Thursday, November 25, 2010

எளிது எளிது கடத்தல் எளிது..

வணக்கம் நண்பர்களே..!!!

இன்று வீட்டு வேலை காரணமாக அலுவலகத்திலிருந்து கொஞ்சம் நேரமாக வர வேண்டிய சூழ்நிலை. வண்டியை வீட்டுக்கு விரட்டினேன்.. வீரபாண்டிப் பிரிவைத் தாண்டும் போது நாலரை மணி இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் பள்ளிக் குழந்தைகள் கூட்டம். எல்லோரும் நகரப் பேருந்துக்காக காத்திருந்தனர். சைக்கிளைப் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அலசிக்கொண்டே பள்ளிச் சிறுவர்கள் ஓட்டிக் கொண்டு இருந்ததால் கொஞ்சம் பதனமாகவே எனது வண்டியை ஓட்டினேன்.

சிறிது தொலைவில் இரண்டு பிஞ்சுக் கைகள் "லிப்ட்" கேட்டு வண்டியை நிறுத்தின. என்ன அவசரமாக இருந்தாலும் பொதுவாக சும்மா தானே போகிறோம் என்று ஏற்றிக் கொள்வது வழக்கம்.

"அண்ணா அண்ணா சாந்தி மேடு போகணும்"..

ஏறுப்பா.. டே டே ஒருத்தனுக்குத்தாண்டா எடமிருக்கு....

அண்ணா ரெண்டு பேரும் ஏறிக்கறோமே....???

(நண்பர்களை ஏன் பிரிப்பானேன்) ஏறுங்கப்பா...

ஏறியாச்சா... என்னங்கடா உங்கள விட உங்க பேக் எல்லாம் வெய்ட்டா இருக்கே...

சைடுல கெட்டியா பிடிச்சிட்டு உக்காருங்க போலாமா ...

புடிச்சாச்சு போகலாங்கண்ணா....

உங்க பேரென்னங்ண்ணா...?

பிரகாசு...யாருப்பா அது ரெண்டு தோளிலையும் கை போட்டு இருக்கறது..? நான் எப்படி வண்டி ஓட்ட..??

அண்ணா நான் சரியாத்தான் உக்காந்து இருக்கேன் இவன் தான்.. டேய், பின்னாடி இருக்குற கம்பிய புடிச்சுக்கடா.. அண்ணா வண்டி ஓட்டட்டும்..

வழி நெடுக சிறு பிள்ளைகள் தோளில் சில மலைகளைச் சுமந்து கொண்டு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தனர்..பாவம்.. ரெண்டு பேரை நான் கூட்டிக் கொண்டேன்.. மற்றவர்களை...

ஏம்ப்பா, வண்டி ஒண்ணும் வரலையா..?

ஆமாங்கண்ணா... ரொம்ப நேரமா நிக்கறோம் பஸ் வரவே இல்லைங்கண்ணா.. டியூஷனுக்கு நேரம் ஆச்சுங்கண்ணா...

எப்போதும் இந்த நேரம் இப்படித்தான் இருக்குமா...???

முக்கால் வாசி நாள் இப்படித்தாங்கண்ணா...

இங்கதாண்ணா.. எறங்கிக்கறோம்... டேங்க்சுங்ண்ணா...

சரிப்பா பாத்துப் போங்க.... டாடா காட்டிக் கொண்டே ஓடினர்..

கியரைப் போட முயல, அங்கிருந்து வேறு இரண்டு சிறுவர்கள் வந்தனர்.. அண்ணா பெட்ரோல் பங்கு போகணும்..

(அடப்பாவமே..)ஆட்டாம ஏறுங்கப்பா...

ஏம்ப்பா எப்பவுமே இப்படித்தானா..??

ஆமாங்கண்ணா.. யாராவது லிப்ட் குடுப்பாங்க...

எந்த ஸ்கூல்ப்பா நீங்க எல்லாம்...??

நாங்க தம்புங்கண்ணா..

ஆமா நான் எறக்கி விட்டனே.. அவுங்க ரெண்டு பெரும் எந்த ஸ்கூலுன்னு தெரியுமா..??

அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...

ஒரு நகரப் பேருந்து எதிரில் வர உள்ளே மூன்று வண்டிக்கான கூட்டம்.. வண்டியே ஒரு பக்கம் சாய்ந்து இருந்தது.. வெளியில் நான்கு வண்டிக்கான கூட்டம்.. அத்தனையும் சின்னப் பிஞ்சுகள்.. மேலே இருக்கும் கம்பி யாருக்கும் எட்டாது.. எப்படி உள்ளே நசுங்கி நிற்கப் போகிறார்களோ..?? இதில் முதுகில் மூட்டை வேறு..

ஆ அந்த மரத்துகிட்ட நிறுத்துங்கண்ணா...

பாத்துப் போங்கப்பா...

வழி நெடுக ஒரே சிந்தனை...

நானாக இருந்ததால் இறக்கி விட்டேன்.. இதுவே யாராவது கடத்தும் எண்ணத்துடன் வந்திருந்தால்...? பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொல்லித்தான் அரசுக்குத் தெரியுமா..? இரவு நேரமாகி விட்டால் இலவசப் பயண அட்டை செல்லாதோ என்னவோ பேருந்துக்குள் நசுங்கியாவது சென்று விட வேண்டுமென்று துடிக்கும் அந்தப் பிசுகளைப் பற்றி அரசுக்கு என்ன கவலை..? விடப்படும் கொஞ்ச நஞ்ச வண்டிகளாவது தரமாக உள்ளனவா..? தினமும் ஓரிரண்டு பேருந்துகள் பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிற்பதைக் காண்கிறேன். இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் உத்திரவாதம்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாடகை ஆட்டோ வைக்கிறார்கள்.. வாடகைக் கார் (?!?) வைக்கிறார்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு என்ன வழி..?

ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??

நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. இரண்டு பேருந்துகள் அதிகமாக விட என்ன ஒபாமாவிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டுமா..??(ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது).

இனி கடத்த வேன் எல்லாம் தேவை இல்லை.. பைக் போதும். அரசு ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்.. எவன் வேண்டுமானாலும் எந்தக் குழந்தையை வேண்டுமானாலும் கடத்திக் கொன்று குட்டைகளில் வீசிச் செல்வார்கள்.

(ஆள்பவர்களின் பசங்க எல்லாம் கூலா கான்வென்ட்ல படிச்சிக்கிட்டு இருப்பாங்க)

சாமக்கோடங்கி

32 பின்னூட்டம்:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃதொலைவில் இரண்டு பிஞ்சுக் கைகள்ஃஃஃஃ
அது உங்களுக்குத் தெரியுது.... அந்த அரக்கருக்கத் தெரியலியே..

LK said...

அரசுக்கு இதை விட பெரிய கவலைகள் உள்ளன

சாமக்கோடங்கி said...

வாங்க மதி...

தவறு செய்வதற்கான களம் அமைத்துத் தருவதே இந்த அரசு தானே...

சாமக்கோடங்கி said...

//LK said...

அரசுக்கு இதை விட பெரிய கவலைகள் உள்ளன
//

ஆமாமா... ஸ்பெக்ட்ரம் வழக்க திசை திருப்பனும், அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கணும்.. அப்பப்பா...

ஹரிஸ் said...

ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??//

இருக்கலாம்..

சாமக்கோடங்கி said...

//ஹரிஸ் said...

ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??//

இருக்கலாம்..
//

இப்ப கடத்துபவர்களுக்கு பணம் மட்டும் பிரதானம் இல்லையே... அவர்களின் வாழ்க்கையையும் சீரழித்து விடுகிறார்களே.. என்ன செய்ய...??

இளங்கோ said...

அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)

நானும் நிறைய தடவ பார்த்துருக்கேன், மற்ற பசங்க நடந்துட்டு இருக்க, ஒரு சில பசங்கள் மட்டும் எல்லாரிட்டையும் லிப்ட் கேட்டுட்டு இருப்பாங்க. ரெண்டும் மூணு கிலோ மீட்டர் நடந்து போய் படிச்ச அந்தக் காலமெல்லாம் போயிடுச்சுங்க பிரகாஷ்.

ஏழைக் குழந்தைகள கடத்த மாட்டாங்க அப்படின்னு சொல்ல முடியாதுங்க. எவ்வளவோ குழந்தைகள் காணாமல் போவது வெளியில் தெரிவதில்லை.

//ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது//

அப்புறம் உங்க ஊர்ல சாணி எல்லாம் கிடைக்குதுன்களா. இங்க கொஞ்சம் சாணி பத்து ரூபாய். அவனுக மேல அத ஊத்தினால் சாணி கேவலப் பட்டுப் போகும். :) இருந்தாலும் அம்மாவுக்கு தைரியம் ஜாஸ்தி.

இளங்கோ said...

உங்களைப் பத்தி கொஞ்சம் எழுதி இருக்கேன், ரொம்ப நாளா ஆளையே காணோம். கொஞ்சம் வந்து படிச்சுட்டு சொல்லுங்க :)

http://ippadikkuelango.blogspot.com/2010/11/23112010.html

சாமக்கோடங்கி said...

//அடடா அந்த பையன் பெரும் பிரகாஷா ? :)//

எம்பேரு தாங்க.. அந்தப் பையன் கேட்டான்.. நான் சொன்னேன்..

சாமக்கோடங்கி said...

//அப்புறம் உங்க ஊர்ல சாணி எல்லாம் கிடைக்குதுன்களா. இங்க கொஞ்சம் சாணி பத்து ரூபாய். அவனுக மேல அத ஊத்தினால் சாணி கேவலப் பட்டுப் போகும். :) இருந்தாலும் அம்மாவுக்கு தைரியம் ஜாஸ்தி.//

நீங்கள் சொல்வது சரிதான்.. சாணிக்கு ஒரு மரியாதை உண்டு..

Chitra said...

அந்த படத்தை பார்த்தாலே, மனது பதறுகிறது. எத்தனை ஆபத்தான செயல்!!!!

பட்டாபட்டி.. said...

நச் பதிவு.....

அரசு மக்களுக்கு எதிராக மாறினால்... மக்களும் அரசுக்கு எதிராக மாறவேண்டும்...

//அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...//

இந்த ஸ்கூல் எங்கிருக்கு பிரகாஸ்.. ?

பயணமும் எண்ணங்களும் said...

உங்க கோபத்துக்கு என் பாராட்டுகள்.

//
(ஓட்டு கேட்டு எவனாவது
வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு
எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). /


நிஜமான வலி//ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??//


இருக்கும் . ஆனா வேறு வழியில் உபயோகப்படுத்தலாமே...

:((

இப்படி சமூக பிரச்னை குரித்து எல்லாரும் எழுதணும் அதிகமா . நன்றி

துளசி கோபால் said...

தேர்தல் வேலைகள் தலைக்குமேலே கிடக்கு. பதவி பறிபோகாமல் அதுவரை காப்பாத்திக்கணும். இதுலே பள்ளிக்கூடமாவது பஸ்ஸாவது..... எப்படியோ தொலையட்டும். பள்ளிக்கூடப் பசங்களுக்கு என்ன ஓட்டா இருக்கு?

அரசுக்கு ஆயிரம் கவலை:(

ஜீ... said...

//கொஞ்சம் பதனமாகவே//
புதுசா இருக்கு கவனமாக/ பத்திரமாக :)

இதப் பற்றி எல்லாம் மக்கள் தான் கவலைப்படணும்!...அரசாங்கத்துக்கு எவ்ளோ வேலை இருக்கு!? :))

ப.செல்வக்குமார் said...

/// (ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). //

இந்த விசயத்துக்கு கண்டிப்பா ஊத்தலாம்க..! ரொம்ப கொடுமை ., எங்க ஊர்லயும் இதே மாதிரிதான் காலைலயும் சாயுன்காலமும் படியிலேயே தொங்கிட்டு போக வேண்டியதா இருக்கு ..!! என்ன கொடுமை ..?!

சாமக்கோடங்கி said...

//Chitra said...

அந்த படத்தை பார்த்தாலே, மனது பதறுகிறது. எத்தனை ஆபத்தான செயல்!!!!
//

இதெல்லாம் நம்ம ஊருல சர்வ சாதாரணம். இவங்க இடம் இல்லாம தொங்கறாங்க. வயசுப் பசங்க, பந்தாவா வெளியில தொங்கறாங்க...

சாமக்கோடங்கி said...

//நச் பதிவு.....

அரசு மக்களுக்கு எதிராக மாறினால்... மக்களும் அரசுக்கு எதிராக மாறவேண்டும்...

//அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...//

இந்த ஸ்கூல் எங்கிருக்கு பிரகாஸ்.. ?//

எங்க இருக்குன்னு தெரியல, வீரபாண்டிபிரிவிற்கும் பிரஸ் காலனிகும் இடையில் தான் அந்தக் குழந்தைகள் ஏறினார்கள்.

நன்றி தலைவா...

சாமக்கோடங்கி said...

//இப்படி சமூக பிரச்னை குரித்து எல்லாரும் எழுதணும் அதிகமா . நன்றி//

ஹி ஹி.. இப்பத்திக்கு இந்த பிசினஸ் தான் ஓடிக்கிட்டு இருக்கு...

நன்றிங்க..

சாமக்கோடங்கி said...

//
அரசுக்கு ஆயிரம் கவலை:(//

அது சரிதான்.. ஆயிரத்து ஒண்ணா இதை கவனிக்கலாம்..

சாமக்கோடங்கி said...

//ஜீ... said...

//கொஞ்சம் பதனமாகவே//
புதுசா இருக்கு கவனமாக/ பத்திரமாக :)

இதப் பற்றி எல்லாம் மக்கள் தான் கவலைப்படணும்!...அரசாங்கத்துக்கு எவ்ளோ வேலை இருக்கு!? :))
//

பதனமாக என்ற சொல்லை இங்கே அடிக்கடி உபயோகப் படுத்துவது உண்டு.. தமிழ் தானா என்று தெரியவில்லை..அதற்கு பொறுமையாக என்று அர்த்தம்..

ஆமாமா, 23 ம் தேதி, பொள்ளாச்சிக்கு போய்க்கிட்டு இருந்தோம். வழிநெடுக இரு புறங்களிலும், சாலைகள், கொஞ்சம் அகலப் படுத்தப் பட்டு, வழிநெடுக, மூங்கில் குச்சிகள் நட்ட வைக்கப் பட்டு, ஸ்டாலின் சிரித்துக் கொண்டு இருந்தார்.. கிலோ மீட்டர் கணக்கில்... எவ்வளவு செலவு.. அரசுக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான்..

சாமக்கோடங்கி said...

//ப.செல்வக்குமார் said...

/// (ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது). //

இந்த விசயத்துக்கு கண்டிப்பா ஊத்தலாம்க..! ரொம்ப கொடுமை ., எங்க ஊர்லயும் இதே மாதிரிதான் காலைலயும் சாயுன்காலமும் படியிலேயே தொங்கிட்டு போக வேண்டியதா இருக்கு ..!! என்ன கொடுமை ..?!
//

நமது கோபத்தை தேர்தலில் காட்டலாம்..

komu said...

ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா நேரம் இருக்கு?

பதிவுலகில் பாபு said...

நீங்க சொல்றதும் சரிதாங்க..

நானும் ஸ்கூல் படிக்கறப்போ எங்க ஸ்கூல் ஸ்டாப்பிங்ல வேனும்னே பஸ்ஸை நிப்பாட்டாம போயிடுவாங்க.. எங்களுக்கு கன்செசன் டிக்கெட் குடுக்கனும்ல.. அதுக்கு சலிச்சுக்கிட்டு இந்த வேலையப் பண்ணுவாங்க..

ஆமினா said...

என் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் இருந்தும் மணியடிச்சதும் ஓரே ஓட்டமாக ஓடுவாங்க. நாங்க வரும்போது பாத்தா எதிரில் வரும் பஸ்ஸில் நசுங்கி கொண்டு வருவாங்க. ஏன்னா அந்த பஸ்ஸை விட்டா அடுத்த பஸ் இரவு 9 மணிக்கு தானாம்...........

என்னன்னமோ இலவசமா செய்யுது அரசு. இந்த பிரச்சனையையும் தீர்த்து வச்சா நல்லா இருக்கும்!!!

சாமக்கோடங்கி said...

//komu said...

ஆமாங்க, அரசுக்கு இதைப்பாக்கவா நேரம் இருக்கு?
//

எந்த ஆட்சி வந்தாலும் இந்த நிலை மாற அவர்களாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். பள்ளிகள் சேர்ந்து போராடலாம்...

சாமக்கோடங்கி said...

//பதிவுலகில் பாபு said...

நீங்க சொல்றதும் சரிதாங்க..

நானும் ஸ்கூல் படிக்கறப்போ எங்க ஸ்கூல் ஸ்டாப்பிங்ல வேனும்னே பஸ்ஸை நிப்பாட்டாம போயிடுவாங்க.. எங்களுக்கு கன்செசன் டிக்கெட் குடுக்கனும்ல.. அதுக்கு சலிச்சுக்கிட்டு இந்த வேலையப் பண்ணுவாங்க..
//

எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டு.. ஒரு குறிப்பிட்ட மாலை இடைவெளியில் மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.

சாமக்கோடங்கி said...

//ஆமினா said...

என் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் இருந்தும் மணியடிச்சதும் ஓரே ஓட்டமாக ஓடுவாங்க. நாங்க வரும்போது பாத்தா எதிரில் வரும் பஸ்ஸில் நசுங்கி கொண்டு வருவாங்க. ஏன்னா அந்த பஸ்ஸை விட்டா அடுத்த பஸ் இரவு 9 மணிக்கு தானாம்...........

என்னன்னமோ இலவசமா செய்யுது அரசு. இந்த பிரச்சனையையும் தீர்த்து வச்சா நல்லா இருக்கும்!!!
//

இது நமது எல்லோரின் ஒட்டு மொத்த ஆசை..

சாமக்கோடங்கி said...

மக்களே... எமது பகுதிக்கு புதிதாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.

ஹுஸைனம்மா said...

முன்னேறத் துடிக்கும் எந்தவொரு சமுதாயத்திலும், கல்விதான் இலவசமாகக் கொடுக்கப்படும் முதலில்.. நம் திருநாட்டில் மட்டுமே கலர் டிவிகள்..

சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

முன்னேறத் துடிக்கும் எந்தவொரு சமுதாயத்திலும், கல்விதான் இலவசமாகக் கொடுக்கப்படும் முதலில்.. நம் திருநாட்டில் மட்டுமே கலர் டிவிகள்..
//

கல்வி மக்களுக்குப் பயன் தரும்..
கலர் டிவி ஆளும் வர்க்கத்திற்குப் பலன் தரும்..

Post a Comment