Sunday, January 2, 2011

விமர்சனம்

சாயங்காலம் வீட்டுக்கு கெளம்பற வேளையில மாப்ள.. படத்துக்குப் போலாமாடான்னு பசங்க கேட்க, தட்ட முடியாம கெளம்புங்கடான்னு சொல்லியாச்சு..

நூறடி ரோடு கங்கா யமுனா காவேரி தியேட்டர்கள்ல தலா காந்திபுரம், மன்மதன் அம்பு, --(ஒரு பெண்ணின் பெயர்)கொலைவழக்கு போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டு இருந்தன. இரண்டாவது படத்துக்கு டிக்கட் இல்ல(பசங்களுக்கு விருப்பமும் இல்ல), மூணாவது படம் ரூல்டு அவுட்.. ஆக முதல் படம் மட்டுமே ஒரே சாய்ஸ். மாப்ள படம் ஓரளவுக்கு இருக்கும்டான்னான் ஒருத்தன். எங்க ஊரு மேட்டுப்பாளையத்திலும் அது நான்கு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கவும் நல்லாத்தான் இருக்கும்னு போனோம்.

படம் தொடங்கிய இரண்டாவது நிமிடம் அது டப்பிங் செய்யப்பட்டது என்று உணர்ந்தபோது ஒருவரை ஒருவர் முகத்துக்கு முகம் திருதிருவென பார்த்துக்கொண்டோம். டே மாப்ள.. வருஷக் கடைசி அதுவுமா வந்து மாட்டிகிட்டோமேடா... டிக்கட் வெலை வேற எழுபது ரூவா..

அவ்ளோ தான்... படம் முடியற வரைக்கும் ஒரே ரகளை.. சிரிச்சு சிரிச்சு, தாடை முதல் அடிவயிறு வரையிலான அனைத்து உடல்பாகங்களும் வலிக்கும் அளவு சிரிச்சோம்..நாங்கள் பண்ணிய அதகளத்தில் முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் கூட சிரித்தனர்.

விமர்சனமா...? அட அந்தப் படத்தில் கதைன்னு சொல்ல ஒண்ணும் இல்ல.. அப்புறம் தான விமர்சிக்க.. படத்துல எப்ப அழுகுராணுக, எப்ப சிரிக்கிராணுக, எப்ப சண்டை, எப்ப பாட்டு, எப்ப க்ளைமாக்ஸ் ஒண்ணுமே புரியல..வில்லன் வேற அடிக்கடி கண்ணுல மை போட்டுட்டு வந்து பயமுறுத்தினான். இதுல ஸ்பெஷல் என்னவென்றால், அவன் எதிரிகளைச் சுட்டதை விட தன்னுடைய ஆட்களைத் தான் அதிகம் கொன்றான். முடியல.. தலையில கை வெச்சுகிட்டு உக்காந்து இருந்தோம்.. அப்புறம் வந்தது வந்தாச்சு. கடுப்பிலையே எவ்வளவு நேரம் தான் இருக்கறது என்று சொல்லி தான் இந்த கலாய்ப்பு விஷயங்களைச் செய்தோம். வெளியில் வந்த பிறகும் கூட ஒரு நண்பன் "ஏய் சாலா , ஏய் சாலா" என்று கத்திக் கொண்டே வந்தான்.. அப்டீன்னா என்னன்னு கேக்கறீங்களா..?? அது தான் வில்லனின் பஞ்ச் டயலாக்.

அப்புறம் எதுக்கு இந்த பதிவுன்னு கேக்கறீங்களா?? நேத்து கடலோர கவிதைகள் படம் பாத்தேன்.
ஒவ்வொரு பிரேம்மையும் இயக்குனர் எப்படி செதுக்கி இருக்கிறார் என்று பார்த்து வியந்தே போனேன்.. ஏற்கனவே பார்த்து இருந்தாலும், காந்திபுரம் போல ஒரு படத்தை திரையில் பாத்து விட்டு வந்ததும் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்ந்தேன். கேமராவின் கோணம், சொல்லவந்ததை சொல்லிய திறமை, சத்யராஜ் முதற்கொண்டு அனைத்து நடிகர்களை நடிக்கவைத்த திறமை, படத்தை முடித்த விதம் என எல்லா விஷயங்களிலும் பாரதிராஜாவின் உழைப்பு எவ்வளவு மகத்தானது என உணர்ந்தேன்.

படத்தில் இன்னொரு விஷயம் இசைஞானியின் ஒலி விளையாட்டு.. படத்தோடு ஊன்றிப் பார்த்ததில் பின்னணி இசை ஒலிப்பதை மறந்தே போனேன். அதுதான் அவரது வெற்றி. பின்னணி இசையை கவனிக்க ஆரம்பித்தவுடன் அதிலேயே லயித்து விட்டேன். இயக்குனர் என்ன சொல்ல நினைக்கிறார், அந்த காட்சிக்கு என்ன இசை வேண்டும். இசை எவ்வளவு கதை சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கிறார். பாரதிராஜாவுக்கு இசைஞானி இந்தப் படத்தில் சரிசமமாகக் கை கொடுத்திருக்கிறார் என்றே உணர்கிறேன்.

நான் என்ன சொல்ல வர்றேன்னா.... அதிநவீன கேமராக்கள், ஒலிஒளி அமைப்புக் கருவிகள், மற்றும் பல நவீன திரைப்படத் தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத காலத்திலேயே இவ்வளவு அழகான கதையைக் கோர்த்து ரசிகர்களுக்கு நிறம் மாறாமல் கொண்டு சேர்த்த இந்த படங்கள் எங்கே, அதற்கப்புறம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து லேட்டஸ்டாக வந்திருக்கும் இந்தப் படங்கள் எங்கே.. உங்களுக்கு கதைக்குப் பஞ்சமா இல்லை இதுபோன்ற படங்களை நீங்கள் பார்த்ததில்லையா...?(கொடுமை என்னவென்றால் தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாம்.. ). வருஷக் கடைசியில் இப்படியும் ஒரு அனுபவம்..!?!?!

இதுவரை நான் எந்தத் திரைப்பட விமர்சனமும் எழுதியதில்லை..ஆனால் கடைசியில் என்னையும் விமர்சனம் எழுத வெச்சுட்டாங்களே...

புது வருஷமாவது என்னை விமர்சனம் எழுத விடாத அளவுக்கு படங்கள் வரணும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்
சாமக்கோடங்கி

18 பின்னூட்டம்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

ILLUMINATI said...

ஹாஹா,உண்மை தான் சாமு.இப்ப நல்ல படங்கள் குறைஞ்சு போச்சு.எல்லோரும் நோகாம நொங்கு திங்கணும்னு காப்பி அடிக்க ஆரம்பிச்சா அப்டி தான் இருக்கும்.இப்ப நிலைமைல,மாட்டாம காப்பி அடிக்குறவன் தான் பெரிய படைப்பாளி.இவனுக திருந்த ரொம்ப நாள் ஆகும்.இதில இந்த காப்பி சிங்கங்களை தெரிஞ்சும் தலைல தூக்கி வச்சு ஆடுராணுக பாருங்க..அவனுகள பார்த்தா எனக்கு பரிதாபமா இருக்கு.

சக்தி கல்வி மையம் said...

படம் மொக்கையா இருந்தாலும் உங்க விமர்சனமா சூப்பரா இருக்கு தலைவா...

பதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

சாமக்கோடங்கி said...

என்ன ஒரே ஆளு ரெண்டு வேஷத்துல வந்து கமென்ட் போடுறாரு..

பழமைபேசி said...

அஃகஃகா... வாழ்த்துகள் நம்பூருப் பழமையுங்கூடவே வருதுங்கோ!!

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்ம்.... விமர்சன உலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்... (வாங்க... எல்லாருமா சேர்ந்து நாசமா போவோம்...)

Philosophy Prabhakaran said...

போன வருஷம் வந்த படத்துக்கு இந்த வருஷம்தான் விமர்சனம் எழுதியிருக்கீங்க.... Too Late...

Philosophy Prabhakaran said...

நீங்க சொல்ற திரையரங்கம் கொளத்தூர் கங்கா தானே... அங்கேதான் நான் எந்திரன் படம் பார்த்தேன்...

இளங்கோ said...

என்ன கொடுமை சார் இது.. ?
விமர்சனமே எழுதாத உங்களையும் கடசில பொங்க வெச்சிட்டாங்களே.. அவ்வ்வ்வ்.. :)

ஆமினா said...

//(கொடுமை என்னவென்றால் தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாம்.. ). வருஷக் கடைசியில் இப்படியும் ஒரு அனுபவம்..!?!?!//

என்ன கொடுமை சார் இது? எங்களுக்கும் புது அனுபவம் கெடைச்சுடுச்சு

சாமக்கோடங்கி said...

//பழமைபேசி said...

அஃகஃகா... வாழ்த்துகள் நம்பூருப் பழமையுங்கூடவே வருதுங்கோ!!
//

ஆமாங்க.. அது எப்போதும் கூடவே தான் வரும்...

சாமக்கோடங்கி said...

//போன வருஷம் வந்த படத்துக்கு இந்த வருஷம்தான் விமர்சனம் எழுதியிருக்கீங்க.... Too Late...///


அது சேரி.. நான் கூட போன வருஷம் தூங்கி இந்த வருஷம் தான் எந்திரிச்சேன்...

சாமக்கோடங்கி said...

//நீங்க சொல்ற திரையரங்கம் கொளத்தூர் கங்கா தானே... அங்கேதான் நான் எந்திரன் படம் பார்த்தேன்...//

சார்,.. நான் இருப்பது கோயம்புத்தூரில்.. நீங்க எந்த ஊர்ல எந்திரன் படம் பாத்தீங்க..?? மத்தபடி நீங்க சொல்லும் கொளத்தூரில் எனக்கு தெரிஞ்ச ஒரு எம்எல்ஏ இருக்கார்...

சாமக்கோடங்கி said...

//ம்ம்ம்ம்.... விமர்சன உலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்... (வாங்க... எல்லாருமா சேர்ந்து நாசமா போவோம்...)//

நான் விமர்சனம் எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் நமது இயக்குனர்கள் கையில் தான் உள்ளது.. என்ன செய்ய...(நான் எழுத ஒரு படம் கூட கிடைக்காமல் போய் விடுமா என்ன...??)

சாமக்கோடங்கி said...

//என்ன கொடுமை சார் இது.. ?
விமர்சனமே எழுதாத உங்களையும் கடசில பொங்க வெச்சிட்டாங்களே.. அவ்வ்வ்வ்.. :)//

விமர்சனம் மட்டுமா இன்னும் என்னென்ன செய்யப் போறேன்னு பொறுத்திருந்து பாருங்கள்..

சாமக்கோடங்கி said...

//என்ன கொடுமை சார் இது? எங்களுக்கும் புது அனுபவம் கெடைச்சுடுச்சு/

விமர்சனம் படிக்கலாம்னு வந்து நல்லா ஏமாந்து போய் இருக்கீங்கன்னு நெனைக்கிறேன்..

சாரி.. நான் எப்போதும் அப்படித்தான்.. என்ன பத்தி எங்க ஊர்ல வந்து கேட்டுப் பாருங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...

http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html

இராஜராஜேஸ்வரி said...

கடலோரக் கவிதை படம் அருமை நான் இரண்டுதரம் பார்த்தேன்.

Post a Comment