Saturday, January 23, 2010

கார்பன் சுவடுகள் - பாகம் 2


கார்பன் சுவடுகள்'னா என்னன்னு போன பாகத்துல பாத்தோம்.

காலைல எந்திரிச்சதிலிருந்து, தண்ணி சூடு பண்ண வாட்டர் ஹீட்டர்,சவரம் பண்ண, எலெக்ட்ரிக் ரேசர், தலை காய வெக்க ஹீட்டர், துணி அயன் பண்ண அயன் பாக்ஸ், அப்புறம் ஆபீஸ்க்கு போனா, எசி, கம்ப்யுட்டர், காபி மசின்,சாயங்காலம், வீட்டுக்கு வந்தா,பேன், லைட்டு, டிவி, ஆடியோ சிஸ்டம் அப்புறம் வீட்ல யூஸ் பண்ற வாஷிங் மசின், பிரிட்ஜ்,கிரைண்டர், மிக்சி, செல் போன் சார்ஜர் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் எல்லாமே கரன்ட்ல தான் ஓடுது..(இருங்கப்பா மூச்சு வாங்கிக்கறேன்.)நாம எவ்வளுவுக்கு எவ்வளவு கரண்ட்ட யூஸ் பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கமிவா, வெளியாகுங்கறது தான் சேதி.
அட ஆமாங்க...கரண்ட்டு,எங்கிருந்து வருது.., அத எப்படி உற்பத்தி பண்றாங்கன்னு உங்களுக்கு தெரியும்.அப்ப நம்ம எவ்வளவுக்கு எவ்வளவு செலவு பண்றமோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அத மறுபடியும் உற்பத்தி பண்ணியாகணும்..

அடுத்ததா, நாம யூஸ் பண்ற வண்டிக.. இப்பெல்லாம் பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்குப் போகனும்னாகூட வண்டிய எடுத்துட்டு தான் போகிறோம். 5000 ரூவா சம்பாரிக்க ஆரம்பிச்ச உடனே பைக்கு.. அதுவே 15000 சம்பாரிச்சா காரு... இதுல கொறஞ்ச வட்டி, ஒரு லட்சத்துக்கு காரு, வீட்டுக்கு வீடு ஒரு வண்டின்னு விளம்பரம் எல்லாம் போடராணுக.. இதெல்லாம் பெட்ரோல், டீஸல்ல, இயற்கை வாயுல தானே ஓடுது..? நம்ம வந்டிகள்ள இருந்த வர்ற புகையில இருக்குற கமிவா வே போதும்.. காத்த வீணாக்கறதுக்கு.

அடுத்ததா நாம வாங்கற பொருட்கள். எனக்குத் தெரிஞ்சு, நாம சாப்பிடற சாப்பாட்டுல இருந்து, நாம போடற துணிமணிகள், வீட்டுல வாங்கி வெச்சிருக்கிற அலங்காரப் பொருட்கள் வரை நம்ம ஊர்ல செய்யறது இல்லை.எல்லாமே வேறொரு இடத்துல இருந்து, நமக்காக கொண்டு வந்தது தான். அந்த காலத்துல வாழறதுக்கு, தண்ணியும் விவசாய பூமியும் இருந்தாப் போதும்னு இருந்துச்சு.. அதனால ஆத்துக்குப் பக்கமா குடி போனாங்க.. ஆனா இப்ப அப்டியில்ல.. தண்ணியில்லா காடா இருந்தாக்கூட குடிக்க கொக்க கோலா கெடைக்குமப்பா.. ஆனா இதெல்லாம் எங்கிருந்து எப்படி வருது.. கப்பல்ல, ப்ளைன்ல, லாரில'ன்னு ஏகப்பட்ட போக்குவரத்துகள். அதுக்கு ஆவுற செலவெல்லாம், நம்ம தலைல தான் வந்து விடியுது.. இத்தன வண்டி கார்களுக்கெல்லாம் எரிபொருள் வேணுமில்ல.. இத்தன வண்டிகளும் ஓடும்போது, எத்தன புகை வருது.. அப்பா தலையே சுத்துது...

இதெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்ச பெரிய விஷயங்கள். இதில்லாம, பழைய குப்பைய போசுக்குறது, பணிடிகையன்னைக்கு டயர எரிக்கிறது, பந்த் அன்னைக்கு பஸ்ஸ கொளுத்துரதுன்னு நம்மாளுக பண்ற அலம்பல்கள் எக்கச்சக்கம். எல்லாப் புகையும் மறைஞ்சு காத்தோட போகுதுன்னு நினைக்கிறாங்க.. காதோட தான் போகுது.. ஆனா மறைஞ்சு போகல..நமக்கு வெட்டு வெக்க ஒளிஞ்சு இருக்குது..

இப்ப தெரிஞ்சிருக்கும் கார்பன் சுவடுகள நாம எப்படி உருவாக்கரோம்னு.. இந்த ஆடு மாடுக எல்லாம் அது அது எப்படி இருந்துச்சோ அப்படியே தான் இருக்குதுங்க.. இந்த மனுஷப் பயலுகதான் இந்த பூமிய போட்டு டரியல் பண்ணி வெச்சிருக்கோம்.

சரி.. இனி அடுத்த பகுதியில, இந்த கார்பன் சுவடுகளால என்னென்ன களேபரம் நடக்குதுன்னும் அப்புறம் அத எப்படி தடுக்கலாமுன்னும் நாம பாக்கலாம்..(அப்பா ரொம்ப நேரமா டைப் அடிச்சு கை வலிக்குது..)

12 பின்னூட்டம்:

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அடுத்த பாகத்திலேயே முடிச்சுடுவேன்னு நெனைக்கிறேன்....

அண்ணாமலையான் said...

பகிர்வுக்கு நன்றி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அண்ணா வாங்கண்ணா... ரொம்ப நன்றி..

வேலன். said...

நல்ல பதிவு பிரகாஷ் ...இயற்கையை மதிப்பதில்- காப்பாற்றுவதில் நான் உங்கள் கட்சி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நன்றி வேலன்.. தொடர்ந்து அடுத்த பாகத்திற்கும் வாருங்கள்....

BONIFACE said...

//இப்பெல்லாம் பக்கத்துல இருக்குற மளிகைக் கடைக்குப் போகனும்னாகூட வண்டிய எடுத்துட்டு தான் போகிறோம்//
அடுத்த தலைமுறை பற்றி கவலையே இல்ல, சுயநலக்காரர்கள்.....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இப்பெல்லாம் செருப்பு தேஞ்சதுக்கு அப்புறமா புது செருப்பு வாங்கலாம்னு நெனச்சா அது முடியாத காரியம். ஏன்னா, நடந்தாதானே தேயரதுக்கு..

நன்றி boniface.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

BONIFACE said...

ur mail id???

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

successprakash@gmail.com

பட்டாபட்டி.. said...

பதிவு நல்லா போயிட்டிருக்கு சாமியோவ்..
ஆனா இப்பவே சொல்லிட்டேன்..
கடைசியா , நம்ம சைட்-ல என்ன பண்ணோனுமுனு
தெளிவா சொல்லிடுங்க.. ஏதோ அடுத்த ஜெனரேசனுக்குப, நம்மநாளா முடிஞ்ச உதவிய
பண்ணிட்டுப் போவோம்..
அன்புடன் பட்டாபட்டி..

< பட்டாபட்டியில இருந்து உங்க ப்ளாக்கு
லிங்க் குடுத்துள்ளேன்..பயபுள்ளைக படிச்சு
கொஞ்சமாவது யோசிக்கட்டும்...>

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அண்ணா.. பாகம்-3 ல நாம செய்ய வேண்டிய விஷயங்கள்ல கொஞ்சம் சொல்லீட்டேன்.. இத பத்தி நெறைய எழுத வேண்டி இருக்கு.. தனிய பதிவு ரெடியாயிட்டு இருக்கு..

அப்புறம் உங்க ப்ளாக்'ல லிங்க் கொடுத்ததற்கு உளம் கனிந்த நன்றிகள்..

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்

நல்ல சிந்தனையில் உதித்த நல்ல தொரு இடுகை. படிக்கும் போது நமக்குத் தெரிந்தவை தானே இவை அனைத்தும் - ஏன் நம்மால் ஒன்றும் செய்ய இயல் வில்லை என நினைத்தேன். ஆனால் இது போன்ற கிரியா ஊக்கிகள் இடுகைகளாகத் தேவைப் படுகின்றன.
நன்றி ந்ண்பரே
நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனா

Post a Comment