Friday, January 22, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 1


வணக்கம் ...!!!
பூமி அழியப்போவுது!! பூமி அழியப்போவுது ன்னு!! எல்லாரும் சொல்றாங்களே.. அது தானா அழியாட்டாலும் நாமளே கொஞ்சம் கொஞ்சமா முடிச்சுக்கட்டியிருவோம். ஆனா விஷயம் இன்னும் கையை மீறி போவல.நாம தெரிஞ்சு நடந்துக்க வேண்டிய விஷயம் நெறைய இருக்கு. நம்ம குழந்தைகளுக்கும் இந்த விஷயங்களை சொல்லிக் குடுத்து உணர வெக்கணும்.. சரி.. இந்த உபதேசமேல்லாம் எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான்.. அதனால நா நேரா விஷயத்துக்கு வரேன். இந்த பூமிக்கு நேரப் போகும் அபாயத்துக்கு ஒரு முக்கியக் காரணியான "கார்பன் சுவடுகள்" பத்தி எழுதலான்னு இருக்கேன். இது 3 இல்ல 4 பாகங்கள் வரை பிடிக்கும்னு நெனைக்கிறேன். ஆராய்ச்சியாளர்கள்,அப்புறம் சமூக ஆர்வலர்களுக்கு மத்தியில இந்த பெயர் மிகப் பிரசித்தம்.நம்ம ஊரு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுதனுங்கறதுக்காக கொஞ்சம் எளிமையான நடைல விளக்கலாம்னு இருக்கேன். உங்களுடைய ஆலோசனை மற்றும் திருத்தங்கள் மிகவும் தேவை.
சரி.. இந்த பாகத்துல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால ஏற்படுதுங்கரதப் பத்திப் பாப்போம்.

நம்ம பூமி இயற்கையாவே பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போல பல எரிபொருட்கள கைவசம் வெச்சிருக்கு (fossil fuels). இதையெல்லாம் போட்டு கொளுத்தரதுனால,கரியமில வாயு(கார்பன் டை ஆக்சைட்) வெளிவருதுன்னு நாம ஸ்கூல்ல படிச்சிருப்போம்(எந்த வகுப்புன்னு ஞாபகம் இல்ல.) நம்ம காற்று மண்டலத்துல ஏற்கனவே கரியமில வாயு இருக்கு. அதோட சேத்து நாம அனுப்புற கமிவா(கமிவா = கரியமில வாயு . அடிக்கடி டைப் பண்ண கஷ்டமா இருக்கு!!!)வும் சேரும் போது தான் வினையே ஆரம்பமாகுது.
நாம பொறந்துதில இருந்து சாகர வரைக்கும் செய்யற ஏகப்பட்ட விஷயங்கள்ளிருந்து கமிவா வெளிப்படுது.. இத நம்மளோட "கார்பன் சுவடுகள்"ன்னு சொல்றோம்.இது தான் நம்ம அடுத்த தலைமுறையினருக்கு நாம் சேத்து வைக்கும் சொத்து!!! அட நெசமா தாம்பா..!
கிரீன் ஹவுஸ் விளைவு பத்தி படிச்சிருப்பீங்க.?!?!? சரி சரி.. அதையும் சுருக்கமா சொல்லிடறேன். நம்ம காத்து மண்டலத்துல இயற்கையாகவே கமிவா,மீதேன், அப்புறம் நைட்ரஸ் ஆக்சைட் எல்லாம் இருக்கு. இதெல்லாம் சரியான அளவுல தான் கடவுள் படைச்சார். அதனாலதான் சூரிய வெளிச்சம் அது வழியா உள்ள வந்து, பூமில பட்டுட்டு, அப்புறம் நல்ல புள்ளையா தெறிச்சு மறுபடியும் வெளியில போய்டுது.இந்த சக்கரம் இப்படியே சுத்துசுன்னா, நம்ம வண்டி நல்லா ஓடுமே. ஆனா விடோவாமா நாம.
நாம என்ன லேசுப்பட்டவன்களா, முடிஞ்ச வரைக்கும் கரண்ட் யூஸ் பண்றது, வண்டிகள் ஓட்றது,குப்பையா எரிக்கறது,அது இதுன்னு தெணறத் தெணற கமிவா'வ உற்பத்தி பண்ணி மேல அனுப்பிச்சு வுட்டோம்.
கமிவா என்ன லேசுப் பட்டவனா.. நம்ம காத்து மண்டலத்தையே, தல மேல துண்டப் போட்ட மாரி போட்டு மூடிடுச்சு. அதனால பூமி மேல படர சூரிய வெளிச்சம் வெளியில போக முடியாம, செவுத்துல பட்ட பந்து மாறி திரும்பி நம்ம கிட்டே வந்துருது.. இப்பத்தெரியுதா? ஏன் நம்ம உச்சி மண்டையெல்லாம் சுர்ருங்குதுன்னு?

இந்த குளோபல் வார்மிங், சுனாமி, நில நடுக்கம் அது இதுன்னு என்னென்னமோ சொல்றாங்கள்ள.. அதுக்கும் இதுக்கும் நெறைய லிங்க் இருக்கு.

அப்பாடா.. ஒரு வழியா, கார்பன் சுவடுகள் பத்தி சொல்லீட்டேன்.. உங்களுக்குத் தெரிஞ்சு இன்னும் ஏதாவது இருந்தா, தயவு செஞ்சு சொல்லீருங்க..
அடுத்த வர்ற பாகங்கள்ள, நாம என்னென்ன செய்யும் போது, எப்டி எப்டியெல்லாம்,கமிவா வெளிப்படுது, நாம கொஞ்சம் மனசு வெச்சா எப்டியெல்லாம் அதா கம்மி பன்னலாம்ங்கற விஷயங்கள கொஞ்சம் வெளக்கமா பார்க்கலாம்..

13 பின்னூட்டம்:

Mrs.Menagasathia said...

நல்ல பகிர்வு!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க மேனகா அவர்களே...
மிக்க நன்றி...!!!

பட்டாபட்டி.. said...

சரியான நேரத்தில் சரியான பதிவு..
தொடருங்கள் சாமக்கோடங்கி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க பட்டாபட்டி அண்ணே..
ரொம்ப நன்றி தொடர்ந்து எழுதறேன்...

புன்னகை தேசம். said...

நல்ல பகிர்வு.. உங்க இமெயில் தர முடியுமா?..

தமிழமுதத்திலும் ( தமிழ் குழுமம் 0பகிர்ந்து கொள்ளுங்கள் இனி...

சாந்தி.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வருகைக்கு நன்றி சாந்தி...

successprakash@gmail.com

நீங்கள் இதில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்களைப் போன்றோரின் ஆதரவு எனக்கு தொடர்ந்து தேவைப் படுகிரது.. எழுதத் தூண்டுகிறது...

ஸ்ரீராம். said...

நல்ல குறிதான்...நல்ல பதிவுன்னு சொன்னேன்

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்

அருமை அருமை - துவக்கமே அருமை - நாட்டின் இன்றையத் தேவையான கருத்தினை விளக்கும் இடுகை. சிந்தனை அருமை.

நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனா

ப.செல்வக்குமார் said...

///முடிஞ்ச வரைக்கும் கரண்ட் யூஸ் பண்றது, வண்டிகள் ஓட்றது,குப்பையா எரிக்கறது,அது இதுன்னு தெணறத் தெணற கமிவா'வ உற்பத்தி பண்ணி மேல அனுப்பிச்சு வுட்டோம்.///

அருமையான கட்டுரைங்க .. இவ்ளோ அருமையான ப்ளாக் எனக்கு தெரியாமலே போய்டுச்சு.. வலைச்சரத்துல பார்த்துட்டு வந்தேன். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கூட ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்குதுங்க.. இதோ இப்பவே உங்களை பின்தொடர்கிறேன்..

மதுரை சரவணன் said...

அருமையான இடுகை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க சீனா.. ரொம்ப நாளாச்சு,இதை எழுதி.. இதைத் தொடர நினைக்கிறேன்... பார்ப்போம்.. கொஞ்சம் நேரம் கிடைக்க வேண்டும்.. நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//
அருமையான கட்டுரைங்க .. இவ்ளோ அருமையான ப்ளாக் எனக்கு தெரியாமலே போய்டுச்சு.. வலைச்சரத்துல பார்த்துட்டு வந்தேன். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கூட ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்குதுங்க.. இதோ இப்பவே உங்களை பின்தொடர்கிறேன்..//

செல்வக்குமார்.... வாருங்கள், நமக்குள் இருக்கும் நல்ல கருத்துகளைப் பகிர்ந்து, பொது நல சிந்தனையை விதைத்து புது உலகம் படைக்க இந்த இனிய இணையத்தை உபயோகப் படுத்துவோம்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க சரவணன் சார்...

உங்கள் பணி மீது எப்பொழுதும் எனக்கு ஒரு பொறாமை.. ஆசிரியர் பணி என்பது அனைத்திலும் உயர்வானது... அன்னை, தந்தைக்கு அடுத்து போற்றப்படும் பதவி...

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள்..

Post a Comment