Wednesday, January 20, 2010

ஐந்தே மாதத்தில் பணம் மூன்று மடங்காகுமாம்...!?!?!


ஐந்தே மாதத்தில் பணம் மூன்று மடங்காகுமாம்...!?!?!
ரொம்ப நாளா போன் பண்ணாத என்னோட பிரெண்ட் ஒருத்தன், எப்புடி திடீர்னு பாசம் பொங்குச்சோ தெரியல, நாலஞ்சு நாள் முன்னாடி போனப் போட்டு ரொம்ப ஓவரா விசாரிச்சான். பிரியா இருந்தா வாடா மச்சான், பேசி ரொம்ப நாளாசுன்னான்.
அவன் வீட்டத்தாண்டி கொஞ்ச தூரம் பெசீட்டுப் போயிட்டே இருந்தோம். திடீர்னு, அவன் மாமாகிட்டேருந்து ஒரு போன் வந்துச்சு. "இதோ வந்துர்றேன் மாமா " ன்னு சொல்லி போன வெச்சுட்டான். அவசரமா இருந்தா போயிட்டு வாடா மச்சான், அப்புறமா பேசலாம்னு சொன்னேன். "இல்லடா மாப்ள, வா நாம பேசிட்டே நடப்போம்னான். பேசிட்டே நடந்தோம். நாட்டு மக்களோட பெராசையைப் பத்தியும், இருக்கறத வெச்சு எப்புடி மன நிறைவோட வாழலாம்னும் நெறைய சொல்லீட்டே வந்தேன். அவங்க மாமா வீடு வந்ததும், "டேய் வாடா, எங்க மாமா எதுக்கோ(?????!!!) கூப்புடுறார். பத்து நிமிஷம்னு சொல்றார். போயிட்டு அப்படியே வீட்டுக்குப் போயடலாம்னான். நானும் இது ஏற்கனவே பிளான் பண்ணப்பட்டதுன்னு தெரியாம கூடப் போனேன். கொஞ்சம் உபசரிப்புக்கபுரம், அவங்க மாமா எங்கிட்ட டைரக்ட்டா மேட்டர ஓபன் பண்ணினார்.
"தம்பி உனக்கு LML தெரியுமா"
"ஓ தெரியுமே... அது ஒரு பைக் கம்பெனி தானே"
"அது இல்லப்பா, chain marketing மாதிரி ஒண்ணு ..."
"ஒ MLM அதாவது மல்டி லெவல் மார்கெட்டிங் பத்தி சொல்றீங்களா. அதாவது இந்த amway மாதிரியா?"
எங்கேயோ ஒரு முடிச்சு விழுவதை உணர்ந்தேன்....
"ஆமாம்பா, ஆனா இது வேற மாதிரி, அஞ்சே மாசத்தில நீ போட்ட பணம் ட்ரிபிள் ஆகும்.. இது நீ ஒன்னும் செய்யாமலே. கொஞ்சம் முயற்சி பண்ணினா இன்னும் ரொம்ப சம்பாரிக்கலாம்...."
உழைக்காமல் வரும் பணம் எப்படி உடம்பில் ஓட்டும்னு அப்பதான் என் பிரெண்ட் கிட்ட ஒரு லெக்சர் எடுத்துட்டு வந்திருந்தேன்.. என்ன பண்றது, தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம், முடிஞ்ச வரை மௌனம் சாதிச்சுட்டு எஸ்கேப் ஆயிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன்.
"ஆமாங்க, ஏற்கனவே எங்கப்பா இதுல பணம் கட்டி அப்புறமா தொடர முடியாம விட்டுட்டோம். எங்களுக்கு கீழ ஆளுக சேத்து தரோம்னாங்க.. கார்ல கூட்டீட்டு போனாங்க, அப்புறம் கூல் டிரிங்க்ஸ், சாப்பாடெல்லாம் வாங்கித்தண்தாணுக, மீட்டிங் போட்டாணுக... வந்தவனுக எல்லாம் கோடி கொடியா சம்பாதிச்சிட்டதா, மார் தட்டினாங்க.. ஒருத்தன் என்னடான்னா, திடீர்னு பையில இருந்து ஐநூறு ரூவா நோட்ட ஒண்ண எடுத்து கிழிச்சுப்போட்டு ஜம்பம் அடிச்சான்(அங்கிருந்த அனைவரும் பணப்பேய்கள், அதனால் தான் எவன் ரத்தமும் கொதிக்க வில்லை,).
கடைசியில, பணத்தைப் பறி கொடுத்தது தான் மிச்சம். அதாங்க எனக்கு இதுல இண்டரஸ்ட் இல்ல.. "( நாஸூக்கா சொன்னேன்.)
"அதெல்லாம் டுபாகூர் கம்பெனி தம்பி.. இதுல பொருள் எல்லாம் எதுவும் விக்க வேண்டியதில்லை.. நான் முழுசா சொல்லிடறேன்.. உனக்கு பிடிக்காட்டி விட்டுடலாம்"
"சரி சொல்லுங்கண்ணா"(இல்லாட்டி விடவா போறீங்க..?)
"இந்த கம்பெனி சென்னைல புதுசா வந்திருக்கு"
"யார் நடத்துராங்கன்னு தெரியுமா அண்ணா ? சென்னைல எங்கிருக்கு "
"சென்னைல எங்க இருக்குன்னு எனக்குத் தெரியலை தம்பி.... ஆனா கோயம்புத்தூர்க்கு இந்த பிளான் வந்து 40 நாள் தான் ஆச்சு..."
"சரி அண்ணா கோயம்புத்தூர்லயாவது எங்கிருக்குன்னு தெரியுமா..."
"இத பாரு தம்பி, வெப் சைட் எல்லாம் கூட இருக்கு, நமக்குன்னு இன்டர்நெட்ல தனி அக்கௌன்ட் ஓபன் பண்ணி தரான்..."(கவனிக்கவும் கடைசி வரை என் கேள்விக்கு பதிலே தர வில்லை...)
"amway மாதிரி இல்ல.. 7500 ரூவா கட்டினா, உனக்கு ஒரு பின் தருவாங்க.. ஒரு பின்னுக்கு 1500 ரூவா.. அத அவன் எடுத்துக்குவான் (!!??!!?)மீதி பணம் நம்ம இன்வெஸ்ட்மென்ட்.. அஞ்சே மாசத்துல உனக்கு மூணு மடங்கு பணம் திரும்ப கெடைக்கும்.. பணம் அப்டேட் ஆகிறத, தினமும் வீட்ல இருந்தபடியே, நம்ம அக்கௌண்ட ஓபன் பண்ணி பாத்துக்கலாம்.. (இது icici மாரியோ, sbi மாரியோ பேங்க் இல்லை.. அவனே ஒரு வெப் பேஜ் வெச்சு, அதுல நம்ம பணம் பெருகுரத காமிப்பானாம்) இத்தன நாளுக்கு ஒரு முறை நம்ம பணத்த எடுத்துக்கலாம்"
செம கடுப்பாகி, பேச்ச நிறுத்தலாம்னு வாய் எடுக்கரதுக்குள்ள...
"எப்படி தம்பி.. ஒண்ணும் செய்யாமலே பணம் வருது பாத்தியா... இது மட்டும் இல்ல, இதுல நீ ஒரு ஆள் சேர்த்து விட்டால் என்ன நடக்கும் பாருன்னு ஒரு பேப்பர் எடுத்து மரம் மற்றும் அதன் கிளைகள் வரைந்து பாகங்கள் குறிக்கத்தொடங்கினாரு.."
படம் வரையும் வேகத்தைப் பாத்தா தினமும் 10 பேருக்கு வரஞ்சு காட்டுவாருன்னு நெனைக்கிறேன்..
"இவரு கட்டும் போது, உனக்கு கமிஷன் இவ்வளவு, அவன் கட்டும் போது, உனக்கு அவ்வளவு, எப்புடி பணம் வருதுன்னு பாத்தியா.. பணம் உடனுக்குடன் அப்டேட் ஆகுறத, நெட்ல ஒடனே பாக்கலாம்" அவரு கையில வெச்சிருந்த பேப்பர் இப்ப கோழி கிறுக்கன மாறி இருந்துச்சு..
கையில இருந்த கொஞ்ச பிரிண்ட் பேப்பர்ஸ காமிச்சார்.. 10 மணிக்கு எடுத்த ப்ரின்ட்ல 15000 இருந்துச்சு. 10.10 மணிக்கு 35000 ஆயிடுச்சு..
ஏன் மொகத்துல எந்த மாத்தமும் இல்லாதத கவனிச்ச அவரு என் பிரெண்டயும் காமிச்சு, "இவனையும் நான் தான் சேத்து விட்டேன்.. இப்ப அவனும் சம்பாரிக்கிறான்.."
"ஆமாண்டா மாப்ள, இத பாரு என்னோட அக்கௌன்ட் பெலன்ஸ்னு சொல்லி பாக்கெட்குள்ளருந்து ரெண்டு பேப்பர எடுத்து நீட்டினான் பாருங்க..?
அட பிக்காளிப் பயலே....!!!!!!!!!!
"எண்டா நாயே, உனக்கு மார்க்கெட்டிங் பண்ணனும்னா நேரா சொல்லி கூப்புட வேண்டியதுதானேடா.. எண்டா இப்டி பிரெண்ட்ஷிப்ப கேவலப்படுத்தரேன்னு கேட்கத் தோனுச்சு"
"சரி.. இப்படி பணம் குடுக்கறதுல அவங்களுக்கு என்ன லாபம்..?"
"அந்த பணத்த இன்வெஸ்ட் பண்றாங்க.. கெடைக்குற லாபத்துல வர்ற ஷேர் தான் நமக்கு லாபமா வருது..."
"சரி.. எதுல இன்வெஸ்ட் பண்றாங்க.. லாபம் வரலைன்னா என்ன பண்ணுவாங்க.."
"அப்படியில்ல தம்பி.. இது வரைக்கும் நல்லா தான் போய்கிட்டிருக்கு. நம்ம வாழ்க்கையே நமக்கு நிச்சயம் இல்ல..." (தத்துவம் வேற.. அது சேரி இவன சேத்து விட்டவனும் இதே தான் சொல்லீருப்பான் - சேம் ப்ளட் )
"சரி.. இவங்க மேலிடம் என்கிருக்குன்னே தெரியல, ஒருவேள நஷ்டம் ஆச்சுன்னா, பணம் பறி குடுத்தவங்க நேரா நம்மள தானே புடிப்பாங்க..?"
"அப்படியில்ல தம்பி.. இது வரைக்கும் நல்லா தான் போய்கிட்டிருக்கு..."(மறுபடியும் அதே பதில்..)
"நான் அலங்கார் ஹோட்டல்'ல கார் டிரைவரா இருந்தேன்,... இப்ப லாபம் வரவும் அத விட்டுட்டு இந்த பிசினஸ்லியே முழுசா இறங்கிட்டேன்..."
"சரிங்க நான் புறப்படுறேன்..."
அதுக்கு மேல அவர் கிட்ட பேச என்ன இருக்கு..
இனி என் நண்பன் மொகத்தகூட பாக்க எனக்கு இஷ்டமில்ல..
-------------
நீங்க சொல்லுங்க..
எரியற வீட்டுல பிடுங்கன வரைக்கும் லாபம்னு இந்த மாறி MLM ல சம்பாரிக்கறதுதான் புத்திசாலித்தனமா..?
பெரிய பெரிய ஜாம்பவான்களே முட்டி மோதி மூக்கு ஒடபடுற பங்குச்ச்சந்தைல, எந்த விதமான பெரிய பாக் க்ரௌண்டும் இல்லாம ஒருத்தன் ஜெயிச்சு லாபத்துல பங்கு தருவானாம்..(வலைல சிக்கனது என்னன்னு தெரியாமலே.. ஒருத்தன் அது தோலு பல லட்சம் போகும்க்ரான்.. ஒருத்தன் அதோட எச்சில் மெடிசின்ங்கறான்.. இந்த கௌண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது..)
இந்த மாறி கம்பனிக்கு எந்த பாக் கிரௌண்டும் தேவையே இல்லைன்னுதான் நான் நெனைக்கிறேன்.. ஏன்னா.. கமிஷன்ங்கற பேர்ல அவன் போடற எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு இவனே இவன் அவன் மாமன், மச்சான்னு எல்லாத்தையும் இழுத்து உள்ள விட்டுடுவான்..
ஏண்டா உனக்கு கீழ ஒருத்தன் பணம் கட்டுனா, உனக்கு கமிஷன் வருதுன்னு சந்தோசப் படுறியே, இதே மாறி நீ கட்டுன பணத்த வெச்சுதான் உனக்கு மேல இருக்குறவன் கமிஷன் வாங்கறான்.. இதுல சர்வீஸ் சார்ஜ் வேற 1500 ரூவாவாம்..
இவ்வளவு பேருக்கு இவ்வளவு லாபம் வரும்.. எல்லாருமே பணக்காரன் ஆகலாம்னா கவர்மெண்டே, இந்த பேங்க் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணீட்டு இந்த பிசினஸ் பண்ணுமே..
என் கருத்து..
இந்த உலகத்துல ஒண்ண இழந்தா தான் ஒண்ண பெற முடியும். "வேர்வ சிந்து..!பணம் சம்பாரி...!! மூளைய கசக்கி யோசி..!! பணம் சம்பாரி..!!"
ஒண்ணுமே செய்யாம இவ்வளவு பணம் வருதுன்னா.. அது எங்கயோ எவனுக்கோ ஆப்பு வெச்சுட்டுதான் வருதுன்னு நான் நெனைக்கிறேன்.
இந்த MLM ல கடைசியா பணம் கட்டுறவன் நெலம என்னான்னு யோசிச்சுப் பாருங்க.. ஆ.. அதப்பத்தி எங்களுக்கு என்ன கவலை.. நம்ம chain'ல மேல இருக்கோம்.. சம்பாரிப்போம்ங்கற பேராசை தான், இந்த மாறி கம்பெனிகளோட வெற்றி..
பேராசையினால் தான் நம் சந்தொஷங்களைஎல்லாம் பறி கொடுத்தோம்..
பேராசையினால் தான் நம் பூமியையே நாம் கெடுத்தோம்..
போதும் என்ற மனம், கிடைத்ததைப் பகிரும் குணம் இல்லாதவரை இந்த நிலை மாறாது..
நண்பர்களே..இந்த மாறி நெறைய கம்பனிகள் உருவாசுன்னா, என்ன ஆகுமோன்ற பயத்துல எழுதுனது....எனக்கு தோணினத கொட்டீட்டேன்..
தப்பா இருந்தா திருத்துங்கப்பா....
சரியா இருந்தா.. படிச்சிட்டு கொஞ்சம் ஓட்டையும் குத்துங்கப்பா...

10 பின்னூட்டம்:

சிநேகிதன் அக்பர் said...

இதைப்பத்தி நான் எழுதனும்னு இருந்தேன். அழகா சொல்லியிருக்கிங்க.

என்ன செய்றது ஏமாறுபவர்கள் இருக்குற வரை ஏமாத்துபவன் இருக்கத்தான் செய்வான்.

சாமக்கோடங்கி said...

வாங்க அண்ணே...
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி...
மாற்றம் வரும்னு நெனைச்சுட்டு தான் எழுதறேன்...

Karthick Dhamotharan said...

இந்த உலகத்துல வாயிருந்த போதும் பொழச்சுகளாம்...
உழைப்புக்கு மதிப்பேஇல்லை.....

சாமக்கோடங்கி said...

//இந்த உலகத்துல வாயிருந்த போதும் பொழச்சுகளாம்...
உழைப்புக்கு மதிப்பேஇல்லை.....//

அவங்களப் பொறுத்த வரை வாய் தான் மூலதனம்..

ஏமாற்றப் படர நமக்கு வேணும் அறிவு...

வால்பையன் said...

உலகம் திருந்தவே திருந்தாதா!?

//உங்கள மாறி பெரிய தலைகளோட//

இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா!?

சாமக்கோடங்கி said...

/வால்பையன்/
அண்ணாத்த... இந்த கொலை வெறி ரொம்ப நாளாவே இருக்கு.

நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்..

தல போல வருமா.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. பிரகாஷ்..


அவரு( மாமா) காமிச்ச கணக்குலே 10 நிமிசத்துக்கு ஒரு முறை பணம் ஏறிடுச்சுன்னு
காட்டினாறே.. அதிலிருந்து ஒரு "பின்" வாங்கிட்டி, பின்னாடி மெல்ல திருப்பிக் கொடுத்திருக்கலாம்..


அடடா...வடை போச்சே...

சாமக்கோடங்கி said...

பட்டா பட்டி அண்ணா..
இந்த இடுகை போடரக்கு முன்னாடியே வந்திருக்கக் கூடாதா?

நான் வேற வீராவேசமா எழுதிட்டேன்...

வட போசுதான் போல....

மசக்கவுண்டன் said...

ஏனுங்க நல்ல ஐடியாவாத்தான் தோணுதுங்க. நாம பதிவருங்க எல்லாம் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாமுங்களா?

தெனமும் வடை சாப்பிடலாங்கோ!

கருடன் said...

பட்டா
//ஆகா.. பிரகாஷ்..


அவரு( மாமா) காமிச்ச கணக்குலே 10 நிமிசத்துக்கு ஒரு முறை பணம் ஏறிடுச்சுன்னு
காட்டினாறே.. அதிலிருந்து ஒரு "பின்" வாங்கிட்டி, பின்னாடி மெல்ல திருப்பிக் கொடுத்திருக்கலாம்..


அடடா...வடை போச்சே..//

வடை எல்லம் போகல பட்டா. என்ன இப்படி ஒருத்தர் கொலையா கொன்னுடு இருந்தாரு. நான் அவரு கிட்ட ஐயா சாமி உனக்கு வர கமிஷன்ல இருந்து ஒரு பின் வாங்கி கொடு எனக்கு கமிஷன் வந்த்தும் தரேன்...மனுஷன் கடுப்பகி போய்ட்டான்.

Post a Comment