Sunday, December 12, 2010

நினைவுகள் - பகிர்வுகள்

வணக்கம் நண்பர்களே..

வாழ்க்கையில் நாம் கடந்து போகும் பல விஷயங்களில் நமக்குப் பிடிக்காதவை பல இருந்தாலும், ஒரு சில நல்ல விஷயங்கள் நம் மனதில் பதிந்து போகும். அது போன்ற சில விஷயங்களை இங்கே என் நினைவுகளாகப் பதிய நினைக்கிறேன். பதிந்தவற்றை உங்களோடு பகிரவும் நினைக்கிறேன்.

நான் பள்ளியில் படித்த காலங்களில் எங்களுக்கு ஏட்டுக்கல்வியைத் தவிர வேறேதும் அளிக்கப் படவில்லை. புத்தகச்சுமை, காலையில் இருந்து மாலை வரை அடுக்கடுக்காக பாடங்கள், இறுகிப் போன முகங்களுடன் வாத்தியார்கள்(பாவம் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ..),உடற்பயிற்சி வகுப்பில் கூட விளையாட விடாமல் இரவல் வாங்கி பாடம் எடுக்கும் சின்சியர் சிகாமணிகள், சாயங்காலம் வீட்டுக்குப் போனால், விளையாடக் கூட முடியாத அளவுக்கு வீட்டுப் பாடங்கள், இவ்வளவு ஏன், கனவில் கூட அந்தக் குரூர முகங்கள், இது தான் என் பள்ளிக் கால நினைவுகள்.

வீட்டுப் பாடத்தை பாதி எழுதி விட்டு, தூக்கம் வந்தால், அம்மாவை அதிகாலையில் எழுப்புமாறு சொல்லி, அப்புறம் இது வொர்க் அவுட் ஆகாது என்று நடுராத்திரியே சாவி கொடுக்கப் பட்டவன் போல எழுந்திரித்து, அம்மாவையும் எழுப்பி உக்கார வைத்து, அழுகையும் கையுமாக வீட்டுப் பாடம் எழுதி முடித்த நாட்கள் மறக்க முடியாதவை. இவ்வளவு ஏன்.. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் கூட நண்பர்களுடன் கூடி விளையாட முடியாத அளவுக்கு, வினாத்தாளை விடையோடு எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று பணித்து விடுவர். முதல் ஐந்தாறு நாட்கள் நண்பர்களோடு விளையாடுவோம்.அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்று.அப்போதும் கூட, நான்கு நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்தால் சரியாக இருக்குமா, முடித்து விட முடியுமா.. கண்விழிக்க நேரிடுமா போன்ற கவலைகள் எங்களை ஆட்கொண்டு இருந்தன.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இப்படிக்கு இளங்கோ நடத்தும் விழுதுகள் நற்பண்புகள் கல்வி இயக்கத்தில் உள்ள மாணவர்கள் படிப்பைத் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றனர். நான் எப்போது அவர்களைச் சந்திக்கப் போகும் போதும் ஒவ்வொரு மாணவனும் வந்து "சார், அன்பே கடவுள் சார்" என்று சொல்லித் தான் வணக்கம் செய்வார்கள்.ஒவ்வொரு முறை அவர்கள் அதனை உச்ச்சரிக்கும்போதும் அவர்களுக்குள் அன்பு புகுத்தப் படுகிறது(அல்லது உள்ளிருக்கும் அன்பு பலப்படுத்தப் படுகிறது). ஆம்.. இன்றைய உலகுக்குத் தேவை.. அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.

அந்தக் குழந்தைகளின் பணிவு, பெரியோரிடம் காட்டும் மரியாதை, கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் காட்டும் ஆர்வம் எனப் பல விஷயங்கள் என்னை வியக்கச் செய்தன. நற்பண்புக் கல்வி என்பது எவ்வளவு தேவையான ஒன்று என்று அதை அனுபவிக்காத என்னைப் போன்றோருக்குத் தான் தெரியும். பள்ளிக் காலத்தை நினைவுக் கூறும்போது, அது பசுமையாகத் தெரிய வேண்டும். சாதனைகள் தெரியவேண்டும். எனக்குப் புத்தகங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.(ஆனாலும் ஆளாக்கி விட்டமைக்காக என்றும் என் மரியாதை மற்றும் நன்றிகள் அவர்களுக்கு உண்டு..)

அந்தக் குழந்தைகளுடன் பழகும்போது, என்னுடைய பள்ளிக் காலத்திற்குச் சென்று நான் அனுபவிக்காததை அனுபவிக்கும் உணர்வைப் பெறுகிறேன். அடிக்கடி செல்ல ஆசை, ஆனால் தொலைவும், நேரமும் தடையாக உள்ளன. சக்கரம் போல சுற்றிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில், அவர்களோடு இனைந்து நடத்தும் இது போன்ற நிகழ்வுகள் தான் என்னுடைய டைரியில் இடம்பிடிக்கும் தருணங்கள்.

இத்துடன் மரங்கள் நட்ட குழந்தைகளின் உற்சாக முகங்களை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் எதிர்காலத்தை இங்கே பாருங்கள்..

(செல்போனில் படம் பிடித்ததால் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கின்றன)












கடைசிப் படத்தில் இளங்கோ மற்றும் கமலக் கண்ணன்.

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

என்றென்றும் அன்புடன்,
சாமக்கோடங்கி

35 பின்னூட்டம்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
//

என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடுங்கள் பிரகாஷ்..
நல்ல பணி..
குழந்தைகளின் முகத்தில புன்னகை..
அருமை...

சாமக்கோடங்கி said...

வாங்க பட்டா... கோயம்புத்தூர் வரும்போது சொல்லுங்கள்.. ஒருநாள் போய் பார்க்கலாம்.. குழந்தைகளுடன் அளவளாவலாம்..

Anonymous said...

தங்களை இன்று முதல் பின் தொடரும் ஆயுள் கைதி எண் 94! முண்டா பனியன் சண்டாளன்!

ஜெய்லானி said...

இந்த வேலையை நான் +1 ,+2 படிக்கும் போது NSS ல் செய்து இருக்கிறேன் , இப்போது சிறு வயதில் இந்த பயிற்சி குடுக்கும் போது கண்டிப்பா பாராட்டனும். நான் அப்போது வைத்த மர கன்றுகள் இப்போது பெரிய மரமாக இருப்பதை பார்க்கும் போது இனம் புரியாத சந்தோஷம் கிடைக்கிறது..

பஸ்ஸில போகும் போதும் வரும் போதும் அந்த மரங்களை பார்க்காமல் இருந்ததில்லை.

பழைய நினைவுகளை தூண்டி விட்டீர்கள் பிரதர் :-))

Philosophy Prabhakaran said...

// என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடுங்கள் பிரகாஷ்.. //

சாமக்கொடங்கியின் இயற்பெயர் பிரகாஷ் என்று தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி... இளம் பதிவர் போல தெரிகிறதே...

Philosophy Prabhakaran said...

என் சார்பாகவும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்...

சாமக்கோடங்கி said...

//சிவகுமார் said...

தங்களை இன்று முதல் பின் தொடரும் ஆயுள் கைதி எண் 94! முண்டா பனியன் சண்டாளன்!
//

வாங்க முண்டா பனியன் சார்...(பட்டாவின் பாசறையில் இருந்து ஒரு பாசக்காரன்..)

சாமக்கோடங்கி said...

//

பழைய நினைவுகளை தூண்டி விட்டீர்கள் பிரதர் :-))//

அய்யய்யோ.. இனிமே என்னென்ன வெளிவரப் போகுதோ...

சாமக்கோடங்கி said...

//philosophy prabhakaran said...

// என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடுங்கள் பிரகாஷ்.. //

சாமக்கொடங்கியின் இயற்பெயர் பிரகாஷ் என்று தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி... இளம் பதிவர் போல தெரிகிறதே...
//

இயற்பெயர் எல்லாம் ஒன்றும் இல்லை. இன்னும் என் பெயர் பிரகாஷ் தான். என்னுடைய பழைய பின்னூட்டங்களில் (பட்டாவின் பகுதிகளில் பார்க்கலாம்) பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி என்று தான் வைத்து இருந்தேன்..அது கொஞ்சம் லென்தாக இருக்கவும், சுருக்கி சாமக்கோடங்கின்னு மாத்தீட்டேன்.. நன்றி பிலாசபி..

சாமக்கோடங்கி said...

//philosophy prabhakaran said...

என் சார்பாகவும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்...
//

அவர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

இளங்கோ said...

நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க பிரகாஷ். அப்புறம் புகைப்படங்கள் போடுவதற்கு அனுமதியே கேட்க வேண்டாம், தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் அன்புடன்
விழுதுகள்

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க பிரகாஷ். அப்புறம் புகைப்படங்கள் போடுவதற்கு அனுமதியே கேட்க வேண்டாம், தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

என்றென்றும் அன்புடன்
விழுதுகள்
//

அது தான் இளங்கோ..

Unknown said...

என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடுங்கள் பிரகாஷ்..repeatu 2times.
நல்ல பணி..

Unknown said...

மிக சிறந்த செயலை செய்து இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் ...

சாமக்கோடங்கி said...

//siva said...

என்னுடைய நன்றியையும் தெரிவித்து விடுங்கள் பிரகாஷ்..repeatu 2times.
நல்ல பணி..
//

அதை இளங்கோவிடம் சொல்லி விடுகிறேன்..

சாமக்கோடங்கி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

மிக சிறந்த செயலை செய்து இருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் ...
//

இல்லை.. மிகச்சிறந்த செயலுக்கு ஒத்துழைக்கிறேன்.. அவ்வளவே..

ILLUMINATI said...

சிறுவர்களை பள்ளியின் பெயரில் என்ன கொடுமை எல்லாம் செய்கிறார்கள்?மனிதனாய் மாற்ற வேண்டியவர்கள் குழந்தைகளை எந்திரமாய் மாற்றுவது கொடுமை.சிறுவர்களின் கையில் புத்தக மூட்டைக்கு பதில் செடிகள் இருப்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது.

சாமக்கோடங்கி said...

//சிறுவர்களை பள்ளியின் பெயரில் என்ன கொடுமை எல்லாம் செய்கிறார்கள்?மனிதனாய் மாற்ற வேண்டியவர்கள் குழந்தைகளை எந்திரமாய் மாற்றுவது கொடுமை.சிறுவர்களின் கையில் புத்தக மூட்டைக்கு பதில் செடிகள் இருப்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது./
போனவாரம் கூட எங்கள் அடுத்துள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு குழந்தைகளை பிவிசி பைப்பால் பின்னி உள்ளார்கள்.. படம் எடுத்தவர் எங்கள் எதிர்வீட்டு நிருபர் ஒருவர்.. அங்கலாய்த்துக் கொண்டார்..

இந்தக் குழந்தைகளை நேரில் சந்திக்க அடிக்கடி தோன்றும்..நேரம் கிடைக்கும் போது வண்டி எடுத்துப் பறந்து விட வேண்டியது தான்..

ம.தி.சுதா said...

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

MoonramKonam Magazine Group said...

மனதை நிறைத்த பதிவு!

ரோஸ்விக் said...

இளங்கோவின் மிகச்சிறந்த இந்த செயலுக்கும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் பிரகாஷ்.

அந்த சிறுவர்கள் சிகரம் தொடுவார்கள். சமுதாயத்தின் நல்ல தூண்களாக இருப்பார்கள்.

Jaleela Kamal said...

//சிறுவர்களை பள்ளியின் பெயரில் என்ன கொடுமை எல்லாம் செய்கிறார்கள்?மனிதனாய் மாற்ற வேண்டியவர்கள் குழந்தைகளை எந்திரமாய் மாற்றுவது கொடுமை//

சரியா சொல்லி இருக்கீங்க

பிள்ளைக்ளுக்கு படிப்ப்பிற்கு மத்தியில் இது போல் செடி நடுவது இன்னும் அவர்கலுக்கு பிடித்தமான விளைட்டு களை விளையாட விடுவது அவர்களுக்குமிக்க மகிழ்சிய உண்டாக்கும்.
அந்த போட்டோவில் எவ்வ்ளவு ஆனந்த்தம் அவர்களுக்கு..

சாமக்கோடங்கி said...

//ம.தி.சுதா said...

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்....


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

நன்றிகள் எனக்கெதற்கு.. வருகைக்கு உமக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

//moonramkonam said...

மனதை நிறைத்த பதிவு!
//

வருகைக்கு நன்றி...

சாமக்கோடங்கி said...

//ரோஸ்விக் said...

இளங்கோவின் மிகச்சிறந்த இந்த செயலுக்கும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் பிரகாஷ்.

அந்த சிறுவர்கள் சிகரம் தொடுவார்கள். சமுதாயத்தின் நல்ல தூண்களாக இருப்பார்கள்.
//

வாங்க ரோஸ்விக்... உங்கள் வாக்கு பலிக்கட்டும்..

சாமக்கோடங்கி said...

//
சரியா சொல்லி இருக்கீங்க

பிள்ளைக்ளுக்கு படிப்ப்பிற்கு மத்தியில் இது போல் செடி நடுவது இன்னும் அவர்கலுக்கு பிடித்தமான விளைட்டு களை விளையாட விடுவது அவர்களுக்குமிக்க மகிழ்சிய உண்டாக்கும்.
அந்த போட்டோவில் எவ்வ்ளவு ஆனந்த்தம் அவர்களுக்கு..//

வாங்க ஜலீலா அவர்களே.. குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க வேண்டும்.. வீட்டிலுள்ள கோபத்தை அவர்கள் மேல் காட்டும் ஆசிரியர்கள் தான் இங்கு அதிகம்..

Unknown said...

நிறைவான பதிவு, பள்ளியில் உள்ள குழந்தைகள் பற்றி ஆரம்பித்து, குழந்தைகளின் குதுகலத்தோடு முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.//
இதை வழி மொழிகிறோம்...
எங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்தவும்..

"தாரிஸன் " said...

//இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.//

நானும் உங்களோட செந்துகிரனுங்கோ.......

சாமக்கோடங்கி said...

//பாரத்... பாரதி... said...

நிறைவான பதிவு, பள்ளியில் உள்ள குழந்தைகள் பற்றி ஆரம்பித்து, குழந்தைகளின் குதுகலத்தோடு முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
//
வாங்க முண்டாசுக் கவிஞரே...

சாமக்கோடங்கி said...

//இதை வழி மொழிகிறோம்...
எங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்தவும்..//

தெரியப் படுத்தி விடுகிறேன்.. நம் வாழ்த்துக்கள் எப்போதும் அவருக்கு இருக்கும்..

சாமக்கோடங்கி said...

//
நானும் உங்களோட செந்துகிரனுங்கோ.......//

கண்டிப்பாக.... நல்லுள்ளங்கள் எங்கு இருந்தாலும் ஒன்று சேரும்..

சிவகுமாரன் said...

பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்

சாமக்கோடங்கி said...

நன்றி சிவகுமாரன் அவர்களே..

இராஜராஜேஸ்வரி said...

நட்ட செடிகளோடு, குழந்தைகளும், குழநதைகளோடு நீங்களும் வளர வாழ்த்துக்கள் ப்ல.

Post a Comment