த நாக்கு முன் வந்ததற்கு யார் காரணம்...?? இந்த சாக்கடை எப்போது நமது ரத்தத்தில் கலந்தது..??
கறந்த பால் மடி புகாது, கொட்டிய சொல்லை அள்ள முடியாது என்று தெரியாதா..???
"சிறு வயதிலிருந்தே நமது நாட்டில் பெருமைப் பட்டுக் கொள்ளும் அளவில் ஒன்றும் இல்லை. எந்த விஷயத்திலும் வெளிநாட்டினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவில் நமது நாடு எப்போதும் இருந்ததில்லை. நமது நாட்டில் லஞ்ச லாவண்யம் தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை, நமது நாடு உருப்படப் போவதும் இல்லை" என்கிற எண்ணம் இன்று இருக்கும் இந்தியர் மட்டும் இல்லாமல் இனி பிறக்கப் போகும் ஒவ்வொரு பிஞ்சுகளின் மத்தியிலும் "தானாக" பதியப் போகிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது..
இந்தியாவில் தொழிலை எப்படித் துவங்கலாம் என்று "தொழில் நுட்ப" நுணுக்கத்துடன் ஜெர்மானிய நண்பர்கள் கேட்டவுடன் ..."எங்கள் அரசியல் வாதிகளுக்கு தள்ளுவதைத் தள்ளினால் போதும்.. எப்படியும் துவங்கி விடலாம்.." என்று உச்சகட்டமாகச் சொல்லிச் சிரித்தபோது, எனக்குள் பிறந்த கெட்ட வார்த்தைகளை நான் சொன்னால் பிளாக் உலகில் என் பேர் கெட்டு விடும்.
யாரை நினைத்துக் கோவப்பட..?? எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் என்று நாட்டைச் சுரண்டி இந்தப் பிச்சைக் கார நிலைமைக்கு ஆளாக்கி வைத்திருக்கும் இந்த அரசியல் பெருச்சாளிகளைக் கொடும்பாவிகள் என்று வருணித்தால், பிறந்த பொன்னாட்டை வெளிநாட்டவரிடம் கேலிக்கூத்தாக்கும் இவர்களை என்னவென்று வருணிக்க...??
இவர் மட்டுமல்ல நண்பர்களே.. இவரைப் போல இன்னும் பல பேர் நம்மில் உள்ளனர்.. நீங்கள் வெளிநாட்டில் இருப்பின் நீங்களும் இது போன்றவர்களுடன் பழகும் சந்தர்பம் கிட்டி இருக்கலாம்.. இவர்கள் சொந்த வீட்டில் தேவையில்லாத ஒரு ஆணியைப் பிடுங்கக் கூட வக்கில்லாதவர்கள்.. @$%@^^#%&%#!@#$@! (மன்னிக்கவும் நண்பர்களே.. என் மனது சரியில்லை)
சுத்தமான தெருக்கள், பேருந்து வசதிகள், ரயில் நிலையங்கள்,ட்ராம் வண்டிகள், பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள், எங்கே பார்த்தாலும் ஒழுக்கம், அருமையான உள்கட்டமைப்பு, நன்கு படித்த மக்கள்,இத்தனையும் இருந்த நாட்டில் ஒரு நாட்டில் இருந்து இப்போது பறந்து கொண்டிருக்கிறேன்..
இதோ கடலைத் தாண்டி தரை தெரிகிறது.. பாவப்பட்ட, ஏமாற்றப்பட்ட, சீரழிக்கப்பட்ட, இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு அடிமையாய் இருக்கப் போகிற,என் தாய் தேசம் வந்து விட்டது..
எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மிடத்தில் மனித சக்தி இருக்கிறது.. வளமும் இருக்கிறது.(மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது..). வெளிநாட்டவரை விட வேகமாக முன்னுக்கு வரக்கூடிய உத்வேகம் இருக்கிறது... ஆனாலும்..?!?!?
அரசியல் வாதிகளே.. பலவேறு மூட நம்பிக்கைகளை வைத்து ஓட்டு வேட்டை நடத்தி "அரசியல்" செய்யும் தலைவர்களே.. மக்களை மடையர்களாக மூளைகளை மழுங்கடித்து வைத்திருக்கும் மாமனிதர்களே..
உங்களைப் பார்த்து ஒன்றே ஒன்றை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..
நமது ரத்தத்தில் ஊறியுள்ள இந்த சாக்கடை உணர்வுகளை நீக்க உங்களால் மட்டுமே முடியும்.. நமது தேசத்தைத் தலை நிமிர வைத்து செழுமையாக்க உங்களால் மட்டுமே முடியும்.. பட்டாபட்டி ஒரு நாள் தொலைபேசியில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது.. "நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்" என்று..
ஆனால் இங்கே
என் நாட்டின் மானம் இன்னொரு நாட்டின் முன் மண்டியிடுவதைக் காண மனம் சகியவில்லை..
உங்களிடம் பிச்சையாகவே கேட்கிறேன்..
"ஏதாவது உருப்படியாச் செய்யுங்கள் அய்யா...."
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
இப்படிக்கு சாமக்கோடங்கி.. |
33 பின்னூட்டம்:
ஆஹா, வந்த உடனேயே இவ்வளவு வேகமா.. :)
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
முழுசா எடிட் பன்றதுக்குள்ள(வெட்டி ஓட்டுவதற்குள்), மின்னல் வேகப் பின்னூட்டம்...
எப்படி இது இளங்கோ..
ஓட்டு வங்கிக்காக சனங்களை இனியும் முட்டாளாக வைத்திராதீகள்.. அனைவருக்கும் கல்வி, அடிப்படைத் தேவைகளுடன் வாழ வழி வகுங்கள்.. ஒரு மாதத்திற்கு ஒரு கிராமத்தைச் சீர்திருத்தும் சாதாரண திட்டத்தைத் தீட்டியிருந்தால் கூட சுதந்திரத்திற்குப் பிந்திய இந்த அறுபதாண்டு காலத்தில், நமது நாடே வளமுற்றிருக்கும்.. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை நிறைவடையும்போது அங்கே, அமைதி நிலவுகிறது. திருட்டு போன்ற கெட்ட எண்ணங்களுக்கு மனம் செல்வது தடுக்கப் படுகிறது. ஏழ்மை குறையும்போது குடும்பத்தில் சச்சரவு குறைகிறது. ஒற்றுமை ஓங்குகிறது... கல்வி பெருகும்போது அங்கே நாடு வளமுருகிறது... இதெல்லாம் நமக்கும் நடக்குமா..?????
ஆஹா ரசிக்கக் கூடிய பதிவு ஒன்ற.. நன்றிகள்...
வாங்க மதி.. என் மனக்குமுறலை நீங்கள் நன்றாக ரசிக்கிறீர்கள் போல..
அசத்துங்க .... மானம் போகிறது.... இருப்பினும் மானத்தை வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
//நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்//நடக்குமா????????????????????????????????????????
எந்தக்காரணத்தைக்கொண்டும், உங்கள் முதுகெழும்பை வளைத்துக்கொள்ளாதீர்கள்..
(அது அரசியல் நாதாரிகளாகட்டும், அல்ல வெளிநாட்டவராகவே இருக்கட்டும் )
ஏன்.. வெளிநாட்டவரை பார்த்துகூனி குறுகிறோம்?..
நமது உடம்பில அடிமை ரத்தம் இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறதா?.. அல்லது தாழ்வு மனப்பான்மையா?..
( இன்னும் , நமது நாட்டில்...வெள்ளைநிறம் பார்த்து... பல் இளித்து ஓட்டுப்போடும் கூட்டம் உள்ளது பிரகாஷ்..
இது சமூகத்தின் அறியாமையா?.. இல்லை ஆட்சியில் இருப்பவர்களின் கைங்கரியமா?)
விழிப்புணர்வு தேவை.. அரசியல்வாதிகளுக்கு அல்ல...... நமக்கு...
பட்டபட்டியை வழிமொழிகிறேன் பிரகாஷ்
ம்ம்ம்ம்
ஹிட்லரைப் போற்றியவர்கள் கூட திருந்தி விட்டார்கள்...!
பட்டாபட்டி ஒரு நாள் தொலைபேசியில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது.. "நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்" என்று..
....... சரியான கருத்தைதான் சொல்லி இருக்கிறார்.
ஹ்ம்ம்...
நீண்ட நாட்களாய் மனதில் அரித்துக்கொண்டிருந்தது... நீங்கள் கொட்டிவிட்டீர்கள்... இன்னும் அமிலமாய் எங்கள் நெஞ்சுக்குள்...
நினைத்ததை எழுதி விட்டீர்கள்...நன்றிகள் & பாராட்டுகள் சகா.
நீங்க வெளிநாட்ல நல்ல salaryவாங்கி கொண்டு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருபீர்கள்..இங்க உள்ளவங்கள பாத்துஏதாவது செய்ங்க .. ஏதாவது செய்ங்க . ன்னா...cancel.பண்ணிட்டு ஊருக்கு வந்து நீங்கதான் ஏதாவது செய்ங்களேன்
எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மிடத்தில் மனித சக்தி இருக்கிறது.. வளமும் இருக்கிறது.
---------------------------
நிச்சயமா..
பலர் ஆரவாரம் இல்லாமல் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்...
நான் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேங்க..!
முதல்ல இந்தியாவுல அது இல்ல இது இல்ல அப்படின்னு சொல்லுரத நாம நிறுத்தனும் ..எதற்கு எடுத்தாலும் வெளிநாட்டுல அப்படி இருக்கு ஆனா இந்தியாவுல அப்படி இல்ல இது மாதிரியான இந்தியாவைப் பற்றி நாமே குறைகூறிக் கொள்வதை நிறுத்த வேண்டும் ..!!
உலகத்துக்கே வெளிச்சம் தந்தாலும்,அடர்ந்த கானகத்தில் சூரியன் தெரிய மாட்டான்.அது போல,நம்ம நாட்டுல பல நல்ல விஷயம் இருக்குது.பல விஷயம் இல்ல.ஆனா,இங்க இருக்கிற ஒரே ஒரு விஷயத்தால இந்த இல்லாதது எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பு இருக்கு.அது அரசியல்வாதிங்க...
//மதுரை சரவணன் said...
அசத்துங்க .... மானம் போகிறது.... இருப்பினும் மானத்தை வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
//
உண்மையைச் சொன்னேன்.. நன்றி நண்பரே..
//எஸ்.கே said...
//நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்//நடக்குமா????????????????????????????????????????
//
நடக்கும்..
நன்றி..
//பட்டாபட்டி.. said...
எந்தக்காரணத்தைக்கொண்டும், உங்கள் முதுகெழும்பை வளைத்துக்கொள்ளாதீர்கள்..
(அது அரசியல் நாதாரிகளாகட்டும், அல்ல வெளிநாட்டவராகவே இருக்கட்டும் )
//
நன்றி பட்டாபட்டி.. தன்மானத்தை என்றும் இழக்க மாட்டோம்.. இதுவரை வெளிநாட்டவருக்கு என் முதுகெலும்பை வளைத்ததாக நினைவில்லை.. அரசியல்வாதிகளை ஒரு பிரதிநிதியாக நினைத்து என் வேண்டுகோளை முன் வைத்தேன்..
நன்றி பட்டாபட்டி.. உங்களைப் போன்ற ஒரு உணர்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் தேவை..
//பட்டாபட்டி.. said...
ஏன்.. வெளிநாட்டவரை பார்த்துகூனி குறுகிறோம்?..
நமது உடம்பில அடிமை ரத்தம் இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறதா?.. அல்லது தாழ்வு மனப்பான்மையா?..
( இன்னும் , நமது நாட்டில்...வெள்ளைநிறம் பார்த்து... பல் இளித்து ஓட்டுப்போடும் கூட்டம் உள்ளது பிரகாஷ்..
இது சமூகத்தின் அறியாமையா?.. இல்லை ஆட்சியில் இருப்பவர்களின் கைங்கரியமா?)
விழிப்புணர்வு தேவை.. அரசியல்வாதிகளுக்கு அல்ல...... நமக்கு...
//
நிறத்தில் என்ன இருக்கிறது பட்டாபட்டி.. அவர்களுடைய முன்னோர்கள் செய்து விட்ட நல்ல காரியங்களுக்காக அவர்களைத் தோளில் தூக்கி ஆட நான் தயாரில்லை.. வெள்ளையன் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிட வில்லை.. ஒரு குழுவுக்குள் நடந்த விஷயத்தை மட்டுமே வைத்து இதை எழுதி இருக்கிறேன்.. அதே நேரம் வெள்ளைக்காரன் எவனாவது அவன் நாட்டைப் பற்றி என்னிடம் தவறாகப் பேசிச் சிரித்திருந்தால் அவனையும் இங்கே வைத்துக் கிழித்திருப்பேன்..
சில இடங்களில் ஒப்பிட்டால் தான் முன்னேற முடியும்.. நான் கூனிக்குருகியது நமது நாட்டின் அரசியல் நிலைமையை நினைத்துதான். அதற்காக அவர்கள் முன்னாடி அதைக் காட்டிக் கொள்ளவும் கூடாது...
உங்களின் தன்மான உணர்வு உங்களின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவதை நினைத்து மகிழ்கிறேன்.. எந்த வகையிலும் நமது நாட்டைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வர வாய்ப்பில்லை என்று உங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன் .. நன்றி..
//LK said...
பட்டபட்டியை வழிமொழிகிறேன் பிரகாஷ்
//
நானும் வழிமொழிகிறேன்.. :-)
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ம்ம்ம்ம்
ஹிட்லரைப் போற்றியவர்கள் கூட திருந்தி விட்டார்கள்...!
//
புரியவில்லை ஷங்கர் அண்ணே.. தயவு செய்து இன்னொரு முறை சொல்லுங்கள்..
//Chitra said...
பட்டாபட்டி ஒரு நாள் தொலைபேசியில் பேசியது ஞாபகத்துக்கு வருகிறது.. "நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்" என்று..
....... சரியான கருத்தைதான் சொல்லி இருக்கிறார்.
//
ஒரு நல்ல குடிமகனின் ஆதங்கம் அது..
//சிசு said...
ஹ்ம்ம்...
நீண்ட நாட்களாய் மனதில் அரித்துக்கொண்டிருந்தது... நீங்கள் கொட்டிவிட்டீர்கள்... இன்னும் அமிலமாய் எங்கள் நெஞ்சுக்குள்...
நினைத்ததை எழுதி விட்டீர்கள்...நன்றிகள் & பாராட்டுகள் சகா.
//
அப்படியே பட்டாபட்டி சொல்லுவதையும் கேளுங்கள்.. அதையும் மறந்து விடக் கூடாது என்பதே என் கருத்து...
//dubai saravanan said...
நீங்க வெளிநாட்ல நல்ல salaryவாங்கி கொண்டு சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருபீர்கள்..இங்க உள்ளவங்கள பாத்துஏதாவது செய்ங்க .. ஏதாவது செய்ங்க . ன்னா...cancel.பண்ணிட்டு ஊருக்கு வந்து நீங்கதான் ஏதாவது செய்ங்களேன்
//
ஒரு இந்தியனின் ஞாயமான ஆதங்கம்..
உங்களுக்கு ஒரு விஷயம்.. நான் இந்தியாவில் தான் பணி புரிகிறேன். இந்தியாவில் தான் சம்பளம் வாங்குகிறேன். இது சும்மா பணி நிமித்தமாக ஒரு மாதம் போயிட்டு வந்தேன்..
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியர்களைப் பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை..
நானும் என் சக்திக்கு உட்பட்டாற்போல் இயலாதவர்களுக்கு உதவிக்கொண்டு தான் வருகிறேன் நண்பரே.. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றொரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு மரத்தை நான் நட்ட வைக்கிறேன். ஆனால் வாகனப் புகைப் பரிசோதகர் லஞ்சம் வாங்கிக்கொண்டு பரிசொதிக்காமல் வண்டியை அனுப்புகிறார்.. இப்போது நான் செய்த ஒரு நல்ல காரியத்தின் பலன் என்ன..?? ஆகவே, அரசு முதலில் முன்வந்து தான் வாங்கும் சம்பளத்திற்குரிய பணியை செய்யட்டும், நாமும் சேர்ந்து பணிபுறிவோம்.. ஆக நமது எண்ணம் ஒன்றாக இருக்கட்டும்..
உங்கள் ஆதங்கத்தை நான் தவறாகப் புரிந்து கொள்ள வில்லை.. தேசத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்கள் உள்ளத்திற்கு நன்றிகள்..
//பயணமும் எண்ணங்களும் said...
எல்லாவற்றையும் மாற்ற முடியும். நம்மிடத்தில் மனித சக்தி இருக்கிறது.. வளமும் இருக்கிறது.
---------------------------
நிச்சயமா..
பலர் ஆரவாரம் இல்லாமல் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்...
//
முதல் பின்னூட்டம் இட்டிருக்கிறார் பாருங்கள் இளங்கோ.. அவரின் விழுதுகள் அமைப்பு அமைதியாகப் பல பணிகள் செய்து கொண்டிருக்கிறது.. ஏராளமான கிராமத்துச் சிறுவர்கள் பயன் பெறுகிறார்கள்.. நேரம் ஒதுக்க முடியாமை காரணமாக அவரைச் சென்று பார்க்க முடியவில்லை.. இடையில் வெளிநாட்டுப் பயணம் வேறு..
//ப.செல்வக்குமார் said...
நான் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேங்க..!
முதல்ல இந்தியாவுல அது இல்ல இது இல்ல அப்படின்னு சொல்லுரத நாம நிறுத்தனும் ..எதற்கு எடுத்தாலும் வெளிநாட்டுல அப்படி இருக்கு ஆனா இந்தியாவுல அப்படி இல்ல இது மாதிரியான இந்தியாவைப் பற்றி நாமே குறைகூறிக் கொள்வதை நிறுத்த வேண்டும் ..!!
//
குறைகளை நமக்குள் பேசி அதைத் திருத்த வேண்டும்.. அந்த எண்ணத்தில் குறைகளைச் சொன்னாள் பரவாயில்லை.. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் வேற்று நாட்டவரிடம் அதைச் சொல்லக் கூடாது...
//இந்தியாவைப் பற்றி நாமே குறைகூறிக் கொள்வதை நிறுத்த வேண்டும் ..!!//
ஆனால் குறைகள் இருப்பது தான் உண்மை.. ஆனால் அது அவர்கள் நாட்டிலும் உண்டு.. ஆனால் அவர்கள் என்னிடம் தம்பட்டம் அடிக்கவில்லை..
//ILLUMINATI said...
உலகத்துக்கே வெளிச்சம் தந்தாலும்,அடர்ந்த கானகத்தில் சூரியன் தெரிய மாட்டான்.அது போல,நம்ம நாட்டுல பல நல்ல விஷயம் இருக்குது.பல விஷயம் இல்ல.ஆனா,இங்க இருக்கிற ஒரே ஒரு விஷயத்தால இந்த இல்லாதது எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பு இருக்கு.அது அரசியல்வாதிங்க...
//
இந்தப் பதிவிற்கு முன்னுரை எழுதியதைப் போல உள்ளது... நன்றி இல்லுமி..
நல்ல பதிவு சகா...
//சர்ணா said...
நல்ல பதிவு சகா...
//
நன்றி சகா.. இப்பொழுது தான் உங்களை சந்திக்கிறேன்.. நன்றி..
//நம் நாட்டை வளமாக்க நமது அரசியல் வாதிகள் ஒரு வருடம் கையைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும்//
சான்சே இல்ல....!!
//
சான்சே இல்ல....!!//
இதை நான் இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம்..
Post a Comment