Saturday, April 17, 2010

350 ன்னா என்னண்ணே...

அண்ணே.. அண்ணே... எனக்கொரு சந்தேகண்ணே

டே பனங்கொட்ட தலையா.. நேத்து நைட்டு வந்து குடுகுடுப்பை அடிச்சிட்டுப் போனானே சாமுப் பய அவனயே நான் எப்டி அடிக்கறதுன்னு தெரியாம யோசிச்சிகிட்டு இருக்கேன்.. படுவா குருக்க வந்த குறுக்கால வெட்டிப் புடுவேன்..

அதாண்ணே எனக்கும் சந்தேகம்... அவன் அப்படி என்னண்ணே சொல்றான்.... எனக்கு ஒண்ணுமே புரியலையே.. வெளக்கமா சொல்லுங்கண்ணே..

ஆக்ங்... வெளக்கமா சொன்னா மட்டும் வெளங்கிடும்.. ஏண்டா மண்டைய இப்படி கடிச்சுக் கொதறி வெச்சுருக்கியே, அதுல இங்கியாவது, இங்கியாவது, இங்கியாவது மூளைன்னு ஒண்ணு வெச்சுருக்கியா...? சேரி.. உனக்கு எது வெளங்கள...? இந்த சாமுப் பய பதிவு எழுதுனாலும் சரி, பின்னூட்டம் போட்டாலும் சரி... அவனவனுக்கு கண்ணக் கட்டும்.. ஒனக்கு புரியற மாறி பூசியும் பூசாமலும், டிங்கரிங் பண்ணியும் பண்ணாமலும் சொல்லறேன்..

இந்த 350,.. 350ன்னு ஏதோ சொல்லீட்டு திரியுரானே அப்டீன்னா என்னன்னே....?

ஐயோ....இந்த வெளங்காத சாமுப்பய... நடு ராத்திரி, நாய் நரியை எல்லாம் எழுப்பி விட்டு, குடுகுடுப்பய அடிச்சிட்டு என்னத்தையோ ஒளரீட்டு ஒடீரறான்.. இங்க ஒண்ணு பகல் நேரத்துல ஏன் வாயக் கிண்டீட்டு இருக்குது..டேய் சாமு... பகல்ல ஒரு நாள் எங்கிட்ட சிக்காமலா போய்டுவ..

சொல்லுங்கண்ணே..

டேய்.. டெய்லி காலைல அண்ணி கையால ஓசி டீ வாங்கி குடிக்கிறியே.... எப்புடி இருக்கு...?

இப்பெல்லாம் அண்ணி முன்ன மாறி இல்லண்ணே.. டீ சரியில்லண்ணே.. வாயிலியே வெக்க முடியலைன்னே.. டீத்துளு ரொம்ப போடராங்கண்ணே..

அடே கொஞ்சம் டீத்துளு அதிகமா போட்டாலே உன் வாய்க்கே அது புடிக்க மாட்டேங்குது.. நாம டெய்லி சுவாசிக்கிறோமே காத்து, அதுல டீத்துளு மாறி ஒரு பொருளு அதிகமாகீட்டே வருதாமா... கூடிய சீக்கிரம் மூக்குல ஆக்சிஜன் சிலிண்டர் வெச்சுட்டு திரிய வேண்டியது தான்.. இப்பவே நீ கடல் பண்ணி மாறி இருக்க... அதையும் மாட்டீட்டியின்னா தும்பிக்க வெச்ச யான மாறி ஆயிடுவ..

வெளையாடாதீங்கண்ணே... அதென்னண்ணே டீத்துளு மாறியே ஒரு பொருளு...?

அதுக்குப் பேருதாண்டா கார்பன் டை ஆக்சைடு.. அதாவது கரியமிலவாயு... ஐயோ... இவனுக்கு எப்பிடி நான் முழுசையும் சொல்லிப் புரிய வெக்கப் போறேன்.. எங்கடா போய்த் தொலஞ்சான் இந்த சாமு..

அண்ணே.. கரியமிலவாயு.. ஐ.. நான் ஏழாம் வகுப்பு பாசாகும்போது படிச்சது...

டேய்.. மகனே வேண்டாம்.. மீண்டும் மீண்டும் சொல்றேன்.. நான் SSLC பெயில் ஆனத குத்திக் காட்டுறியா படுவா....

மேல சொல்லுங்கண்ணே..

டீத்துள அளந்து போட ஸ்பூனு யூஸ் பன்றோமே அது மாறி காத்துல இருக்குற இந்த கரியமில வாயுவையும் அளக்கராங்கப்பா... அதுக்குப் பேரு ppm.. அதாவது parts per million. ஏதாவது புரியுதா..? நீ எச்சுகேடேட் பாமிலி தானே..?

ஆமா.. நா ஒரு பேமானி தான்..

அது தான் தெரியுமே.. இந்த டப்பாத் தலையன் தொல்ல தாங்க முடியல.. என்ன டென்சன் பண்றான்... டென்சன். டென்சன். டென்சன்...

லெஸ் டென்சன் மோர் வொர்க்.. மோர் வொர்க்.. லெஸ் டென்சன்.. மேல சொல்லுங்க பாஸ்...

டேய்.... வடக்குப் பட்டி ராமசாமி செத்தப்பக் கூட நான் இவ்வளவு கவலைப் படலடா.. ஆனா நீ இந்த மாறி கேள்வி மேல கேள்வி கேட்டுக் கொடயர பாரு.. சரி கேட்டுக்க நாயே..
இந்த கார்பன்டைஆக்சைடு காத்துல இப்ப கிட்டத்தட்ட 390 ppm இருக்கு... அதாவது... உங்கண்ணி இப்ப குடுக்குற காப்பி மாறி...டெய்லி இதோட அளவு கூடீட்டே போகுதுடா..

இப்படியே போச்சுன்னா என்னண்ணே ஆகும்...?

சங்க ஊதக் கூட ஆளு இருக்கதுடீ அடியே.. மொத்தமா சாகப் போறோம்... செத்தா நீயே போய் குழிக்குள்ள படுத்துக்க வேண்டியதுதான்... இன்னும் கொஞ்ச தூரம் தான்..430.. 440... 450.. சங்கு.. ஊ ....ஊ....

ஏண்ணே.. கையக் கொஞ்சம் நீட்டுங்க.. இந்தாங்க.. இந்த ஓட்ட காலணாவ வெச்சு ஒண்ணும் பண்ண முடியாதா...?

பாருங்க மகாஜனங்களே.. இந்த ஒன்றரையணா ஓட்டக் காலணாவ வெச்சுட்டு ஓசோன் ஓட்டையவே ஒட்ட வெக்கப் பாக்குறான்.... ஆனா நீ பரவால்லடா.. ஏதாவது செய்யணும்னு தோணுதே.... நாட்டுல பல பேரு இதக் கண்டும் காணாம இருக்கானுகப்பா..

அப்ப எவ்வளவுதாண்ணே கார்பன்டைஆக்சைடு இருக்கணும்...?

350 ppm... உனக்குப் புரியற மாறி சொல்லனும்னா..கிட்ட வா.. காதைக் காட்டு... போன வாரம் ட்ரான்ஸ்பார் வாங்கீட்டுப் போனாங்களே டீச்சரம்மா.. அவங்க போடற காப்பி மாதிரி.. அளவான டீத்துளு... டேய்.. நீ இளிக்கும்போதே தெரியுது.. எல்லா எடத்துலயும் ஓசி டீ வாங்கி இந்த பான வயித்துக்குள்ள ஊத்தியிருக்க...

அப்ப நாம அதைத் தாண்டீட்டோமா அண்ணே...?அப்டீன்னா இந்த உலகத்தைக் காப்பாத்த யாருமே இல்லையா...?

இதுக்குதாண்டா ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேனுங்கறது..ஊருக்குள்ள நெறைய பேரு இதப் பத்தி சொல்லீட்டு தான் இருக்கானுங்க.. செஞ்சிக்கிட்டும் இருக்கானுங்க.. ஆனா ஒருத்தன் இங்க கஷ்டப்பட்டு ஒரு மரம் நட்டு வெச்சா..இன்னொருத்தன் இன்னொரு பக்கத்துல பொகைய உட்டுக்கிட்டே வண்டிய ஓட்ரான்....ஒருத்தன் இங்க தண்ணிய ஊத்துனா.. அங்க ரொம்பபேரு காட்டையே அழிச்சிகிட்டு இருக்கானுங்க... எல்லாரும் சேந்து திருந்துனா தான் வேலை ஆகும்... ஆனா இவனுகள திருத்துறது ஏன் வேலை இல்ல.. மொதல்ல என்ன நான் திருத்திக்கறேன்...

இப்ப நான் என்னண்ணே பண்றது...

ஆங்.. நான் சொன்ன இதே விஷயத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சு.. கூடயே நீயும் ஒக்காந்துக்க... அடப்போடா.. நாட்டுல ரொம்பப் பேருக்கு இது தெரியும்.. அத மத்தவங்க கிட்ட சொன்னாலே போதும்.. இந்த குடுகுடுப்பக்காரன் ஏதோ லிங்க் கொடுத்தானே... ஆங்...

http://www.350.org/about/science

இதப் போய்ப் பாரு.. உன் மண்டைக்கு ஏதாவது ஏறுதான்னு...

லிங்க் குடுத்துடீங்கண்ணே... அப்படியே இன்னொன்னும் குடுத்தீங்கன்னா....

என்னடா வண்டுருட்டாந்தலையா...?

அதுதாண்ணே.. அந்த டீச்ச்சரம்மாவோட அட்ரசு... வ்லாசம் வ்லாசம்...

அடேய்.. என்ன என்னடா நெனச்சே... இர்ரா மகனே இன்னிக்கு உன்ன எங்கோ ஓடனாலும் வெட்டாம உடமாட்டேன்..இர்ரா டேய்....

38 பின்னூட்டம்:

ஜெய்லானி said...

தலைய இப்பவே சுத்துதே தலைவா!!!

Chitra said...

சங்க ஊதக் கூட ஆளு இருக்கதுடீ அடியே.. மொத்தமா சாகப் போறோம்... செத்தா நீயே போய் குழிக்குள்ள படுத்துக்க வேண்டியதுதான்... இன்னும் கொஞ்ச தூரம் தான்..430.. 440... 450.. சங்கு.. ஊ ....ஊ....


....... ha,ha,ha,....... சீரியஸ் விஷயத்தை இவ்வளவு காமெடி ஆக சொல்லி அசத்திட்டீங்க.....

சிநேகிதன் அக்பர் said...

அண்ணே அப்போ நாமெல்லாம் சிலிண்டர் வாங்கி வச்சுகிடுவோமா.

நல்ல பகிர்வு.

சாமக்கோடங்கி said...

ஆஹா... தமிழிஸ்ல போடறதுக்குள்ள வந்துட்டீங்க.. நெசமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு....

சாமக்கோடங்கி said...

ஜெய்லானி...? என்ன சொல்ல வர்றீங்க...? ஏதாவது புரியலையா....? இல்ல விஷயம் புரிஞ்சதால தல சுத்துதா...?

சாமக்கோடங்கி said...

@சித்ரா..

அக்கா என்ன பண்றது..ஆளே இல்லாத கடைல எத்தன நாள் தான் டீ ஆத்துவன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதான் சும்மா காமெடி பண்ண ட்ரை பண்ணேன்.. எல்லாம் கவுண்டர் உபயம்..

நன்றி..

சைவகொத்துப்பரோட்டா said...

கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் பிரகாஷ்.

நாடோடி said...

ந‌ல்ல‌ விச‌ய‌த்தை க‌மெடி க‌ல‌ந்து சொல்லி இருக்கிறீக‌ள்....

இளங்கோ said...

அன்புள்ள பிரகாஷ்,

செந்தில் கவுண்டமணி காமெடி என்பது சிரிக்க மட்டும் இல்லை.. சிந்திக்கவும் கூடத்தான்...
பெரிய அரசு கழகங்கள் வீட்டுக்கு வீடு வண்ண தொலைகாட்சி பெட்டி அளிக்க முடியும்பொழுது, ஒரு ஊருக்கு நூறு மரம் வளர்க்க முடியாதா என்ன?.

தனி மனிதர்கள் நினைத்தால் அவர்கள் ஊரில் மட்டும்தான் மரமோ அல்லது வேறு எந்த நல்ல காரியமோ செய்ய முடியும். அரசாங்கம் நினைத்தால் முடியும்... செய்வார்களா ?

பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்...
இளங்கோ

Paleo God said...

கலக்குங்க பிரகாஷ்.

இதுவும் நல்லாத்தான் இருக்கு.

தேவையான பகிர்வு.
நன்றி.!

சாமக்கோடங்கி said...

//அக்பர் said...

அண்ணே அப்போ நாமெல்லாம் சிலிண்டர் வாங்கி வச்சுகிடுவோமா.

நல்ல பகிர்வு.
//

ஆமா அக்பர் அவர்களே.. அதிலும் ஊழல் நடக்கத்தான் போகிறது...பாருங்களேன்....

சாமக்கோடங்கி said...

//சைவகொத்துப்பரோட்டா //

கண்டிப்பா கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தான்...

நன்றி..

சாமக்கோடங்கி said...

//நாடோடி//

என்ன செய்வது.. இங்கே மருந்தையும் தேனில் கரைத்தே கொடுக்க வேண்டி இருக்கிறது..

இருக்கட்டும்.. இதுவும் ஒரு மாருதலுக்காகத்தான்...

நன்றி..

சாமக்கோடங்கி said...

அன்புள்ள இளங்கோ...

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்..

அவர்களுக்குள் அந்த எண்ணம் இருக்க வேண்டும்...

நடக்கற காரியமாப்பா...

நன்றி இளங்கோ..

சாமக்கோடங்கி said...

வாங்க ஷங்கர்...

சொல்லனும்னு தோணுச்சு... அதான்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல கருத்து..

இனி எவனையும் நம்பாம, நாமளே, மரம் நடலாம் பிரகாஷ்..

( என்ன... மரம்வெட்டி பயலுகளுக்க்த்தான் பயப்படனும்..)

சாமக்கோடங்கி said...

அமாம் பட்டாபட்டி..

ஸ்டார்ட் பண்றது தான் கஷ்டம்.. தொடங்கீட்டோம்னா அதுக்கப்புறம் கஷ்டமே தெரியாது...

எல்லாரும் செயலில் இறங்கணும்...

க ரா said...

ரொம்ப நல்ல பகிர்வு பிரகாஷ். ஒரு நல்ல விடயத்த நகைச்சுவை கலந்து அழகா சொல்லிருக்கீங்க. நன்றி.

ஜெட்லி... said...

சிந்தனையுடன் கூடிய நகைச்சுவை....
வாழ்த்துக்கள்...

சாமக்கோடங்கி said...

வாங்க இராமசாமி கண்ணன் அவர்களே..

நன்றி..

சாமக்கோடங்கி said...

வாங்க ஜெட்லி..

உங்க வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.. நன்றி..

ஸ்ரீராம். said...

நகைச்சுவையாய்ச் சொல்லி இருந்தாலும் நச்'சுன்னு சொல்லி இருக்கீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்...நம்ம பேர வெச்சு சொசைட்டிக்கு மெஸேஜ் சொல்லியிருக்க, அதனால சும்மா விடுறேன்..அந்த பிஸ்கோத்து மண்டையன எங்க புச்சீங்க? நானும் தேடிக்கிட்டே இருக்கேன், சிக்க மாட்டேங்கிறானே படுவா! அடுத்த தடவ அவன் வந்தான்னா விட்றாதீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

புதுத் தகவல் அறிந்துகொண்டேன். நன்றி.

Menaga Sathia said...

காமெடியுடன் சிந்திக்கவும் செய்துட்டீங்க.தெரியாத தகவலை தெரிந்துக்கொண்டேன்,நன்றி உங்களுக்கு....

சாமக்கோடங்கி said...

நன்றி ஸ்ரீராம்....

சாமக்கோடங்கி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்...நம்ம பேர வெச்சு சொசைட்டிக்கு மெஸேஜ் சொல்லியிருக்க, அதனால சும்மா விடுறேன்..அந்த பிஸ்கோத்து மண்டையன எங்க புச்சீங்க? நானும் தேடிக்கிட்டே இருக்கேன், சிக்க மாட்டேங்கிறானே படுவா! அடுத்த தடவ அவன் வந்தான்னா விட்றாதீங்க.
//
வாங்க பண்ணிகுட்டி ராமசாமி அண்ணே,..
நீங்க வரீங்கன்னு தெரிஞ்சவுடனே ஆம்னில ஏறி எப்போதும்போல எஸ்கேப் ஆயிடுச்சு அந்த பிஸ்கோத்து மண்ட... விடுங்க.. பிஞ்ச தலையன் மாட்டாமியா போய்டுவான்...

சாமக்கோடங்கி said...

வாங்க ஹுஸைனம்மா ....

இந்தத் தகவலை ரொம்ப நாளாகவே பகிர வேண்டும் என்று ஆசை.. தெரியாதவர்களுக்கு தெரியப் படுத்தலாமே..

சாமக்கோடங்கி said...

வாங்க Mrs.Menagasathia,

உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி தெரியப் படுத்துங்கள்... எத்தனை பேரை இந்த விஷயம் சென்றடைகிறதோ, அத்தனை நல்லது..

ILLUMINATI said...

நல்ல பதிவு சாமு.கலக்குங்க..... :)

சாமக்கோடங்கி said...

வாப்பா இல்லுமி...

ரொம்ப நன்றி..

மங்குனி அமைச்சர் said...

///அப்ப நாம அதைத் தாண்டீட்டோமா அண்ணே...?அப்டீன்னா இந்த உலகத்தைக் காப்பாத்த யாருமே இல்லையா...? ////


இம்ம்ம் கும்

சாமக்கோடங்கி said...

வாங்க மங்குனி.. என்ன செய்வது... நாட்டு நடப்பச் சொன்னேன்...

எல் கே said...

nalla visyam

சாமக்கோடங்கி said...

வாங்க LK...

ரொம்ப நன்றி உங்க கருத்துக்கு....

clayhorse said...

எதேச்சையா எட்டிப்பாத்தேன். ரொம்ப நல்ல விஷயங்கள அதவிட நல்லா சொல்றீங்க.

சாமக்கோடங்கி said...

வாங்க clayhorse...

இனி அடிக்கடி எட்டிப் பாருங்க... நன்றி...

Post a Comment