Tuesday, June 7, 2011

டாக்டருக்குப் படிப்பவர்களே..

"உங்க அப்பாவுக்கு இதயத்துக்குப் போகிற ரத்தக் குழாயில அடைப்பு இருக்கு..!! ஆஞ்சியோகிராம் பண்ணனும் 12000 ரூபாய் வரை செலவாகும்..பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க..!!" பெரிய டாக்டர் சொன்னார்..

நட்ட நாடு இரவில் அவசர அவசரமாக உயிர் நண்பர்கள் பணத்தைப் புரட்டினார்கள்.. உள்ளே அப்பா நெஞ்சு வழியில் துடித்துக் கொண்டு இருந்தார்..

"டாக்டர்... பணம் ரெடி..உடனடியா ஆஞ்சியோ பண்ணுங்க.." டியூட்டி டாக்டரிடம் சொன்னேன்..பெரிய டாக்டர் அங்கே இல்லை.

ரசீது போன்ற ஒரு தாளில் ஒரு தொகையை எழுதி கீழே பணம் செலுத்தும் இடத்தில் செலுத்தி ரசீது பெற்று வரும்படிக் கூறினார் அவர்.. சிறிய வயது.. புதிதாக டாக்டராக இணைந்துள்ளார் என்று நினைக்கிறேன்..

அதில் தொகை Rs.15000 என்று எழுதப் பட்டிருந்தது.. சிலபேர் அவசரத்திலும் பாசத்திலும் துடித்துக் கொண்டு இருப்போர் என்ன ஏது என்று ஆராயாமல் உடனே கட்டி விடுவர்..

"டாக்டர் 12000 ரூபாய் வரை தான் ஆகும்னு சொன்னார்.. நீங்க பதினைந்தாயிரம் போட்டு இருக்கீங்களே.."

ஒருவேளை Rs.15000 தான் உண்மையான தொகையாக இருக்குமோ என்று கேட்டேன்..

உடனே அந்தத் தாளை வாங்கி அதைத் திருத்தி Rs.12000 என்று எழுதிக் கொடுத்தார்.. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்.." ஃபரூக் டாக்டர் போட்டா கம்மியா தான் பில் சொல்லுவார் மற்றவர்கள் பதினைந்தாயிரம் தான் போடுவார்கள்"...

வந்தது பாருங்கள் கோவம்.. "On what basis you are charging Rs.12000 for this operation..? Show me the documents now.. I want to see the documents.." கொஞ்சம் சத்தமான குரலில் கத்த ஆரம்பித்தேன்..

"டாக்டர் 12000 'வரை' தான் ஆகும் என்று சொன்னார்.. நான் ஒரு வேளை டாக்டர் எங்கிட்ட 10000 வரை தான் ஆகும்னு சொல்லி இருந்தா அதை அடிச்சு எழுதி குடுத்து இருப்பீங்களா...?? I want to see your chief doctor now..!!! "

"நீங்க எதா இருந்தாலும் டாக்டர் வந்ததுக்கு அப்புறம் பேசிக்குங்க.. பேஷண்டுக்கு உடனடியா இத பண்ணியாகணும்.. பணம் கட்டினால் தான் பண்ண முடியும்.."

சொல்லி விட்டு விருட்டென்று உள்ளே போய் விட்டார்..

ரமணா படத்தில் வரும் அந்த மருத்துவமனை காட்சி போலவே இருந்தது அவர்களது நடவடிக்கை..

------------------------------

+2 வில் முதல் மதிப்பெண்கள் பெரும் பெரும்பாலான மாணவச் செல்வங்கள் சொல்வது " நான் படித்து டாக்டர் ஆக வேண்டும்" என்பதே.. அதனோடு இதையும் சேர்த்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. டாக்டர் ஆனால் போதாது..நீங்கள் பணம் சம்பாரிக்க வேண்டும் என்றால் மனசாட்சியை அடகு வைத்து, நீங்கள் பணியாற்றப் போகும் மருத்துவமனைக்கு லாபம் சேர்க்க இது போன்ற கோக்கு மாக்கு வேலைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்..

நன்கு மதிப்பெண்கள் எடுக்காதவர்கள் கூட வேறு சில நல்ல வேளைகளில் மனசாட்சிக்கு கட்டுப் பட்டு நேர்மையாகப் பணி புரிகிறார்கள்.. ஆனால் அனேக மக்கள் உயிர் காக்கும் தெய்வமாக மதிக்கப் பெரும் மகத்தான மருத்துவர் பணிக்காக கஷ்டப்பட்டு படித்து, கடைசியில் இப்படிக் காசுக்காக கேவலமாகப் பணிபுரிவது எவ்வளவு கொடுமை..


பாவம் அந்தப் பெண் என்ன செய்வார்..?? லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து டாக்டருக்குப் படித்து விட்டார்.. மருத்துவமனையிலும் பணிக்குச் சேர்ந்து விட்டார்.. இனி அவரது "திறமையை" காட்டினால் தானே முன்னுக்கு வர முடியும்..

நல்ல வேலையாக எனது தந்தையை இந்தப் பணம் தின்னி மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு அரை நாளில் மாற்றி விட்டேன்.. அதற்குள் எங்களது பாதி சேமிப்பு கரைந்து விட்டது..!!!

நேரமின்மை காரணமாக அதிகம் எழுத முடியவில்லை..

மருத்துவமனையில் நடந்த கூத்துகள் அத்துனையும் பெயர் விவரங்களுடன் அடுத்த பதிவில்..

நன்றி..
சாமக்கோடங்கி

13 பின்னூட்டம்:

எல் கே said...

:(

Anonymous said...

Sue them. sigh.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. சரிதான்.. பில்லிங் ஸ்டாண்டர்ட் என்று எதுவும் இல்லை என்று நீயா நானாவில் ஒருவர் சொன்னார்.. நீங்கள் சொல்லியிருப்பது போலவே.. ஆனால் இந்த உயிர் காக்கும் தெய்வம் என்ற பதம் எரிச்சலாக வருகிறது.. ஏன் அதை ஒரு பிசினஸ் என்றே ஒத்துக் கொண்டு, சேவையாளர் என்றே மருத்துவரைக் கருதி, கட்டணத்தை ஸ்டாண்டர்டைஸ் செய்து, காப்பீடு மூலம் செலவை நிவர்த்தி செய்து, அவரிடம் அவரது கடமையை எதிர்பார்க்கக் கூடாது??

மருத்துவமனையின் பெயரை அறியத் தருவீர்களா? சும்மா ஒரு தகவலுக்காகத் தான் கேக்கிறேன்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//பாவம் அந்தப் பெண் என்ன செய்வார்..?? லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து டாக்டருக்குப் படித்து விட்டார்.. மருத்துவமனையிலும் பணிக்குச் சேர்ந்து விட்டார்.. இனி அவரது "திறமையை" காட்டினால் தானே முன்னுக்கு வர முடியும்..//

அரசு மற்றும் தனியார் கல்லூரி கட்டணத்தில் பாரிய வேறுபாடு இருக்கிறது.. அரசுக் கல்லூரிகளில் இவ்வளவு செலவாவதில்லை என்றே நினைக்கிறேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மேலும் அவர்களுடைய மெஷின், அதற்கான மெய்ந்டநேன்ஸ், பரிசோதனை உபகரணங்கள், சாப்ட்வேர், பணியாளர்கள், கட்டிடம் என அவர்களுக்கும் பல செலவுகள் உண்டு.. பன்னிரெண்டாயிரம் என்பது அப்படியே அவர்களுக்கான லாபம் என்று எண்ணிடல் கூடாது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

உயிரோடு கொல்லுவது எப்படி னு கற்கலாம் இவர்களிடம்..

:((

Anonymous said...

You rock Shanthi auntie. ஒரே வரியில் நல்ல போடு போட்டிருக்கீங்க.

நிரூபன் said...

மக்களுக்கு விழிப்புணர்வையும், வைத்தியர்களின் பண வசூலிப்பு பற்றிய அறிவுரையினையும் தரக் கூடிய பதிவு இது. அரசும், சுகாதார அமைச்சும் மருத்துவ மனைகளின் சிகிச்சைகளுக்கென்று தனியான ஒரு கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்தினால் தான் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியும். இல்லையேல் பாதிக்கப்படுவது பல ஏழை மக்களின் வாழ்வு தான்.

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

இதில் இருக்கும் வலியை உணர்ந்தேன் என்று சொல்லுவது ரொம்ப மேம்போக்காக இருக்கும்!! இந்த கலைஞர் காப்பீடு..கண்றாவி காப்பீடெல்லாம் வரும் முன்பு,..இன்னும் முன்பு... இன்னும் முன்பு... இன்னும் முன்பு என்று பார்த்தால், முதலமைச்சர்கள், மந்திரிகள் எல்லாம் உடம்பு சரியில்லாது போனால் அரசு மருத்துவமனையில் தான் அட்மிட் ஆனார்கள்.. சுமார் ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் இந்த தனியார் மருத்துவமனைகள் அள்ளிக் குடிக்கிறார்கள்!! சென்ற முறை ஜெ கூட சென்னை அரசு மருத்துவமனையை நன்றாக மாற்றினார்...தனியார் மருத்துவமனைகள் விடயத்தில் நீங்கள் சொல்லும் காரணம் ஏற்கக்கூடியதே!! ஆனாலும் சரியான மாற்று என்பது அரசாங்கம் அரசு மருத்துவமனைகளை மிக மிகச் சிறப்பாக நிர்வகிப்பது மட்டுமே ஆகும்... உண்மையில் சொன்னால் இப்பவும் (கவுரமாக வாழ்ந்து கொண்டிருக்கும்)ரொம்பப் பேரால் இந்த 12000 கூட புரட்டுவது ரொம்ப கஷ்டமே!!

இராஜராஜேஸ்வரி said...

ரமணா படத்தில் வரும் அந்த மருத்துவமனை காட்சி போலவே இருந்தது அவர்களது நடவடிக்கை..//

நிதர்சனக் காட்சிதான் எல்லா மருத்துவமனைகளிலும்

கவி அழகன் said...

நாசமா போன டாக்குத்தர்மாராள ஏழைகள் உயிர் போகுது

அம்பாளடியாள் said...

நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு .நன்றி சகோ பகிர்வுக்கு .......

சாமக்கோடங்கி said...

நன்றி சகோதரி ..

இன்னும் நிறைய எழுத இருந்தேன்..எனக்கு நடந்தது போலவே நிறைய பேர் அனுபவப்பட்டு உள்ளனர் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன்..

Post a Comment