அலுவலகத்தில் முதல் நாளே அதிக வேலை, கடுப்பான வேலை..கடுப்போ கடுப்பு.. எந்த மக்களுக்கும் நாம் பேசும் பாஷை புரியவில்லை. சாதாரணமாகவே தனியாக இருந்தால் இன்னும் பயம் அதிகரித்து விடும். விரக்தி வந்து விடும். அதே நிலைமையில் தான் நானும் இருந்தேன்..
முற்றிலும் மாறுபட்ட மக்கள், மாறுபட்ட சூழ்நிலை, நமக்கு ஆறுதல் தரும் நம்மூர் விஷயங்கள் ஒன்று கூட இல்லை. அறைக்கு வந்தால் அங்கும் அதே புதிய சூழ்நிலை..
எல்லாமே வித்தியாசமா இருக்கே..நம்ம ஊர் மாறி இங்க ஒண்ணுமே இல்லையா.. கடவுளே..
இந்த நிலைமையில் ஒரே ஆறுதல் தரும் விஷயம்..
ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன்.. ஒரு கிழவி தன்னுடன் ஒரு நாயை உடன் அழைத்து நடைபாதையில் நடந்து கொண்டு இருந்தார்.. அந்த நாய் கரண்ட் கம்பியைப் பார்த்ததும் காலைத் தூக்கியது..
அப்பாடா..
நன்றி..
சாமக்கோடங்கி |
13 பின்னூட்டம்:
நலமா பிரகாஷ்? :))
வாங்க ஷங்கர் அண்ணே.. நலமாக இருக்கிறேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..
அண்ணே எப்படி இருக்கீங்க
நலமா
ஒரு குட்டி கவிதை
உங்கள் பதிவு
பத்திரமாய் இந்திய வர பிராத்தனைகள்.A
பிரகாஷ் இலக்கியவாதி ஆகிட்டீன்களோ ?
அட இப்படியும் எழுத முடியுமா...? இலக்கியம் தான் . வாழ்த்துக்கள்
//siva said...
அண்ணே எப்படி இருக்கீங்க
நலமா
ஒரு குட்டி கவிதை
உங்கள் பதிவு
பத்திரமாய் இந்திய வர பிராத்தனைகள்.A
//
நன்றி சிவா.. ஆறுதல் தேடும் மனதிற்கு கவிதை கதை என்றெல்லாம் தெரியவில்லை.. பிரார்த்தனைக்கு நன்றி.. அத்தோடு நான் இறங்கியிருக்கும் செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்..
//எல் கே said...
பிரகாஷ் இலக்கியவாதி ஆகிட்டீன்களோ ?
//
அய்யய்யோ.. இது என்ன புதுக்கதை..
//மதுரை சரவணன் said...
அட இப்படியும் எழுத முடியுமா...? இலக்கியம் தான் . வாழ்த்துக்கள்
//
வாங்க மதுரை சரவணன்.. நீங்களும் முடிவே பண்ணீட்டீங்களா..??
அப்பா சரிதான்.. நாலு பேர் சொன்னாங்கன்னா எதுவும் சரியாகத்தான் இருக்கும்..
முற்றிலும் மாறுபட்ட மக்கள், மாறுபட்ட சூழ்நிலை, நமக்கு ஆறுதல் தரும் நம்மூர் விஷயங்கள் ஒன்று கூட இல்லை.//
அதையே சுவையாக்கிடவேண்டியதுதானே?..
:)
பிரகாஷ் ... நீண்ட நாள் ஆகிவிட்டது ... ஜெர்மனியில் பணி சிறக்க வாழ்த்துகள் . பனியும் கூடுதலாக இருக்குமே...
நல்லா ஆறுதல் .. ஹி ஹி
பொழுது போகலைன்னா நிறையா எழுதுங்க பாஸ்.
//ஜன்னலைத் திறந்து வெளியில் பார்த்தேன்.. ஒரு கிழவி தன்னுடன் ஒரு நாயை உடன் அழைத்து நடைபாதையில் நடந்து கொண்டு இருந்தார்.. அந்த நாய் கரண்ட் கம்பியைப் பார்த்ததும் காலைத் தூக்கியது..//
ஹஹ்ஹா :)
//இளங்கோ said...
பொழுது போகலைன்னா நிறையா எழுதுங்க பாஸ்.//
நம்ம அடுத்த பதிவ பாருங்க பாசு..
Post a Comment