Friday, January 29, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 4

நண்பர்களே..
இந்த இயற்கைச் சீரழிவின் பின்னணியில் பல்வேறு பேராசை பிடித்த நாடுகள் செயல் படுவதையும் மற்றும் லாபம் மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் உள்ளன என்றும் கார்பன் சுவடுகள் பாகம்-மூன்றின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.
மிக விளக்கமாக அறிய "செங்கொடியின் சிறகுகள்" இட்ட பதிவான "ஒரு மணி நேரம் விளக்கனைத்தல் புவி வெப்பமாவதைத் தடுக்குமா?' என்ற தமிழ் மணம் விருது பெற்ற பதிவினைப் பாருங்கள்.. சரி நண்பர்களே,, இனி நம்முடைய பயணத்தைத் தொடருவோம்.. இதற்கு முன் வந்த மூன்று பாகங்கள் சற்று மென்மையானவை.ஆனால் இனி வருபவை அப்படி இருக்காது..

www.goodplanet.org இந்த இணையதளத்தை நடத்தும் சமூகத் தொண்டு நிறுவனம் நெறைய விஷயங்கள ஆராய்ஞ்சு வெளியிட்டிருகாங்க. நான் அந்த நிறுவனத்துக்கு ஈ-மெயில் பண்ணி இந்த விஷயங்கள கேட்டேன். அவங்க என் விலாசத்துக்கு "ஹோம்"(home)னு ஒரு டிவிடி அனுபிச்சு வெச்சாங்க.. எல்லாரும் பாக்க வேண்டிய தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். அதுல வர்ற ஒவ்வொரு பிரேம்'ஐயும் நம்ம டெஸ்க்டாப் ஸ்க்ரீன் சேவரா வெக்கலாம். நாம எடுதுக்கிட்டிருக்கிற இந்த விஷயங்கள சூப்பரா காட்டியிருக்காங்க..

உலகத்துல இன்னும் பல நாடுகள்ல குளோபல் வார்மிங் இருக்கிறதையே நம்ப மாடேன்றாணுக. அட ஏம்ப்பா, நம்ம ஊர்லே, பள்ளிக் கூடத்துக்கு வெளியில பொட்டிக்கட வெச்சிருக்கிற குப்பன், டாஸ்மாக் கடையில ஊத்திக் கொடுக்குற சுப்பன் இவங்களை எல்லாம் கேட்டுப் பாருங்க... கெட்ட கெட்ட வார்த்தையா வந்து விழும். பீப் சவுண்டு குடுத்து மறச்சுக்க வேண்டியது தான்..


இத கேளுங்க.. கிளிமஞ்சாரோ'ன்னு ஒரு பெரிய மலை அப்ரிகால இருக்கு.. அத இப்ப அவிங்க ஊர்க்கார பய புள்ளிகளாலயே அடையாளம் கண்டுக்க முடியலியாம். 80% பனிஅடுக்குகள் (க்லாசியர்ஸ்) காணாமப் போச்சாம். அதனால வெய்யக் காலங்கள்ல ஆத்துல தண்ணியே காணமாம். வீட்டுல இருந்து ஒரு பவுனு காணாம போனா வாயிலயும் வவுத்தலயும் அடிச்சுக்கரமே, 80% க்லாசியர்ஸ் நண்பர்களே..அவங்க ஊரா இருந்த என்ன நம்ம ஊரா இருந்த என்ன, நம்ம தாய் பூமி தானே..?

உலகத்துல எங்கயுமே இல்லாத ஒரு அதிசயம் சைபீரியா'ல இருக்கு. அங்க இருக்குற காடுகள்ள தரைப் பகுதி கண்ணுக்கே தெரியாத மாறி, ஒரே பனி மூட்டமா இருக்கும். அத "பெர்மா பிராஸ்ட்" அப்படீன்னு சொல்வாங்க..

அதுக்கு அடியில தான் ஆப்பு ஒளிஞ்சு இருக்கு. அதுக்குள்ள மெதேன் ங்கற கிரீன் ஹௌஸ் வாயு இருக்கு. இந்த மெதேன் பயபுள்ள நம்ம கமிவா'வ விட இருபது மடங்கு கோபக் காரணாம். இந்த வெப்பமயமாதல் விளைவுனால இந்த பெர்மா பிராஸ்ட் உருக ஆரம்பிசிடுச்சுன்னா, என்ன நடக்குமுன்னு கணிக்கவே முடியலியாம்.

இந்த அமைப்ப நாம தான் உருவாக்கனோம். நாம சாப்டற சாப்பாட்டுல இருந்து குடிக்கிற தண்ணி, வாழுற பூமி, நம்ம சுத்தி இருக்குற உயிரினங்கள் இவை எல்லாத்துக்கும் எடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு பிணைப்பு(அதாம்ப்பா பாண்ட்) இருக்கு. அதத்தான், "ஷஹேலு"ன்னு காமரோன் அவதார்'ல சொன்னாரு.. நம்ம மரமண்டைகளுக்குஒரைக்கிற மாறி.. (மரமண்டைகள் அல்லாதவர்கள் மன்னிக்கவும்)

ஆனா சமீபமா நாம அத ஒடைச்சிட்டோம்..

வாங்க அத ஒட்ட வெப்போம். இனியும் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருக்குறதுல பயன் இல்லை..

மொதல்ல நமக்குத் தெரிஞ்ச விஷயங்கள நாம நம்பணும்.

நாம இப்ப அனுபவிக்கிற விளைவுகள் எல்லாம் நாம நேத்து செஞ்ச ஆப்புகள் தான்.. நாம நம்ம இஷ்டத்துக்கு நம்ம பூமிய செதுக்கீட்டோம்.. நமக்கு இன்னும் கொஞ்ச அவகாசம் தான் இருக்கு..

நாம செய்யப் போற சிறு சிறு நல்ல காரியங்கள செய்யாம உட்டுட்டா இந்த பூமி வரப்போற நூற்றாண்டுல எப்புடி தொண்ணூறு கோடி மக்களோட சுமையைத் தாங்கப் போகுது, ..?

இத எங்க அம்மா அப்பா அப்புறம் வயசானவங்க கிட்ட சொன்னா என்ன ரியாக்ஷன் இருக்கும்.. நீங்களே சொல்லுங்க.. அதனால தான் சொல்றேன் நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு நாம சொல்லித்தரோனும். அட வாழ்ந்து காட்டணும். அதுக்கு நமக்கு பல விஷயங்கள் தெளிவாகணும். கீழ வர்ற விஷயங்கள் மொதல்ல நம்ம புத்திக்கு, அப்புறம் உபதேசம் பண்றதுக்கு.. ஓகே...?!

உலகத்துல இருக்குற 80% வளங்களை எல்லாம் வெறும் 20% மக்கள் தான் உபயோகப் படுத்துறாங்க.. அட பத்து வீட்டு சாப்பாட்ட ஒருத்தன் உக்காந்து சாப்டா மத்தவணுக எங்க போறது..?

உலக நாடுகள் எல்லாம் நான் பெரியவனா, நீ பெரியவான்னு காமிக்கரதுக்காக, தங்களோட நாட்டுக்குச் செலவு பன்றத விட பன்னிரண்டு மடங்கு அதிகமா தங்களோட ராணுவத்துக்கு செலவு பண்றாங்க.. வளங்கள் எப்படி வீணாகுதுன்னு பாருங்க மக்களே..

குடிக்க சுகாதாரமான தண்ணி கெடைக்காம உலகத்துல தெனமும் சாகரவங்க எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஐயாயிரம் பேர்..

சுமார் நூறு கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணி கெடைக்கரதில்லை.

நூறு கோடி மக்கள் பசி பட்டினியால வாடப் போறாங்க .. வாடப் போறோம்.. வெளைச்சல் இல்லாதப்ப பணத்தையா தின்ன முடியும்...?

பூமியில விளைவிக்கிற தனியங்கள்ள 50% ற்கும் மேல பயோ எரிபொருளுக்கும், அப்புறம், மாமிசத்துக்காக வளர்க்குற கால நடைங்களுக்கும் தான் போய்ச் சேருது.. ஆடு மாடுகள், மேய்ச்சல் நிலங்கள் இல்லாத பெரிய பெரிய நகரங்களுக்கும் மாமிசங்கள் டின்'னுல அடைக்கப் பட்டு கொண்டு போகப் படுதே.. அது இப்படித்தான்..

40% க்கும் மேலான விவசாய நிலங்கள் கடுமையா பாதிக்கப் பட்டிருக்கு... மண்ணுல சத்து இல்ல..

ஒவ்வொரு வருஷமும் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காணாம போய்க்கிட்டிருக்கு.. கேட்டாலே வயிறு எரியுது...

நாலுல ஒரு பங்கு மிருகங்கள், எட்டுல ஒரு பங்கு பறவைகள், மூணுல ஒரு பங்கு பல்லி மாறி சிறு உயிரினங்கள் வாழ முடியாத நிலைமை உருவாகியிருக்கு..

உயிரினங்கள் சாகுற விகிதாச்சாரம், முன் எப்போதும் இல்லாமல் ஆயிரம் மடங்கு அதிகமா இருக்கு..உலகத்துல முக்கால் பங்கு மீன்பிடிப்பு பகுதிகள் ஆல்ரெடி அழிஞ்சாச்சு..

கடந்த 15 வருஷமா கணக்கெடுத்த வெப்ப நிலை தான் பூமியில இதுவரை ரெகார்ட் செஞ்ச வெப்ப நிலையிலியே அதிகமாம்..

40 வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட பனிப்பாறைகள் 40% குறைஞ்சிடிச்சாம்..

இதே நிலை நீடிச்சிசுன்னா, 2050ல (பூமி அழியாம இருந்துச்சுன்னா), இருபது கோடி மக்கள் காலநிலை அகதிகளா இருப்போம் (climate refugees).நாம பண்ற விஷயங்களோட விலை ரொம்ப அதிகம், பாவம் அதனால, உலகத்துல எங்கயோ வாழுற அப்பாவி மக்கள் அந்த விலையைக் குடுத்து அகதிகளா மாறிக்கிட்டு இருக்காங்க.. பாலைவனங்கள்ள உருவாகியிருக்கிற லட்சக் கணக்கான அகதிகள் முகாம்கள் தான் இதற்க்கு சாட்சி..

பேராசை பிடித்த நாடுகள், சரித்திரத்துல இடம் பெறனும்ங்கறதுக்காக செவுத்தக் கட்டி, பிரிவினை செஞ்சு, பல மக்களை துன்பத்துல ஆழ்த்தி, அதன் மூலம் கொஞ்சம் மக்கள் சந்தோஷத்தைப் பாது காக்கறாங்க..

இன்னும் வெட்டிப் பேச்சு பேசிப் பிரயோசனம் இல்ல.. ஒரு தனி மனிதனால அந்த செவுத்த ஒடச்சு சுக்கு நூறா ஆக்க முடியுமா...? முடியும் நண்பர்களே..

இருபதே வருடங்களில் இத்தன களேபரங்கள் பண்ணி வெச்ச நமக்கு இத சரி பண்றது என்ன பெரிய மேட்டர்...?

அதற்க்கு சில உதாரங்கள இப்ப பாப்போம்.. ஒரு பெரு மூச்சு விட்டுகோங்க...

லெசோதோ ங்கற நாடு உலகத்துலேயே மிக மோசமான வறுமை நாடுகள் பட்டியல்ல இருக்கு, அவங்க இப்ப அதிக அளவு பணத்த தங்களோட நாட்டு குழந்தைங்க படிப்புக்காக செலவு பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.. விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..

ச்சே.. கொஞ்சம் எழுத ஆரம்பிச்சாலே பதிவு லெந்த் ஆயிடுது.. அடுத்த பதிவுல கண்டினியு பண்றேன்.. இப்ப கை வலிக்கல..

11 பின்னூட்டம்:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மன்னிக்கணும் நண்பர்களே... பதிவு ரொம்ப நீளம் ஆயிடிச்சு...

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எப்பொழுதும் தோள் கொடுக்கும் அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு உளம் கனிந்த நன்றிகள்..

வேலன். said...

நல்ல பதிவு பிரகாஷ்...பதிவு நீளமாக இருந்தாலும் படிக்கும் சுவாரஸ்யத்தில் நீளம் தெரியவில்லை.
வாழ்க வளமுடன்,
வேலன்.

ஷங்கர்.. said...

நான் மொத்தமாய் படித்துவிட்டு வருகிறேன் பிரகாஷ்..:))

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
This comment has been removed by the author.
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி வேலன் அவர்களே..

ஆனால் இந்த நீளப் பிரச்சினை எனக்கு வெகு நாளாகவே உள்ளது.. என்னோட பின்னூட்டங்களை நீங்கள் பார்த்திருந்தால் புரியும்..

குறைக்க முயல்கிறேன்..

தொடர்ந்து வாருங்கள்..

இந்த விஷயங்களை இளைய தலைமுறையினருக்கு எப்படி கொண்டு செல்வது என்பதையும் முவையுங்கள்.. எனக்கு உம்மைப் போன்றோரின் கருத்துகள் கண்டிப்பாக தேவை..

நன்றி..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க ஷங்கர்...

மொத்தமாகப் படியுங்கள்.. மற்றும் இனி வரும் பதிவுகளுக்கும் தொடர்ந்து இணைந்து இருங்கள்.. திருத்தங்கள் ஏதும் இருந்தால் கூறுங்கள்... நன்றி...

arumbavur said...

இயற்கை பற்றி எழுத சில நல்ல வலை தளங்களே உள்ளானே அதில் மிகவும் சிறப்பான ஆராய்ச்சி செய்து எழுதும் தளங்களில் உங்கள் தளமும் ஒன்று என்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

இயற்கை அழித்து செயற்கை பிரமாண்டத்தை காட்டினாலும்
இயற்கை அழிவின் பயங்கரம் எண்ணி பார்க்க முடியாது .
இன்று நம் வாழ்க்கை மட்டும் என்னும் மனிதன் நாளைய சந்ததிக்கு என கொஞ்சமாவது புவி உலகில் கொஞ்சமாவது நன்மை செய்து சென்றால் சந்தோசமே
சிறு சிறு துளிதான் பெரும் கடலாக மாறும்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வாங்க அரும்பவூர்..

அனைவரும் உங்களைப் போன்றே சிந்திக்க வேண்டும் என்பதே என் கருத்து. உங்களைப் போன்றோரின் கருத்துக்களும், மற்றும் ஊக்கமும் கண்டிப்பாக எனக்குத் தேவை.
தொடர்ந்து விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
நன்றி..

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்

நீளமா எழுதினாலும் இறுதியில கை வலிக்கல பாத்தீங்களா - பிடித்த செயலை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது கை வலிக்காது நண்பரே !

நல்லதொரு இடுகை நண்பரே
தொடர்க அரும்பணியினை
நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனா

Post a Comment