Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்..




















ஏழாவது படிக்கையில,
மத்தியான சாப்பாட்டு இடைவேளைல,
சைக்கிள்ல கொரங்கு பெடல் அடிச்சு,
ஸ்கூலுக்கு வெளியில இருக்குற பாட்டி கடைக்குப் போயி,
எட்டணா குடுத்து பொங்கல் வாழ்த்து அட்டை கேட்க,
அது ஏதோ ஒண்ண உருவி குடுக்க,
வேண்டாம் பாட்டி, அந்த கத்தைய குடு,
நானே எடுத்தக்கறேன்னு சொல்ல, பாட்டி குடுக்க,
அளவில கொஞ்சம் பெருசா,
ஒரு பொங்கப் பானையும்,
அழகான ஓட்டு வீடும்,
ஒரு வெள்ளைப் பசுமாடும் கன்னும்,
அழகான சேலை கட்டி அம்மாவும்,
எடுப்பான வேட்டி கட்டி அப்பாவும்,
பட்டுப்பாவாடை போட்ட குட்டிப் பொண்ணும்,
மஞ்சள் சூரியனும் இருக்கும் அழகான ஒரு வாழ்த்து அட்டையை
பிரிச்சு எடுத்து, பின்னாடி திருப்பி,
பாட்டிகிட்டையே ரீபில் வாங்கி ஊதி ஊதி
"அன்பு நண்பனுக்கு பொங்கல் வாழ்த்து.., இப்படிக்கு பிரகாஷ்" ன்னு எழுதி,
அந்த பல்லு போன பாட்டிகிட்டையே ஸ்டாம்பையும் வாங்கி
எச்ச தொட்டு ஒட்டி,
பக்கத்து தபால் ஆபீஸ்க்கு கொரங்கு பெடல்லையே போயி,
எட்டாத ஒசரத்தில இருக்குற செகப்புப் பெட்டிகிட்ட எத்தி நின்னு,
அட்டையை பெருமிதத்தோட உள்ளே போட்டு,
எடக்கம்பியில மாட்டினா
எங்க போஸ்ட்டுமேனு கையில கிட்டாம
போயிடுமோன்னு இன்னும் கொஞ்சம் எட்டி,
கையால ஆட்டி விட்டு,
உள்ளே உழுந்தத ஊர்ஜிதம் பண்ணிக்கிட்டு,
பள்ளிக்குத் திரும்பையில,
சாப்பாட்டு நேரம் முடிஞ்சு போக
சத்துணவும் தீந்து போக,
வகிறு நெறையில்லின்னாலும்,
மனசு நெறஞ்ச அந்த சந்தோஷம்,...இன்னிக்கு,
ஐயாயிரம் ரூவா செல்போணுல
"ஹாப்பி பொங்கல்"னு குறுஞ்செய்தி அடிக்கையில வரலையே நண்பர்களே..
ஆமா.. வாழ்க்கையே குறுகிப் போச்சோ..
என்றைக்காவது எனக்கொரு வாழ்த்து அட்டை வராதா...


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

சாமக்கோடங்கி

5 பின்னூட்டம்:

சாமக்கோடங்கி said...

வணக்கம் நண்பர்களே.. மொதல்ல ஒரே பாராவாகத் தான் எழுதினேன்... அப்புறம் பாத்தா எங்கேயுமே முற்றுப் புள்ளியுமே இல்ல... ஒரே மூச்சுல படிக்கக் கஷ்டமா இருக்குமேன்னு, காற்புள்ளி வர்ற இடங்களிலே எல்லாம் ஒரு என்டர் தட்டி ஒண்ணுக்குக் கீழ ஒண்ண கொண்டு வந்துட்டேன்.. ஹி ஹி.. தப்பா ஏதும் கற்பன பண்ணிக்க வேண்டாம்... அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மறுபடியும்..

ILLUMINATI said...

பொங்கல் வாழ்த்துக்கள் சாமு..

ஜெய்லானி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)

இளங்கோ said...

அறிவியல் வளர்ச்சி வரும்போது, பழையவை கழிவது இயற்கை தானே..
இப்போ எல்லாம் யாருக்கும் லெட்டர் எழுதி, போஸ்ட் பண்ணி, அது போய்ச் சேர்றா வரைக்கும் பொறுமை இல்லை. :)

பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிரகாஷ் ..

Unknown said...

உங்களின் ஆதங்கம் உண்மைதான்.. ஆயினும் பதிவின் உற்சாகம் அருமை.

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Post a Comment