Sunday, February 6, 2011

பாலிதீன்

வணக்கம் நண்பர்களே..

மனிதன் ஒரு கோமாளி தான்..

பாருங்களேன்.. பல ஆண்டுகள் இருக்க வேண்டிய விஷயங்களான வீடுகள், சாலைகள் போன்றவற்றை தரமற்ற பொருட்களால் தயாரிக்கிறான். சாலைகள் இரண்டே வருடங்களில் பல்லைக் காட்டுகின்றன. கொஞ்சம் பலமாக மழை வந்தால் உடனே காணாமல் போய் விடுகின்றன.

ஆனால் சும்மா ஒரு பொருளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தவுடன் வேலை முடிந்து விடும் ஒரு பொருளுக்கு ஆயுளோ ஆயிரம் ஆண்டுகள்.. ஆம் நண்பர்களே பாலிதீன்.

என்ன ஒரு முரண்பாடு பாருங்களேன்.

பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்ப்பீர், முடிந்தவரை மறுசுழற்சி செய்யுங்கள் போன்ற அறிவுரைகள் ஒருபுறம் இருக்கட்டும். மனிதனின் ஒவ்வொரு செயலிலும் அவனது சூழ்நிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சூழ்நிலையை நல்லபடியாக உருவாக்கிக் கொடுப்பதில் அரசுக்குப் பெரும்பங்கு உள்ளது.

உதாரணத்திற்கு மனிதன் வாழ மிக அத்தியாவசியமானவைகளான உணவு உடை உறைவிடம் ஆகியவை எல்லாம் விலை ஏறிப்போக, செல்பேசிகள் மட்டும் விலை குறைந்து கொண்டே வருகின்றன. தொலைத்தொடர்புப் புரட்சி என்று கூட வருணிக்கப் படுகின்றது. பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விலைக்குறைப்பு செய்கின்றனர். ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு சேவை(?!?!) நிறுவனங்கள் விலைகளை மளமளவென குறைக்கின்றன. இது மட்டும் எப்படி சாத்தியம்..? ஒரு அரசாங்கத்தின் உதவி இல்லாமல் இதனைச் செய்து விட முடியுமா..? ஆக ஒரு நாட்டின் வரிவிதிப்பு முறைகளும் ஆட்சித்திறனும் அந்நாட்டை செதுக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது வெளிச்சம்.

செல்போன் என்ற ஒரு பொருள் இல்லாதவரை மனிதன் வாழவே செய்தான். இன்று அது ஒரு அத்தியாவசியமான பொருள் ஆகிவிட்டது(ஆக்கப்பட்டு விட்டது). எங்கே போனாலும் "உங்கள் நம்பர் சொல்லுங்கள்" என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக ஒருவனிடத்தில் செல்பேசி இருந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கை உருவாகி விட்டது.

அதே போல பாலிதீன் என்ற ஒரு பொருள் உருவாகதவரை மனிதன் மற்ற பொருட்களை உபயோகப் படுத்திக் கொண்டு தான் இருந்தான். பாலிதீன் கண்டுபிடிக்கப் படும்போதே இதை அழிப்பது மிகக் கடினம் என்றும் கண்டுபிடிக்கப் பட்டு விட்டது. அப்படி இருந்தும் முளையிலேயே கிள்ளி எரியாமல் அதன் தயாரிப்புக்கு ஊக்கமளித்தது, சரியான வரி விதிக்காமல் அதனை மலிவு விலைக்கு புழங்கச் செய்தது, மக்களைச் செல்பேசி போல பாலிதீனுக்கு பழக்கப் படுத்தி விட்டது. விளைவு.. நாம் இப்போது அடிமைகளாகி விட்டோம்.. பாலிதீனுக்கும்.

இந்த நிலைமையை மாற்ற அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். எப்போது??

தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டிய அதே நேரத்தில், நாம் என்ன தான் உபயோகிப்பதைத் தவிர்த்து விட்டாலும் எங்கோ ஒரு மூலையில் இதனின் தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதற்கு விரைவில் ஒரு போராட்டம் வர வேண்டிய நிலை உள்ளது. வரும்.

இறுதியாக..

நாம் தான் பேராசைப் பட்டோம்.. அனுபவிக்கிறோம். ஆனால் இவைகள் என்ன பாவம் செய்தன..?? நம்மோடு வாழ்வதற்காக இவைகளும் இந்தக் கொடுமையை அனுபவிக்க தான் வேண்டுமா..?

படம்: நான் கொடைக்கானல் சென்றிருந்த பொது க்ளிக்கியது.

மேலும் இளங்கோவின் இந்தப் பதிவே என்னை எழுதத் தூண்டியது.

நன்றி
சாமக்கோடங்கி

13 பின்னூட்டம்:

ILLUMINATI said...

தேவையானதை நாடுவதை விட தேவையில்லாததை நாடுவது தான் மனித இயல்பு.பிளாஸ்டிக் அப்டிபட்ட சமாச்சாரம் தான்.நாம மனசு வச்சு துணிப் பையும்,பேப்பர் பையும் உபயோகிக்க ஆரம்பிச்சா இது குறைஞ்சுடும்.ஆனா அதையும் prestige issue ஆக்குவாணுக நம்ம ஆளுக!என்னது துணிப் பையானு..

ஒரு முறை திருநெல்வேலி ஹோட்டல்ல பார்த்தது..

காகிதப் பை எளிமையானது.
உபயோகித்த பின் உரமாவது!
பிளாஸ்டிக் பை பார்பதற்கு அழகானது.
உபயோகித்த பின் விசமாவது!
னு.சொன்னது மட்டுமில்லாம அங்க காகித பை தான்.அந்த மாதிரி நாமும் உணரனும்.வேற வழியே இல்ல.

S.T.Seelan (S.Thanigaseelan) said...

சிந்திக்க வைக்கிறீர்கள் பாராட்டுகள்...
எனது தளத்தையும் பின்தொடர உங்களை அன்பாக அழைக்கிறேன்..http://vellisaram.blogspot.com/

Philosophy Prabhakaran said...

நல்லதொரு விழிப்புணர்ச்சி பதிவு... நன்றி...

Chitra said...

நம்மோடு வாழ்வதற்காக இவைகளும் இந்தக் கொடுமையை அனுபவிக்க தான் வேண்டுமா..?

...good question....!

இளங்கோ said...

Thank you Prakash for awareness..

செல்வா said...

பாலிதீன் கண்டிப்பா ரொம்ப கொடுமையான விளைவுகளை ஏற்ப்படுத்தத்தான் போகிறது. அதிலும் நிறைய இடங்களில் அது அப்படியே ஒண்ணா சேர்ந்து சாக்கடை ஓரங்களில் விழுந்து சாக்கடை நீர் தேங்கி ,, ரொம்ப கேவலாமா இருக்கு .. என்னத்த சொல்லுறது ,, அத விட இந்த ஒன் யூஸ் டம்ளர் அப்படின்னு சொல்லுற விசயங்கள் அத விட கொடுமை .

ம.தி.சுதா said...

நாமே உலகை அழிக்கிறோம் என்பதற்க நல்ல உதரணம்.. பகிர்வக்க நன்றிகள் சகொதரம்...

சாமக்கோடங்கி said...

//
காகிதப் பை எளிமையானது.
உபயோகித்த பின் உரமாவது!
பிளாஸ்டிக் பை பார்பதற்கு அழகானது.
உபயோகித்த பின் விசமாவது!
னு.சொன்னது மட்டுமில்லாம அங்க காகித பை தான்.அந்த மாதிரி நாமும் உணரனும்.வேற வழியே இல்ல./

ஆமா இல்லுமி..

ஜெர்மனியில் காகிதப்பை உபயோகம் தான் அதிகமாக உள்ளது.. மற்றும் பாலிதீன் உபயோகம் பற்றி நன்கு அறிந்துள்ளனர்..

சாமக்கோடங்கி said...

//Seelan said...

சிந்திக்க வைக்கிறீர்கள் பாராட்டுகள்...
எனது தளத்தையும் பின்தொடர உங்களை அன்பாக அழைக்கிறேன்..http://vellisaram.blogspot.com/
//

நன்றி சீலன்.. இணைஞ்சிட்டா போச்சு...

சாமக்கோடங்கி said...

//Philosophy Prabhakaran said...

நல்லதொரு விழிப்புணர்ச்சி பதிவு... நன்றி...
//

எங்க தொண்ணூறு ஆண்டுகளாக விழித்துக் கொண்டே இருக்கிறோம்..

சாமக்கோடங்கி said...

//Chitra said...

நம்மோடு வாழ்வதற்காக இவைகளும் இந்தக் கொடுமையை அனுபவிக்க தான் வேண்டுமா..?

...good question....!
//

நன்றி சித்ரா.. கேள்வி மட்டும் தான் உள்ளது.. பதில் இல்லை..

சாமக்கோடங்கி said...

//கோமாளி செல்வா said...

பாலிதீன் கண்டிப்பா ரொம்ப கொடுமையான விளைவுகளை ஏற்ப்படுத்தத்தான் போகிறது. அதிலும் நிறைய இடங்களில் அது அப்படியே ஒண்ணா சேர்ந்து சாக்கடை ஓரங்களில் விழுந்து சாக்கடை நீர் தேங்கி ,, ரொம்ப கேவலாமா இருக்கு .. என்னத்த சொல்லுறது ,, அத விட இந்த ஒன் யூஸ் டம்ளர் அப்படின்னு சொல்லுற விசயங்கள் அத விட கொடுமை .
//

வாங்க செல்வா..
கொடைக்கானல் செல்லும் வழியில் இன்னொரு ஊரில் நிறுத்தினோம்..எந்த ஊர் என்று நியாபகம் இல்லை. அங்கே டீக்கடை அருகே பெரிய பேனர் வைக்கப் பட்டு இருந்தது.. அதில் தேநீர் அருந்த உபயோகிக்கும் ஒன் யூஸ் பிளாஸ்டிக் கப்புகள் பழைய வீணாகிப் போன மருத்துவக் கழிவுகளில் இருந்து பிரித்து எடுத்துத் தயாரிக்கப் படுபவை எனவே அவற்றின் உபயோகத்தைத் தவிர்ப்பீர் என்று எழுதி இருந்தது.. படங்களும் விழிப்புணர்வு தருவதாகவே இருந்தன.. எல்லோருக்கும் தெரிய வேண்டிய விஷயம்..

சாமக்கோடங்கி said...

//ம.தி.சுதா said...

நாமே உலகை அழிக்கிறோம் என்பதற்க நல்ல உதரணம்.. பகிர்வக்க நன்றிகள் சகொதரம்...
//

கிட்டத்தட்ட முடிவின் விளிம்பில்..

Post a Comment