Saturday, March 5, 2011

கொதி நிலை - பாகம் 2

வணக்கம் நண்பர்களே..

மாற்றப் பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன, அவற்றில் எவை எவை எல்லாம் நாம் நினைத்தால் முடியும் என்பதை பிற்பகுதிகளில் பார்க்கலாம். இப்போதைக்கு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுகிறேன். ஏனெனில், கொதிநிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

நண்பர்களிடம் நடந்த உரையாடல்கள் / சேகரித்த செய்திகள்:

"ஆப்பிரிக்கா தான் ஊழலில் திளைக்கும் நாடு, கை நிறைய காசு கொடுத்தால், நாட்டையே காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள், கூறு போட்டு விற்று விடுவார்கள். இந்தியர்கள் சாதாரணமாக ஒரு வாரம் செய்யும் வேலையை அவர்கள் மாதக் கணக்கில் இழுத்தடிப்பார்கள்"

"நாமே(இந்தியர்களே ), ஆப்பிரிக்காவைப் பற்றி இவ்வளவு மோசமாக என்னும்போது, ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் பற்றி எவ்வளவு கேவலப் பார்வை கொண்டிருக்கும்.."

----

"சீனா வில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம் அமைக்கப் பட்டதே, அதற்கு டன் கணக்கில் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது இந்தியாவில் இருந்து தான்..."

"நல்லது தானே, ஏற்றுமதி மூலம் நல்ல அன்னியச் செலாவணி கிடைக்குமே.. இந்தியக் கருவூலத்தில் கொஞ்சம் பணம் நிறையுமே.."

"மண்ணாங்கட்டி, நாட்டின் தேவையை கணக்கில் கொள்ளாமல், ஏற்றுமதிக்கான அளவை மீறி சீனாவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்தது தான் உள்நாட்டில் ஸ்டீல் விலை ஏறக் காரணம். ஆனால் சீன அரசோ, இந்திய அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு கள கச்சிதமாக இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறது. சுரண்டப் பட்டது இந்தியாவின் வளம். நிறைந்ததோ, அரசியல்வாதிகளின் கருவூலம். சோனியாவும், மன்மோகன்சிங்கும், நாட்டை கூறு போட்டு விற்றாயிற்று"

"ஆனால் சீனா ஏன் இப்படி செய்யணும்..? அவர்களிடத்தில் தான் கனிம வளங்கள் இருக்கின்றனவே.."?

"அங்கே தான் நிற்கிறது சீன அரசின் ராசதந்திரமும், நாட்டுப் பற்றும். தங்களிடத்தில் இருக்கும் வளங்கள் ரிசர்வ் எனப்படும் வருங்காலத்தின் சேமிப்புக்கானவை.அதுவுமில்லாமல், மற்றொரு நாட்டில் இருந்து கிடைக்கும் வளங்கள் நாட்டுக்கான இன்னொரு சேமிப்பு, சுரண்டப் பட்ட நாட்டுக்கு இது ஒரு பின்னடைவு. அந்த வளங்களைப் பெற நாம் இப்போது எங்கே போவது..?அமெரிக்காவிலிருந்து ஆயிரம் கம்ப்யூட்டர்களை இந்தியாவுக்கு லக்கேஜ் பேக்கில் கொண்டு வர அனுமதி வழங்கியதைப் போல இனித்திருக்கும் சீனாவிற்கு. நம்ம அரசியல்வாதிகளுக்கு தான் நாடு எப்படிப் போனாலும் கவலை இல்லையே.. சீனா இந்தியாவவை ஆக்கிரமிக்க போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தான் ராசதந்திரத்தின் அடுத்தடுத்த படிகள்.. தெளிவாக இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்"

-----

"மன்மோகன்சிங் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்..?"

"குடும்ப அரசியலுக்கு கூடி உழைக்கிறார்.. அரும்பாடு படுகிறார்.. நேரு காலத்தில் இருந்தே நடந்திருக்கிறது தவறு. நமது பள்ளிப் புத்தகங்களில் மூடி மறைக்கப் பட்டு, நெஞ்சில் ரோஜாப்பூவோடு சித்தரித்து விட்டார்கள். வல்லபாய்படேல் வளர்ந்திருந்தால், நாடு ஓரளவுக்கு உருப்பட்டிருக்கும். தொழில்மயமாக்கலை(Industrialisation) கையில் எடுத்திருந்தால், அமேரிக்கா போல நாமும் விமானத்தில் பறந்து கொண்டே நெல் விதைத்து இருந்திருக்கலாம். அதை விடுத்து விவசாயத்தை மேம்படுத்துகிறேன் என்று வந்த வாய்ப்பைக் கோட்டை விட்டார் நேரு. இன்னும் ஏழை விவசாயிகள் எங்கோ ஒருபுறம் பட்டினியில் செத்துக் கொண்டு தான் இருக்கிறான்..படேலின் வளர்ச்சியைத் தடுத்ததும் இவரே என்றும் ஒரு செய்தி உண்டு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை(சீன எல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இழக்கக் காரணமும் இவரது வலிமையில்லாத அரசே.
படேல் இருந்திருந்தால் சூட் அட் சைட் போட்டு, விஷயத்தை என்றைக்கோ முடித்திருப்பார், இப்போது நாட்டின் எழுபது சத நிதியை ராணுவத்துக்குச் செலவிட்டிருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

அடுத்து இந்திரா காந்தி.. எமெர்ஜென்சியைப் புகழ்ந்து பேசும் நபர்கள் இன்னும் உண்டு. அனால் அதன் பின்புலம் பலருக்கும் தெரியவில்லை. போய் இந்திய வரலாற்றைத் தெளிவாகப் புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். ஊழலில் அடுத்த ட்ரெண்ட் இவர் காலத்தில் தான் உருவாகி இருக்கிறது என்று நன்றாகப் புரியும். ஆட்சிக் கட்டிலில் நீடிக்க அவர் செய்த அட்டூழியங்களும் அம்பலமாகும். வரலாறு என்றால் நமது பள்ளி வரலாற்று புத்தகங்களை அல்ல நண்பா..

அடுத்து சோனியா காந்தி.. மாபியாக் கும்பல்களை வளர விட்டு, அதிகப் படியான அரசுப் பணம் தனியார் கைகளுக்கும், அரசியல்வாதிகள் கஜானாக்களுக்கும் சேர பெரும்பாடு படுபவர். நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப் படாமல், ஊழலை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பவர். பொதுமக்கள் வாழ்வாதாரங்களைக் கெடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற விட்டு, அம்பானி போன்ற பணக்காரர்களைக் கொழுக்கச் செய்து, விலை நிர்ணயத்தையும் அவர்கள் கைக்கே தூக்கிக் கொடுத்து இருப்பவர்."

"பெட்ரோல் விலையையா சொல்றீங்க..?"

"ஆமாம்ப்பா, அரசு நினைத்தால் வரிகளைக் குறைத்து முப்பது ரூபாய்க்குக் குறைவாக பெட்ரோல் விற்பனை செய்ய முடியும். ஆனால் அதனால் பல தனியாருக்கு நஷ்டம். அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் பங்கும் போய் விடும். அவர்களுக்கென்ன, அரசு பணத்தில், அரசு காரில், அரசு பெட்ரோலில் சுற்றுபவர்கள். நம் பாடு தான் திண்டாட்டம்.."

இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன. நம் மக்களிடமும் தவறுகள் மண்டிக் கிடக்கின்றன.

சரி நண்பர்களே,.. பதிவு நீளமாகி விட்டதால் பாகம் மூன்றில் அந்நிய முதலீடுகள் பற்றியும், மற்றும் முறைகேடுகள், தமிழ்நாட்டின் அவலங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று எழுதும்போதே எனக்கு இருதயத்துடிப்பு உச்சத்திற்குப் போவதையும், கண்கள் சிவப்பாவதையும் உணர முடிகிறது. பாகம் மூன்றில், கொதிநிலையின் அடுத்த பகுதிக்குச் சென்று நன்றாகக் கொதிக்கலாம்.

உங்கள் பங்குக்கு நீங்களும் கொதிக்க விடுங்கள் பின்னூட்டங்களில். வரலாறு என்றுமே சரியாகப் பதியப் படுவது இல்லை. ஒருவேளை மேற்கூறிய விஷயங்களில் தவறு இருந்தாலும் திருத்துங்கள். எல்லாம் செவி வழிக் கேட்டவையே.."

நன்றி
சாமக்கோடங்கி

11 பின்னூட்டம்:

எல் கே said...

//நாட்டின் பெரும்பாலான பகுதிகளை(சீன எல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இழக்கக் காரணமும் இவரது வலிமையில்லாத அரசே. //


நெத்தியடி. இதுதான் உண்மையும். ஐ நாவிடம் செல்லவேண்டாம் என்று பாகிஸ்தான் போரின் போது படேல் சொன்னார். இவர் கேட்கவில்லை. அமைதிவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள ஐநாவிடம் சென்றார். விளைவு யுத்தம் துவங்கும் முன் உள்ள நிலை தொடரும் என்றார்கள். அதிகாரபூர்வ யுத்தம் துவங்கும் முன்னரே தனது கூலிப்படை தீவிரவாதிகளின் மூலம் ஆக்ரமித்த பகுதி இன்று பாகிஸ்தான் ஆதரவில் தனியாக இருக்கிறது அதில் சீன படைத்தளம் இருக்கிறது

எல் கே said...

//அரசுப் பணம் தனியார் கைகளுக்கும், அரசியல்வாதிகள் கஜானாக்களுக்கும் சேர பெரும்பாடு படுபவர். நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப் படாமல், ஊழலை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பவர். //

அண்ணே துணிச்சல் அதிகமா இருக்கு உங்களுக்கு. தியாகச் செம்மலை பார்த்து இப்படி சொல்லி இருக்கீங்க. பார்த்து காங்கிரச்காரனுங்க பொங்கல் வெச்சிடப்போறாங்க

ஜெய்லானி said...

//சீனா இந்தியாவவை ஆக்கிரமிக்க போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தான் ராசதந்திரத்தின் அடுத்தடுத்த படிகள்.//

100 சதம் உண்மையான வரிகள்..!! இதுல நீங்க சொன்ன அனைத்தும் உண்மைதான் ...!!
########################
இன்னொரு கொதி:- சுதந்திரம் கிடைச்சதே சுபாஷ் சந்திர போசாலதான் ..காந்தியால இல்ல...ஆனா இந்தியா மக்கள் தூக்கி பிடிக்கிரது காந்தியைதான் ..அடக்கடவுளே..!!
#########################

ஜெய்லானி said...

எனக்கும்தான் இதை படிக்கும் போதே பீப்பி ஏறுது இங்கே ( யூ ஏ ஈ ) வேலையை செய்யாமல் இருக்க லஞ்சம் .ஆனா இந்தியாவில கடமையை செய்யவே லஞ்சம் என்ன செய்ய ..!!

சாமக்கோடங்கி said...

//நெத்தியடி. இதுதான் உண்மையும். ஐ நாவிடம் செல்லவேண்டாம் என்று பாகிஸ்தான் போரின் போது படேல் சொன்னார். இவர் கேட்கவில்லை. அமைதிவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள ஐநாவிடம் சென்றார். விளைவு யுத்தம் துவங்கும் முன் உள்ள நிலை தொடரும் என்றார்கள். அதிகாரபூர்வ யுத்தம் துவங்கும் முன்னரே தனது கூலிப்படை தீவிரவாதிகளின் மூலம் ஆக்ரமித்த பகுதி இன்று பாகிஸ்தான் ஆதரவில் தனியாக இருக்கிறது அதில் சீன படைத்தளம் இருக்கிறது//

வாங்க எல்கே..

நல்ல தகவலைக் கொடுத்தீர்கள் நன்றி.. பட்டென்று முடிவெடுக்கும் திறன் இல்லாதோர், அரசமைக்கத் தகுதி அற்றவர்கள் என்றே தோன்றுகிறது.

சாமக்கோடங்கி said...

//அண்ணே துணிச்சல் அதிகமா இருக்கு உங்களுக்கு. தியாகச் செம்மலை பார்த்து இப்படி சொல்லி இருக்கீங்க. பார்த்து காங்கிரச்காரனுங்க பொங்கல் வெச்சிடப்போறாங்க//

அட நீங்க போங்க.. என்னமோ நானே கதை திரைக்கதை வசனம் எழுதினதைப் போலச் சொல்கிறீர்களே.. இது செவி வழிச் செய்திகளே.. தவறாய் இருப்பின் சரியான பதிலை அவர்கள் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.

இன்னைக்கு அதே நண்பரிடம் உறுதிப் படுத்தக் கேட்டேன். அவர் சொன்னார் "மாபியா கும்பலை சோனியா வளர்க்கவில்லை, மாபியா கும்பலால் தான் சோனியா வளர்ந்தார்" என்று.. இது எப்படி இருக்கு..

சாமக்கோடங்கி said...

//100 சதம் உண்மையான வரிகள்..!! இதுல நீங்க சொன்ன அனைத்தும் உண்மைதான் ...!!
########################
இன்னொரு கொதி:- சுதந்திரம் கிடைச்சதே சுபாஷ் சந்திர போசாலதான் ..காந்தியால இல்ல...ஆனா இந்தியா மக்கள் தூக்கி பிடிக்கிரது காந்தியைதான் ..அடக்கடவுளே..!!
#########################//

நமது பள்ளிப் புத்தகங்கள் தவறான வரலாற்றைப் போதித்து இருக்கிறது.. கடவுளே...

சாமக்கோடங்கி said...

//எனக்கும்தான் இதை படிக்கும் போதே பீப்பி ஏறுது இங்கே ( யூ ஏ ஈ ) வேலையை செய்யாமல் இருக்க லஞ்சம் .ஆனா இந்தியாவில கடமையை செய்யவே லஞ்சம் என்ன செய்ய ..!!//

முடிஞ்சவரைக்கும் அங்கேயே இருங்க.. உடல் நலத்துக்கு நல்லது.. இந்தியா வந்தால் பிபி எகிறிடும்.

எல் கே said...

///மாபியா கும்பலை சோனியா வளர்க்கவில்லை, மாபியா கும்பலால் தான் சோனியா வளர்ந்தார்" ///

இது தெரியும்.முதலில் இத்தாலி மாபியா பிறகு ரஷ்யாவின் மாபியா

MANO நாஞ்சில் மனோ said...

//சோனியாவும், மன்மோகன்சிங்கும், நாட்டை கூறு போட்டு விற்றாயிற்று"//

நெத்தியடி......

இளங்கோ said...

நல்லா எழுதி இருக்கீங்க, இந்த அரசியல் வாதிகளை நினைத்தால் கோபம் தலைக்கேறி விடுகிறது.
உங்களின் கோபம் எழுத்தில் தெரிகிறது பிரகாஷ்.

Post a Comment