Sunday, November 14, 2010

கோயம்புத்தூர் - பகுதி 1

நண்பர்களே,

கோயம்புத்தூர் பற்றி எழுத வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம். நிறைய எழுதலாம். தமிழமுதத்தில் வேந்தர் அவர்கள் பதிவிற்கு என்னுடைய கருத்தை இணைத்திருந்தேன். அதுவும் முக்கியமான விஷயம் என்பதால் அதை இங்கே கொடுக்கிறேன்.

இது சற்று மேலோட்டமான பதிவு. இன்னும் ஆழமான விஷயங்களை அடுத்த பதிவில் பகிரலாம்.
************************************************************************
வேந்தர் :சரவணம்பட்டியில் என் நண்பர் 18 அறைகள் கட்டி வாடகைக்குனு அறிவித்தார், 15 நாளில் அத்தனையும் ஆக்கப்பை ஆகிவிட்டன.
ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.

சென்னையில் ஆப்பக்கடைனு ஒரு கடைக்கு போனோம். சேவை செய்பவர்கள் நேபாளிகள். காஞ்சிபுரத்திலும் இது போல் கண்டேன்.

கோவையில் கீழ்நிலை தொட்டிக்கு ஒரு மூடி வாங்க கருங்கல் பலகை வாங்க போனோம். பெரிய பலகையை அளவுக்கு அறுக்க வேண்டும். மேலாளர் மேஸ்திரியை அழைத்து தமிழில் சொன்னார். அவ்ர் த்ன கீழ் பணியாட்களுக்கு இந்தியில் விளக்கினார். பலகை அறிக்கப்பட்டு என் காருக்கு வந்தது


தமிழ் நாட்டில் வடவர்கள் எண்ணிக்கை பல்கி வருது.
இந்தி மாநிலங்களில் தமிழ் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

பூனைக்கு இது காலம்.
**************************************************************************

சாமக்கோடங்கி:

//ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.//

கேஜி பற்றி எனக்குத் தெரியாது..

ஆனால் ராபர்ட் பாஷில் அப்படி இல்லை... எங்கள் அலுவலகத்தில் இருபது
சதவிகிதம் வெளி மாநிலத்தவர்கள் தான்...முக்கியமாக கர்நாடகம், ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. அதுவும் கர்நாடகாவில் இருந்து கிளை
கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டதால் வந்தவர்கள்.. அதற்குப் பிறகு
பணியமர்த்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்க்காரர்களே.. ஒரு
வகையில் LMW, Pricol, Shanthi Gears, Roots , CRI போன்ற கோவையை மையமாக
வைத்து வெகு காலமாக கோலோச்சி வந்த நிறுவனங்களுக்கு BOSCH ன் வருகை ஒரு சிம்ம சொப்பனமே... வேலைப்பளுவுக்கு, குறைவாக சம்பளம் கொடுத்தல், அதிக வேலை வாங்குதல், மேலதிகாரியின் அரசியல், ஆதிக்கம் போன்றவற்றால் ஆட்டம் கண்டு வந்த மக்களுக்கு BOSCH ன் வருகை மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவை மிகப்பெரிய மாறுதலாக உள்ளது... இதை நான் சொல்லவில்லை... என்னுடைய இரண்டரை வருட அனுபவத்தில், எத்தனையோ பேர் மேற்கூறிய கம்பெனிகளில் இருந்து விலகி இங்கே வந்துள்ளனர்...

கொடுமை என்னவென்றால், கோயம்புத்தூரின் உள்கட்டமைப்பு, புதிய பன்னாட்டு
நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.. "விலைவாசி ஏற்றம் உள்ள
அளவுக்கு இங்கே வசதிகள் இல்லை" என்பது ஒரு பொதுவான குற்றச் சாட்டாக
உள்ளது... சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற ஒன்றைக் காட்டி பன்னாட்டு
நிறுவங்களை கவரும் அரசு அதற்கேற்ற வசதிகளைச் செய்யா விட்டால்,
கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்டு வாழும் அப்பாவி மக்கள் பாதிக்கப்
படுவார்கள்.. இப்போதே பாருங்கள்.. அதே ரோடுகள்.. ஆனால் ஏகப்பட்ட BOSCH,
CTS, DELL மற்றும் பல புதிய கம்பெனிகளின் பணியாளர் பேருந்துகள் நிதம்
நிதம் உலவி போக்குவரத்தை அதிகப் படுத்தி விட்டிருக்கின்றன... அவர்களைக்
குறை கூற முடியாது.. பணியாளர்களுக்குப் பேருந்து வசதி ஒன்றும்
செய்யவில்லை என்றால் அவர்கள் தனியாக வண்டி வைத்தோ, அல்லது நகர(நரக)
பேருந்துகளில் தான் கம்பெனிக்கு வர வேண்டும்.. கிட்டத்தட்ட 6000
ஊழியர்கள்(BOSCH, CTS,DELL, KGISL) சரவணம்பட்டிக்கு தனித்தனியாக வந்தால்
எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை..

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஆனால் கேஜி நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சிறப்புப்
பொருளாதார மண்டலத்தில் கட்டப் படுகின்றன... விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு இந்த SEZ வந்துள்ளது.. இப்போது உள்ளே அடுக்கு மாடிக்
குடியிருப்புகளை கேஜி நிறுவனம் கட்டி வருவதோடு விளம்பரமும் ஓஹோ.. 35
லட்சத்திலிருந்து ஆரம்பித்து கொடிகளைத் தாண்டி விற்கப்படுகின்றன
அபார்ட்மன்டுகள்... கொள்ளை லாபம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.. சிறு சிறு
ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ஏற்கனவே சுற்று வட்டாரப் பகுதிகளை ஒன்றும்
அறியாத அப்பாவி விவசாயிகளிடம் பேரம் பேசி ஒரு நல்ல விலைக்கு வாங்கி
பிளாட் போட்டுக் கடை விரித்து வைத்து உள்ளனர்.. இவர்களின் முக்கிய இலக்கு
இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் தான்... வசதிகள் இருந்தால்
போதும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றனர்.. இந்தப் போட்டியால்
விலையை அமோகமாக வைத்து லாபம் பார்க்கின்றனர் இந்த ரியல் எஸ்டேட் சுரண்டல் வியாபாரிகள்..
இவர்களின் லாபத்திற்கு முக்கியக் காரணம் இந்த வடமாநில ஊழியர்கள்..

எப்படி என்றால், இவர்கள் கட்டிடங்கள் கட்ட உள்ளூர் கட்டிடத் தொழிலார்களை
அழைப்பதில்லை..(புத்தி சாலிகள்.).. ஏனெனில், உள்ளூரிலேயே, மேசன்,
கான்ட்ராக்டர்கள், சிற்றாள் மற்றும் பல்வேறு வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
நிலவுகிறது.. அவர்களும் கூலியை சராமாரியாக ஏற்றி விட்டனர்...(எங்கள்
வீட்டு மதில் சுவரில் ஒரு சிறிய அலங்காரத்தை மூன்று நாட்களாக
செய்கின்றனர் இரண்டு பேர்.. மூவாயிரம் ரூபாய்க்கான உகந்த வேலை இல்லை
அது.. என்ன செய்ய.. ஆட்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்.. பகைத்துக்
கொள்ளவும் முடியாது..)

எனவே, இந்தப் பெரிய பண முதலைகள், மொத்தமாக வடமாநிலத்தில் பஞ்சத்தில்
அடிபட்ட மக்களை, அலேக்காக லாரியில் அள்ளிப் போட்டு நம்ம ஊருக்குக்
கட்டிடத் தொழிலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.. நாட்கூலி அவர்களுக்கு
நூறைத் தாண்டாது(வட மாநிலத்தில் அவ்வளவு பஞ்சமோ..??). கட்டிட வேலை
நடக்கும் இடத்திற்கு அருகேயே, இவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்
ஏற்படுத்தப் படுகின்றன.. முக்கியமாக வாரத்திற்கு இரண்டு நாள், உடம்பு
சரியில்லை, சொந்தக்காரன் இறந்து விட்டான் என்று இவர்கள் வேலைக்கு வராமல்
இருக்க முடியாது..(சொந்த வீடு கட்டியவர்களுக்கு இந்த உள்ளூர்
வேலைக்காரர்கள் செய்யும் இந்த அலம்பல்கள் தெரியும்...). அப்புறம் இன்னொரு
விஷயம், அவர்கள் சொந்த செலவுக்காக முன்பணமும் கேட்பதில்லை...

இது தான் கோயம்புத்தூரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் உலாவுவதற்கான காரணம்..

அப்புறம் இன்னொன்று, இந்த கிரானைட், மார்பில், மற்றும் கடப்பா கல்
வியாபாரிகள்.. இவர்கள் மொத்தமாக கற்களை வடக்கில் இருந்து அள்ளிப் போட்டு
இங்கே வந்து வியாபாரம் செய்து கொள்ளை லாபம் சம்பாரிக்கின்றனர்.. கோவை
மாவட்டம் தடாகம் பகுதியில் வந்து பாருங்கள்.. இவர்கள் எப்படி ஓஹோ என்று
இருக்கிறார்கள்.. இவர்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்று..
இவர்களும் கற்களை அள்ளிப் போட்டு வரும்போது, அங்கே பஞ்சத்தில் அடிபட்ட
மக்களையும் அப்படியே தூக்கிப் போட்டு வந்து விடுகின்றனர்...
****************************************************************************

அனைவரும் பயனடையும் பட்சத்தில் நான் மிகவும் சந்தோஷப் படுவேன். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அரசு உடனே விழித்துக் கொள்ள வேண்டும்.

திடீரென உருவாகும் வளர்ச்சி பல சமயங்களில் ஆபத்தானது.. அது எப்படி இருக்கும் என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சாமக்கோடங்கி

13 பின்னூட்டம்:

சாமக்கோடங்கி said...

வேந்தர் கருத்து :

விரிவான தகவலுக்கு நன்றி பிரகாஷ்

வணிகர்கள் லாபத்துக்குதான் தொழில் நடத்துகிறார்கள். தருமத்துக்கு அல்ல. போட்டிகள் நிறைந்த உலகத்தில் தொழில் நடத்த தனி திறமை வேண்டும்.

எந்த தொழிலில் ஊறு அதிகமோ அதில் லாபம் அதிகம் இருக்கும். ஒரு தொழில் முடங்கினால் ஈடு செய்ய யார் இருக்கிறார்கள்? அவர்கள் மட்டும்தான் தொழில் செய்யணும் நாம் செய்ய கூடாது என யாரும் தடுக்காதவரையில் யாவும் நலமே


ராபர்ட் பாய்ச்சில் 20% வெளிமாநிலம் என்றால் அது அதிகமே. வெளிமாவட்டத்தினரும் உண்டு.

கேஜி நிறுவனத்தார் அரட்டி மிரட்டி நிலம் பெறமுயன்றது உண்மைதான். ஆனால் என் நண்பர் மசியவில்லை.

அவர்களை போன்ற செல்வர்கள் இருப்பதால் நமமை போன்றோருக்கு கோவையிலேயே வேலை கிடக்குது அல்லவா? இவங்கதான் கோவையின் அம்பானிகள்.
ஃபோர்பசு இதழ் பட்டியலில் விரைவில் இவர்கள் பெயர் இடம் பெறும்


சரவணம்பட்டி புன்செய் நிலங்கள்தான். பாசணம் இல்லாத விளைநிலம். பல்லி முட்டை இடாத நிலம் கொண்டவர்கள் எல்லாம் இன்று கோடீசுவரர்கள் ஆனது நினைச்சு மகிழுங்கள். அவர்களின் புதிய பணம்தான் கோவையின் பொருளாதாரத்துக்கு உயிர்நாடி.

இரவு விமானத்தில் சென்னைக்கு ப்றந்த போது முதல் 15 -20 நிமிடங்கள் கீழே ஒளி விளக்குகள்தான்

கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வரை கொங்குநாடு ஒளிமயம்தான்

போக்கு வரத்தை பொருத்து அவனாசி சாலை தேவலை. மக்கள் ஒழுக்கம் பாராட்டினால் இன்னும் சிறப்பாகும். . சத்தி சாலை மிக மோசம். மேட்டுப்பாளையம் சாலையை அகட்டி வருகிறார்கள். அது நற்செய்தி.

சாமக்கோடங்கி said...

வேந்தர் கருத்து:

கோவையை பற்றி அசோக் அறம்.(மணி பள்ளியின் முன்னாள் மாணவர். (Ashok T. Aram, recently chosen Young Global Leader by the World Economic Forum)

, talks about economics, development and Coimbatore

Back in town
Coming back to his hometown, he finds that despite the regions strong culture of enterprise, general infrastructure seems neglected.
“While we continue to bat above average in industrial production and innovation, we are low on sewage, road, rail and airport infrastructure,” says Ashok. “Access is a critical aspect.” If we are on the top tier of destinations on air routes, he explains, opportunities will multiply.
According to him, “The inability to politically represent the region effectively impedes it from becoming much more successful.”
He highlights the need for more organisation at the local level; for Coimbatoreans to ask questions on how development money is being spent on them. “Twenty-five years ago Coimbatore and Pune weren't quite different. Today Pune is a decade ahead in terms of infrastructure.”
On a note of caution for developing India, Ashok says that while the use of foreign technology to tap our natural resources is important, it needs to be used in a sensitive manner. “The government has a crucial regulatory role here,” he states.
He adds, “If the primary beneficiaries of development aren't from the resource rich regions of the country, they will never buy into the process.”
Ashok is one of those who welcome brakes on development by environmentalists. He explains, “It's not bad if they rightfully slow down development. We need to analyse industrial progress comprehensively.”
Now a young leader of the WEF, Ashok doesn't cringe at the WEF becoming a focal point for protests against unbridled globalisation. Large financial corporations are a core pillar of the world economy and symbols of capitalism, he says.
“They integrate world trade and investment, are managers of risk and, play a crucial role in allocation of capital.” The criticism against them, when large financial crises happen, isn't without basis.”
“But if you believe in democracy, you have to grant the right to protesters to make their views known.”--

எல் கே said...

நிலவரம் சரியாக தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை

சாமக்கோடங்கி said...

//LK said...

நிலவரம் சரியாக தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை
//

நியாயமான கருத்து. நன்றி எல்கே.. இது பொதுவான பதிவல்ல.. ஆனாலும் இட வேண்டும் என்று தோன்றியது. மன்னிக்கவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏனெனில், உள்ளூரிலேயே, மேசன்,
கான்ட்ராக்டர்கள், சிற்றாள் மற்றும் பல்வேறு வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
நிலவுகிறது.. அவர்களும் கூலியை சராமாரியாக ஏற்றி விட்டனர்...(எங்கள்
வீட்டு மதில் சுவரில் ஒரு சிறிய அலங்காரத்தை மூன்று நாட்களாக
செய்கின்றனர் இரண்டு பேர்.. மூவாயிரம் ரூபாய்க்கான உகந்த வேலை இல்லை
அது.. என்ன செய்ய.. ஆட்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்.. பகைத்துக்
கொள்ளவும் முடியாது..)
//

நானும் பார்த்தேன் பிரகாஷ்.

நமது ஆட்களுக்கு, உதாரணமாக,கட்டட வேலை செய்பவர்கள், தினசரி ரூ 400 சம்பாதிக்கின்றனர்.(1 வருடம் முன்பு , ரூ 250 வாங்கியவர்கள் இவர்கள்)

நமது மக்களின் மனநிலை.....
டாஸ்மார்க்-ல் குவார்டர் ரூ ~70 இருக்கும் என நினக்கிறேன். ஒரு நாள் வேலை செய்தால், அடுத்த மூன்று நாட்களுக்கு சரக்குக்கு பஞ்சம் இல்லை..
(எல்லாம் நமது அரசாங்கத்தின் கைங்கரியம்..ஹி..ஹி)

அதனால், தினசரி வேலை செய்யும் நிலமையில் அவர்கள் இல்லை.. அதுவே வட நாட்டவரின் நுழைவுக்கு முக்கிய காரணம்..

இதற்கு ஒரே தீர்வு, டாஸ்மார்க்கில் குவாட்டர் ரூ 300 ஆக்கினால் சரியாகிவிடும் என நினக்க்கிறேன்.. ஹா.ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. குடி(?)மகன்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ?.. அவ்வ்வ்வ்வ்..

இளங்கோ said...

கோவை பத்தி இன்னும் நிறைய எழுதுங்கள் பிரகாஷ்.
கோவையில் இடம் வாங்க அலைந்து கொண்டிருக்கிறோம், இன்னும் வாங்கிய பாடில்லை.. நிலத்தின் விலைதான் காரணம். எப்பொழுதுதான் நாம் எல்லாம் வீடு கட்டமுடியுமோ?

சாமக்கோடங்கி said...

இதற்கு ஒரே தீர்வு, டாஸ்மார்க்கில் குவாட்டர் ரூ 300 ஆக்கினால் சரியாகிவிடும் என நினக்க்கிறேன்.. ஹா.ஹா

சரியான தீர்வு... மக்களும் குடிப்பதைக் குறைப்பார்கள்.. இன்னும் எவ்வளவோ நல்லது நடக்கும்..

நன்றி பட்டாபட்டி...

சாமக்கோடங்கி said...

//
ஆகா.. குடி(?)மகன்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ?.. அவ்வ்வ்வ்வ்..//

இதனால் சகல விதமான குடி(!)மக்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் இங்கே பதிவிடுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு.. பின்னூட்டங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது..உங்கள் கோபதாபங்களை உரியவரின் பகுதிகளில் சென்று காட்டுமாறு பனிவெண்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

கோவை பத்தி இன்னும் நிறைய எழுதுங்கள் பிரகாஷ்.
கோவையில் இடம் வாங்க அலைந்து கொண்டிருக்கிறோம், இன்னும் வாங்கிய பாடில்லை.. நிலத்தின் விலைதான் காரணம். எப்பொழுதுதான் நாம் எல்லாம் வீடு கட்டமுடியுமோ?//

இனி கஷ்டம் தான்.. இருந்தாலும் முயற்சியைக் கை விடாதீர்கள்...

நன்றி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதனால் சகல விதமான குடி(!)மக்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் இங்கே பதிவிடுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு.. பின்னூட்டங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது..உங்கள் கோபதாபங்களை உரியவரின் பகுதிகளில் சென்று காட்டுமாறு பனிவெண்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
//

உங்களை வரவேற்பதில், பட்டாபட்டி ’போஸ்ட்மார்டம் கிரவுண்ட்’ பெருமை கொள்கிறது.. ஹி..ஹி

ப.கந்தசாமி said...

திரு.சாமக்கோடங்கி அவர்களுக்கு,
என்னுடைய "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்" என்னும் தளத்தை என்னுடைய இயலாமையின் காரணமாக மூடிவிட்டேன். இந்த கமென்ட் போடும் தளம் ஒன்றுதான் இனி இருக்கும்.
அன்புள்ள,
ப.கந்தசாமி

சாமக்கோடங்கி said...

//DrPKandaswamyPhD said...

திரு.சாமக்கோடங்கி அவர்களுக்கு,
என்னுடைய "மசக்கவுண்டன் கிறுக்கல்கள்" என்னும் தளத்தை என்னுடைய இயலாமையின் காரணமாக மூடிவிட்டேன். இந்த கமென்ட் போடும் தளம் ஒன்றுதான் இனி இருக்கும்.
அன்புள்ள,
ப.கந்தசாமி
//

அன்பின் கந்தசாமி அவர்களே... மிகவும் வருத்தம் அளிக்கிறது..மீண்டும் உங்கள் தளத்தை தொடருங்கள்.. என்ன காரணம் என்று சொல்ல முடியுமா...

Post a Comment