Thursday, January 14, 2010

இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்....


இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்....
வீட்டுக்கொரு இலவச கலர் டிவி, கலர் டிவி'ன்னு கூவி கூவி குடுத்திகிட்டிருகாங்கோ ஒரு சைடு.
கூடவே கேபிள் கனெக்ஷன் குடுத்த பரவாலன்னு கிண்டல் பன்றாங்கோ இன்னொரு சைடு.
இதுல இவன் வேற என்ன புதுசா சொல்ல வரான்னு பாக்கறீங்களா..
ஆமாப்பா, எல்லாம் இந்த சூரியனோட பவர யூஸ் பன்றதப் பத்திதான்.
எங்களோட நிறுவனத்தோட தாய் நிறுவனம் ஜெர்மனி'ல இருக்கு. அங்க வேல பாக்கற நம்ம பிரெண்ட்ஸ்க கொஞ்சம் பேரு சொன்னாங்க, அவிங்க ஊர்லயெல்லாம் எல்லா வூட்லேயும் சோலார் பேணல் , அதாம்பா, நம்ம சூரிய ஒளிய கரண்டா மாத்துற மெசினு யூஸ் பண்றாங்களாம்.
இதுல ஏன்னா ஸ்பெஷல்னு கேடீங்கன்னா, எல்லார் வீட்டுலயும், சோலார் பேணல் வெக்கறதுக்கு, அவிங்க ஊர் அரசே, நிதி உதவி செய்யுதாம். அது மட்டும் இல்லாம, வீட்டு உபயோகம் போக, மீதம் இருக்குற கரண்ட, கவர்மெண்டே, ஒரு யூனிட்டுக்கு இவ்ளோன்னு, வெல குடுத்து வாங்கிக்குதாம். அது கவர்மெண்டு....!!!!!!!!!!!!
ஜெர்மனி'ல ஏரியா ரொம்ப பெருசு. ஆனா பாபுலேசன் ரொம்ப கம்மி. நம்ம ஊர் மாறி பஸ்ல நின்னிட்டு போற அளவுக்கு கூட கூட்டம் கேடயதாம் . ஊருக்குள்ள அங்கொன்னும் இன்கோன்னுமாத்தான் வூடேல்லாம் இருக்குமாம். வெயிலோட உஷ்ணம் ரொம்ப கம்மியாம். இதெல்லாம் எதுக்கு சொல்ல வரேன்னா, ஊரும் பெருசா இருந்து, கூடமும் கம்மிய இருந்தா அவங்களுக்கு செலவும் கம்மி, கரண்ட் பிரச்சினையே இருக்காது, இருந்தாலும் கூட அவிங்க கவர்மெண்டு எதிர்காலத்த யோசிச்சு, இப்பவே, எவ்வளவு அழகா திட்டம் போடிருகாணுக.. அவிங்க ஊரு மேல அவளவு அக்கறை,,
வெளிநாட்டுக்காரணுக விஷயம் தெரிஞ்சவணுக.. தம்மாதூண்டு வெயில்கூட வீணாக்காம உபயோகப்படுதிகிராணுக.. இதனால கவர்மேன்ட்டுக்கும் நல்ல லாபம் தானாம்..
நம்ம ஊரு போபுலேசன் பத்தி சொல்ல வாணாம். வெயிலைப் பத்தியும் சொல்ல வாணாம்.....
பத்து நிமிஷம் சேந்தாப்புல வெளியில நின்னாலே , வெயிலு நம்ம மூளைய ஆவியாக்கிடும் போல.(ஒரு விளம்பரத்துல கூட பாத்தேன்னு நெனைக்கறேன்.).நம்மாளுக எல்லாம், அந்த வெயில்ல கூட, ஜாலியா நின்னு, என் உச்சி மண்டைல சுர்ருங்குதுன்னு பாட்டு பாடத்தான் லாயக்கு.
எண்டா சுர்ருன்னுசே,, எதாச்சும் ஓரச்சுதா?

நம்மூரச் சொல்லி பிரயோசனம் இல்ல. ஏன்னா, பல பேருக்கு சொலார்னா என்னன்னே தெரியாது. அப்டியே விவரம் தெரிஞ்ச எவனாச்சும் கூரை மேல வெச்சானா, அதோட வெல என்னான்னு தெரிஞ்சா , நைட்டோட நைட்டா பிரிச்சிட்டு பொய், எலெக்ட்ரானிக் கடைல வித்தாலும் வித்துருவாணுக.

விஷயம் தெரிஞ்சவிங்க என்ன சொல்றாங்கன்னா, வீட்டுக்கொரு சோலார் பேணல் வெக்கறது, இப்பத்திக்கு முடியாத காரியமாம். செலவு கைய சுட்டுடுமாம்...ஆனாலும் நெறைய பேரு யூஸ் பண்ண ஆரம்பிச்சா, வெல கொறைய வாய்ப்பிருக்காம். அதாவது, கவர்மென்ட், இத அதிக அளவில உற்பத்தி செஞ்சா!.. காசு இல்லாதவணுக, இப்பத்திக்கு ஒன்னும் பண்ண முடியாது. காசு உள்ளவனுகளும், "ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட்'னு" பாடத்தான் லாயக்கு. நாப்பது லட்சத்துக்கு கார் வாங்கி, நாலு தெருவுல பந்தா வுட்டுட்டு திரியுவாணுக. அவனக்லாச்சும் நாலு சோலார் பேணல் வெச்ச பரவால்ல .

ஆனா, நம்ம கவர்மெண்டுல எல்லாம் விஷயம் தெரிஞ்சவணுக.. அவங்க நெனச்சா செய்யலாமாம். ஆமாம்பா.. புல்லா பண்ண முடியலைன்னாலும் வாட்டர் ஹீட்டர், அடுப்புன்னு கொஞ்சம் கொஞ்சமா, சோலார் பவருக்கு மாத்த முடியுமாம். அட இவ்வளவு ஏம்ப்பா, நம்ம பக்கத்துல இருக்குற கர்நாடகவுலையே, வாட்டர் ஹீட்டர்கெல்லாம் இனிமே சோலார் பவர் தான் யூஸ் பன்னனம்னு சொல்லிடாங்க அவிங்க கவர்மெண்டு.

ஆனா நம்ம கவர்மெண்டு.. மக்களோட அறியாமையா உபயோகப்படுதிகிறாங்க. வூடுக்கொரு டிவி'நா ஓட்டு போடுவானுக. வூடுக்கொரு சோலார் பேணல்'நா எவன் போடுவான்..?ஏம்ப்பா , ஏற்கனவே நம்மூர்ல, கரண்ட் பத்தல, இதுல வீடெல்லாம் கலர் டிவி வெச்சுனு என்னத்த பாக்கறது. கலர் டிவி யா இருந்தாலும் ப்ளாக் அன் வைட் டிவி யா இருந்தாலும் ஆப் பண்ணினா ஒரே கலர்தான். பாத்துகிட்டே உக்கார்ந்துக்க வேண்டியதுதான்.

ஏற்கனவே பக்கத்து நாட்டுக் காரனுக எல்லாம் நம்மள பாத்து திட்ட ஆரம்பிச்சிடாணுக. நம்ம தான், பூமிய அதிகமா மாசு படுத்தரோம்னு.. ஆனா நமக்கென்ன கவலை .
ஆமா மக்களுக்கே கவலை இல்லாதப்ப கவர்ந்மேன்ட்டுக்கு என்ன தேவை வந்துச்சுன்னு கேட்டேன்.
இந்த நெலமையில "இலவச டிவி போல இலவச சோலார் கருவி - கலைஞர் வழங்கினால்...." என்ன ஆகும்னு நீங்களே யோசிச்சிகுங்கோ...

உங்களுக்குத் தெரிஞ்சு ஏதாவது விஷயம் இருந்துச்சுன்னா சொல்லுங்கப்பா, எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்.

வீட்லயே எப்படி சோலார் பேணல் செய்யலாம், எப்புடி சிக்கனமா உபயோகப் படுத்தலாம்னு ஏகப்பட்ட விஷயங்கள் இணையத்துல இருக்கப்பு..
தமிழ்ல பேரு வெச்ச படத்துக்கு வரி விலக்கு வழங்குற அரசு, சோலார் பொருட்கள் வாங்கறதுக்கு சலுக அறிவிச்சா நம்ம மாறி ஆளுக எல்லாம் பயனடையலாம்.. ஆனா அவிங்க கட்சி என்னாகும்..!?!..

அதானால இப்பத்திக்கு, நமக்கெல்லாம் கலர் டிவி மட்டுந்தான் . !!!!

5 பின்னூட்டம்:

எண்ணங்கள் 13189034291840215795 said...

"சிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..":

நான் படித்த ப்லோக்'களிலேயே இது மிக வித்தியாசமாக உள்ளது... தொடருங்க..
நன்றி...


--------------------
மிக்க நன்றி . உங்கள் கட்டுரைகள் மிக உபயோகமானவை. அதை தமிழமுதத்தில் மறுபிரசுரம் செய்கிறேன்...பலரை அடையச்செய்ய..

sekar said...

கருணாநிதி சோலார் கருவி வழங்கினால் அதன் மேல் பகுதி முழுவதும் கருணாநிதி சிரிப்பது அல்லது மொத குடும்பமும் நம்மை பார்த்து சிரிப்பது போன்ற படம் அச்சிடப்படும். என்ன..... சூரிய ஒளி தான் அதன் மேலே படாது....

சாமக்கோடங்கி said...

வாங்க சேகர்..

சத்தியமாக சிரிப்பை அடக்க முடியவில்லை...

சரியாகச் சொன்னீர்கள்...

cheena (சீனா) said...

அன்பின் பிரகாஷ்

அரசுக்கு ஆயிரம் வேலைகள் - ஆயிரம் கடமைகள் - ஆயிரம் தேவைகள் - அவைகளை நிறைவேற்றவே நேரம் போத வில்லை - மாற்றிச் சிந்திக்க நேரம் இல்லை. காத்திருப்போம்

நல்வாழ்த்துகள் பிரகாஷ்
நட்புடன் சீனா

சாமக்கோடங்கி said...

வாங்க சீனா...

ரொம்ப நன்றி.. வெகு நாள் கழித்து என்னுடைய பதிவை நானே படித்தேன்.. ஏகப்பட்ட எழுத்துப் பிழை..
ஆனால் மாற்ற விருப்பமில்லை.. என்னுடைய பழைய நடையை எப்பொழுதும் நினைத்துப் பார்க்க இது உதவும். நிலைமை மாறிக் கொண்டு வருகிறது.. எப்படியும் கூடிய விரைவில் சோலார் பேனல்கள் வந்து விடும்.. மாற்றத்தை இரு கை நீட்டி வரவேற்போம் நண்பரே...

Post a Comment