Thursday, December 9, 2010

சிம்ம சொப்பனம் - ஜூலியன் அசாங்கே

ரமணா படத்தில் விஜயகாந்த், தப்பு செய்தவர்களை கட்டம் கட்டிக் கொல்லுவார். பார்க்க நன்றாக இருந்தது. தப்பு செய்தவர்களைக் கண்ட போது ரத்தம் கொதித்தது. ரமணா சாகும் காட்சியில் இதயம் கனத்தது. அதுக்கப்புறம்..?

உண்மையாகவே ரமணாவைப் போலவோ, அன்னியனைப் போலவோ, இந்தியனைப் போலவோ ஒருவன் உருவானால் நாம் என்ன செய்வோம்..? யூகிக்கத் தேவை இல்லை. அதுதான் நடந்து கொண்டு இருக்கிறதே...

"ஜூலியன் அசாங்கே"


உலக நாடுகளுக்கே தான் தான் நாட்டாமை என்ற நினைப்பில் இருக்கும் அமெரிக்காவின் குடுமியையே பிடித்து ஆட்டியவர். காற்று கூட புக முடியாத இடங்களில் புகுந்து ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டவர். இவரின் தைரியம், திறமை என்னவென்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் சினிமா நடிகர்களின் வீரத்தையே பார்த்துப் பழகிய நமக்கு, சாதாரண மனிதனை திடீரென ஹீரோவாக உருவகப் படுத்துவது கடினமே..

அலுவலகத்தில் காலை சிற்றுண்டியின் போது நான் நொந்து கொண்டு சொன்னேன்.. "உலகில் கடைசியாக ஒரு தைரியசாலி இருந்தான். அவனையும் கட்டம் கட்டிட்டாணுகடா.." என்றேன்.. யாருடா..? என்றார்கள் நண்பர்கள்.. விக்கி லீக்ஸ் ஜூலியன் தெரியாதாடா உங்களுக்கு என்று கேட்டேன்.. விழித்தார்களே.. என்ன செய்ய... தமிழ் உலகம் அப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது.

உலகின் பல பத்திரிக்கைகளும் ஜூலியனைப் பற்றியும், பத்திரிக்கை சுதந்திரம் பற்றியும், அமெரிக்காவின் அட்டூழியங்கள் பற்றியும் எழுதி வருகின்றன.. நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் தான் முழுமையாக அரசியல் வாதிகளின் வசம் இருக்கின்றனவே.. முதல் பக்கத்தில், ஒரு பிரபலமான கல்லூரியின் விளம்பரம், இரண்டாவது பக்கம் நகை விளம்பரம்.. மூன்றாவது பக்கம் ஆளுங்கட்சியின் சாதனைகள், அப்புறம் முக்கியமாக புதிய திரைப் படங்களின் முழு வண்ணப் புகைப் படங்கள், மற்றும் அவை வெளியிடப் படும் திரையரங்குகள், கடைசியாக விளையாட்டு இப்படி முன்னமே தீர்மானிக்கப் பட்ட கட்டங்களுக்கு இடையே, தகவல்கள் இணைக்கப் படுகின்றன நமது பத்திரிக்கைகளில்..

ஒரு விஷயத்தை பூதாகரமாக்கி மக்களை அதற்கு எதிராக திசை திருப்பவும் இவர்களால் முடிகிறது.. முக்கியமான விஷயத்தைப் போடாமல் நீர்த்துப் போக வைக்கும் வித்தைகளும் இங்கே நடக்கின்றன.

ஜூலியனைப் பற்றி அறிந்த ஊடகங்களும் மக்களும் தங்கள் எதிர்ப்புகளை அமெரிக்காவுக்கு எதிராக எழுப்புகின்றனர். ஆனால் இது போதாது.அவர் எதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.. எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கவே செய்கிறான். அவன் தான் இது போன்ற தேசப் பற்றுப்படங்களை எல்லாம் பார்க்கும் போது நம்மைக் கை தட்டச் செய்கிறான்.

ஜூலியன் நினைத்து இருந்தால், அமெரிக்காவுடன் பேரம் பேசி இருக்க முடியும்.. ஏன் செய்யவில்லை..? நமக்குள் ஒளிந்திருக்கும் நல்லவன் அவருக்குள் ஓடி ஒளிந்திருக்கவில்லை. அவன் சாமானியப் பட்டவன் இல்லை. ஒரு வல்லரசையே கிடு கிடுவென நடுங்க வைத்துத் துவைத்துக் காயப் போடும் அளவு மாவீரன். அது தான் தூக்கி வாரிப் போட்டாற்போல ஓடிப் போய் அமுக்கி விட்டார்கள்.

நம்ம ஊரில் ஒருவன் நல்லது செய்தால் தான் போய் துணை நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உலகின் எந்த ஒரு மூலையில் ஒருவன் நல்லதுக்காகப் போராடினாலும், அவனுக்கு நமது தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று நினைக்கிறேன். மீடியா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார். அவர் பாதையில் சென்றால் ஒரே வருடத்தில், நமது அரசியல்வாதிகளின் அனைத்து விஷயங்களும் புட்டு புட்டு வைக்கப் படும்..

உமாஷங்கருக்காகக் குரல் எழுப்பிய போது எல்லோரும் துணை நின்றோம். என்னுடைய குரல் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா வராதா என்றெல்லாம் அப்போது யோசிக்க வில்லை. அதேபோல இப்போது ஜூலியனுக்காக குரல் எழுப்புகிறேன். குறைந்தது என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களுக்கவது இவரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன். அது தான் இவருக்கு நாம் கொடுக்கும் கை என்று நான் நினைக்கிறேன்.

ஜூலியன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சுடுதண்ணியின் இந்தத் தொடரைப் படியுங்கள்..

http://suduthanni.blogspot.com/2010/11/1.html

சாமக் கோடங்கி

17 பின்னூட்டம்:

Chitra said...

அது தான் இவருக்கு நாம் கொடுக்கும் கை என்று நான் நினைக்கிறேன்.


.....நிச்சயமாக. தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

Philosophy Prabhakaran said...

உண்மையில் நீங்கள் ரமணா விஜயகாந்தோடு ஒப்பிட்டு சொல்லும்போதுதான் ஜூலியன் அசாங்கேவின் தைரியத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது...

தெய்வசுகந்தி said...

அது தான் இவருக்கு நாம் கொடுக்கும் கை என்று நான் நினைக்கிறேன்........

கண்டிப்பாக.

pichaikaaran said...

அவரது செயலை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவி இருக்கிறீர்கள்

நன்றி

இளங்கோ said...

நல்ல பகிர்வு பிரகாஷ், நல்லவனுக்கு எங்கிருந்தாலும் சோதனை தான்.

ILLUMINATI said...

ஜூலியன் ஒரு உண்மையான போராளி!
ஆனால்,மக்களுக்கு உண்மையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரது போராட்டம் பற்றி அறியாத நமது மக்களின் விழிப்புணர்வு இருக்கே?ரெண்டு நாளுக்கு முன் இந்த பேச்சு வந்த போது,எனது நண்பர்கள் சிலர் விக்கிலீக்ஸ் என்றால் என்ன என்று கேட்டார்கள்...

சாமக்கோடங்கி said...

நன்றி சித்ரா, நன்றி தெய்வசுகந்தி, நன்றி பிலாசபி, நன்றி இளங்கோ, நன்றி இல்லுமி. முடிந்தால் சுடுதண்ணியின் அந்தத் தொடர் முழுவதையும் படியுங்கள்.. மாட்டிக் கொண்ட பிறகும் கூட விக்கி லீக்ஸ் குழுவினர் மனம் தளராது உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். உண்மையை வெளிப் படுத்த அவர்கள் உயிரை துச்சமாக மதித்துச் செயல்படுகின்றனர். நாமாக இருந்தால் இதைச் செய்வோமா என்று யோசித்துப் பாருங்கள். ஜூலியனின் வீரத்தைப் புகழும் இதே நேரத்தில், அவருக்கு உருதுனையாகச் செயல்படும் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவிக்கக் கடமைப் பட்டு உள்ளேன். முடிந்தால் நீங்களும் நான்கு பேருடன் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

udhuman ali said...

Naallavare, Thodaratum Ungal Pani.

செல்வா said...

ரொம்ப சரியா சொன்னீங்க .! அவரைப் பற்றிய விழிப்புணர்வு நமக்குள் வர வேண்டும் .! அத விட இப்ப இருக்குற கிரிகெட் வீரர்களா தெரிஞ்சா அளவுக்கு கூட நம்ம மக்கள் கிட்ட இவரப் பத்தி தெரியாம இருக்கு .. கிரிகெட் வீரரோ இல்ல எதாவது நடிகர பத்தியோ எழுதுற அளவுக்கு இவர பத்தி எழுதிருகாங்களா அப்படின்னு தெரியல ..!

வசூல்ராஜாmbbs said...

ஜூலியன் அசாங்கேவின் தைரியத்தை பாரட்டுகிறேன். அவர்க்கு என் வாழ்த்துக்கள்.

சாமக்கோடங்கி said...

//udhmanali said...

Naallavare, Thodaratum Ungal Pani.
//

நன்றி உத்மனாலி,

சாமக்கோடங்கி said...

//கோமாளி செல்வா said...

ரொம்ப சரியா சொன்னீங்க .! அவரைப் பற்றிய விழிப்புணர்வு நமக்குள் வர வேண்டும் .! அத விட இப்ப இருக்குற கிரிகெட் வீரர்களா தெரிஞ்சா அளவுக்கு கூட நம்ம மக்கள் கிட்ட இவரப் பத்தி தெரியாம இருக்கு .. கிரிகெட் வீரரோ இல்ல எதாவது நடிகர பத்தியோ எழுதுற அளவுக்கு இவர பத்தி எழுதிருகாங்களா அப்படின்னு தெரியல ..!
//

இதுதான் பத்திரிகைகளின் இன்றைய நிலை.

சாமக்கோடங்கி said...

//வசூல்ராஜாmbbs said...

ஜூலியன் அசாங்கேவின் தைரியத்தை பாரட்டுகிறேன். அவர்க்கு என் வாழ்த்துக்கள்.
//

வாங்க வசூல் சார்.. முதன்முறையாக நம்ம பகுதிக்கு வந்துள்ளீர்கள்..

ஜெய்லானி said...

//நம்ம ஊரில் ஒருவன் நல்லது செய்தால் தான் போய் துணை நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உலகின் எந்த ஒரு மூலையில் ஒருவன் நல்லதுக்காகப் போராடினாலும், அவனுக்கு நமது தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று நினைக்கிறேன். மீடியா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார். அவர் பாதையில் சென்றால் ஒரே வருடத்தில், நமது அரசியல்வாதிகளின் அனைத்து விஷயங்களும் புட்டு புட்டு வைக்கப் படும்..//

10000 மடங்கு சரியான நச் கேள்வி இது :-)

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

//நம்ம ஊரில் ஒருவன் நல்லது செய்தால் தான் போய் துணை நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உலகின் எந்த ஒரு மூலையில் ஒருவன் நல்லதுக்காகப் போராடினாலும், அவனுக்கு நமது தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று நினைக்கிறேன். மீடியா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார். அவர் பாதையில் சென்றால் ஒரே வருடத்தில், நமது அரசியல்வாதிகளின் அனைத்து விஷயங்களும் புட்டு புட்டு வைக்கப் படும்..//

10000 மடங்கு சரியான நச் கேள்வி இது :-)
//

வாங்க நண்பரே.. பாத்து ரொம்ப நாள் ஆச்சு..

ரோஸ்விக் said...

நானும் என்னால் முடிந்த அளவு இவரைப் பற்றிய செய்திகளை மிகமிக மகிழ்வுடன் பரப்புரை செய்துவருகிறேன்.

hariharan said...

ஜூலியன் அசாஞ்சே சென்ற வருடத்தின் ஹீரோ என்று சொல்லலாம், சமூக நன்மைக்காக தான் துன்பபடுவதை ஏற்றுக்கொள்கிறவன் நிச்சயம் மென்மையானவன். இந்திய விடுதலைப் போரில் தன்னுயிரையும், தன்னுடைய வாழ்க்கையும் அர்ப்பணித்தவர்களுடன் இவரை ஒப்பிடலாம்.

தமிழ்ப் ப்திவுலகம் நிச்சயமாக விக்கிலீக்ஸிர்காக நிறைய பதிவிட்டுள்ளது.

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Post a Comment