Saturday, January 9, 2010
சமூக ஆர்வலர்களுக்கு என் அனுபவம்...
ஒரு புதுமையான கற்பித்தல் முறையை கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். திருநெல்வேலி'யில் உள்ள ஒரு அமைப்பிலிருந்து (ATREE organisation - Ashoka Trust for Research in Ecology and the Environment ) எங்களுக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அதாவது கிராமத்து பள்ளிக்குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை பற்றி வகுப்பெடுக்க தானாகவே முன்வரும் சேவையாளர்கள் (volunteers ) வேண்டும் என.
எனக்கு முதலில் எழுந்த சந்தேகம், இந்த அமைப்பின் பெயருக்கும், இந்த சேவைக்கும் தொடர்பே இல்லையே என.
விசாரித்த பொது கிடைத்த விளக்கங்கள் என்னை ஆச்சிரியப்படுத்தின.
இந்த அமைப்பானது, திருநெல்வேலியைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள பறவைகள், அவற்றின் தற்போதைய செயல்பாடுகள், மற்றும் காலநிலையைப்போருத்து அவற்றின் செயல் மாற்றங்கள் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்தும் ஒரு அமைப்பு. மேலும் விபரங்களை இணையதளத்தில் நீங்கள் பெறலாம்.
எனக்கும் பறவைகளைப்பார்தல், ரசித்தல் போன்ற விஷயங்கள் பிடித்தமாதலால், மீதி விவரங்களை நேரில் சென்று பெறலாம் என்று முடிவு செய்து, நானும் என் நண்பன் கார்த்திக்'கும் இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றோம். சுற்றியும் மரங்கள், மரக்கன்றுகள், தூய காற்று சூழ atree எங்களை வரவேற்றது. இது போன்ற செவையாளர்களைத் தங்க வைக்க தனியாக ஒரு வீட்டை ஒதுக்கி இருந்தார்கள்.
எங்களை உபசரித்த மதிவாணன் என்பவரை விசாரித்த பொது அவர் "பறவைகள், விலங்குகள், மனிதர்கள், மரம் செடி கொடிகள் ஆகியவை அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. இதன் சமநிலையைப்புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் அவசியமாகிறது. எனவே, இங்குள்ளஅரிய இன பறவைகள், மரங்கள், மிருகங்கள் ஆகியவற்றைப்பாதுகாக்க, இங்குள்ள மக்களுடன் பழகி அவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறோம். புதிய தலைமுறையினரிடம், இதன் புரிதல் மிக அவசியமாகிறது" என்றார்.
அவர் தமிழர் தான். "ஏன் நீங்களே பாடங்களை குழந்தைகளுக்கு எடுக்கலாமே..?" என்ற கேள்விக்கு, அவர்களும் வாரந்தோறும் பள்ளிக்குழந்தைகளை, ஒரு பொது இடத்துக்கு வரவழைத்து, இந்த வகுப்புகளை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள், அனால், சுற்றுச் சூசல் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்தல், அவற்றை ஆவணபடுதுதல், திட்டமிடல், போன்ற பணிகள் நிறைய இருப்பதினால் , உள்ளூர் மக்களின் மொழி தெரிந்து அவர்களுடன் பழகி, இந்த வகுப்புகளை எடுக்க நாங்கள் தேவைப்பட்டதையும் எடுத்துக்கூறினார்.
எங்களைப்போன்றே வாரா வாரம் ஒருவர் அல்லது இருவர் கொண்ட குழு அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் கூறினார். எங்கள் நிறுவனத்திலிருந்தே, இதற்க்கு முன்னால் இருவர் சென்றிருந்தனர்.
அந்த ஒரு நாள் வகுப்புக்குத்தேவையான, ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு நகல் எங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதில் தன்னம்பிக்கை என்றால் என்ன, அதில் எத்தனை பிரிவுகள் உள்ளன, எப்படி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, போன்றவற்றை விளக்கும் தெளிவான செயல்விளக்கங்கள் அளிக்கப்படிருந்தன. எடுத்துக்காட்டாக, ஒருவன் தன்னை மற்றவரிடமிருந்த எப்படி வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொள்வது என்பதற்கு வெறும் கற்களை மட்டும் பயன்படுத்தி செய்யும் செயல் விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது கூடியிருக்கும் குழந்தைகளிடம், வெளியில் சென்று ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து வரச் சொன்னோம், கற்கள் அனைத்தும் அளவில் ஏறக்குறைய ஒன்றாக இருக்க வேண்டும் என்பது சொல்லப்பட்டது. அனைவரும் கொண்டு வந்த பிறகு, அனைத்தையும் நாங்கள் வாங்கி ஒரு இடத்தில் வைத்து கலக்கி விட்டோம். பிறகு அனைவரையும் அழைத்து அவரவர் கல்லை எடுக்க சொன்னோம். குழம்பி போயினர். ஏனெனில் இந்த செயலை அவர்கள் எதிர் பாராததினால் அவர்கள் தத்தம் கற்களை கவனிக்கவில்லை. சில சமயம், சில பேர் தங்கள் வண்டி எண்களையே மறந்து போவதில்லையா, அது போன்ற கவனக்குறைவே.
ஆனாலும் ஒரு சிலர் தங்கள் கற்களை சரியாக எடுத்தனர். பின்னர் அனைவரையும் அழைத்து மீண்டும் கற்களை அவர்களிடமே கொடுத்து இதையே மறுபடியும் செய்யச்சொன்னோம். அனால் இந்த முறை சற்று வித்தியாசமாக. அதாவது அவரவர்கள், தங்கள் விருப்பப்படி, தங்கள் கற்களில், ஏதேனும் அடையாளம் வைத்துக்கொள்ளலாம்.இம்முறை அனைவரிடமும் மிகவும் கவனம். இந்த முறை அனைவரும் தங்கள் கற்களை, மற்றவற்றிலிருந்து, சரியாகப் பிரித்தெடுத்தனர்.
இதன் மூலம் குழந்தைகள் கற்றுக் கொண்டதை அவர்களிடமே கேட்டறிந்தோம், சிலவற்றை நாங்கள் விளக்கினோம்.
உண்மையைச் சொல்லப் போனால், பலவற்றை எங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டோம்.
நீங்களும் உங்களால் முடிந்த பாடங்களை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சிறு வகுப்பு முடிந்தவுடன், மதிவாணன் ஒவ்வொரு குழந்தைகளையும் ஒவ்வொரு மரத்தின் அருகே நிறுத்தே ஏதோ கணக்கு எடுப்பது போல் தெரிந்தது. விசாரித்த பொது "Phenology " என்ற ஒன்றை அறிமுகப் படுத்தினார். இது ஒரு வகை ஆராய்ச்சி முறையாகும். அதாவது. மரத்தின் அருகே நின்று கொண்டு, அந்த மரத்தை நான்கு பகுதியாகப் பிரிக்க வேண்டும்(கற்பனைக் கோடுகள்). பிறகு, அந்த நான்கு பகுதிகளிலும், தோராயமாக எத்தனை பழுத்த இலைகள் உள்ளன. எத்தனை புதுப் பூக்கள் வந்துள்ளன, எத்தனை கைகள் உள்ளன, போன்றவற்றை அட்டவணைப்படுத்தி ஒரு புத்தகத்தில் எழுதிக் கொள்கிறார்கள். இதை அவர்கள் அவ்வப்போது எடுத்து அந்த மரத்தின் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆக இது உதவலாம் மற்றபடி, இது எதற்கு தேவை என்று கேட்ட போது அவர் கூறிய பதில்கள் சுவராஸ்யமானவை.
இது குழந்தைகளின் கவனிப்புத் திறனை மிகவும் அதிகப்படுத்துவதாகவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க இது மறைமுகமாக உதவுவதாகவும் கூறினார்.
பெரிய மரங்களில் இது போன்ற கணக்கெடுப்பது மிகவும் கடினம், ஏனெனில், ஆயிரக்கணக்கான இலைகள் உள்ள மரங்களை எப்படி உன்னிப்பாக கண்காணிப்பது என்பதை யோசித்துக்கொண்டிருந்த போது, அந்த குழுவிலேயே மிக இளைய சிறுவன், ஒரு மிகப்பெரிய ஆல மரத்தைக்காட்டி, அந்த மரத்தை தன்னுடைய ஆராய்ச்சிக்காக எடுத்திருப்பதாகக் கூறி தன்னுடைய அட்டவனையைக்காட்டி எங்களை ஆச்சிரியதிர்குள் ஆக்கினான்.
மதிவாணன் சொன்னது உண்மைதான். அந்த அட்டவணையைக் காட்டும்போது அவன் கொண்ட பெருமிதம் அவனது தன்னம்பிக்கையைக் காட்டியது.
பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களிடம், அவர்களின் எதிர்கால திட்டங்களை வினவும் போது, அவர்கள் கூறும் பதில்களை விட, இவர்கள் மிக தெளிவாக இருப்பார்கள் என்பது புரிந்தது. என்ன படிக்கிறாய் என்று கேட்டால், மொட்டையாக, ஐந்தாவது, ஆறாவது என்று சொல்லாமல், கூடவே, தான் ஒரு மரத்தை இதனை நாளாக ஆராய்ச்சி செய்கிறேன், என்று அவர்கள் சொல்கையில், அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறுவதை உணர்ந்தேன். அவர்களின் தன்னம்பிக்கை வளர்வதை கவனிக்கமுடிந்தது.
பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகும், தன எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத அளவே, நமது கல்வி முறை இருந்திருக்கிறது. சிறு வயதிலேயே, தான் யார் என்று உணர்ந்து, தங்கள் பாதைகளை தெளிவாக அமைத்துக் கொள்ளும் திறனுடைய வருங்காலச் செல்வங்களை உருவாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதை உணர்ந்தேன்.
வகுப்பு மட்டும் இன்றி, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் தங்கி இருந்ததில் மணிமுத்தாறு அருவி, களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயம், மணிமுத்தாறு அணைக்கட்டு, மற்றும் பச்சை வயல் வெளிகள், வெள்ளந்தி மனிதர்கள், மலிவான விலையில் ருசியான உணவு என திருன்வேல்வெளி எங்களை கிறங்கடித்தது அனைத்தும் உண்மை.
முடிந்தால் நீங்களும் செல்லலாம்.
குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்சிகள், International youth foundation இடம் உள்ளன. அதனைப்பெற்று எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளேன்.
படிக்கும் போது அறிவு வளர்கிறது. உணரும் போதே மாற்றங்கள் நிகழ்கின்றன. !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
7 பின்னூட்டம்:
good message. can u post the address and conduct no to my e/mail saran.hm@gmail .com . The last line is superb . yes, we realize the changes only on experience.
வணக்கம் மதுரை சரவணன்,
முழு விபரமும், நாளை உங்கள் மின்னஞ்சல் வந்தடையும். நீங்களும் இது போன்ற பயிற்சி புத்தகங்கள், pdf 'கள் கிடைத்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளவும்.
"Avoid Wooden sticks, Use your own spoons to stir" என்ற வாசகங்களை எங்கள் நிறுவனத்தில் உள்ள காபி இயந்திரத்தின் முன் வைக்க முற்பட்ட பொது, என்னுடைய சக ஊழியர் சொன்ன வார்த்தை அது "எழுதி வைத்தால் அது யாருக்கோ என்று விட்டு விடுவார்கள், உணர்ந்தால் மட்டுமே மாற்றம் வரும்" என்று. எங்கள் குழுவுடன் இனைந்து நாங்கள் wooden sticks உபயோகப் படுத்துவதை நிறுத்திய பின்பு, எங்களைப் பார்ப்போருக்கு அதை "உணர" முடிகிறது.
உங்களின் வருகைக்கு நன்றி. நான் மேலும் எழுத ஊக்கம் கொடுங்கள். ஒருங்கிணைந்த சிந்தனைகள் கொண்ட இது போல உள்ள உங்கள் நண்பர்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.
Gud one , nice to read . plz post the complete address also .
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.. வாழ்க
can u send me d address to praveenb104@gmail.com....ur mail id???
Mr Kodanki I read your blogs i'm very happy me to need a full details so can you send me note on my mail id pems4499@gmail.com
thank you
நன்றி பெம்ஸ்...
என்ன தகவல் வேண்டும் என்பதை கேளுங்கள்..
successprakash@gmail.com
வருகை தந்தமைக்கு நன்றி...
Post a Comment