Friday, March 5, 2010

எல்லாம் பழகிப் போச்சு....


"எப்படிங்க மேட்டுப்பாளையம் ரோட்டுல வண்டி ஓட்டிட்டு வர்றீங்க...?" எப்போதாவது நான் ஆபீஸ்க்கு வண்டி எடுத்திட்டு போனா அதிகமான பேரு கேக்குற கேள்வி.. கோயம்பத்தூர்ல இப்ப வண்டி ஓட்றதே கஷ்டம், அதுவும் மேட்டுப்பாளையம் ரோடுன்னா அவன் அவன் அரண்டு ஓடுறான்..ஆமாங்க ரொம்ப சின்ன ரோடு, அங்க அங்க ஆள விழுங்குற அளவுக்கு குண்டுங்குழி. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு பாடும்போது எம்.ஜி.ஆர் குலுங்குவாரே அந்த மாறி தான் வண்டி ஓட்டனும்..


மொதல்ல கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா "அப்புறம் பழகிப் போச்சு.." அட இந்த ப்ரைவேட் பஸ் காரனுக ஒருத்தன ஒருத்தன் ஓவர் டேக் பண்றதுக்கு காட்டுற சாகசங்கள் சொல்லி மாளாது.. விஜயகாந்த் மாறி ரெண்டு வீல்ல வண்டி ஓட்ரானுக....கம்பிய புடிச்சி நின்னுட்டு போறவனுக வீடு போய்ச் சேர்ரதுக்குள்ள பாட்டாப் பட்டி கிழிஞ்சு டார் டார் ஆய்டும்..அதுவும் கடைசி படிய விட்டு கால கீழ வெக்கரதுக்குள்ள விசில் அடிப்பான் பாருங்க.. தெறம இருந்தா பொழச்சுக்கலாம்..50 பேர் உயிரை விட, அஞ்சு நிமிஷம் முன்னாடி போறதுதான் அவனுக்கு முக்கியம்.. எப்படி இவனுகளால முடியுது...? "எல்லாம் பழகிப் போச்சு.."


கரண்டு போனா வெளக்கு வெக்க பழகிப் போச்சு..காசு குடுத்தா ஓட்டு போட பழகிப் போச்சு.. வெலையேருனா நொந்துக்கிட பழகிப் போச்சு.. எங்க கம்பெனில வேல பாக்குற ஒரு ஜெர்மன் காரர் தெனமும் நொந்துக்குவார்.. இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு.. "எல்லாம் பழகிப் போச்சு.." இது தான் பதில்.. முதலில் அவமானமாத் தான் இருந்துச்சு.. அவர் அடிக்கடி அவர் புலம்புறதால் "அதுவும் பழகிப் போச்சு..."


ஏன் இதெல்லாம் பழகிப் போச்சு...? வெளிப்படையாக உள்ள நம்மோட சோம்பேறித் தனத்தினால தான்.. ஒரு தனி மனுஷனா ஒரே பாட்டுல இந்த ஊரத் திருத்தறது நம்ம ஊரு ஹீரோகளால தான் முடியும்(அதையும் பாத்து நமக்கு பழகிப் போச்சு..) நான் எப்போதும் சொல்றது நம்மளோட தனி மனித ஒழுக்கத்தைப் பத்தி தான்.. மாற்றங்கள் என்னைக்குமே கொஞ்சம் கொஞ்சமாத் தான் வரும்..


நாம் ஏமாளியாக இருக்க ஒத்துக் கொள்வதினால் தான் நம்மை ஏமாற்றத் துணிகிறார்கள்.. சில விஷயங்களைக் கூர்ந்து கவனித்த போது கிடைத்தவை இங்கே..

ஒரு கார் விளம்பரம்.. ஒரு அம்மா தன் கைக்குழந்தையுடன் ஒரு காரில் தூங்குகிறாள்.. அந்த வண்டி ஒரு குண்டுங்குழி உள்ள சாலையைக் கடந்து செல்கிறது.. உள்ளுக்குள் ஒரு ஆட்டமும் இல்லை.."இத்தாலியன் இன்ஜினியரிங்.. மேட் பார் இந்தியன் ரோட்ஸ்.." என்னைக்காவது யோசித்திருப்போமா...அவனுடைய பொருளை இங்கே விற்பதற்கு நம்முடைய நிலைமைய கிண்டல் பண்றான்.. உண்மையைத்தான் சொல்றான்.. ஆனால் அவனுக்கு என்ன தைரியம்..? ஏன்னா, நம்மளோட மனச நல்லா படிச்சு வெச்சிருக்கான்..நம்ம ஆளுக காரையும் அதன் தரத்தையும் பார்த்து வியக்க மட்டுமே செய்வாங்க, ரோடு ஏன் இப்டி இருக்குன்னு வருத்தப் பட மாட்டாங்க'ன்னு அவனுக்கு நல்லாத் தெரியும்..

அருமையான ஒரு தொழில்நுட்பத்தை நம்ம ஆளுகளுக்காக மாற்றி அமைக்கிறாங்க.. ஏன்னா நாம மாற மாட்டோம்..

இந்தியாவில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களும், நம் தரத்திற்காக மாற்றப் படுகின்றன... உண்மையைச் சொல்லப் போனால் தரம் குறைக்கப் படுகின்றன.

நான் கார்மென்ட்சுல வேல செஞ்சப்போ, அங்க துணிகள தரம் பிரிப்பாங்க. முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடும். மூன்றாம் தரப் பொருட்கள்
(அதாவது தரம் குறைந்த)நம் உள்ளூரில் விற்பனைக்கு விடப் படுகின்றன.. அநேகமாக நாம் அணியும் பிராண்டட் ஷர்ட் பேண்ட் எல்லாம் இந்த ரகமாகத்தான் இருக்கும்..ஒரு தாய் தன் தூய தாய்ப்பாலை விற்பனை செய்து விட்டு குழந்தைக்கு மிச்ச மீதியைக் கொடுத்தால் நாம் ஒத்துக் கொள்வோமா நண்பர்களே..?


மற்றவர்களுக்கு நல்ல தரத்தைக் கொடுப்பதை நான் தப்புன்னு சொல்ல வரல.. ஆனால் நமக்கு ஏன் அந்த தரம் தேவை இல்லைன்னு தோணுது. நமக்கு இது போதும் என்று நாம் எப்படி முடிவு செய்தோம்..?

இனி மேற்குறிய என்னுடைய சிந்தனையோடு இந்த விளம்பரங்களைப் பாருங்கள்...

"இதோ வந்து விட்டது சேர்வோ என்ஜின் ஆயில்.. இனி கடினமான சாலைகளிலும் உங்கள் எஞ்சினைப் பாதுகாக்கும்.."

"உங்க ஆபீசுக்கு நடந்து நடந்து செருப்பு தேஞ்சு போச்சு.. அட நீங்க பாரகன் ஆபீஸ் சப்பல் போடலையா..?'

இவை வெறும் சாம்பிள் தான்.. இன்னும் எவ்வளவோ உள்ளன..

உடம்பில் போடும் சோப்புக்கு என்ன தேவை..? நல்ல சுத்தம் செய்யும் சொப்பாக இருக்கணும்.. கிரகப் பிரவேசத்திற்கும் சோப்பிற்கும் என்ன சம்பந்தம்..? விளம்பரங்கள், மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம்முடைய இன்றைய மன நிலைமையை படம் போட்டுக் காட்டி கொண்டு தான் இருக்கின்றன..ஆனா நமக்குத் தெரியறதில்ல.. ஏன்னா.."நமக்கு எல்லாமே பழகிப் போச்சு.."

சவுதியில இருக்கும் ரோடுல சாப்பாடு போட்டு கொழம்ப ஊத்தி பெசஞ்சு அடிக்கலாமாம்..அவ்வளவு பளபளன்னு இருக்குமாம்.. ஆட்ட அனக்கமே இல்லாம ரொம்ப தூரம் ஒட்டுனவுங்க தூங்கிடக் கூடாதுங்கரக்காக அங்கங்க வேணுமுன்னே சிறு சிறு மேடு பள்ளங்களை வச்சிருக்காங்களாம். நம்ம தரம்....?

ஜெர்மனியில பெரிய பெரிய நகரங்களிலேயே கூட்டமே கிடையாது. அப்ப கிராமங்கள்ள எப்படி இருக்குமுன்னு யோசியுங்க.. இருந்தாலும் நாலு ரோடு சந்திப்புகள்ள, டிரைவர் வண்டிய நிறுத்தி, ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பொறுமையாப் பாத்துதான் வண்டிய எடுப்பாங்களாம்..நம்ம பொறுப்புணர்ச்சி..?

ஜெர்மனியிலிருந்து என்னோட பிரெண்ட் கெளம்பும்போது மிச்சம் மீதி இருந்த சமையல் பொருட்கள் அத்தனையையும் வீணாக்காமல் வாங்கி வைத்துக் கொண்டார்களாம் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர்.. இதனால் அவர்கள் ஒன்றும் பிச்சைக் காரர்கள் என்று அர்த்தம் இல்லை.. பொருட்கள் வீணாகக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை நம் கண்ணுக்கு எப்போதும் போல் வித்தியாசமாகத் தான் தெரியும்.

அவர்கள் கண்ணோட்டங்கள் சற்று மாறுபட்டவை.. நமக்கு கண்ணோட்டம் உள்ளதா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம் உள்ளது..


வெளிநாடுகள்ல தடை செய்யப் பட்ட பல மாத்திரை மருந்துகள் நம்ம ஊர்ல விற்பனை ஆவது ஏன்..?

ஒண்ணும் இல்லை நண்பர்களே.. நம்முடைய நிலைமையை நாமே தாழ்த்திக்கொள்வதை நாம முதலில் நிறுத்திக்கணும்...அப்புறம் வெட்டி பந்தாவையும் கொஞ்சம் ஓரம் தள்ளி வைக்கணும்.. தரமான பொருட்கள சரியான விலையில் வாங்கணும்.. யாருக்காகவும் நமது தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது...

அதுக்கு முதல்ல நம்மள நாம உயர்வா நினைக்கணும்.. நாம எந்த விதத்திலும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைங்கற உணர்வு எங்க போனாலும் இருக்கணும். இப்பத்திக்கு இந்த பயிற்சி ஒண்ணு போதும்னு நான் நெனைக்கிறேன்..இதே பெருமித உணர்வோட எல்லா விஷயங்களையும் அணுகினா வித்தியாசம் தெரியும். நமது இந்த நிலைமை மாறும்..

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

பி.கு:உங்கள் பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் நான் செல்வது சரியான பாதையா என்பதைத் தீர்மானிக்கும்... நன்றிகள் பல..

70 பின்னூட்டம்:

Chitra said...

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

.......... வரும் என்று நம்புவோம். நம்பும் படியாக நடந்து கொள்வோம். நல்ல பதிவு.

மதுரை சரவணன் said...

செவிடன் காதில் ஊதிய சங்கு. நம்ம நாட்டில எல்லா இடத்திலெயும் ரோடு அப்படி தான். நாமளும் ரோடு மாதிரி பிஞ்சு சுவடு இல்லாம தான் போய்கொண்டு இருக்கிறோம். நல்ல சிந்தனை ஒப்பிட்டு கூறீயிருப்பது அருமை. வாழ்த்துக்கள்

manjoorraja said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் சமீபகாலமாக ஓரளவிற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு மேலும் பரவலாகும் என நம்பலாம்.

உங்கள் கனவு நினைவாக இன்னும் சில காலம் ஆகும். ஆனால் நிச்சயம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.

நல்லதொரு பதிவு. நன்றி.

பின்குறிப்பு: மேட்டுப்பாளையம் சாலையில் குண்டும் குழியும் அதிகம் என்பதை விட தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் அநியாய வேகமும் முந்தலுமே விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் என்பது என் கருத்து. அதே சாலையில் அதிகம் புழங்கியதால் சொல்கிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல ஆதங்கம், வாழ்த்துக்கள் பிரகாஷ்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..
உங்கள் பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் நான் செல்வது சரியான பாதையா என்பதைத் தீர்மானிக்கும்... நன்றிகள் பல
//

பிரகாசு.. பதிவை படித்துவிட்டேன்..
எனக்கு கொஞ்சம் டீசண்டா எழுதவராது..எங்கெங்கு கத்திரி வைக்கவேண்டுமோ,
வைத்து..... பப்ளிஸ் பண்ணிக்கோங்க பிரதர்..

நம்மாளு வீதியில நடந்துபோகும்போது , வீதியில 100 ரூபாய் நோட்டு கட்டப் பார்க்கிறான்..
இந்த சூழ் நிலையில.. என்ன நடக்கும்..?

1.. பணத்த எடுத்துட்டு , மண்ணை தட்டிவிட்டு போயிட்டேயிருக்கலாம்..
2.. சே..சே..இது யாரோட பணமோ?..நமக்கு எதுக்கு அடுத்தவனுடைய சாபம்..அப்படினு...பணத்தை எடுக்காம , தாண்டிப் போயிடலாம்..
3..அங்கு நின்றுகொண்டு..எடுக்கலாமா..வேண்டாமா?. எடுப்பதை எவனாவது பார்த்த.. கேவலமா நினைப்பாங்களோ?..ஒரு வேளை,
லட்சுமியே , நமக்கு கதவை தட்டி பணத்தை கொடுக்குமோ?..யாரும் பார்க்காத போது எடுத்துக்களாமா? அப்படினு பக்கத்தி நின்றூகொண்டு
மண்டையை உடைப்பது அடுத்த வகை..


அப்புறம்.."இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!" எனச்
சொல்லியிருக்கிறீர்கள்.. அதில் கருத்து(இலக்கண)ப்பிழை உள்ளது

"இந்தியர்களின் தொழில்நுட்பம் இப்போது மெருகேறி வெளி நாட்டவர்களுக்கு...!" ஓ.கே

நாம் எந்த வகை..இதைபற்றி அலச வருகிறேன் இன்றிரவு..

ரைட்..ஸ்டார்ட் மீசிக்..

சாமக்கோடங்கி said...

//Chitra said...

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

.......... வரும் என்று நம்புவோம். நம்பும் படியாக நடந்து கொள்வோம். நல்ல பதிவு.
//

கண்டிப்பாக நம்புவோம்...

நன்றி சித்ரா...

சாமக்கோடங்கி said...

//Madurai Saravanan said...

செவிடன் காதில் ஊதிய சங்கு. நம்ம நாட்டில எல்லா இடத்திலெயும் ரோடு அப்படி தான். நாமளும் ரோடு மாதிரி பிஞ்சு சுவடு இல்லாம தான் போய்கொண்டு இருக்கிறோம். நல்ல சிந்தனை ஒப்பிட்டு கூறீயிருப்பது அருமை. வாழ்த்துக்கள்
//
நாம் செவிடர்கள் அல்ல சரவணன்..காதில் பல விஷயங்கள் வந்து அடைத்து உள்ளன.. அடைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக திறக்க முற்படுவோம்.. அப்புறம் செவிடர்கள் போல் நடிப்பவர்களிடம் நாம் ஒன்றும் செய்ய முடியாது..நாம் செவிடர்கள் இல்லை என்று நம்புகிறேன்.. என்ன சொல்கிறீர் சரவணன்....?

ஸ்ரீராம். said...

Voted
Agreed.

சாமக்கோடங்கி said...

//மஞ்சூர் ராசா said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால் சமீபகாலமாக ஓரளவிற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு மேலும் பரவலாகும் என நம்பலாம்.

உங்கள் கனவு நினைவாக இன்னும் சில காலம் ஆகும். ஆனால் நிச்சயம் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது.

நல்லதொரு பதிவு. நன்றி.

பின்குறிப்பு: மேட்டுப்பாளையம் சாலையில் குண்டும் குழியும் அதிகம் என்பதை விட தனியார் மற்றும் அரசு பேருந்துகளின் அநியாய வேகமும் முந்தலுமே விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் என்பது என் கருத்து. அதே சாலையில் அதிகம் புழங்கியதால் சொல்கிறேன்.//


நீங்கள் சொல்வது சரிதான்.. இரண்டு பேருந்துகள் சண்டை போட்டுக்கொண்டே வரும்போது, எதிரில் வரும் யாவரும் அவர்களுக்கு ஒரு துரும்பே.. ரோட்டை விட்டு கீழே இறக்கி விடுவர்... அதில் மாட்டி படுகாயமடைபவர்கள் மற்றும் உயிரிழப்பவர் பலர்..

ஆமாம் மஞ்சூர்.. நீங்கள் எந்த ஊர் என்பதைச் சொல்லவே இல்லையே...

சாமக்கோடங்கி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல ஆதங்கம், வாழ்த்துக்கள் பிரகாஷ்.
//

ஆதங்கம் ஆதங்கமாகவே போய் விடக் கூடாது..என்ன சைவக்கொத்துப்பரோட்டா அவர்களே...?

நன்றி உங்கள் கருத்துக்கு..

நாடோடி said...

//நான் எப்போதும் சொல்றது நம்மளோட தனி மனித ஒழுக்கத்தைப் பத்தி தான்.. //

என்னுடைய கருத்தும் இதுவே தான்..விரைவில் இது நடக்கும் என்று நம்புவோம்.

சாமக்கோடங்கி said...

வாங்க பட்டாபட்டி..

உங்கள் பின்னூட்டங்கள் பலவற்றைப் பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன்.. வெறுமனே வந்து படித்துவிட்டு பின்னூட்டம் இட வேண்டுமே என்று நினைக்காமல்(உண்மையைச் சொன்னால் நானும் சில சமயங்களில் அந்த மாறி பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டு இருந்தேன்..)கருத்துகளைப் படித்து, தவறு இருந்தால் சுட்டிக் காட்டி, உங்கள் கருத்துகளையும் பதிக்கும் உங்களைப் போன்றோர் என்னைப் போன்றோருக்கு மிகச் சிறந்த முன்னோடி...

அப்புறம்..

//அப்புறம்.."இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!" எனச்
சொல்லியிருக்கிறீர்கள்.. அதில் கருத்து(இலக்கண)ப்பிழை உள்ளது

"இந்தியர்களின் தொழில்நுட்பம் இப்போது மெருகேறி வெளி நாட்டவர்களுக்கு...!" ஓ.கே//

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி.. ஆனால், உற்று கவனித்தீர்கள் என்றால், இந்தியர்களின் உழைப்புத் தரம் ஏற்கனவே உலகத் தரத்தை மிஞ்சியே நிற்கிறது... நாசாவில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கையே இதற்குச் சான்று..

இந்தியர்களின் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது..

ஆனால் நான் சொல்ல வருவது இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை..

நாம் வேலையில் காட்டும் கவனிப்பும் அக்கறையும், நம் சொந்த வாழ்க்கையில் காட்டுகிறோமா என்பதே என் கேள்வி..
நம் தரம் மாறும்போது விற்பனையாளர்கள் அவர்களாக மாறுவார்கள்..

இப்போது மீண்டும் படியுங்கள்..

//"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!" //

Vadielan R said...

மிக அருமையான பதிவு நண்பரே நம்மை நாம் உயர்வாக நினைத்தால் போதும் நம்மையும் நம் நாட்டையும் அடுத்த நாட்டுக்காரன் உயர்வாக நினைக்க ஆரம்பித்து விடுவான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
தவறு இருந்தால் சுட்டிக் காட்டி, உங்கள் கருத்துகளையும் பதிக்கும் உங்களைப் போன்றோர் என்னைப் போன்றோருக்கு மிகச் சிறந்த முன்னோடி...
//

கோயமுத்தூர் குசும்பு..?
நீங்கள் சொல்வது புரிகிறது நண்பரே..
நானும் ஒரு NRI - தான்..
நாசா பற்றிச்சொல்கிறீர்களே..?
10 இந்தியர்களின் மேலதிகாரியாக , ஏதோ ஒரு வெளி நாட்டான் இருப்பான்..
அதில் உழைப்பு மட்டும் தான்.......... நம்முடையது..அதில் உருவாகும் பலன் அவர்களுடையது..

என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்.. உழைப்பு +பலன்+ பெருமை எல்லாம் நம்முடையாதாக இருக்க வேண்டும் என்பதே..

ILLUMINATI said...

நல்லா இருக்கு தல....
உங்க ஆதங்கம் ஞாயமானது தான்.
ஆனா நம்ம ஆளுங்களுக்கு ஊரு ஞாயம் பேசவே நேரம் பத்தாதப்போ இதெல்லாம் எங்க கவனிப்பானுங்க?

சாமக்கோடங்கி said...

//டிவேலன் ஆர். said...

மிக அருமையான பதிவு நண்பரே நம்மை நாம் உயர்வாக நினைத்தால் போதும் நம்மையும் நம் நாட்டையும் அடுத்த நாட்டுக்காரன் உயர்வாக நினைக்க ஆரம்பித்து விடுவான்.//

வருக.. இந்த வகையான பின்னூட்டத்தை தான் நான் எதிர்பார்த்திருந்தேன்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால்.. உழைப்பு +பலன்+ பெருமை எல்லாம் நம்முடையாதாக இருக்க வேண்டும் என்பதே..//

இதை நான் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்....

நன்றி..

சாமக்கோடங்கி said...

ILLUMINATI said...

//நல்லா இருக்கு தல....
உங்க ஆதங்கம் ஞாயமானது தான்.
ஆனா நம்ம ஆளுங்களுக்கு ஊரு ஞாயம் பேசவே நேரம் பத்தாதப்போ இதெல்லாம் எங்க கவனிப்பானுங்க?//

ஆனா நான் ரொம்ப பெரிய, திணிக்க முடியாத விஷயங்களைச் சொல்லவே மாட்டேன்.. சின்ன சின்ன விஷயங்கள் தான்..

நன்றி இல்லுமி..

Paleo God said...

நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தெரியல..ஆனா நான் பதிவு எழுதறத விட உங்கள மாதிரி நண்பர்கள் பதிவு எழுதாம போயிட்டா அதுதான் இழப்பு என்று உங்கள் பெயரிலேயே ஒரு பதிவு போட்டிருந்தேன்.. அதை நிரூபிச்சிகிட்டே வர்ரீங்க..:) தொடர்ந்து நல்ல விஷயங்கள் எழுதுங்கள் பிரகாஷ்..:) நன்றி.!.

சாமக்கோடங்கி said...

உங்கள் புன்னகைக்கு நன்றி வெள்ளிநிலா ஷர்புதீன்..

சாமக்கோடங்கி said...

வாங்க ஷங்கர்....

உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள்.. தொடர்ந்து இணைந்து இருங்கள்..

சாமக்கோடங்கி said...

ஷங்கர்...

படிச்சேன்.. நெகிழ்ந்தேன்... பெருமிதமடைந்தேன்..

என் அங்கீகாரத்தை உணர்கிறேன். கண்டிப்பாக தொடர்ந்து நல்ல விஷயங்களை எழுதுகிறேன்...

அண்ணாமலையான் said...

ஆஹா பிரமாதம். சரி அடுத்த வேலைய பாப்போமா?

சாமக்கோடங்கி said...

ஆஹா.. வாங்கண்ணா.. உங்களுக்காக ரொம்ப நாளாக வெயிட்டிங்..

அப்புறம் என்னுடைய முந்தைய பதிப்பையும் படித்து விட்டுப் போங்கள்..

உங்கள் பகுதிக்கு அடிக்கடி வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்...

நன்றி..

தமிழ் உதயம் said...

இங்க எதையும் நம்மால் மாற்ற முடியுதோ இல்லையோ, நம்மை நாம் முதலில் மாற்றி கொள்ளலாம். இங்க நம் பிரச்சனையே அது தான், அத செய்யாதே, இத செய்யாதேன்னு சொல்லிட்டு அதயே நாம் செய்வது தான். மாற்றம் நம்மில் இருந்து உருவாகட்டும். சரி தானா.

மங்குனி அமைச்சர் said...

தூத்துக்குடி துறை முகத்தில் 210 தன் கழிவுகளை கண்டைனர் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு (ஒரு வேல லஞ்ச பேரம் படியலையோ ) திரும்ப அதே நாட்டிற்கு அனுப்ப போகிறார்கள். பழைய பேப்பர் கழிவு என்று கம்பனி சொல்லி இறக்குமதி செய்துள்ளது , ஆனால் அதில் எல்லாம் உள்ளாடைகள் , பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் இருக்கின்றதாம்.
நம் நாட்டை நாமே குப்பை மேடு ஆக்கிகொண்டோம் அடுத்தவனை குற்றம் சொல்லி என்ன பயன் .

வினோத் கெளதம் said...

என்ன பண்றது சொன்னமாதிரி அப்படியே பழகியாச்சு மாறனும்..மாறவேண்டும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வினோத்கெளதம் said...
மாறனும்..மாறவேண்டும்..
//

சார்.. கலாவா..இல்ல தயாவா சார்..
சஸ்பென்ஸா இருக்கு சார்..

அன்புடன் நான் said...

உங்களின் இந்த பதிவு மிக சக்திவாய்ந்ததாகவே கருதுகிறேன்...
குறையையும்... சுட்டிகாட்டி அதற்கு தீர்வையும் சொல்லியிருக்கிங்க....
ஆனால் மக்களின் புரிந்துணர்வு குறைவு என்றே எண்ணத்தோன்றுகிறது

உங்க உணர்வுக்கும்.... பகிர்வுக்கும்... என் மரியாதைக்குரிய வணக்கங்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல சிந்தனை ஒப்பிட்டு கூறீயிருப்பது அருமை. வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

படிச்ச உடனே வந்த ஞாபகம் வந்த நகைச்சுவை ..கொஞ்ச பழசுதான் ஆனாலும்
'' நாப்பது நாளைக்கு அப்புறம் கஷ்டம் எல்லாம் சரியாகி போயிரும் ''
'' அதெப்படி நாப்பது நாள்ல எல்லாம் சரியாய் போயிருமா ''
அதெங்க? , அந்த கஷ்டம் '' உனக்கு பழகி போயிரும் ''
மேட்டுபாளையம் ரோட்டை , சரிபண்றோம் , அகல படுத்தபோறோம் ன்னு 15 வருஷமா சொல்லிட்டு இருக்காங்க ,இன்னும் 15
வருஷத்தக்கு சொல்லுவாங்க .. அப்புறம் அதே பழகிரும் . காந்திபுரத்திலே புறப்பட்ட வண்டி அங்கேயே ஒன்ரை மணி நேரம் நெரிசல்ல சிக்கிக்குது ...அந்த கோபத்தை டிரைவர் ஊரு தாண்டி காட்டறாரு... 100 -150 கிலோ மீட்டர் வேகம்.. நெரிசலும் பழகிருச்சு
வேகமும் பழகிருச்சு .... பாதுகாப்பும் , அமைதியும் தான் கேள்விக்குறியாச்சு ?
நல்லா அனுபவிச்சு போட்ட பதிவு .
வாழ்த்துக்கள் உங்களுக்கும் + எல்லாம் விரைவில் சரியாவதற்க்கும்

வினோத் கெளதம் said...

@ பட்டபட்டி.

//சார்.. கலாவா..இல்ல தயாவா சார்..
சஸ்பென்ஸா இருக்கு சார்..//

ஒரு வார்த்தைல பெரிய லெவல்ல கலவரத்தை உண்டகிடுவிங்க போல.:))

ஜெய்லானி said...

பிரகாஷ் சார்.உதாரனத்திற்கு இந்தியாவில் விளையும் டீ ஹை குவாலிடி , யெல்லோ லேபிள் என்ற பெயரில் இங்கிலாந்து முத்திரையுடன் இங்கு (யூ.ஏ.ஈ ) விற்கிறது. இதை குடித்து பழகிவிட்டு ஊரில் உள்ள டீயை குடிக்கும்போது மரத்தூளில் சாயம் கலந்த டீயை குடிக்கும் உணர்வே வருகிரது. யார் கேட்பது. எத்தனையோ நம் நாட்டின் நல்ல விஷயங்கள் நமது மக்களுக்கு கிடைப்பதில்லை.நாம் பூச்சி கொல்லி பெப்ஸி, கோக் பின்னே அலைகிறோம். என்ன செய்ய ??????

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ப்ரகாஷ்.. நல்ல சிந்தனை.. நம்மாக்களுக்கு தொலைநோக்கு சிந்தனை கம்மி.. சுயநலம் அதிகம்..

நாமெல்லாம் வெவரமான ஆளுங்கள்ல்ல.. நல்லாத்தின்னு தூங்கிட்டு.. வேலைக்கு போய் சம்பாதிச்சு சொத்து சேர்த்து.. புள்ளைகள படிக்க வச்சு.. எவனாவது ஏமாளி இதயெல்லாம் செய்வான், நாம அனுபவிக்கலாம்ன்ற சுயநலம் நம்மாக்களுக்கு அதிகம்..

அதான் இப்படி கிடக்கறோம்.. அதுக்கேத்த மாதிரி தான் நம்மள ஆளறவங்களும் இருப்பானுங்க..

Unknown said...

" அங்க துணிகள தரம் பிரிப்பாங்க. முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடும். மூன்றாம் தரப் பொருட்கள்
(அதாவது தரம் குறைந்த)நம் உள்ளூரில் விற்பனைக்கு விடப் படுகின்றன.. அநேகமாக நாம் அணியும் பிராண்டட் ஷர்ட் பேண்ட் எல்லாம் இந்த ரகமாகத்தான் இருக்கும் "

கண்டிப்பா .3அம் தரம்தான் நம்நாட்டில் விற்கபடுபவை .அதுவும் ஏற்றுமதி செய்தது வெளிநாட்டில் 1அம் தரம் 3 ஈரோ =180 ரூபாய்க்கு விற்பவை இந்தியாவில் 3அம் தரம் 500 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படும் .

ILLUMINATI said...

Appu saamu,my turn. :)

புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து குமுறிட்டு போங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .

Thenammai Lakshmanan said...

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

இந்தியர்களை ரொம்ப உயர்வா கருதி சொல்றீங்க உண்மைதான்

சாமக்கோடங்கி said...

ஸ்ரீராம். said...

Voted
Agreed.
//

நன்ட்றீட்....(ஹி. ஹி.. சும்மா..)

ரொம்ப நன்றி..

சாமக்கோடங்கி said...

//தமிழ் உதயம் said...

இங்க எதையும் நம்மால் மாற்ற முடியுதோ இல்லையோ, நம்மை நாம் முதலில் மாற்றி கொள்ளலாம். இங்க நம் பிரச்சனையே அது தான், அத செய்யாதே, இத செய்யாதேன்னு சொல்லிட்டு அதயே நாம் செய்வது தான். மாற்றம் நம்மில் இருந்து உருவாகட்டும். சரி தானா.//

ஆம் நண்பரே.. நம்மிலிருந்தே இந்த உலகம் தொடங்குகிறது.. இதை அனைவரும் உணர வேண்டும்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//மங்குனி அமைச்சர் said...

தூத்துக்குடி துறை முகத்தில் 210 தன் கழிவுகளை கண்டைனர் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு (ஒரு வேல லஞ்ச பேரம் படியலையோ ) திரும்ப அதே நாட்டிற்கு அனுப்ப போகிறார்கள். பழைய பேப்பர் கழிவு என்று கம்பனி சொல்லி இறக்குமதி செய்துள்ளது , ஆனால் அதில் எல்லாம் உள்ளாடைகள் , பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் இருக்கின்றதாம்.
நம் நாட்டை நாமே குப்பை மேடு ஆக்கிகொண்டோம் அடுத்தவனை குற்றம் சொல்லி என்ன பயன் .
//
இது தான் நம்மை நாம் ஆக்கிகொண்டுள்ள நிலை.. அடுத்தவன் நம்மை குப்பைத் தொட்டியாகவே நினைக்கிறான்... இந்தக் கொடுமை மாறுமா...?

நல்ல தகவலைக் கொடுத்து சிந்திக்க வைத்து விட்டீர்கள் அமைச்சர்... என்ன சொல்வது.. வருகைக்கு ரொம்ப நன்றி..

சாமக்கோடங்கி said...

//வினோத்கெளதம் said...

என்ன பண்றது சொன்னமாதிரி அப்படியே பழகியாச்சு மாறனும்..மாறவேண்டும்..
//

வாங்க வினோத் கௌதம்.. நாம பழகியாச்சு.. அடுத்த தலைமுறையினருக்கு இதைப் பழக்கக் கூடாது.. கண்டிப்பாக.. மாற்றங்கள் நிகழ்கின்றன..நாம் அதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்..

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்...

சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

@வினோத்கெளதம் said...
மாறனும்..மாறவேண்டும்..
//

சார்.. கலாவா..இல்ல தயாவா சார்..
சஸ்பென்ஸா இருக்கு சார்..
//

எப்படி பாட்டாபட்டி.. எப்ப எவன் டவுசர் அவுரும்னு பாத்துகிட்டே இருப்பீங்க போல இருக்கே.. நல்ல ஹ்யூமர் சென்ஸ் உங்களுக்கு... சமூக ஆர்வமுள்ள பதிவுல அரசியல புகுத்தீடிங்களே ..வினோத் கௌதம்.. கொஞ்சம் கவனமாவே இருங்க,,,,

நன்றி பட்டாபட்டி...

சாமக்கோடங்கி said...

//சி. கருணாகரசு said...

உங்களின் இந்த பதிவு மிக சக்திவாய்ந்ததாகவே கருதுகிறேன்...
குறையையும்... சுட்டிகாட்டி அதற்கு தீர்வையும் சொல்லியிருக்கிங்க....
ஆனால் மக்களின் புரிந்துணர்வு குறைவு என்றே எண்ணத்தோன்றுகிறது

உங்க உணர்வுக்கும்.... பகிர்வுக்கும்... என் மரியாதைக்குரிய வணக்கங்கள்.
//

வாங்க கருணாகரசு அவர்களே..
உங்கள் மரியாதைக்குரிய வணக்கங்களை நான் மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறேன்..

மக்களின் புரிந்துணர்வு குறைவாக இருப்பினும் அந்த நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது.. தன்னைத்தான் உணரும் போது, மக்களின் நலம் விரும்பும்போது, பகட்டுக்கு அடிபணியாத போது அவர்கள் மாறுகிறார்கள்.. நம்மால் முடிந்தவரை மாற்றுவோம்.. அவ்வளவுதான்... இந்த விழிப்புனர்ச்சியே போதுமானது..

அடிக்கடி வாங்க... இது போன்ற பகிர்வுகள் நிச்சயம் தேவை எனக்கு.. காம்ப்ளான் குடித்தது போன்று உள்ளது.. நன்றி..

சாமக்கோடங்கி said...

//நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல சிந்தனை ஒப்பிட்டு கூறீயிருப்பது அருமை. வாழ்த்துக்கள்
//

நன்றி நிகே... தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் தரப்பு கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.. மொத்தமாக இவைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நம் நோக்கம்..

நன்றி..

சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said...

படிச்ச உடனே வந்த ஞாபகம் வந்த நகைச்சுவை ..கொஞ்ச பழசுதான் ஆனாலும்
'' நாப்பது நாளைக்கு அப்புறம் கஷ்டம் எல்லாம் சரியாகி போயிரும் ''
'' அதெப்படி நாப்பது நாள்ல எல்லாம் சரியாய் போயிருமா ''
அதெங்க? , அந்த கஷ்டம் '' உனக்கு பழகி போயிரும் ''
மேட்டுபாளையம் ரோட்டை , சரிபண்றோம் , அகல படுத்தபோறோம் ன்னு 15 வருஷமா சொல்லிட்டு இருக்காங்க ,இன்னும் 15
வருஷத்தக்கு சொல்லுவாங்க .. அப்புறம் அதே பழகிரும் . காந்திபுரத்திலே புறப்பட்ட வண்டி அங்கேயே ஒன்ரை மணி நேரம் நெரிசல்ல சிக்கிக்குது ...அந்த கோபத்தை டிரைவர் ஊரு தாண்டி காட்டறாரு... 100 -150 கிலோ மீட்டர் வேகம்.. நெரிசலும் பழகிருச்சு
வேகமும் பழகிருச்சு .... பாதுகாப்பும் , அமைதியும் தான் கேள்விக்குறியாச்சு ?
நல்லா அனுபவிச்சு போட்ட பதிவு .
வாழ்த்துக்கள் உங்களுக்கும் + எல்லாம் விரைவில் சரியாவதற்க்கும்
//
வாங்க பத்மநாபன்.. நீங்க எந்த ஊரு..? நீங்க சொன்னது உண்மை.. ராத்திரி பத்து மணி தாண்டுனா அதுக்கப்புறம் பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேட்டுப்பாளையம் வர பத்து நிமிடமே எடுத்துக் கொள்கிறார்கள்.. சாதாரணமாக பகல் வேளைகளில் முப்பது நிமிடம் ஆகும்.. இந்த பேய் வேகத்தில் ஏதேனும் விபத்து நடந்தால் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது..

உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி..

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

பிரகாஷ் சார்.உதாரனத்திற்கு இந்தியாவில் விளையும் டீ ஹை குவாலிடி , யெல்லோ லேபிள் என்ற பெயரில் இங்கிலாந்து முத்திரையுடன் இங்கு (யூ.ஏ.ஈ ) விற்கிறது. இதை குடித்து பழகிவிட்டு ஊரில் உள்ள டீயை குடிக்கும்போது மரத்தூளில் சாயம் கலந்த டீயை குடிக்கும் உணர்வே வருகிரது. யார் கேட்பது. எத்தனையோ நம் நாட்டின் நல்ல விஷயங்கள் நமது மக்களுக்கு கிடைப்பதில்லை.நாம் பூச்சி கொல்லி பெப்ஸி, கோக் பின்னே அலைகிறோம். என்ன செய்ய ??????
//

வாங்க ஜெய்லானி... சார் கீர்'னெல்லாம் கூப்பிடாதீங்க.. நான் சின்னப் பையன்..(பட்டாபட்டி மேல சத்தியமா..) இதுபோன்ற உங்கள் அனுபவ வெளிப்பாடுகளையே நான் பின்னூட்டமாக எதிர்பார்த்தேன்.. பார்த்தீர்களா.. நம் நிலைமையை... குயவன் வீட்டில் ஒட்டைபானை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா...? வாழ்வு முடியும் வரை எதற்காகவோ ஓடுகிறோம்.. அது கிடைத்தபிறகு அதை அனுபவிக்க வாழ்க்கை இருப்பதில்லை.. இதுதான் நம் நிலை.. ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கையை உணர்ந்து வாழ வேண்டும் என்று இந்த நொடியில் புரிந்து கொண்டேன்... என்ன சொல்கிறீர்..?

தொடர்ந்து வாங்க... நன்றி..

சாமக்கோடங்கி said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ப்ரகாஷ்.. நல்ல சிந்தனை.. நம்மாக்களுக்கு தொலைநோக்கு சிந்தனை கம்மி.. சுயநலம் அதிகம்..

நாமெல்லாம் வெவரமான ஆளுங்கள்ல்ல.. நல்லாத்தின்னு தூங்கிட்டு.. வேலைக்கு போய் சம்பாதிச்சு சொத்து சேர்த்து.. புள்ளைகள படிக்க வச்சு.. எவனாவது ஏமாளி இதயெல்லாம் செய்வான், நாம அனுபவிக்கலாம்ன்ற சுயநலம் நம்மாக்களுக்கு அதிகம்..

அதான் இப்படி கிடக்கறோம்.. அதுக்கேத்த மாதிரி தான் நம்மள ஆளறவங்களும் இருப்பானுங்க..
//

உங்கள் கருத்து ஒருவகையில் சரி.. ஆனால் இந்த தலைமுறை சற்று மாறியுள்ளது என்றே தோன்றுகிறது.. பழைய ஆட்களைத் திருத்துவது கடினம். "நேயம் உடல் ஊனமுற்றோர் குழந்தைகள் நலப் பள்ளி"க்காக எங்கள் அலுவலகத்தில் உதவித்தொகை சேகரிக்கும்போது கூட, நாங்கள் அதிகப்படியாக கேட்காமலேயே தானாக வந்து உதவினர்(அவர்களுக்கு இங்கே நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்..). இது எதைக் காட்டுகிறது என்றால், தற்போது உள்ள சமுதாயத்திடம் சமூக உணர்வு வந்துள்ளது... ஆனால் மறைந்துள்ளது.. அதை வெளிக்கொணரும் கருவியாக யாராவது இருக்க வேண்டும்.. நான் அவ்வாறு செயல்பட முனைகிறேன்.. மற்றவர்களைச் சொல்லிப் பிரயோசனம் இல்லை.. நாமலாவே இறங்கீட வேண்டியதுதான்..

தொடர்ந்து களத்துக்கு வாங்க.. நன்றி..

சாமக்கோடங்கி said...

//மணிவண்ணன் said...

" அங்க துணிகள தரம் பிரிப்பாங்க. முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடும். மூன்றாம் தரப் பொருட்கள்
(அதாவது தரம் குறைந்த)நம் உள்ளூரில் விற்பனைக்கு விடப் படுகின்றன.. அநேகமாக நாம் அணியும் பிராண்டட் ஷர்ட் பேண்ட் எல்லாம் இந்த ரகமாகத்தான் இருக்கும் "

கண்டிப்பா .3அம் தரம்தான் நம்நாட்டில் விற்கபடுபவை .அதுவும் ஏற்றுமதி செய்தது வெளிநாட்டில் 1அம் தரம் 3 ஈரோ =180 ரூபாய்க்கு விற்பவை இந்தியாவில் 3அம் தரம் 500 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படும் .
//

அதுதான் மணிவண்ணன்.. நீங்கள் சொல்வது சரி..

தரமாக இருக்கவும் தெரிய வேண்டும். தரம் பிரிக்கவும் தெரிய வேண்டும்.. பகட்டுக்காகவே பிராண்டட் பொருட்கள் வாங்கும் பலர் இன்றும் உள்ளனர்.. அவர்களுக்கு அது பிடிக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் மத்தியில் அது பெரிய கௌரவத்தைத் தருகிறது... இதுதான் உண்மையை உணராதா பகட்டு உலகம்..

மாறும் என நம்புவோம்.. நன்றிகள்.. காலத்தில் இணைந்து இருங்கள்.. நன்றி..

சாமக்கோடங்கி said...

மன்னிக்கவும்... களத்தில் இணைந்து இருங்கள் என்று சொல்ல வந்தேன்...

சாமக்கோடங்கி said...

//ILLUMINATI said...

Appu saamu,my turn. :)

புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து குமுறிட்டு போங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
//

இதோ வந்துட்டேன் இல்லுமி..

சாமக்கோடங்கி said...

//நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .
//

வாங்க நண்டு.. ரொம்ப நன்றி...

சாமக்கோடங்கி said...

//thenammailakshmanan said...

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

இந்தியர்களை ரொம்ப உயர்வா கருதி சொல்றீங்க உண்மைதான்
//

வாங்க அக்கா.. இந்தியர்களை மிக உயர்வாக கருதி சொல்ல வில்லை.. இந்தியர்களை மிக உயர்வானவர்கள் என்றே சொல்கிறேன்..புரிகிறதா..? அனைத்து மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறான்.. பின்னர் ஏது உயர்ந்தவன் தாழ்ந்தவன்..?

நன்றி.. தொடர்ந்து வாங்க இந்தத் தம்பியின் பக்கத்துக்கு...

பத்மநாபன் said...

ஊர் கேட்டதற்கு ரொம்ப நன்றி ... யாதும் ஊரே .ன்னு சொன்னாலும் , பெரும்பாலும் இருந்த இடம் கோயம்புத்தூர் தான் ... அதுவும் மேட்டுபாளையம் ரோட்ல தான் . கவுண்டம் பாளையம் + வடமதுரை + பெ. நா. பாளையம் ... இப்ப சென்னை + ஓமன் .... சிறுவாணி சிறுவாணிதான்..
மக்களை படிக்கிறேன் .... உங்களுத தவறாம படிக்கிறேன் ...சென்ற பதிவில் நான் குறிப்பிட்டது கூட முதலிருந்தே பாராட்டு தான் ..எழுத்து எடுத்த வேகத்தை பாராட்டாக அப்படி குறிப்பிட்டேன் . நண்பர் சங்கர் அவர்களது சொல்லை வழிமொழிகிறேன் ...
என்றும் தொடர நல்வாழ்த்துக்கள் ......

ஹுஸைனம்மா said...

//அப்புறம் வெட்டி பந்தாவையும் கொஞ்சம் ஓரம் தள்ளி வைக்கணும்.. //

இதுதான் அவசியத் தேவை!

//அதுக்கு முதல்ல நம்மள நாம உயர்வா நினைக்கணும்.. //

அளவோட!!

//கடைசி படிய விட்டு கால கீழ வெக்கரதுக்குள்ள விசில் அடிப்பான் பாருங்க//

பஸ் நகர ஆரம்பிச்சப்புறம்தான் ஏறுவேன்னு அடம்புடிக்கிற யூத்தும் இருக்காங்க!! இரண்டு பக்கமும் திருந்தணும்!! இம்மதிரிச் சம்பவங்களைப் பார்க்குமிடத்தில் கண்டிக்கும் பொறுப்பும், தைரியமும் எல்லாருக்கும் வரவேண்டும்!!

சாமக்கோடங்கி said...

//பத்மநாபன் said... //

நன்றி பத்மநாபன்...உங்கள் ஆதரவுடன் தொடர இருக்கிறேன்..

சாமக்கோடங்கி said...

//ஹுஸைனம்மா said...

//அப்புறம் வெட்டி பந்தாவையும் கொஞ்சம் ஓரம் தள்ளி வைக்கணும்.. //

இதுதான் அவசியத் தேவை!

//அதுக்கு முதல்ல நம்மள நாம உயர்வா நினைக்கணும்.. //

அளவோட!!

//கடைசி படிய விட்டு கால கீழ வெக்கரதுக்குள்ள விசில் அடிப்பான் பாருங்க//

பஸ் நகர ஆரம்பிச்சப்புறம்தான் ஏறுவேன்னு அடம்புடிக்கிற யூத்தும் இருக்காங்க!! இரண்டு பக்கமும் திருந்தணும்!! இம்மதிரிச் சம்பவங்களைப் பார்க்குமிடத்தில் கண்டிக்கும் பொறுப்பும், தைரியமும் எல்லாருக்கும் வரவேண்டும்!!
//

கண்டிப்பாக... பொறுப்பு எல்லாருக்கும் உண்டு.. அவரவர் பங்கை சரியாகச் செய்தாலே போதுமானது.. நன்றி...

ரோஸ்விக் said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

இது போன்று பல பிரச்சனைகளும், நிகழ்வுகளும் பழகித்தான் மரத்தும், மறந்தும் போச்சு...

Previous comment had spelling mistake. so deleted.

பித்தனின் வாக்கு said...

ஏம்பா சாமக்கோடாங்கி ரோடு நல்லாத்தானே இருக்கு. ரெண்டு கப்பல் வாங்கி ரோட்டில் விடலாம் அல்லவா?. கப்பல் போற ரோட்டில் பஸ் விட்டா அது உங்க குத்தமா? அல்லது அரசின் குத்தமா? நன்றி.

சாமக்கோடங்கி said...

வாங்க ரோஸ்விக்..

என்ன பண்றது.... இனியாவது மாற்றம் வருமா பாக்கலாம்..

சாமக்கோடங்கி said...

வாங்க பித்தன் சார்...

உங்க வாக்கு ரொம்ப சரி.. அப்படியே கவர்மென்ட்டுல ரெண்டு கப்பல் குடுத்தா பரவா இல்ல..

மசக்கவுண்டன் said...

ரொம்ப உணர்ச்சியோட எளுதியிருக்கிறீங்க. நானு பாத்ததிலெ நம்ம இந்தியாக்காரனங்களுக்குன்னு ஒரு Natioanal character இல்லீங்க. குறிப்பா நம்ம தமிழாளுகளுக்கு, வேண்டாங்க, என்வாயாலெ, காலங்காத்தாலெ, எதுக்குங்க !

வேற நல்லதா ஏதாச்சும் பேசலாங்க. நானு ரொம்ப லேட்டு போல இருக்குதுங்க, மன்னிச்சுக்குங்க.

சாமக்கோடங்கி said...

ஐயோ, கவுண்டரே... நீங்க வந்ததே ரொம்ப சந்தோஷங்க... அப்புறம் மன்னிப்பு இந்த வார்த்த எல்லாம் ரொம்ப பெருசுங்க..

ஆனா நீங்க சொல்ற விஷயம் மிகச்சரி.. இதைப் பற்றி இன்னும் நல்லா அலசலாம்..

நன்றி..

ILLUMINATI said...

அப்பு சாமு,வீட்டுக்கு தெரிஞ்சே ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து பாரப்பு. :)

ILLUMINATI said...

சாமு மக்கா,போன பதிவுக்கு எல்லாம் வோட்டு கேட்டனா என்ன?எதெல்லாம் மக்கள்ட்ட போய் சேரணும்னு நெனப்பனோ அதுக்கெல்லாம் மட்டும் நான் வோட்டு கேப்பேன்.இது மாதிரி நல்ல படங்கள்,அப்புறம் முக்கியமா காமிக்ஸ்......

தப்பித்தவறி இது ஹிட் ஆயிடுச்சுன்னா(நம்ம எழுத்துக்கு ஆவாது :)),எவனாவது வந்து பாத்து,நல்லா இருக்குன்னு ட்ரை பண்ணியாவது பார்ப்பான்ல.அதுக்கு தான். இந்த மாதிரி நல்ல படங்கள் ,புத்தங்கள்,காமிக்ஸ் எல்லாம் வெளிய தெரியணும் மக்கா.அதனாலதான் இது வெறும் entertainment ப்ளாகாவே வச்சு நல்ல படங்களையும்,புக்சையும்,காமிக்ஸையும் எல்லோருக்கும் அறிமுகப்படுதுறேன்.

அப்புறம் அந்த பேரு பிரச்சனை பத்தி,ஏற்கனவே சொன்னது தான்.வாய் சுளுக்க வைக்குற பேர் தான்.அதை தமிழிலேயே அடிக்கலாம்னு பாத்தா tae வுக்கு தே ன்னு வருது.soo வுக்கு சூ இன்னு வருது.oh இன்னு அடிச்சா ஒத் னு வருது.என்ன மாதிரி நல்ல பையன் (சும்மா சொல்லிக்குறது தான்.உங்களுக்கு தெரியாததா?ஏற்கனவே போன பதிவுலையே என்ன நாறடிச்சுட்டானுங்க,உம்மையும் சேர்த்து ) இத எல்லாம் எப்டி போடுவான்? :)

அதனாலதான்,இங்கிலிஷ்லையே விட்டுட்டேன்.

அப்புறம்,படத்துக்கு வில்லனா என்ன போடச்சொல்லி இருக்குறீர்.படத்துல வில்லனே கேடயாதுய்யா...
என்னத்த படிச்சீரோ.நீரு இன்னும் விஜய் படத்துல இருந்து வெளிய வரல போல.அதுல தான் மொக்க ரீசனுக்கு மூணு நாலு வில்லனுங்க இருப்பானுங்க......

அப்புறம்,நீரு ஹீரோ ஆகணுமா,அதுலயும் கொரியன் படத்துல?அதுக்கெல்லாம் பெரிய கியூ இருக்கேப்பா.உமக்கெல்லாம் சீனியர்பா நானும் ரோஸ்விக்கும்........வந்து ஜோதியில ஐக்கியமாகிக்கோ.... :)அப்புறம்,என்னதான் கஷ்டப்பட்டாலும் வேதாளம் முருங்க மரம் ஏறத்தான் செய்யும்.அதனால நீங்க எவ்வளவு நேக்கா கேட்டாலும்,அப்பப்போ இங்கிலிஸ்ல எழுத தான் செய்வேன்.பின்ன,நாங்களும் ரவுடி தான் பாஸ்.... :)
என்ன பண்றது,விதி வலியது.....

And this is just for you friend,so kindly delete this after reading.And please send me your mail id.Thanks. :)

manjoorraja said...

இந்த பக்கம் வரமுடியாமெ போச்சு.


பேர்லேயே ஊர் இருக்கே. மஞ்சூர் தான். காரமடையில் பிரிந்து, வெள்ளியங்காடு வழி மலைமேல் ஏறி கெத்தை தாண்டி செங்குத்தாக ஏறினால் மேலே இருக்கும் ஊர் தான் மஞ்சூர்.

manjoorraja said...

மேட்டுப்பாளையம் ரோட்டில் முக்கியமாக கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம், கவுண்டர் மில்ஸ் நிறுத்தம், துடியலூர் நிறுத்தம், பெரியநாயக்கன்பாளையம் நிறுத்தம் போன்ற இடங்களில் காலை 7.30 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 8 வரையும் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் மிக அதிகம். முக்கியமாக சாலையின் குறுக்கே செல்பவர்களுக்கு மிக மிக சிரமம். அதிக விபத்துகள் நடக்கின்றன இந்த இடங்களில். இதற்கு ஏதேனும் வழி கண்டுப்பிடிக்க வேண்டும். போக்குவரத்து காவலர்கள், சமூக ஆர்வலர்கள் இந்நேரத்தில் மக்கள் சாலையை கடந்திட உதவவேண்டும்.

manjoorraja said...

மேலும் மிக முக்கியமாக மேட்டுப்பாளயம் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு (மற்ற மேட்டுப்பாளையம் சாலைகளில் நிலமை மட்டும் நல்லாவா இருக்குன்னு கேக்கறது காதில் விழுது)காவலர்கள் ஒழுங்கு செய்யவேண்டும்.

மேட்டுப்பாளைய மண்டிகளை எங்கோ மாற்றப்போவதாக சொன்னார்கள். அதை விரைவில் செய்தால் மேட்டுப்பாளையத்திற்கு சாபவிமோசனம் கிடைக்கும் மிக குறுகலான சாலைகள் அதிகம் மேட்டுப்பாளையத்தில்

சாமக்கோடங்கி said...

//மஞ்சூர் ராசா //

அப்ப எனக்கு ரொம்ப பக்கம்.. நான் அங்க எல்லாம் வந்ததில்லை..

மேட்டுப்பாளையம் ரோடுகளை அகலப் படுத்துவது மிகவும் சிரமமான விஷயம் போல.. ஆனா மேட்டுப்பாளையம் டு அன்னூர், அவினாஷி ரோடு நல்லாத்தான் இருக்கு. இதுல ஏதோ அரசியல் தலையீடு இருக்கு..

ஆனா,,, எனக்குத் தெரிஞ்சது இது மட்டும் தான். இன்னும் எத்தனையோ இடங்களில் இதே நிலைமை தான் இருக்கு இன்னும்..

நன்றி..

Post a Comment