Sunday, January 24, 2010
கார்பன் சுவடுகள் - பாகம் 3
வணக்கம்..
கடந்த ரெண்டு பகுதிகள்ல கார்பன் சுவடுகள்'னா என்ன, அது எதனால உருவாகுது அப்படிங்கற சமாச்சாரங்கள் எல்லாம் பார்த்தோம்..இந்த பகுதியில கார்பன் சுவடுகள் ஏற்படுத்துற வெப்ப உயர்வால என்ன நடக்குதுன்னு பாப்போம்..
வேலில போற ஓணான வேட்டிகுள்ள வுட்டுட்டு இப்ப வேணா வேணா'ன்னா வுட்டுடுமா...?
ஆப்பு1:
மொதல்ல இந்த ஓவர் சூட்டுனால நம்ம எல்லாரும் டைரக்டா பாதிக்கப் பாடறோம். குறிப்பா நம்ம பெருசுங்க எல்லாரும் heat stroke அப்படிங்கற வியாதிக்கு ஆளாகிறாங்க. பெருசுங்க தானே போனா போகட்டுமுன்னு நெனைக்கிற இளசுகள் எல்லாரும் நாளைக்கு பெருசுகள் தான்..
ஆப்பு2:
இந்த வெப்ப உயர்வுனால இந்த புயல், சூறாவளி இவங்கெல்லாம் வீடு தேடி வர்றதுக்கு நாமளே வழி பண்ணிட்டோம். சாதாரணமாவே இந்த புயல் சூறாவளி இவங்கெல்லாம் கடல்'ல தாம்ப்பா உருவாகுறாங்க. இவங்க வளர்ரதுக்கு பெருசும் உதவியா இருக்கறது கடல்'ல இருந்து கிடைக்கிற சூரிய வெப்பம் தான். இந்த அதிகப்படியான வெப்பநிலை உயர்வுனால கடல்'ல இருந்து நல்ல சூடு கெடைக்கரதுனால இவங்களுக்கு அதிகப்படியான பலம் கெடைச்சிருது. அதாவது சாதாரண தண்ணி குடிச்சிட்டு இருக்குரவனுக்கு போர்ன்வீடா, காம்ப்ளான், ஹோர்லிக்ஸ் இதெல்லாம் மிக்ஸ் பண்ணி குடுத்தா எப்படியிருக்கும்..? அந்த எபக்ட்.. சாதாரணமாவே இதுங்க ஊருக்குள்ள பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. (அப்புறம் இந்த ஆப்பு 2 சிறுசுக பெருசுக அப்படின்னு எவனையும் பாக்கரதில்லை. வாரிப் போட்டுகினு போய்க்கிட்டே இருக்கும்.)
ஆப்பு3:
பூமில வெப்பம் அதிகமாகும்போது, கடல் நீர் விரிவடையுது.. அப்ப என்னாகும்? கடல் நீர் மட்டம் உயரும்.. அப்ப என்னாகும்? இது என்ன கேள்வி.. கரையோரமா இருக்குறவங்க எல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்.. ஏற்கனவே பனிப்பாறைகள்(Glaciers) எல்லாம் உருகுதுன்னு எல்லா டிவி'லயும் காட்டுறாங்க.அப்புறம் 2012 படத்துல கடைசியா ஒரு பூமிய காட்டுனான்களே அந்த மாதிரி ஆயிடும்.(இந்த பணக்காரப் பயலுக எல்லாம் இப்பவே செவ்வா கிரகத்துல பட்டா போட ஆரம்பிசிடுவாங்கன்னு நெனைக்கிறேன்.)
S.P.பாலசுப்பிரமணியம் மாதிரி இதையும் மூச்சு விடாம படிங்க.. காலநிலை மாற்றம்,சுற்றுச்சூழல் மாசு,காடுகளை அழிக்கிறது, பசிக்கொடுமை,பொருளாதார சீரழிவு,திருட்டு,கொலை,வன்முறை,வளங்கள் குறைவு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் சீர்குலைவு,இயற்கை அழிப்பு,ரசாயண கழிவுகள் சேர்ப்பு இவை எல்லாம் செர்ந்துச்சுன்னா....... மாப்பு வெச்சுட்டாய்ங்கடா ஆப்பு...
பூமில எத்தன வளங்கள் அழிஞ்சு போச்சு, இப்ப எத்தனை நாடுகள் சேர்ந்து இந்த நிலைமையில் இருந்து மீள என்னென்ன பண்ணிகிட்டுருகாங்கன்னு தனியா ஒரு இடுகையே போடறேன்.. (ஒரு சின்ன சாம்பிள்: பூமில இருந்த பனிப்பாறைகளோட தடிமன் கடந்த 40 வருஷங்கள்ள 40 சதவிகிதம் குறைஞ்சிடிசாம்)வாங்க.. எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வெக்கலாம்.
ஆனா இப்ப நாம என்ன செய்யாலம்னு ஒரு சின்ன பார்வை.
தனியா ஒரு ஆளா நாம என்ன செய்ய முடியும்?கஷ்டம் தான்.. ஆனா சிறு சிறு துளிகளால் ஆனது தானே கடல். அது மாதிரி நாம எல்லாரும் நம்ம அன்றாட வாழ்கையில கொஞ்சம் கொஞ்சம் திருத்தங்கள செஞ்சுக்கிட்டாலே போதும். வாங்க ஊர் கூடி தேர் இழுப்போம்..
1.இந்த பக்கத்து பங்க் கடைக்கு தம் அடிக்கப் போறதுக்கு, அப்புறம் பாலு மோரு வெண்ணை'ன்னு எது வாங்கப் போனாலும் டர் புர்'ன்னு வண்டியைக் கெளப்புரத விட்டுட்டு நடந்து போகலாமே.. அட் லீஸ்ட் சைக்கிள் யூஸ் பண்ணலாமே. இதுல இன்னொரு பெனிபிட் இருக்கு. அதாம்பா, கொழுப்பு கரையும். 9 மணி ஆபீஸ்க்கு மாருதி'ல வந்து எறங்கரவங்க எல்லாம் காலைல 6 மணிக்கு மாங்கு மாங்கு'ன்னு ஓடிக்கிட்டிருக்காங்க பீச் ஓரத்துல. இந்த வெட்டி பந்தாவ கொஞ்சம் ஓரங்கட்டி வெச்சிட்டு நாமளும் ஆரோக்யமா இருந்து நாட்டையும் ஆரோக்யமா இருக்க வெக்கலாம். அட இப்பவே எங்க ஆபிஸ்ல வேல பாக்கற சில பேர் சைக்கிள்'ல வர ஆரம்பிசிடான்கப்பா. இது ஒரு ட்ரெண்டா மாறிட்டா பரவா இல்ல.. நானும் பைக்ல போறத 70 சதம் கொறைச்சிட்டேன்.
2.முடிஞ்ச வர நம்ம உள்ளூர்ல கெடைக்குற பொருள்கள வெச்சு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள சாப்பிடலாம். ஆன வரைக்கும் இறக்குமதி பொருள்கள தவிர்க்கப் பழகிக்கலாம். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா இப்ப இது ஒரு ஆப்ஷன். நாளைக்கு இது கட்டாயம். அதனால இந்த ட்ரெண்டையும் இப்பவே கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம்.
3.சும்மா ஏசி'லேயே இருக்குறவங்க அத குறைச்சிக்கிட்டு பேன் உபயோகிக்கலாம். அட ஒரு கொசு வலைய போட்டுகிட்டு மாடியில படுத்துப் பாருங்கப்பா..எதுக்கு பேன் எதுக்கு ஏசி..?சுருக்கமா சொன்னா எளிமையா இருக்கப் பழகனும்.. இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. ஆனா நம்ம சந்ததிகளுக்கு இந்த விஷயங்கள ஈசியாப் பழக்கீரலாம். எளிமை வேற கஷ்டம் வேற.. புரிஞ்சிகிட்டா போதும்.
4.அப்புறம் ஒரு ஈசியான வழி."இதனாலே அனைவருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், தாங்கள் தங்கள் வீடுகளில் ஆங்காங்கே மாட்டியிருக்கும் பழைய காலத்து குண்டு பல்பு மற்றும் ட்யுப் லைட்டுகளை உடனே கழற்றிக் கேடாசிவிட்டு உடனே கரண்ட்'டை மிச்சப் படுத்தும் CFL லைட்டுகளை உபயோகப் படுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" இப்படீன்னு ஊர் ஊரா பிரச்சாரம் பண்ண தேவையில்லை. அவங்க அவங்க வீடுகள்ல செஞ்சாலே போதும். அட வெல ரொம்ப அதிகமப்பான்னு சொல்றவங்களுக்கு அது ஒரு நாள் வீட்டு செலவை விட கம்மின்னு நான் சொல்லத் தேவையில்லை.
5.மாமிசம் சாப்டரத குறைச்சிக்கிட்டு சத்தான சைவ உணவுகள சாப்பிடலாம். தீவனம் எல்லாம் இப்ப வெளி நாட்டுல இருந்து இருக்குமதி ஆகுதுங்கோ..
6.ஒரு முறை உபயோகப் படுத்தி தூக்கி வீசுற பொருள்கள முடிஞ்ச வர தவிர்க்கலாம். உதாரணமா, கல்யாணத்துல வெப்பான்களே பிளாஸ்டிக் தண்ணி கிளாஸ், அப்புறம் ஷேவ் பண்ற ரேசர், அப்புறம் தட்டுகள், நாப்கின்ஸ் இப்படி நிறைய.திரும்ப உபயோகப் படுத்தக் கூடிய பொருள்கள அதிக அளவு வாங்கனா, இந்த நிறுவனங்கள் இந்த தயாரிப்புகள தானா ,முன்வந்து நிறுத்திடும்.
வளர்ந்த நாடுகளான ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகள்ல இத ஏற்கனவே நடை முறைப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. மேற்சொன்ன விஷயங்கள் நடைமுறையில ரொம்ப கஷ்டம். ஆனால் சின்ன சின்ன விஷயங்கள நாம மனசு வெச்சா செய்யலாம். உதாரணத்துக்கு, கடையில சாமான் வாங்கும் போது பாலிதின் கவர் தர்றான்.ஒரு கூடையோ இல்ல ஒரு துணிப் பையோ கொண்டு போகலாம். என்ன பெரிய விஷயம்.. அட ஒரு சில கடைல கவருக்கு மேல கவர் போட்டுத்தர்றான். அதையாவது குறைக்கலாம்.ஒரே கவர்ல எல்லாத் தையும் போட்டு வாங்கலாம்.போன வாரம் கடைக்கு வந்த சின்னப் பையன் பாக் கொண்டு வர மறந்துட்டான். ஆனாலும் பிளாஸ்டிக் பாக் வாங்க மாட்டேன்னு அடம் பிடிச்சு நாலு தேங்காய கைலயே பிடிச்சு கொண்டு போனான். இளைய பாரதம் கண் முன் தெரிகிறது. அது தான் நண்பர்களே.. இளைய சமுதாயத்திற்கு நாம் சொல்லித் தர வேண்டியவை இவை தான்.
நான் கூட பஸ்ல டிக்கெட் வாங்கினா இறங்கின உடனே வீசிட்டிருந்தேன். இப்ப அத குப்பத் தொட்டியில போட்டுப் பழகிட்டேன்.
நம்முடைய கடமைகள் பற்றி நெறைய எழுத வேண்டி இருக்கு.. அதை இதே தலைப்பிலயோ இல்ல வேற தலைப்பிலயோ எழுதுவேன்...
நீங்க ஏதாவது சின்னச் சின்ன நல்ல விஷயங்கள் இருந்தா தயவு செஞ்சு பின்னூட்டத்துல பகிர்ந்துக்குங்க.. அப்புறம் ஓட்டு போடாவிட்டாலும் பரவா இல்ல.. உங்க நண்பர்கள் கிட்டயும் சொல்லுங்க.. ஒரு விழிப்புணர்வுக்காகத்தான்.
உங்கள் பின்னூட்டம் தான் என் பலம்.
படித்தால் அறிவு வளரும்..
உணர்ந்தால் தான் மாற்றம் நிகழும்..நன்றி...
Subscribe to:
Post Comments (Atom)
14 பின்னூட்டம்:
இத.. இத.. இததான் எதிர்பார்த்தேன்..
நல்ல பதிவு.. நம்மாள முடிந்த உதவிய அடுத்த
ஜெனரேசனுக்கு பண்ணங்க...
இல்ல............வருங்காலத்தில், ( சும்மா ஒரு பேச்சுக்கு) நம்ம பேரன் , பேத்திக வருசாந்திரம் கொண்டாடமாட்டாங்க.. ஆங்.......
பேரன உடுங்க பட்டா பட்டி...
நம்ம பசங்களே, நம்மளுக்கு வருஷாந்திரம் கொண்டாடுவனுகளா தெரியல..
உயிரோட இருக்கும்போதே காரித் துப்பாம இருந்த சேரி,, அய்யயோ..உங்களோட பேசும்போதே, துப்புரதப் பத்தியே வருதே.. சாரீண்ணே...
சூப்பருங்கோ. அடி பின்றீங்க. நல்லதொரு பதிவு.
அன்புடன்
சந்துரு
நன்று
தாமோதர் சந்துரு,
யூர்கன் க்ருகியர்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நாம் தனித்தனி மனிதர்களாக சிறு சிறு மாற்றங்களை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதற்காவே இந்த பதிவு. உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் தொட்டியில், தண்ணி லாரி மூலம் ஒருவன் தண்ணீர் நிரப்பிக் கொண்டு இருக்கும் போது, நீங்கள் டீஸ்பூன் கொண்டு அந்த தொட்டியை காலி செய்ய நினைப்பது முட்டாள் தனம் தான். ஆனால் நான் சொல்ல வருவது ஊர் கூடி தேர் இழுப்பதைப் பற்றி.. இது ஒரு கூட்டு முயற்சி.. ஆனால் பலவகையான அரசியல் பின்னணிகள் இந்த இயற்கைச் சீரழிவின் பின்னணியில் செயல் படுகின்றன. வளர்ந்த நாடுகளின் நரித் தந்திரம், பெரிய கம்பெனிகளின் லாப வேட்கை இது போல பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். அதையும் சேர்த்துத்தான் பகுதி-4 தயாரிக்கிக் கொண்டிருக்கிறது.. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பகிரும் அதே சமயத்தில் இந்த விஷயத்தைப் பற்றிய இன்னொரு மாற்றுக் கண்ணோட்டத்தையும் பகிர விரும்புகிறேன். சமீபத்தில், தமிழ்மணம் விருது பெற்ற இந்த ப்ளாக்'ஐ படியுங்கள்..
http://senkodi.wordpress.com/2009/04/03/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
நன்றி..
மனமாற்றம் சீக்கிரம் நடந்தால் செரி,,,,
நன்றி BONIFACE...
நல்ல பதிவுங்க... கார்பன் சுவடுகளைப் பத்தி நிறையத் தெரிஞ்சுகிட்டேன். நம்ம மக்கள் இதைப் புரிஞ்சு நடந்தா நல்லது...
பகிர்விற்கு நன்றி.
http://thisaikaati.blogspot.com
தமிழ்மணத்துல உங்க ஓட்டையும் போடலாமே!
நன்றி ரோஸ்விக்..
உங்கள் ப்ளாக்'ன் வடிவமைப்பு நன்றாக உள்ளது..
வருகைக்கு மீண்டும் நன்றி...
முட்டை மந்திரம் எல்லாம் வேண்டாம் பிரகாஷ்..:))
இடித்துரைத்தற்கு நன்றி, வேண்டுமென்றே செய்ய வில்லை.. மன்னிக்க.:))
அன்புடன்.
- ஷங்கர்.
மாயவலை என்பது இனணயதளத்தை குறிக்கவே சொன்னேன்..:)) 1000 என்பது இலக்கல்ல, எதுவரை என்பதும் நிச்சயமல்ல..
இப்போதும்..
நான் -1
நீங்கள் -2. வாழ்த்துக்கள்.
வாங்க ஷங்கர்..
நான் இடித்துரைக்கவில்லை..
உங்கள் எழுத்துக்கள் தொடர வேண்டும் என்றே விரும்புகிறேன்..
வருகைக்கு நன்றி,..
அன்பின் பிரகாஷ்
அருமை - தொடரட்டும் சிந்தனைகள் - படிப்பவர்கள் அனைவரும் பகிர்வோம் - பரப்புவோம் - ஊர் கூடினால் தேர் ஓடும் - பயங்கர வேகத்தில் - ஆம் - ஆனால் ஊர் கூடுவதென்பது தான் சிரமம் - முயல்வோம் - முயற்சி வெற்றி பெறும்
நல்ல சிந்தனை பிரகாஷ்
நல்வாழ்த்துகல் பிரகாஷ்
நட்புடன் சீனா
Post a Comment