Monday, March 15, 2010

மன மூடி


இந்த மாசம் உங்களோட ப்ரொடக்டிவிட்டி கொஞ்சம் கம்மியா இருக்கே... இஸ் தேர் எனி வால்யுபில் ரீசன்..?

அது வந்து இந்த மாசம் வந்த டாஸ்க் கொஞ்சம் கஷ்டம்.. ஸ்டடி பண்ண டைம் ஆயிடுச்சு... குய்க்கா பண்ணினா க்வாலிட்டி பாதிக்கப் படும் அதனாலதான்..

நோ நோ நோ.. க்வாலிட்டி தான் ரொம்ப முக்கியம்..கம்பெனி அதுக்குத் தான் உங்களுக்கும் எனக்கும் சம்பளம் தருது.. பட் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணுங்க.. எந்த எடத்துல ரொம்ப டைம் செலவாகுதுன்னு கவனிங்க... வேணும்னா நீங்க எங்கிட்ட எப்ப வேணும்னா வந்து டிஸ்கஸ் பண்ணலாம்.. நான் என்னோட யோசனைகளை உங்களுக்கு சொல்லுறேன்..

டோன் தின்க் தட் ஐ அம் கம்பாரிங்.. பட் உங்க கூட வொர்க் பண்ற கலீக்ஸ் என்ன செய்யிறாங்கன்னு நீங்க கவனிக்காட்டி, ராங்கிங்ல நீங்க கீழ போய்டுவீங்க.. கவனமா இருங்க.. உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்...

தான்க்யு.. ஐ வில் டேக் கேர்..

சமீப காலமா உங்க வளர்ச்சி நல்லா இருக்கு.. இந்த சின்ன விஷயம் உங்க பெர்பார்மான்ஸ் குறைஞ்சிடக் கூடாது.. டூ யு அண்டர்ஸ்டான்ட் மை பாயிண்ட்...?
ரொம்ப வொர்க் பண்ண வேண்டாம்.. ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க.. குட்லக்.. ஹாப்பி வீக் என்ட்...

-------------------------------------------------------------------------

என்னடா ரேங்க் வாங்கியிருக்க எரும மாடு...

அது இல்ல டாடி.. இந்த ஹால்ப் இயர்லி சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..

தண்டச் சோறு.. படிக்கிரதத் தவிர உனக்கு என்னடா வேல...?நீ கெட்ட எல்லா இழவையும் உனக்கு வாங்கிக் குடுத்துருக்கிறேன் இல்ல...? சாயங்காலம் வந்தா நல்லா திங்க வேண்டியது தூங்க வேண்டியது.. சோம்பேறி....

பக்கத்து வீட்டு சுரேஷ பாருடா.. அவனும் உன்ன மாறி தானே.. எப்படிப் படிக்கிறான்..? அவனப் பாத்தும் உனக்கு ஏண்டா புத்தி வரல...?

சாரி டாட்..

என்னடா சாரி... செய்யரதையும் செஞ்சுட்டு.. நானும் கொஞ்ச காலமா உன்ன வாட்ச் பண்ணீட்டு தாண்டா இருக்கேன்.. உனக்கெல்லாம், சொல்ற மாறி சொன்னாத்தாண்டா புத்தி வரும்..


-------------------------------------------------------------------------

சாரியில யு லுக் சோ பியூட்டிபுல்..

தான்க்யு.. நீங்க இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்புறீங்க..?

5 மணிக்கு.. ஏன் கேக்குறீங்க..?

உங்களுக்கு சிரமம் இல்லைன்னா.. எனக்காக ஒரு ஒருமணிநேரம் வெயிட் பண்ண முடியுமா..? நான் இன்னைக்கு வண்டி கொண்டு வரல.. என்ன எங்க அப்பார்ட்மென்ட்ல டிராப் பண்ண முடியுமா...?

நோ ப்ராப்ளம்.. இதுக்கு ஏன் சுத்தி வளைக்கிறீங்க..? ஐ அம் அட் யுவர் சர்வீஸ்...

இந்த பைல்ஸ் எல்லாம் பாத்து முடிச்ச உடனே கிளம்பிடலாம்...

ரொம்ப இருக்கா..? நான் வேணா உதவி செய்யட்டுமா...? என் வேல எல்லாம் முடிஞ்சிடிச்சு..

சோ நைஸ் ஆப் யு... இத மட்டும் கொஞ்சம் பார்த்துக் குடுங்க..

கண்டிப்பா...

--------------------------------------------------------------------------

ஏண்டி அங்க என்ன பேஷன் ஷோ'வா நடக்குது, எப்ப பாரு சாரிய கட்டிக்கிட்டு, ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு சிங்காரிச்சிக்கிட்டு.... வேலைக்குத் தானே போற...?

சரிங்க.. சாயங்காலம் ஒரு ஒருமணிநேரம் முன்னாடி வாங்களேன்.. துணிக் கடைக்குப் போகலாம்.. நல்ல சாரி எடுத்து ரொம்ப நாள் ஆச்சு..

ஏன்... பீரோ புல்லா உன் துணி தான் கெடக்குது.. அதை எல்லாம் எடுத்துப் போட வேண்டியது தானே...?எப்பவும் புதுசு புதுசாவே எடுத்துக்கிட்டு இருந்தா, பழச எல்லாம் யாரு போடறதாம்..? ஆபீஸ்ல நான் என்ன வேல இல்லாம இருக்கேன்'ன்னு நினைச்சியா..?மனுஷன் அங்க தல போற டென்சன்ல ஓடிக்கிட்டு இருக்கான், இவ என்னடான்னா... இன்னைக்கேல்லாம் வர முடியாது இன்னொரு நாள் பாக்கலாம்..

ஏங்க இந்த துணியையாவது டைலர் கடையில குடுத்துட்டு போங்களேன்..

வந்தேன்னா பாரு...

------------------------------------------------------------------
மேற்கண்ட உரையாடல்கள் நடக்கும் களம் எங்கே என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விஷயம், வெவ்வேறு களங்கள். உள்ளூரப் பாசம் அனைவரிடமும் இருக்கிறது.. ஆனால் அது சில சமயம் வெளிப் படாமலேயே போய் விடுகிறது.. அந்த உறவில் ஒரு இழப்பு ஏற்படும்போது பின்னர் அது ஆறாத் தழும்பாகிக் கொல்லும்.
உள்ளூர இருக்கும் பாசத்தை வெளிக்காட்டப் பழக்கி அதையே ஒரு வழக்கமாக்கிக் கொள்ள முடியாதா என்ன..? வாழ்க்கையின் சாராம்சமே அன்பும் பாசமும் தான். பணம்,பொருள், ஆடம்பரம், வேலை எல்லாமே இந்த அன்பும் பாசமும் நீடித்திருக்க நமக்குத் தேவையான உபகரணங்கள். அவ்வளவே. ஆனால், இந்த உபகரணங்களே நம் வாழ்க்கையின் அடி நாதத்தை அழிக்க நாம் விடக் கூடாது..

தினமும் சில கனிவான வார்த்தைகள், நலம் விசாரித்தல், அக்கறை காட்டுதல், நேரம் செலவிடுதல் போன்றவை கட்டாயம் தேவை.அலுவலகத்தில் சாத்தியம் எனும்போது வீட்டில் சாத்தியம் இல்லையா என்ன..?

அலுவலகத்தில் நாவில் தேனூர பேசுபவர்கள் பலரின் முகங்கள் வீட்டில் இப்படித்தான்..

அலுவலகத்தில் நாம் கற்கும் ஸ்ட்ரெஸ் மெனஜ்மென்ட், இன்ப்லுயன்சிங் ஸ்கில்ஸ்,மற்றும் பலவிதமான பயிற்சிகள் அலுவலகத்திற்கு மட்டும்தானா..? குடும்பத்திற்குள் அவை உபயோகப் படாதா..?

நானும் பலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது...

முகத்திற்குப் போடலாம் முகமூடி.. மனத்திற்கு எதற்கு.....?

மேற்கண்ட விஷயத்தை ஆமோதித்தால் உங்கள் ஆதரவை பின்னூட்டங்கள் மூலமும் உங்கள் அன்பை ஓட்டுகளின் மூலமும் காட்டுங்கள்.

நன்றி..

55 பின்னூட்டம்:

Paleo God said...

சரிதான்..:)

சைவகொத்துப்பரோட்டா said...

இயல்பான நடையில் பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள், சரிதான்.

Anonymous said...

அருமையான கருத்து ,யோசிக்க வேண்டிய விசயம் ..ஓட்டு போட்டாச்சுங்கண்ணா

ப.கந்தசாமி said...
This comment has been removed by the author.
ப.கந்தசாமி said...

எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி இருக்க முடியாதுங்க.

Chitra said...

வாழ்க்கையின் சாராம்சமே அன்பும் பாசமும் தான். பணம்,பொருள், ஆடம்பரம், வேலை எல்லாமே இந்த அன்பும் பாசமும் நீடித்திருக்க நமக்குத் தேவையான உபகரணங்கள். அவ்வளவே. ஆனால், இந்த உபகரணங்களே நம் வாழ்க்கையின் அடி நாதத்தை அழிக்க நாம் விடக் கூடாது..

........... தெளிவாக வாழ்க்கை தத்துவத்தை சொல்லியதற்கே உங்களுக்கு ஒரு ஓ போடலாம். நல்ல பதிவு.

தமிழ் உதயம் said...

ஒரு மனிதன் தான், எத்தனை முகமூடி போட வேண்டியுள்ளது. தெரிகிறது... நாம் மாறியே ஆக வேண்டும் என்று. ஆனால் மாறாமல் இருக்கிறோம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறோம்

வினோத் கெளதம் said...

ரொம்ப சுவாரஸ்யமா..அழகா எழுதியிருக்கிங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் சப்ஜெட் பிரகாசு..
இன்னும் எழுதியிருக்கலாம்..

எழுதியிருக்கலாம்..இல்லை.. எழுத வேண்டும்..பாகம் 2-யை தொடருங்கள்...
.
.
ஆமாம்.. மேட்டுப்பாளையம் ரோடு பணிகள் ஏதாவது தொடங்கப்பட்டுள்ளதா?

நாடோடி said...

ப‌திவு நல்லா இருக்கு... ஆனால் எல்லா இட‌ங்க‌ளிலும் ஒரே மாதிரியாக‌ இருக்க‌ முடியுமா? என்ப‌து சிறிது யோசிக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ம்..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

தம்பி உங்க வீட்டம்மா குடுத்து வச்சவுங்க.வாழ்க! வளர்க!

ஜெய்லானி said...

ரொம்பவும் இயல்பா எழுதி இருக்கீங்க .பாகம் 2 , 3 போடுங்க

சாமக்கோடங்கி said...

நன்றி ஷங்கர் உங்கள் கருத்துக்கு..

சாமக்கோடங்கி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

இயல்பான நடையில் பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள், சரிதான்.
//

விஷயம் பெருசா இருக்கலாம்.. ஆனால் சொன்னவன் சிறியவன்.. அடியேன் தான்...

ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

சாமக்கோடங்கி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான கருத்து ,யோசிக்க வேண்டிய விசயம் ..ஓட்டு போட்டாச்சுங்கண்ணா//

தேங்க்சுங்கண்ணா...

யோசியுங்க.. நல்லா. உங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்க்கும் சொல்லுங்க..

நன்றி..

சாமக்கோடங்கி said...

///Dr.P.Kandaswamy said...

எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி இருக்க முடியாதுங்க.
//

அது சரிதான்.. ஒரு இடத்தில் ஸ்ட்ரெஸ்ஸ மேனேஜ் செய்தால் நியூட்டனின் விதிப்படி அது இன்னொரு இடத்தில் வெளிவந்தே தீரும்.. ஆனால் எல்லா இடத்திலும் இருக்க வேண்டாம்.. கொஞ்ச இடங்களிலாவது (தப்பென்று பட்டால்) மாற்றிக் கொள்ளலாம்.

என்ன சொல்கிறீர்..?

சாமக்கோடங்கி said...

........... தெளிவாக வாழ்க்கை தத்துவத்தை சொல்லியதற்கே உங்களுக்கு ஒரு ஓ போடலாம். நல்ல பதிவு.//

வாங்க சித்ரா...

தோன்றியதைச் சொன்னேன்.. ஓ போட்டதற்கு நன்றி..

அப்புறம் Dr.P.Kandaswamy அவர்களுக்கும் நன்றி..(போன பின்னூட்டத்தில் நன்றி சொல்ல மறந்து விட்டேன்..)

சாமக்கோடங்கி said...

//தமிழ் உதயம் said...

ஒரு மனிதன் தான், எத்தனை முகமூடி போட வேண்டியுள்ளது. தெரிகிறது... நாம் மாறியே ஆக வேண்டும் என்று. ஆனால் மாறாமல் இருக்கிறோம் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறோம்
//

முகமூடி தவறில்லை. மனமூடி தான் தவறு.. அது நமக்கு நாமே செய்யும் துரோகம்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

சூப்பர் சப்ஜெட் பிரகாசு..
இன்னும் எழுதியிருக்கலாம்..

எழுதியிருக்கலாம்..இல்லை.. எழுத வேண்டும்..பாகம் 2-யை தொடருங்கள்...
.
.
ஆமாம்.. மேட்டுப்பாளையம் ரோடு பணிகள் ஏதாவது தொடங்கப்பட்டுள்ளதா?
//

இல்ல பட்டா பட்டி.. அன்னைக்கு வந்து சாலை ஓரக் கடைகளை எல்லாம் நெரவீட்டு போனானுங்க.. அதுக்கப்புறம் ஆளுகளையே காணோம்.. ஒண்ணுமே புரியல.. இந்த ரோட்டுல ஒட்டுனா கூடிய சீக்கிரம் முதுகு வலி வந்துடும்போல..

பகுதி 2 தொடர முயற்ச்சிக்கிறேன்..

சாமக்கோடங்கி said...

//நாடோடி said...

ப‌திவு நல்லா இருக்கு... ஆனால் எல்லா இட‌ங்க‌ளிலும் ஒரே மாதிரியாக‌ இருக்க‌ முடியுமா? என்ப‌து சிறிது யோசிக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ம்..
//

யோசியுங்கள்.. ஆனால் தீர்ப்பு நம் நல வாழ்விற்கு சாதகமாக இருக்க வேண்டும்...

உங்கள் வருகைக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...

தம்பி உங்க வீட்டம்மா குடுத்து வச்சவுங்க.வாழ்க! வளர்க!
//

உங்க வருகைக்கு ரொம்ப நன்றி அண்ணா..

அப்புறம் எனக்கு இன்னும் கல்யாண வயசாகவில்லை.

ஆனாலும் உங்கள் வார்த்தை எனக்கு நல் ஆசி வழகியதைப் போல உள்ளது..

நன்றி.

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

ரொம்பவும் இயல்பா எழுதி இருக்கீங்க .பாகம் 2 , 3 போடுங்க
//

வாங்க ஜெய்லானி.. ரொம்ப நன்றி..
நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன்.நான் என்னுடைய ஓய்வு நேரங்களில் மட்டுமே பதிவும் பின்னூட்டமும் இடுகிறேன்.. இடுகை போட வேண்டி எந்த தலைப்பையும் யோசிப்பதில்லை.. அதுவாக வரும்போது பிடித்துப் போட்டு விடுவேன்.(என்னுடைய பதிவுகளின் கால இடைவேளைக்கு இதுவே காரணம்)
என் தங்கையிடம் ஒரு சிறு விஷயத்திற்காக கோபித்துக் கொண்ட போதுதான் இந்த மனமூடியை என்னால் உணர முடிந்தது. அலுவலகத்தில் இதுபோல நான் நடந்துகொள்வதில்லை..

ஆனாலும் சொல்ல இன்னும் நிறைய இருந்தது என்பது உண்மைதான்.. நீளம் கருதி குறைத்து விட்டேன்.. ஆனால் நீங்களும் பட்டாபட்டியாரும் சொன்னதைப் போல ரெண்டாம் பாகம் மூன்றாம் பாகம் கண்டிப்பாக எழுதுகிறேன்..

சாமக்கோடங்கி said...

அதுபோலவே செய்ய முடியாத எட்டாத விஷயங்களை நான் சொல்வதே இல்லை.. நம்மால் முடிகின்ற மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய,ப்ராக்டிகலான சிறு சிறு விஷயங்களை மட்டுமே நான் சொல்கிறேன்..
நம் வாழ்க்கைக்கு உதவும் பட்சத்தில் பாகம் 2 கட்டாயம் வரும்..
அதே போல உங்கள் அனுபவங்களையும் நீங்கள் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. அது இந்த களத்திற்கு மேலும் மெருகு சேர்க்கும்..

பத்மநாபன் said...

மன மூடி என்று பொருத்தமான தலைப்பிட்டு அருமையாக ஒப்பிட்டுள்ளீர்கள் பிரகாஷ் . நம்மை எப்பவும் முதல் நிலையில் வைத்திருக்கும்
வீட்டை நாம் இரண்டாம் பட்சமாகத்தான் பார்த்து வருகிறோம் .. இதை படித்தால் மன மூடி கொஞ்சமாவது திறக்கும்.

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னீங்க பாஸ்.

எல்லோருக்கும் சில நேரம் கோபம் வரத்தான் செய்யும் ஆனால் அதை நம் கட்டுக்குள் வைக்க தெரிந்திருக்கவேண்டும்.

வாழ்க்கையில் சில நிர்பந்தங்களால்/ காரியம் சாதிக்க‌ மற்றவர் முன் கோபப்படமால் இருக்கும் நாம் நம் குடும்பத்துடன் அவ்வாறு இல்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

அப்புறம் க.நா.சாந்தி லெட்சுமணன். மேடம்.

Anonymous said...

அருமையா வந்திருக்குங்க இந்தப்பதிவு

ILLUMINATI said...

பாஸ்,வாழ்கை எப்பயுமே சிம்பிள்.
Love and be loved......
அவ்வளவுதான்.நாம தான் அதுல ஈகோ,கோபம்னு அத அலங்கோலப்படுதிட்றோம்.என்ன கோபம்னாலும்,என்ன சண்டைன்னாலும்,என்ன பிரச்சனைனாலும்,ஒரு நிமிஷம் யோசிங்க.சுற்றி இருக்குறவங்க கிட்ட அன்பு காட்டுங்க.வாழ்கை அழகாவே இருக்கும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

தம்பி ராசா! நா அக்காப்பா! அப்புறம் கல்யாண வயசு ஆகாட்டிப் பரவாயில்ல.கல்யாண வயசு வந்ததும் சிந்தனை மாறாது பாத்துக்கங்க அப்பு!

ஹுஸைனம்மா said...

நகைச்சுவைப் பதிவோ என்று நினைத்தேன்; அருமையாய் அறிவூட்டும் பதிவு!! குற்ற உணர்வு வருகிறது, இருந்தாலும்...

ஸ்ரீராம். said...

அன்பை காட்டி விட்டேன்..ஆதரவும் தந்து விட்டேன்...

இளங்கோ said...

அன்புள்ள பிரகாஷ்,
முக மூடிகளை கழட்டினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பழக்கம் விடாது.
தான்தான் பெரியவன் என்ற அகங்காரத்தை கழட்டி விட்டாலே பாதி பிரச்சனைகள் மறைந்து விடும்.
இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com/

சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said...

மன மூடி என்று பொருத்தமான தலைப்பிட்டு அருமையாக ஒப்பிட்டுள்ளீர்கள் பிரகாஷ் . நம்மை எப்பவும் முதல் நிலையில் வைத்திருக்கும்
வீட்டை நாம் இரண்டாம் பட்சமாகத்தான் பார்த்து வருகிறோம் .. இதை படித்தால் மன மூடி கொஞ்சமாவது திறக்கும்.
//

நன்றாகச் சொன்னீர்கள்.... ஒருவேலை சிடு சிடுவேன இருப்பதே நம் இயல்பாக இருந்து, அலுவலகத்தில் நடிக்கிறோம் என்றால், மன மூடியை மாட்டியே இருக்க வேண்டிய நிலை ஒரு நாள் வரும்.. பகுதி 2 ல் இன்னும் அலசலாம்..

தங்கள் வருகைக்கு நன்றி...

சாமக்கோடங்கி said...

/அக்பர் said...

சரியா சொன்னீங்க பாஸ்.

எல்லோருக்கும் சில நேரம் கோபம் வரத்தான் செய்யும் ஆனால் அதை நம் கட்டுக்குள் வைக்க தெரிந்திருக்கவேண்டும்.

வாழ்க்கையில் சில நிர்பந்தங்களால்/ காரியம் சாதிக்க‌ மற்றவர் முன் கோபப்படமால் இருக்கும் நாம் நம் குடும்பத்துடன் அவ்வாறு இல்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

//

நன்றி அக்பர் அவர்களே.. இந்த பதிவில் நிஜமாகவே கொஞ்சம் பேரை சிந்திக்க வைத்து விட்டோம்(என்னையும் சேர்த்து)என்று நினைக்கிறேன்.

மாற்றங்கள் சாத்தியப்படும் என நினைப்பவற்றை மட்டுமே எழுத முயல்கிறேன். நன்றி..

சாமக்கோடங்கி said...

//சின்ன அம்மிணி said...

அருமையா வந்திருக்குங்க இந்தப்பதிவு
//

வருகைக்கு நன்றி... பகுதி 2 க்கு மறக்காம வந்துருங்க..

சாமக்கோடங்கி said...

//ILLUMINATI said...

பாஸ்,வாழ்கை எப்பயுமே சிம்பிள்.
Love and be loved......
அவ்வளவுதான்.நாம தான் அதுல ஈகோ,கோபம்னு அத அலங்கோலப்படுதிட்றோம்.என்ன கோபம்னாலும்,என்ன சண்டைன்னாலும்,என்ன பிரச்சனைனாலும்,ஒரு நிமிஷம் யோசிங்க.சுற்றி இருக்குறவங்க கிட்ட அன்பு காட்டுங்க.வாழ்கை அழகாவே இருக்கும்.//

ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்து வாழ்பவர்களுக்கு இந்த பதிவு பொருந்தாது.. ஆனால் நிஜ வாழ்க்கை எல்லாருக்கும் அப்படி இருப்பதில்லை..நமக்குள் மாற்றிக் கொள்ளக் கூடியவை நிறைய இருக்கும்.. யோசித்தால் புலப்படும்..

அப்புறம் இல்லுமி... இந்த கிளாசிக் படம் டோர்ரன்ட் எங்க தேடியும் கெடைக்கல.. கெடைச்சா கொஞ்சம் லிங்க் குடுக்கப் படாதா...?

Thenammai Lakshmanan said...

உண்மை பிரகாஷ் முகத்திற்கும் வேண்டாம் மனத்திற்கும் வேண்டாம் முகமூடி

சாமக்கோடங்கி said...

//க.நா.சாந்தி லெட்சுமணன். said...

தம்பி ராசா! நா அக்காப்பா! அப்புறம் கல்யாண வயசு ஆகாட்டிப் பரவாயில்ல.கல்யாண வயசு வந்ததும் சிந்தனை மாறாது பாத்துக்கங்க அப்பு!
//
அக்கா,.. சாரி.. நான் இந்திரா சௌந்தரராஜன் மாறி நினைச்சிட்டேன்.. எப்படியோ எனக்கு ஒரு அக்கா கெடைச்சாச்சு... கண்டிப்பா என் அக்காவின் கட்டளைக்கு இணங்க என்னோட சிந்தனைகள் மாறாது பாத்துக்கறேன்.. (ஆமா இந்திரா சௌந்தரராஜன் ஆண் தானே..?)

சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

நகைச்சுவைப் பதிவோ என்று நினைத்தேன்; அருமையாய் அறிவூட்டும் பதிவு!! குற்ற உணர்வு வருகிறது, இருந்தாலும்...
//
என் அண்ணன் கூட திட்டுகிறார்.. தொடர்ந்து கருத்து சொல்ற மாதிரியான பதிவே போடறேன்'னு. ஆனாலும் எனக்கு இதில் தான் திருப்தி,ஆனாலும் கொஞ்சம் நகைச்சுவை கொண்ட பதிவுகளையும் எழுத முயற்ச்சிக்கிறேன்.. ஒரு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால் தான் ஒரு நல்ல சிந்தனை வாதியாக இருக்க முடியும்..

அப்புறம் மனசாட்சி உள்ள எல்லோருக்கும் குற்ற உணர்ச்சி வரும்.. அதற்காக வருந்தாமல், அதிலிருந்து வெளிவரும் செயல்களில் இறங்க வேண்டும்..

ரொம்ப நன்றி..

சாமக்கோடங்கி said...

//ஸ்ரீராம். said...

அன்பை காட்டி விட்டேன்..ஆதரவும் தந்து விட்டேன்...
//
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.. பகுதி 2 ல் இன்னும் ஆழமாக அலச இருக்கிறோம், தவறாமல் வந்து விடுங்கள்.. நன்றி..

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

அன்புள்ள பிரகாஷ்,
முக மூடிகளை கழட்டினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பழக்கம் விடாது.
தான்தான் பெரியவன் என்ற அகங்காரத்தை கழட்டி விட்டாலே பாதி பிரச்சனைகள் மறைந்து விடும்.//

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.. அகங்காரம் என்பது உடனே வந்துவிடும் ஒன்று இல்லை, அது கொஞ்சம் கொஞ்சமாக வளருகிறது, சுற்றி இருப்பவர்களும் அதற்க்கு காரணமாக அமைகிறார்கள், தெளிவாக அலசலாம் அடுத்த பதிவில்..

வருகைக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

//thenammailakshmanan said...

உண்மை பிரகாஷ் முகத்திற்கும் வேண்டாம் மனத்திற்கும் வேண்டாம் முகமூடி
//

மூடிகள் இல்லாமல் வாழ்வது கடினம் தான்... இதையும் அலசலாம் அடுத்த பகுதியில்..

உங்கள் வருகைக்கு நன்றி அக்கா(ஐ எனக்கு அக்கா'க்கள் கிடைத்து விட்டார்கள்..)உங்களை மாறி சாந்தி அக்கா போடோ போட்டிருந்தால்,அவர்களை அண்ணா'ன்னு சொல்லி இருக்க மாட்டேன்.. ஹி. ஹி..

சாமக்கோடங்கி said...

@இளங்கோ..

உங்கள் பகுதியில் பின்னூட்டம் இட முடியவில்லையே..? பின்னூட்டங்களை நீங்கள் விரும்புவதில்லையோ...?

அப்புறம் இங்கே வந்திருக்கும் நண்பர்களே, விழுதுகள் என்ற அமைப்பின் மூலம் இளங்கோ மற்றும் அவரது நண்பர்கள் கமலக்கண்ணன் மற்றும் பார்த்தசாரதி செய்து வரும் சேவை அளப்பரியவை. பிற்படுத்தப் பட்ட, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தங்களின் விலை மதிப்பற்ற விடுமுறைகளையும், மாலை நேரங்களையும் செலவிடும் இந்த இளைஞர் பட்டாளத்தைப் பாராட்டுவது மட்டுமல்லாமல் அவர்களைப் பின்பற்றவும் செய்ய வேண்டுகிறேன்..

நான் இதுவரை மூன்று முறை விழுதுகளை நேரில் சென்று பார்த்து விட்டேன்..இந்த வருடம் ஆயிரம் மரக்கன்றுகளை குழந்தைகள் துணையுடன் நட திட்டமிட்டுள்ளனர்..நானும் பங்கேற்க உள்ளேன்..

ILLUMINATI said...

உண்மை தான் நண்பா.யாருக்குமே ஏதாவது ஒரு சின்ன குறையாவது இருக்கும்.ஆனா,பலருக்கும் அது கோபமா தான் இருக்கும்.அத குறைச்சு,அன்பு காட்ட ஆரம்பிசாலே வாழ்கை சொர்க்கம்.வாழ்கை ஓட்றதுக்கோ,கோபப்பட்றதுக்கோ இல்ல.வாழ்க்கை ரசிச்சு வாழ்வதற்கு.அத மறக்காதிங்க.

By the by,தல,உங்க மெயில் ஐ டி அனுப்புங்க.டோரண்ட அனுப்பி வச்சுடறேன்.மிஸ் பண்ணக் கூடாத படம்.

இளங்கோ said...

//
உங்கள் பகுதியில் பின்னூட்டம் இட முடியவில்லையே..? பின்னூட்டங்களை நீங்கள் விரும்புவதில்லையோ...?
//

பிரகாஷ், நான் ஒரு மாதிரி பின்னூட்டம் இட்டு பார்த்தேன். அதை வாங்கி வைத்து கொண்டது கூகிள். உங்களுடைய பின்னூட்டத்தை ஏன் மறுக்கிறது என்று தெரியவில்லை... தெரிந்தவர் சொல்லுங்களேன்...

மெல்லினமே மெல்லினமே said...

Nalla irukkunga.

Unknown said...

மனதிற்கு எதற்கு முகமுடி??
நச் வரிகள்.

சாமக்கோடங்கி said...

வாங்க மெல்லினமே...

உங்கள் கருத்துக்கு நன்றி..

சாமக்கோடங்கி said...

வாங்க மின்னல்...

இந்த வரிகளை ரசித்தமைக்கு நன்றிகள்...

தொடர்ந்து வாருங்கள்..

மரா said...

அரமாலுமே சூப்பரா இருக்கு...பர்ஸ்ட் பாரா படிச்சிட்டு எங்கடா எங்க ப்ராஜக்ட் மேனேஜர் ப்ளாக் எழுவுறாரோன்னு பயந்துட்டேன்.....வாழ்த்துக்கள் பாஸ்.

பித்தனின் வாக்கு said...

நல்ல விஷயங்கள், பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.

சாமக்கோடங்கி said...

வாங்க மயில்ராவணன்...

நான் இன்னும் கடை நிலை ஊழியன் தான்..

ஆமாம்.. உங்கள் பெயரின் அர்த்தம் என்ன..?

சாமக்கோடங்கி said...

வாங்க பித்தன் ஐயா..

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..

கவிதன் said...

ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பிரகாஷ்..... ! வாழ்த்துக்கள் நண்பரே!

சாமக்கோடங்கி said...

நன்றி கவிதன்...

இது உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்... கருத்துகளை பகிருங்கள்.. நன்றி..

Post a Comment